Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Showing posts with label செங்கொடிக்கு மறுப்பு. Show all posts
Showing posts with label செங்கொடிக்கு மறுப்பு. Show all posts

Wednesday, May 25

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே...

இதுவரை எழுதப்பட்ட தொடரின் தொகுப்பு 

அன்புச் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் தொடரினூடாக இதுவரை செங்கொடி விமர்சித்த அனைத்துக்கும் பதிலளிக்கப்பட்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்! இதுவரை நாம் எழுதிய அனைத்தையும் ஒரே தொகுப்பாக வெளியிடப்படுகிறது.

  1. முன்னுரை 
  2. தொடர் 01 
  3. தொடர் 02 
  4. தொடர் 03 
  5. தொடர் 04 
  6. தொடர் 05 
  7. தொடர் 06 
  8. தொடர் 07
  9. தொடர் 08
  10. தொடர் 09 
  11. தொடர் 10 
  12. தொடர் 11
  13. தொடர் 12
  14. தொடர் 13
  15. தொடர் 14
  16. தொடர் 15
  17. தொடர் 16
  18. தொடர் 17
  19. நூஹின் கப்பல்: புராணக்கதையல்ல! உண்மைக்கதை! தொடர் 18
  20. குகை வாசிகளும் குழப்பும் செங்கொடியும் தொடர் 19
  21. அபயமளிக்கும் நகரமும் ஆய்வின் சிகரமும் (?) அம்பலம் தொடர் 20
  22. நட்சத்திரங்களும் நகைப்பிற்குரிய வாதங்களும் தொடர் 21
  23. குர்ஆனின் காலப்பிழைகளா? செங்கொடியின் கணிப்பின் குறைகளா? தொடர் 22  
  24. சிக்கிக்கொண்டது யார்: அல்லாஹ்வா? செங்கொடியா? தொடர் 23
  25. பொய்யெல்லாம் உண்மையாகுமா? தொடர் 24
  26. நிலவின் பிளவும் செங்கொடியின் புரள்வும் தொடர் 25
  27. செங்கொடியின் அரைகுறை ஆய்வுகள் தொடர் 26
  28. தடையமுள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகள் தொடர் 27
  29. சிந்தனைக்கும் உண்டு கடிவாளம் தொடர் 28
  30. அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றலுடையவன் தொடர் 29
  31. மிஃராஜும் மிரளும் செங்கொடியும் தொடர் 30
  32. ஸம் ஸம் நீரும் செங்கொடியின் சல்ஜாப்பும் தொடர் 31
  33. பரிணாமவியல் ஓர் அறிவியல் புரட்டு! தொடர் 32
  34. சத்தியமே வெல்லும் முடிவுரை 

Saturday, May 14

சத்தியமே வெல்லும்

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... முடிவுரை

செங்கொடி என்பவர் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக "இஸ்லாம்:கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே" எனும் தொடரின் கீழ் இஸ்லாத்தைப்பற்றி விமர்சித்து வருகிறார். அது தொடர்பாக நேரடி விவாதத்திற்கு வருவதாக செங்கொடி சம்மதித்திருந்தும் பின்னர் முடியாது என்று ஒதுங்கி விட்டார்.(இவர் முடியாது என்றதற்கான காரணங்கள் ஏற்புடையதல்ல என்பதை ஏற்கனவே நாம் தெளிவு படுத்தியும் உள்ளோம்.) இதன் பின்னர், நாமே இவரது வாதங்களுக்கு மறுப்பளிக்க முன்வந்தோம்! அல்லாஹ்வின் அருளால் இதுவரை அவர் எவற்றையெல்லாம் விமர்சித்தாரோ அவை அனைத்தும் தவறு என்பதையும் நிரூபித்துக்காட்டியுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!

ஆனாலும் செங்கொடி இதன் பின்னும் தொடர்வார் என்றே கருதுகிறேன். ஏனெனில், இவர் இறுதியாக எழுதிய தொடரில் அது சம்பந்தமாக இன்னும் எழுதவிருப்பதை தெரிவிக்கிறார். ஆனால், அக் குறிப்பிட்ட தலைப்பு எழுத்து விவாதத்தின் மூலம் சரியாக முடிவு எட்ட முடியாது. ஆகவே, நாம் இவருக்குப் பயந்து பின்வாங்காமல் துணிவுடன், "நீங்கள் நேரடியாகவே விவாதத்திற்கு வர வேண்டும்” என அழைப்பு விடுக்கிறோம். அந்த அழைப்பை செங்கொடி கட்டாயம் ஏற்றே ஆக வேண்டும். ஏனென்றால், நான் நேரடி விவாதம் செய்யமாட்டேன் என்பதற்கு அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு வாதங்களையும் தவறு என்று நிரூபித்துள்ளோம். நாம் இஸ்லாத்தைப்பற்றி விமர்சித்ததும் அதுக்குப்பயந்து கொண்டு ஓடி ஒழியவில்லை; மாறாக துணிவுடன் களத்தில் குதிக்கத்தயாராக இருகிறோம் என்பதை காட்டும் முகமாகவே நேரடி விவாதத்திற்கும் அழைக்கிறோம். ஆனால், செங்கொடி சாக்குப்போக்கு கூறி ஓடி ஒழியவே நினக்கிறார். முதல் தடவையாக விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஏற்க மறுத்த செங்கொடி ஈற்றில் ஏற்றுக்கொண்டார். பின்னர் நான் ஏன் பி.ஜேவுடன் நேரடி விவாதம் செய்ய விரும்பவில்லை? எனும் கட்டுரையில் அவர் வாபஸ் வாங்கியதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு எமது "செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு" எனும் பகுதியில் முதலாவது பகுதியிலேயே அவை ஏற்கத்தக்கவையல்ல என்பதை எழுதியுள்ளோம். அதைப்பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

செங்கொடிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாகவே அழைப்பு விடுத்தார் பி.ஜே. ஆனால் செங்கொடி நான் பி.ஜேவுடன் விவாதம் செய்ய மாட்டேன் என்றுதான் தலைப்பிட்டுள்ளார். ஆக, செங்கொடிக்கு பி.ஜேவுடன் விவாதம் செய்ய விருப்பமில்லை என்றால் போகட்டும்! பி.ஜே தவிர்ந்த ஏனைய அறிஞர்களுடனாவது விவாதத்திற்கு வருவாரா? செங்கொடியின் நிலை உண்மையிலேயே சரியானது என்றிருந்தால் அவர் விவாதத்திற்கு தயக்கம் தெரிவிக்கக்கூடாது! ஏன்? ஒரு டெஸ்டில் கேள்விகளையும் கொடுத்து அதற்கான ஆன்ஸரையும் கொடுத்து தயாராகிக்கொண்டு வா என்றால் எந்த மாணவனும் பரீட்சை எழுத தயங்க மாடான். அது போல்தான் செங்கொடியின் கேள்விகளுக்கு பதிலையும் கொடுத்து முடிந்தால் நேரடி விவாதத்துல் வந்து உங்கள் நிலையை நிரூபித்துக்காட்டுங்கள் என்று அழைப்பு விட்ட பின்னும் தயங்கினால் என்ன அர்த்தம்? விவாதத்தில் நாம் அழித்த பதிலை விட மிகவும் சிறப்பான முறையில் பதிலளிக்க முடியும் என்பதால் இன்னும் பயனுடையதாக இருக்கும்.

இது போன்ற எழுத்து விவாதங்கள் மக்களை சென்றடைவதை விட நேரடி விவாதங்கள் நேரடியாகவும் துரிதமாகவும் உழைக்கும் மக்களைசென்றடையும். எழுத்து விவாதத்தில் ஏற்படும் நேர விரயம், பொருளாதார விரயத்தை விட நேரடி விவாதத்தில் மிக மிக குறைவாகவே ஏற்படும்! ஆனால், பயன் நிறைவாக இருக்கும் என்பது யதார்த்தம் என்பதனால்தான் நேரடி விவாதத்திற்கு நாம் அழைக்கிறோம். இதன் பிறகும் மறுத்தால் இவரது வாதத்தில் இவருக்கே தெளிவில்லை என்பதுதான் அர்த்தம்

இதன் காரணமாகவே, இவரது அனைத்து விமர்சனத்திற்கும் பதிலளித்துவிட்டு விவாததுக்கு வருமாறு அழைக்கிறோம். இதன் பிறகும் அவர் ஒரு முடிவு சொல்லாமல் இழுத்துக்கொண்டு சென்றால் இவர் அறிவு நாணயமற்றவர் என்பதுதான் கருத்து!

எனது மனமார்ந்த நன்றிகள்...

இந்த தொடர் எழுதுவதற்கு என்னைத்தூண்டிய முக்கிய காரணம் செங்கொடியின் நேரடி விவாதம் தொடர்பான மழுப்பல்தான். நான் விமர்சனத்திற்கு புதியவன்; அனுபவமில்லாதவன்; மேலும் ஓர் மாணவன் என்பதால்  எனக்கு அவ்வப்போது இணைய வசதிகளை ஏற்படுத்தித்தந்த எனது நண்பர்களுக்கும் கொள்கைச்சகோதரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

இஸ்லாத்திற்கெதிராக எத்தகைய பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டாலும் அது சத்தியத்தின் முன் சமாத்யாகும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (21:18)

Tuesday, May 10

பரிணாமவியல் ஓர் அறிவியல் புரட்டு!

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே.... இறுதித்தொடர்

மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

செங்கொடியின் இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... எனும் தொடரின் அண்மையில் வெளிவந்த தொடர் இது. இதில் செங்கொடி, பரிணாமம் பற்றிய எமது எதிர்க்கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றுள்ளார். அவர் அளிக்கும் பதில்களிலுள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டியாக வேண்டும்.

முதலாவதாக, நாம் வழக்கமாக டார்வினின் பரிணாமவியல் கொள்கை நிரூபிக்கப்பட்டதல்ல! ஒரு யூகம் என்று கூறிவருகிறோம். இதற்கு பதிலளிக்கப்புகுந்தவர் அது நிரூபிக்கப்பட்ட அறிவியல்தான் என்பதை நிரூபிக்காமல் அது அறிவியல் யூகமா? அல்லது வெறும் யூகமா? என்று விளக்குகிறார். இது எமது கேள்விக்கான பதிலே அல்ல! அது அறிவியல் யூகமாகவே இருக்கட்டும்! இதனால் அக்கொள்கை சரியானதாகிவிடுமா? அறிவியல் ஆய்வுகளில் எத்தனையோ கொள்கைகள் வரும். அவற்றை யூகமாக, அறிவியல் யூகமாகத்தான் கருதப்படும். பிற்காலத்தில் அது தவறு என்றால் அதை தூக்கி எறிந்துவிட்டு சரியானதை கொள்கையாக பிரகடனப்படுத்துவார்கள். ஒரு காலத்தில், அறிவியல் இப்போதைய காலத்தைப்போன்று இல்லாத காலத்தில் இது ஒரு கொள்கையாக இருந்திருக்கலாம். தற்போது, ஜீனோம் யுகத்தில் இருந்துகொண்டு, அதை சரிகான இயலாது! அது ஒரு நிரூபிக்கப்படாத கொள்கை! பழைய குப்பை! இது தவறு என்றால் அது நிரூபிக்கப்பட்டதுதான் என்று நிறுவ வேண்டும்.

அடுத்து, குரங்கு மனிதனாக மாறினான் என்றால் இப்போது ஏன் எந்தக்குரங்கும் மனிதனாவதில்லை? எனும் கேள்வியை அடிப்படையற்றது என்கிறார். ஏன்? குரங்கு மனிதன் ஆவதற்கு நான்கு கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன! இன்னும் நான்கு கோடி ஆண்டுகள் எமது வாழ் நாள் இருந்தால் அதைப்பார்க்கலாம் என்று கூறுகிரார். இது அறிவியலா? அடிமுட்டாள்தனம்! குரங்கு மனிதனாவதற்கு நான்கு கோடி ஆண்டுகள் தேவை என்றால் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மூதாதையின் சந்ததிக்குரங்கு இப்போது இல்லாமலா போய் விட்டது? தொடர்ந்து வந்துகொண்டுதானே இருக்கிறது! பதிலென்ற போர்வையில் பசப்புகிறார்! இதற்குள் எம்மை நோக்கி பரிணாமவியலை அறியாதவர்களின் நினைப்பு என்ரு ஜம்பம் அடிக்கிறார்.

மூன்றாவதாக, மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றால் மனிதன் இன்னும் பரிணாமம் அடையவில்லையே? ஏன்? எனும் கேள்விற்கு ஓர் அழகிய (?) பதிலளிக்கிறார்.

யாரும் தடுக்கவில்லை, தடுக்கவும் முடியாது. பரிணாமத்தின் முக்கியமான காரணியே சூழலால் பாதிக்கப்படுவது. சூழலால் தாக்கப்பட்டு நிர்ப்பந்தத்திற்குள்ளாகும் உயிரினங்கள் விரைவாக பரிணமிக்கின்றன. மனிதனைப் பொருத்தவரை தனக்கு ஏற்ப சூழலை மாற்றியமைத்து கொள்ளும் திறனுடன் இருக்கும் உயிரினினம் என்பதால் பரிணாமம் மெதுவாகவே நிகழும்.

மனிதன் பரிணாமம் அடைவான் அதற்கு லேட் ஆகும் என்றால் இதை கண்டுகொள்ளத்தேவையில்லை! ஆனால் அப்படி தாமதவாதற்கு இவர் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல! அதிலுள்ள தவறை கண்டுபிடிக்க முடியாத வகையில் வார்த்தை ஜாலம் காட்டியுள்ளார்! அதுதான் மனிதன் தனக்கேற்ப சூழலை மாற்றிக்கொள்பவன் எனும் வாசகம்! இது சரியா? பரிணாமம் அடைவதற்கு இயற்கைத்தேர்வு முக்கியம். அந்த இயற்கையைத்தான் சூழல் என்கிறார்! சூழலை மாற்றலாம்! இயற்கையை மாற்ற இயலாது! இதை அறிந்த செங்கொடி சூழல் எனும் வார்த்தையை சூட்சுமமாக பயன்படுத்தியுள்ளார்! எனவே இந்த வாசகம் சரியாகவும் உண்மையாகவும் எப்படி வர வேண்டுமெனில், மனிதன் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்பவன் என்றுதான் வரவேண்டும்! செங்கொடி எழுதியதற்கு அர்த்தமும் அதுதான்! ஒரு மனிதன் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டால் பரிணாமம் நிகழுமா? நிச்சயமாக இயலாது! ஏன்? மனிதன் பல செல் பிராணி! அவனுடைய ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி கட்டமைப்புக்கள் கானப்படகின்றன. ஆனால், மனிதனின் மூதாதையான (?) ஒரு செல் பிராணிகள் தமது அனைத்துத்தேவைகளையும் ஒரு செல்லின் மூலமே நிகழ்த்திக்கொண்டன! நிகழ்த்திக்கொண்டும் இருக்கின்றன. எனவே பரிணாமம் என்பது எப்படி சாத்தியம்? சாத்தியமே இல்லை! ஒரு செல்லின் மூலமே அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்றால் எதற்காக பல செல்லின் தேவை ஏற்பட்டது? பரிணாமத்திலுள்ள தவறு புரிகிறதா? எனவே இவரது வாதப்படி பார்த்தால் கூட மனிதன் லேட்டானாலும் பரிணாமம் அடைய மாடான்! இதற்கு முதலும் பரிணாமம் அடைந்திருக்க முடியாது! இப்படியில்லை என்றால், இவரது மேலோட்டமான வாதப்படி, சூழல் அதாவது இயற்கையை மாற்ற முடியும் என்று நிரூபித்துவிட்டு வாதிடலாம்.

நாம் பரிணாமம் தவறு என்பது இவர்கள் சில ஆதாரங்களை காட்டுவர். நகங்கள் வளர்ச்சியடைவது குறைவு, முடி வளரும் வீதம் குறைவு போன்ற சில ஆதாரங்களை பரிணாமத்திற்கு சான்றாக எடுத்துக்காட்டுவர். இது பரிணாமம் என்றால் அதை மறுக்கப்போவது இல்லை. இவை சரியானது. நிரூபிக்கப்பட்டது. ஆனால், ஒரு இனம் இன்னொரு இனமாக மாறுவதற்கு இந்த ஆதாரத்தில் எந்தச்சான்றும் கிடையாது!

அடுத்து நாம் கேட்கும் ஒரு கேள்வியை திரித்து கூறுகிறார். நாம் மனிதன் மண்ணிலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாக மனித உடலிலுள்ள பெரும்பாலான தனிமங்கள் மண்ணிலுள்ளவைதான் என்று கூறுகிறோம். ஆனால் செங்கொடி, இதை அறிவியல் நிரூபித்துவிட்டதாக நாம் கூறுவதாக கூறுகிறார். அப்படி கூறுவதில்லை! ஆனால், இவர் கொடுக்கும் பதிலும் சரியில்லை!
மனிதனின் உடலிலுள்ள 58 தனிமங்கள் மண்ணிலிருந்து வந்தது. ஆனால் அந்த மண்ணிற்கே அடிப்படை 108 தனிமங்கள்! இதை நாம் திரிப்பதாக கூறுகிறார்.

மனித உடலில் இருக்கும் தனிமங்கள் என 58 வகை தனிமங்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள். இதை களிமண்ணிலிருந்து மனிதனை படைத்ததாக கூறும் குரானின் கூற்றை மெய்ப்படுத்துவதாக கூறமுடியாது. மென்டலீப் எனும் வேதியியலாளர் சுமார் 108 தனிமங்களை அட்டவணைப் படுத்தியுள்ளார். பூமியிலுள்ள எந்தப் பொருளானாலும் அவற்றுக்கு இந்த தனிமங்கள் தான் அடிப்படை. ஆனால் மனித உடலிலிருக்கும் தனிமங்களுக்கு மண்தான் அடிப்படை என மதவாதிகள் திரிக்கிறார்கள். மண் ஒரு பொருள் அந்தப் பொருளுக்கும் மேற்கண்ட தனிமங்களே அடிப்படை என்பது தான் உண்மை.

இவரது வாதம் சரியா? மண் 108 தனிமங்களால் ஆனவை என்பதால் மண்னிலிருந்து மனிதன் படைக்கப்படவில்லை என்றாகிவிடுமா? இது ஒரு வாதமா? கதிரை ப்ளாஸ்டிக்கினால் ஆனது என்று கூறினால், அந்த பிளாஸ்டிக் ரப்பரிலிருந்து உருவாகிறது. அதற்கு ரப்பர் மரம் அடிப்படை! இவர் திரிக்கிறார் என்று ஒருவன் கூறினால் எவ்வாறிருக்குமோ அவ்வாறிருக்கிறது இவரது பதில். பாமரன் கூட இப்படிக்கேட்க மாட்டான்.

மனிதன் மட்டுமல்ல உல‌கின் அனைத்துப் பொருட்களும் மேற்கண்ட தனிமங்களினால் ஆனவையே. ஆனால் குரான் மனிதனை மட்டும் சிறப்பாக களிமண்ணினால் படைத்ததாக கூறுகிறது. மனிதன் உட்பட உலகின் அனைத்துப் பொருட்களுக்குமே மேற்கண்ட தனிமங்களினால் ஆக்கப்பட்டிருக்க குரான் மனிதனை மட்டும் களிமண்ணால் படைத்ததாக கூறுவதிலிருந்தே அதற்கும் அறிவியலுக்கும் உள்ள பொருத்தம் எளிதில் விளங்கும்.

ஒன்றை மறுக்க வேண்டும் என்பதற்காக எத்தனை விடயங்களில் விளையாடுகிறார்! எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை ஒரு செல்தான்! இது எல்.கே.ஜி! ஆனால், உண்மை அதற்கும் அடிப்படை என்று ஒன்றிருக்கிறது. அதுதான் அணு. செங்கொடியின் வாதம் இவ்வாறுதான் அமைந்துள்ளது!

மட்டுமல்லாது மனிதன் பூமியிலுள்ள களிமண்ணிலிருந்து படைக்கப்படவில்லை. சொர்க்கம் அல்லது வேற்று கிரகத்திலுள்ள ஒருவகை களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் மனிதனின் உடலிலுள்ள தனிமங்கள் அனைத்தும் பூமியிலுள்ளவையே. பூமியில் இருக்கும் தனிமங்கள் வேற்று கிரகத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றாலும் பூமியில் இல்லாத ஒன்றிரண்டு தனிமங்களாவது மனிதனின் உடலில் இருந்தாக வேண்டுமல்லவா? அப்படி எந்த தனிமமும் இல்லை என்பதிலிருந்தே மனிதன் முழுக்க முழுக்க பூமியின் தயாரிப்பு என்பது உறுதியாகிறது.

இஸ்லாம் என்ற பேரில் எதையாவதொன்றை விட்டு அடிப்பது இவரது வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. மனிதன் பூமியிலுள்ள மண்ணிலிருந்து படைக்கப்படவில்லை என்கிறார். இதற்கு இவர் ஆதாரத்தைக்காட்ட வேண்டும். எந்த குர்ஆன் வசனத்தில் அல்லது எந்த ஹதீஸில் ஆதம் (அலை) சுவர்க்கத்து மண்ணினால் படைக்கப்பட்டார் என்றுள்ளது என்பதை செங்கொடி காட்ட வேண்டும்.

அடுத்து ஒரு கேள்வி,

பலமான விலங்கே உயிர்வாழும் என்று பரிணாமவியல் கூறுகிறது. பலமான விலங்கான புலியை அரசு தனியாக நிதி ஒதுக்கி பாதுகாக்க வேண்டியுள்ளது, பலவீனமான ஆடு பல்லயிரம் கோடி எண்ணிக்கையில் இந்தியாவில் இருக்கிறது. இதிலிருந்தே தெரியவில்லையா டார்வின் தத்துவம் ஏற்கமுடியாத ஒன்று என்பது?

இதற்கு ஓர் அற்புதமான சூப்பரான பதிலளிக்கிறார்.

தகுதியான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும், பலமான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும் இடையில் பொருள் மாறுபாடு உண்டு. சூழ்நிலையின் வினைப்பாட்டை தாக்குப்பிடித்து நீடிக்கும் விலங்கே உயிர்வாழும் தகுதியைப் பெறும். டைனோசர்கள் வாழும் காலத்தில் அவற்றைவிட பலசாலியான வேறு விலங்குகள் எதுவும் பூமியில் இல்லை. ஆனால் ஒரு குறுங்கோள் பூமியை தாக்கியபோது அதை தாக்குப்பிடித்து வாழும் வலிமையை பலசாலியான அந்த விலங்குகள் பெற்றிருந்திருக்கவில்லை என்பதால் அவை அழிந்துபோயின. ஆடுகளுடன் ஒப்பிடுகையில் புலிகள் வலிமையானவை தான். ஆனால் மனிதனின் உணவுத்தேவையே ஆடுகளை கோடிகளில் வாழவைத்திருக்கிறது. புலிகளிடம் இவ்வாறான தேவை எதுவும் மனிதனுக்கில்லை. ஒருவேளை புலிகளை மனிதன் உணவுத் தேவைகளுக்காக பயன்படுத்தியிருந்தால் அதும் எண்ணிக்கையில் அதிகம் இருந்திருக்கக் கூடும். அதேநேரம் ஆடுகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பது வெள்ளாடு, செம்மறியாடு எனும் இரண்டு வகைதான். இந்த இரண்டும் மனிதனின் உணவுத்தேவையை பூர்த்தி செய்கின்றன. இதே ஆட்டினத்தில் வரையாடு என்றொரு வகை உண்டு. தமிழ்நாடு அரசின் விலங்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வரையாடுகள் அரசின் நிதி ஒதுகீட்டிற்கும், பராமரிப்புக்கும் பிறகும் கூட எண்ணிக்கையில் குறைந்துகொண்டே செல்கின்றன. இது ஏன் என சிந்திப்பவர்களுக்கு அந்தக் கேள்வியிலுள்ள பித்தலாட்டம் புரியவரும்.

இந்த பதில் பகுத்தறிவுக்கு துளியும் சம்பந்தமில்லை! ஒரு விலங்கு அதிகமாக வேட்டையாடப்பட்டால் அதன் எண்ணிக்கை அதிகரிக்குமாம்! என்ன லாஜிக் இது? துளியும் இதில் உண்மை அல்லது பகுத்தறிவு இருக்கிறதா? வெங்காயத்திற்கு அதிக டிமாண்ட் இருந்தால் அதன் எண்ணிக்கை அதிகரிக்குமா? குறையுமா? எது அதிகமாக சாப்பிடப்படுகிறதோ அது அதிகரிக்கிறது! எது சாப்பிடப்படுவதில்லையோ அது குறைகிறது. இது எப்படி சாத்தியம்? பகுத்தறிவு இந்த இடத்தில் தவறிழைக்கும்! ஏன்? இது நேர்மாற்றமான விளைவு! இது கூட இறைவன் இருக்கிறான் என்பதற்கான சான்றுதான். கூட, வரையாடு குறைகிறது என்கிறார் அது இக்கேள்வியின் பித்தலாட்டத்தை புரிய வைக்கும் என்கிறார். ஆனால், அது செங்கொடிக்கு எதிரான வாதம் என்பதைக்கூட செங்கொடி சிந்திக்கவில்லை! வரையாடு சாப்பிடப்படுவதில்லை! இதனால் குறைகிறது.  ஆக, இவரது பதில் துளி கூட பகுத்தறிவுக்கு ஒப்பானதல்ல! இவ்வளவுதான் இத்தொடரின் சாரம்.

பரிணாமவியல் பற்றிய வாதங்கள் மிக ஆழமாகவும் விரிவாகவும் பேசப்படவேண்டியவை! இது எழுத்தில் விவரிப்பதை விட நேரடி விவாதத்தில்தான் சாத்தியம். அதனால்தான், மிகவும் சுருக்கமாக பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால், செங்கொடியோ இத்தொடரை இதே தலைப்பின் கீழ் இன்னும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன் "இத்தொடரை முடிக்கவில்லை! இன்னும் வரும்! கேள்விகளுக்கான பதிலின் பின் மீண்டும் தொடர்வேன்..." என்று கூறி முடிக்கிறார். ஆனால், இது முறையானதல்ல!  இவை ஆழமான விடயம் என்பதால் நேருக்கு நேர், உடனுக்குடன் பதிலில்தான் தெளிவு கிடைக்கும்! அதில்தான் அழகாக விவரிக்கவும் முடியும் என்பதால் நாம் இது தொடர்பான விடயத்துக்கும் இன்னும் செங்கொடி இதுவரை பேசிய விடயங்களுக்கும், இன்னும் எவையெல்லாம் பேசப்பட வேண்டுமென்கிறாரோ, அவற்றுக்கும் நேரடி விவாதம் மிக மிக ஏற்புடையது என்பதால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சார்பாக நாம் செங்கொடியை நேரடி விவாதத்திற்கு மீண்டும் அழைக்கிறோம்! செங்கொடி பயப்படாமல், மழுப்பாமல், பல்டி அடிக்காமல் வருவார் என்று எதிர்பார்க்கிறோம். இத்துடன் எமது "செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே..." எனும் தொடரை முடிக்கலாம் என எண்ணுகிறேன். எமது முடிவுரையில் மீதி விடயங்களையும் இம்முடிவிற்கான காரணங்களையும் சகோதரர்கள் அறிந்துகொள்ளலாம்.

முடிவுரையை நாளை மறுதினம் எதிர்பாருங்கள் இன்ஷா அல்லாஹ்

Monday, May 9

ஸம் ஸம் நீரும் செங்கொடியின் சல்ஜாப்பும்


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-31

ஸம் ஸம் நீரூற்றும் குரானும் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

அரைப்பதற்கு எந்த சரக்கும் மாட்டாததால் தேடிப்பார்த்து எதையாவது ஒன்றை அரைக்கவேண்டியதுதான் என்று முடிவுகட்டிய செங்கொடி இப்போது ஸம் ஸம் நீரூற்றைப்பற்றி எழுதித்தள்ளியிருக்கிறார். எழுதித்தள்ளியிருக்கிறார் என்றதும் கேள்விகள் கொத்துக்கொத்தாக உள்ளன என்று நினைத்துவிட வேண்டாம். கேள்வி எங்கே என்று தேடிப்பார்க்கவே சில நிமிடங்கள் தேவை! அந்தளவுக்கு அற்புதமாக அறிமுகம் செய்திருக்கிறார். வழக்கம்போல கேள்வியைவிட அறிமுகமே மிக அதிகம்! எனவே ஆங்காங்ககே கேட்ட ஓரிரு கேள்விகளை மாத்திரம் கவனத்தில் கொள்வோம்.

முதலாவதாக கேட்பது இது 4000 ஆயிரம் வருடங்களாக நீரை தந்துகொண்டிருக்கிறது தவறு என்கிறார். ஏன் தெரியுமா? அதுபற்றிய குறிப்புகள் வரலாற்றில் இல்லையாம் எனவே, அது தவறு என்கிறார். வரலாற்றில் குறிப்பு இல்லாவிட்டால் அந்த நீரூற்று பழமையானது என்பது தவறா? அது நீரை தந்துகொண்டிருப்பது தவறா? என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதால் அதன் பின்னே ஒரு ஆதாரத்தை தூக்கிப்போடுகிறார். அந்த ஆதாரம் என்ன தெரியுமா? இப்பொழுது நாம் ஸம்ஸம் நீரூற்று என்பது அப்துல் முத்தலிப் கட்டிய கிணறாம்!

இப்போதிருக்கும் ஊற்று முகம்மதுவின் காலத்திற்கு சற்றுமுன் முகம்மதின் பெரிய தந்தையான அப்துல் முத்தலிப் என்பவர் குறைஷிகளின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக தோண்டிய கிணறு. 

அப்துல் முத்தலிப் என்பவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையா? என்னே ஓர் ஆய்வு! இவர் வரலாற்றை ஆய்வு செய்யும் லட்சணத்தைப்பார்த்தால் இவருக்கு PhD பட்டம் கொடுக்க அரசு முடிவெடுத்துவிடும். அப்துல் முத்தலிப் என்பவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாத்தா! அவருடைய பெரிய தந்தையல்ல! இந்த லட்சணத்தில்தான் ஸம்ஸம் நீரூற்றைப்பற்றி எந்த வரலாற்றுக்குறிப்பும் இல்லை என்று கூறுகிறார். சரி அது போகட்டும்! அப்துல் முத்தலிப் கட்டியதுதான் இந்த கிணறு என்பதற்கு ஏதாவது ஆதாரத்தை காட்டினாரா? முன்பெல்லாம் எதை குறிப்பிடாலும் ஹதீஸ் எண் தொடக்கம் அறிவிப்பவரின் பெயரையும் சேர்த்துக்குறிப்பிடுபவர் இதற்கு எதையுமே கூறவில்லையே! ஒரு வேளை இதற்கு மறுப்பு என்ற பெயரில் ஏதாவது ஒன்றை எழுதி இழுத்தடிக்க வேண்டும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தவிர்த்துவிட்டாரா? ஒன்றும் புரியவில்லை. வரலாறு என்ற பேரில் புழுகியுள்ளார்! இவரது கயமைத்தனம் முன்பை விட அதிகமாகவே இப்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவர் இதற்கு ஆதாரத்தைக்காட்ட வேண்டும் இல்லையெனில் இவர் பொய்யர் என்பதை இவர் ஒப்புக்கொள்ளாவிட்டலும் மக்களுக்கு புரிந்துவிடும்.

4000 ஆண்டுகளாக அது நீடித்து நிற்கிறது என்பதை மறுத்து அற்புதம் இல்லை என்கிறார். ஆனால் 1500 ஆண்டுகளாக அது வற்றாத நீருற்றாக இருந்து வருவதை அவரே ஒப்புக் கொண்டு இது அதிசயம் தான் என்பதை  ஏற்றுக் கொள்கிறார். கால அளவில் தான் இவருக்கு கருத்து வேறுபாடு உள்ளதே தவிர அது அற்புதம் எனதில் அல்ல என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்

1971ல் எகிப்திய மருத்துவர் ஒருவர் இந்தக் கிணறு குறித்து ஐயம் எழுப்பியதாகவும் அதைத் தீர்ப்பதற்கு மன்னர் பைசல் நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம் இது குறித்து விசாரிக்குமாறு பணித்ததாகவும், அவர்களால் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரிக் ஹுசைன் என்பவர் அந்தக் கிணற்றின் ஆழம் தோராயமாக ஐந்து அடி இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் அந்தக் கிணற்றின் ஆழம் 30 மீட்டர் என்று சௌதி அரசின் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படித்தான் அந்த நீரின் புனிதம் குறித்து கதைகள் கட்டி பரப்பப்படுகிறது. அதுவே மதத்துடன் தொடர்புடையது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆகிவிடுகிறது.

ஒருவர் ஐந்து அடி என்று குறிப்பிடுவதையும் மற்றவர் 30 மீட்டர் என்பதையும் இணைத்து முரண்பாடு எனும் தோற்றத்தை காட்ட முற்படுகிறார். ஐந்து அடி என்பது அந்த கிணற்றில் உள்ள தண்ணீரின் ஆழம்! ஆனால் அதை கிணற்றின் ஆழம் என திரிக்கிறார். அல்லது எந்த தளத்தில் இருந்து அக்கிணற்றின் ஆழம் ஐந்து அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை செங்கொடி காட்ட வேண்டும். அத்தோடு சவூதி இணையதளங்களில் 30 மீட்டர் என்றுள்ளதாக குறிப்பிடுகிரார். அந்த தளத்தையும் சேர்த்து செங்கொடி காட்ட வேண்டும்.

இந்த நீரில் இருக்கும் தனிமங்களின் செரிவு குறித்தும், இது புனித நீராக இருப்பதால்தான் இவ்வாறு இருக்கிறது என்பதாகவும் பிரதாபிக்கின்றனர். ஆனால் இதை விட பழமையான ஊற்றுகளெல்லாம் இதுபோல தனிமங்களின் செரிவுற்றதாக இருந்திருக்கிறது. சீனாவில் லிசான் மலையில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெப்ப நீரூற்று மருத்துவ தன்மை கொண்டதாக பயன்பாட்டில் இருக்கிறது.

லிசான் மலையில் உள்ளது போன்றதா ஸம் ஸம் நீரூற்று? அல்லது அதன் தனிமங்களை போன்றதா லிசான் மலையிலுள்ள நீரூற்று? அந்த நீரூற்று எந்த மாசும் ஏற்படாமல் இப்போதும் பயன்பாட்டில்தான் உள்ளதா? எதை எதோடு முடிச்சுப்போடுகிறார். ஒரு பாலைவனத்தில் எந்தவிதமான நீர்முதலின் துணையுமில்லாமல் இருப்பது ஸஸம் நீரூற்று! லிசான் மலையிலுள்ள கட்டப்பட்ட நீரூற்றும் அவ்வாறுதானா? அங்கு கட்டுவதென்றால் கூட சாத்தியப்படலாம்... ஆனால், ஒரு பாலைவனத்தில் இது சாத்தியமா? நிச்சயமாக இல்லை!

இந்த கிணற்றிலிருந்து எவ்வளவு நீரை இறைத்தெடுத்தாலும் இதன் நீர்மட்டம் குறைவதில்லை என்றும் ஒரு கருத்து உலவுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது சௌதி அரசு ஏன் அந்த கிணற்றை யாரும் அணுக முடியாதபடி பாதுகாத்து வைத்திருக்கிறது என்பதில் இருக்கிறது.

அடடா! என்ன அறிவார்த்தமான பதில்! சவூதி அரசாங்கம் அதை ஒரு புனிதச்சின்னமாக கருதுகிரது! இதனால் அதைப்பாதுகாக்கிறது. அதைப்பாதுகாப்பதால் அவ்வாறு நீர் தரவில்லை என்பதா? எவ்வளவு நீர் எடுத்தாலும் குறைவதில்லை என்பது தவறு என்றால் தெளிவாக நச் என்று ஆதாரத்தை போட வேண்டும். அதை விடுத்து இப்படி அசடு வழிவது விமர்சனம் இல்லை! சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

சவூதி அரசு கிணற்றை யரும் அணுக  முடியாத படி பாதுக்காத்து வருவதால் தினமும் குறைந்தது 20 லட்சம் மக்கள் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவதும் சொந்த ஊருக்கு எடுத்து வருவதும் பொய்யா? அப்படியானால் அந்த தண்ணீர் நைல் நதி சுரங்கப் பாதை வழியாக மக்கவுக்கு கொண்டு வரப்படுகிறது என்றோ அல்லது இது போல் தண்ணீர் எப்படி வருகிறது என்ற  வழியை எடுத்து கூறி மறுக்க வேணடும்
 

இவ்வளவுதான் அவரது தொடரிலுள்ள கேள்விகள். (?) இது மட்டுமில்லாமல் ஒரு முரண்பாடும் உள்ளது ஒரு பந்தியில் ஸம் ஸம் நீரூற்றைப்பற்றி எந்த குறிப்பும் குர்ஆனில் இல்லை என்பவர் இறுதியாக முடிக்கும் போது குர்ஆனில் அப்துல் முத்தலிப் தோண்டிய கிணற்றுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனக்கேட்கிறார். தனக்குத்தானே முரண்பட்டு உளறுபவர் விமர்சனம் செய்ய தகுதியானவர்தானா? தொடரை எழுதும்போது அவதானம் வேண்டும். அதுவும் கடைசிக்கு முதல் பந்தியில் ஒருவாறும் கடைசிப்பந்தியில் இன்னொருவாரும் கேட்பது இவர் எந்தளவுக்கு கவனமாகவும், நிதானமாகவும் உள்ளார் என்பதை படம்பிடித்துக்காட்டுகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

Wednesday, May 4

மிஃராஜும் மிரளும் செங்கொடியும்

செங்கொடியின்கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-30

விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

மிஃராஜ் எனும் விண்வெளிப்பயணம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடைபெற்றதாக குர்ஆனும் நபிமொழிகளும் கூறுகின்றன. இதை ஒவ்வொரு முஸ்லிமும் நம்பியாக வேண்டும். இதுவும் நம்பிக்கை தொடர்பானதுதான். அதனால்தான் இதையும் ஒரு கருப்பொருளாக செங்கொடி எடுத்துக்காட்டுகிறார். இந்த தொடரில் வழக்கம்போல கேள்வியை விட அறிமுகமே விரிவாக உள்ளது. அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு இவரது கேள்வியை எடுத்துக்கொள்ளலாம்.

இதில் அவர் கேட்கும்  கேள்வி என்ன? முஹம்மது நபி ஓரிரவிற்குள் ஏழு வானங்களையும் கடந்து சென்றதாக குறிப்பிடுகிறோம். ஒரு பிரபஞ்சத்தின் அளவே 2500 கோடி ஒளியாண்டுகள். இது நொடிக்கு நொடி விரிந்துகொண்டே செல்கிறது. உலகில் ஒளியின் வேகத்தை விட அதிவேகமானது இல்லை! அப்படியிருக்கும் போது ஓரிரவினுள் ஒரு பிரபஞ்சத்தையே கடக்கமுடியாது எனும்போது எப்படி ஏழு வானங்களையும் கடந்து சென்றார்? என்று கேட்கிறார்.

ஒரு பிரபஞ்சத்தின் அளவு 2500 கோடி ஒளியாண்டுகள் என்பது அதன் விரிவை அதாவது அதன் நீளவாக்கில் அதன் விரிவைக்குறிப்பது! ஏழு பிரபஞ்சங்களும் சீடி போன்று தட்டையாக ஒன்றன்மேல் ஒன்று அடுக்கியது போன்று உள்ளது. அதற்கிடையிலான குறுக்கு நீளமும் 2500 கோடி ஒளியாண்டுகள்தானா? சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் சம்பந்தப்படுத்தி சப்பைக்கட்டு கட்டுவதற்குப்பெயர்தான் இவரது மறுப்பு (?). ஒருவேளை 2500 கோடி ஒளியாண்டுகள் என்றே வைத்துக்கொள்வோம். இது இந்த காலத்து அளவு! 1400 ஆண்டுகளுக்கு முன்பும் இந்த அளவுதானா இருக்கும்? நிச்சயமாக இதை விட பல கோடி மடங்கு குறைவாகத்தான் இருக்கும். அடுத்து, ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணித்தது போல உள்ளதே என்கிறார். ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகம் உலகில் இல்லை என்பது உண்மை! ஆனால், இதைவிட வேகமாக பயணிக்க வைக்க படைத்தவனுக்கு முடியும்! அவன் சர்வ சக்தியுள்ளவன். உதாரணமாக, விண்டோஸ் எனும் கம்பியூட்டர் ஒப்ரேட்டின்க் சிஸ்டத்தை உருவாக்கியவர் பில் கேட்ஸ். இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் அதன் அட்மினிஸ்ட்ரேட்டர் சிஸ்டத்தை யாராலும் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு பாதுகாப்பானது! எந்தவொரு ஹேக்கரினாலும் அதை உடைக்க, ஹேக் செய்ய முடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அது எந்தவடிவில் வருமோ அந்த வடிவில்தான் பயன்படுத்தமுடியும். நாமாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தவோ அதன் அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டினை மாற்றியமைக்கவோ, அதை கண்டுபிடிக்கவோ முடியாது. ஆனால் இதை உருவாக்கிய பில்கேட்சிற்கு முடியும்! அவர் நினைத்த நபருக்கு சொல்லிக்கொடுக்கவும் முடியும். அப்படி மாற்றும்போதோ வேறொரு நபருக்கு சொல்லிக்கொடுக்கும்போதோ இது சாத்தியமில்லை எனலாமா? முடியாது! அவ்வாறுதான் படைத்த இறைவனுக்கும். அவன்தான் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தினையும் உருவாக்கினான். இதை ஒரு சிஸ்டமேடிக்காக இயங்க வைக்கிறான். இதனால் அந்த சிஸ்டத்திற்கு கடவுளும் விதிவிலக்கல்ல என கூற முடியாது! அப்படியிருக்கும்போது இந்த கேள்வி எந்தவகையிலும் அறிவுபூர்வமானது அல்ல! இன்னுமொன்றைப்புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, இவ்வுலகில் ஒளியை மிகைத்த வேகம் இல்லை என்று கூறினாலும் பெருவெடிப்பு நிகழ்ந்த போது வெடித்துச்சிதறிய துகள்கள் சென்ற வேகம் ஒளியைவிட மிகைத்தது என்று கூறுகின்றனர்! அப்படியிருக்கும்போது இவை அசாத்தியம் என்று கூறமுடியாது! படைத்தவனுக்கு இவை சர்வசாதாரணம். இவையை மறுக்கவேண்டுமெனில் கடவுள் இல்லை என்றுதான் முதலில் வாதிட வேண்டும்.
இவரது தொடரில் கேட்ட ஒரே ஒரு கேள்வி இதுதான்.

ஆக நம்புவதற்கு கூட துளியும் வாய்ப்பளிக்காத இதுபோன்ற கட்டுக் கதைகளைத்தான் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரே வேதம் என முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கடவுள் இருக்கிறான் என்பவர்களுக்கு இது நம்புவதில் துளியும் சங்கடம் இல்லை! குர்ஆன் இறைவேதம் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன! அப்படியிருக்கும்போது இதுவும் சரிதான்! சாத்தியம்தான்! இதை நம்ப முடியாது என்றால் கடவுள் இல்லை என்று முதலில் நம்ப வேண்டும். இது தவறு! பகுத்தறிவுக்கு துளியும் சம்பந்தமில்லாத கருத்து என்பது எமது நிலை.
மனிதர்களால் முடியாததெல்லாம் கடவுளால் முடியும் என்றெல்லாம் இதை எளிதாக குறுக்கிவிட முடியாது. அறிவியலை திணிக்க எங்கெல்லாம் வாய்ப்பிரிக்கிறதோ அங்கெல்லாம் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய அறிவியலை கூறிவிட்டது என ஜல்லியடிப்பதும், வெளிப்படையாகபல்லிளிக்கும் இடங்களில் அல்லாவின் அருள் என பதுங்கும் அப்பட்டமான மோசடி. என்ன மோசடியாக இருந்தாலும் எங்கள் மதம் என்பவர்கள் விலகிச் செல்லுங்கள். சிந்திக்கும் திறனுள்ளவர்கள் சிந்திக்கலாம்.

சென்கொடிக்கு இதை மறுக்க மிஞ்சி மிஞ்சிப்போனால் இவ்வாறுதான் கூறமுடியும். மாறாக கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாது! அந்த வினையால் உதிர்த்த முத்துக்கள்தான் இது! இவருடைய கையாளாகாத்தனத்தை எண்ணி பரிதாபப்படத்தான் முடியும்...! எனவே இதை கண்டுக்ள்ளத் தேவையில்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ் 

 

Friday, April 29

அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றலுடையவன்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-29

மீனின் வயிற்றில் மனிதனைப்பாதுகாத்த அல்லா எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

அல்லாஹ் யூனுஸ் நபியை கண்டித்த  விதம் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதாவது யூனுஸ் நபியை ஒரு மீன் விழுங்கியதாகவும் பின்னர் அவர் திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரியதால் அவரை விட்டுவிட்டதாகவும் அல்லாஹ் கூறுகிறான். இதில் செங்கொடி பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார்.
மீனின் வயிற்றுக்குள் சென்ற ஒருவர் எப்படி உயிருடன் வெளியில் வந்தார்? அதுவும் மீனின் வயிற்றுக்குள்ளிருந்து நடந்தவைகளை அசைபோட்டு சிந்தித்து அல்லாவை வேண்டித் தொழுது பின்னர் வெளியேற முடிந்திருக்கிறது என்றால்... சிறு குழந்தைகள் கூட கேட்டால் சிரித்து விடக்கூடிய தன்மையில் இருக்கும் இந்தக் கதையை தங்கள் வேதத்தில் வைத்திருப்பவர்கள் தான் தங்கள் மதம் அறிவியல் மதம் என்றும் நாளை கண்டுபிடிக்கப்படவிருக்கும் அறிவியல் உண்மைகள் கூட தங்கள் வேதத்தை மீறி இருக்க முடியாது என்றும் அளந்து விடுகிறார்கள்.

 அல்லாஹ்வை ஏதோ ஒஅர் அற்பனைப்போன்று நினைத்துக்கொண்டுதான் இக்கேள்வியைக்கேட்கிறார். அவன் அனைத்துக்கும் சக்தியுள்ளவன் என்பதை மறுக்கும் விதமாக கேட்கிறார். நாம் மீண்டும் சொல்கிறோம், அல்லாஹ் இருக்கிறான். அவனுக்கு எதுவும் சிரமமல்ல! தான் நாடியதைச் செய்பவன் என்பது எமது நிலை. இதுபோன்ற சம்பவங்களை மறுக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லை என்பதை இவர் நிரூபித்தாக வேண்டும்! இதுவரை அவர் நிரூபிக்கவில்லை. அப்படியிருக்கும்போது இப்படி கேட்பது இவரது இயலாமையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. இந்த சம்பவம் இருப்பதால் அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய வசனங்கள் இருப்பதென்பது தவறாம். என்ன மறுப்பு பாருங்கள். அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்க முடியாமல் முழித்துக்கொண்டும் அதை மறுக்க முடியாமல் உளறிக்கொட்டிக்கொண்டும் இருப்பவர் எப்படி மறுக்கிறார் என்று பாருங்கள்! இந்த சம்பவம் இருப்பதால் அறிவியல் முன்னறிவிப்புகள் உள்ள வசனங்கள் தவறாகிவிடுமா? என்ன எழுதுகிறோம் என்பதை சிந்தித்துதான் எழுதுகிறாரா?
இந்த சம்பவத்தை கூறும் வசனத்தில் மீன் என்று மொழிபெயர்க்கும் இடத்தில் 'ஹூத்' எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சொல் திமிங்கிலத்தை குறிக்கும் சொல். நீலத்திமிங்கிலங்கள் பிரம்மாண்டமான உடலமைப்பைக்கொண்டவை. அவை ஒரே தடவையில் 50 பேரை  நாக்கில் வைத்திருக்கும் அளவுக்கு விசாலமானவை. 50 பேரை வைத்திருக்க முடியும் எனும் போது ஒரு நபரை அதனுள் வைக்க படைத்த இறைவனுக்கு முடியாதா? அவன் நம்மைப்போன்றவனா? எமது நம்பிக்கைக்குள் இருந்து விமர்சிக்காமல் வெளியே போய் விமர்சித்து தன அதிமேதாவித்தனத்தை அடிக்கடி நிரூபித்துக்கொண்டிருக்கிறார் செங்கொடி. எப்படி விமர்சிப்பது எனும் அறிவு கூட இவருக்கில்லை.

ஒவ்வொரு உயிரினமும் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்காக பல்வேறு அமிலங்களை தங்கள் செரிமான உறுப்புகளில் சுரக்கின்றன. வெளிப்புற தோள்களில் பட்டால் அரித்துவிடக்கூடிய அளவில் நொதித் தன்மையுடன் இருக்கின்றன. ஆனால் ஒரு மீனின் வயிற்றில் ஒரு மனிதன் சில நாட்கள் வசதியாக வாழ்ந்துவிட்டு வெளியில் வந்ததாக கதை சொல்கிறது குரான்.

இவரது உளறலுக்கு ஒரு அளவே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று! இந்த சம்பவத்தை விமர்சிப்பவர் அதன் பின்னுள்ள வசனங்களில் உள்ளதைக்குரிப்பிட்டாரா? அப்படி குறிப்பிடாவிட்டாலும் இதை அவர் விளக்கிக்கூறும் போதாவது குறிப்பிட்டாரா? இல்லை! யூனுஸ் நபி மீன் வயிற்றில் வசதியாக வாழ்ந்தார் என்பது அப்பட்டமான பொய்!
அவற்றை நோயுற்றவராக வெட்டவெளியில் எறிந்தோம்.(37:145)

அவர் நோயுற்றவராக வெளியே எறியப்பட்டுள்ளார் என்றால் அவர் மீனின் வயிற்றினுள் சொகுசாக வாழ்ந்தார் என்று எப்படி புரிந்து கொள்வது? இவரது உளறலுக்கும் கயமைத்தனத்திற்கும் ஒரு அளவில்லை எனும் அளவிற்கு இவரது தொடர் முழுவதும் கொட்டிக்கானப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் செறிவுள்ள அசிட்களும் தாக்கத்தை ஏற்படுத்தும் நொதியங்களும் உள்ளதுதான்! ஆனால் இந்த மீனினுள்ளும் அப்படி உள்ளதா? என்பதையும் சேர்த்து விளக்க வேண்டும். அப்படி இருந்தாலும் இந்த வசனம் தவறாகாது! அவர் நோயுற்றவராகத்தான் வெளியே எறியப்பட்டுள்ளார் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து ஒரு சமுதாயத்தை குரங்குகளாக மாற்றிய சம்பவத்தையும் செங்கொடி விமர்சிக்கிறார். இந்த சம்பவம் இரண்டும் விமர்சனத்திற்கு உரிய விடயமே இல்லை! இதை விமர்சிக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லை என்று வாதிட வேண்டும்! அல்லது உலக விடயங்களில் குர்ஆன் தவறாக கூறியுள்ளது என்றாவது வாதிட வேண்டும்! எதையும் செய்யாமல் இவற்றை விமர்சிப்பது கையாளாகத்தனம்!

குரங்குகளின் மூதாதை விலங்கு ஒன்றிலிருந்து படிப்படியாக பல லட்சம் ஆண்டுகளில் உருமாறி வந்தவன்தான் மனிதன் என பரிணாமம் கூறினால் அதற்கு எதிராக ஆயிரம் கேள்விகளை எழுப்பும் மதவாதிகள், இங்கே ஒரே நொடியில் மனிதனை குரங்காக மாற்றிய குரங்காக மாற்றிய இந்த கதைக்கு எதிராக ஒற்றை ஒரு கேள்வியையேனும் எழுப்ப முன்வருவார்களா?

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது குருட்டுவாதம்! அதை நாம் ஏற்கமாட்டோம்! ஆனால் இது அல்லாஹ் செய்வது. அவனுக்கு இது சிரமமல்ல என்பதுதான் எமது வாதம்! இதற்கெதிராக நாம் எந்த கேள்வியும் கேட்க வேண்டிய அவசியமில்லை! ஏன்? அவன் சர்வ சக்தன் என்று நாம் நம்புகிறோம்! அவ்வாறில்லை என்று நிரூபித்துவிட்டு வாதிட வேண்டும்.

ஒரு விலங்கைவிட அறிவிலும், செயலிலும், நினைவிலும், பரிமாற்றத்திலும், கருவிகளை  பயன்படுத்துவதிலும் மேம்பாடு கொண்டவன் மனிதன். ஆனால் மனிதனின் இந்த மேம்பாடுகளை எல்லாம் ஒரு அளிப்பான் கொண்டு அளித்து விடுவதைப்போல் குரங்காக மாறிவிட்டார்கள் என கதை சொல்கிறது குரான்.
மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று நம்புகிறார்கள்! எப்படி என்று கேட்டால் அது இயற்கை என்கிறார்கள்! இயற்கைக்கு ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்ற முடியும் என்று நம்புபவர்கள் அனைத்து ஆற்றலுள்ளவன் மனிதனை குரங்காக மாற்றினான் என்றால் ஆச்சரியப்படுகிறார்கள்! இவர்கள் ஒரு நிலையற்றவர்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இந்த தொடர் முழுக்க முழுக்க எமது நம்பிக்கைக்குள்ளிருந்து விமர்சிக்காமல் வேறொரு கோணத்தில்தான் விமர்சிக்கப்பட்டுள்ளது! அதைக்கூட உருப்படியாக செய்யவில்லை!. அல்லாஹ் இல்லை என்பவர்களுக்கு இது கதைதான்! அல்லாஹ் இருக்கிறான்! அவன் அனைத்துக்கும் ஆற்றலுள்ளவன் என்பவர்களுக்கு இது உண்மைச்சம்பவம்! அல்லாஹ் இல்லை என்று நிரூபித்துவிட்டால் இதை நாங்கள் ஒதுக்குவதற்கு தயார்! செங்கொடி தயாரா?

வளரும் இன்ஷா அல்லாஹ் 

     

Sunday, April 24

சிந்தனைக்கும் உண்டு கடிவாளம்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-28

குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா? எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

இந்த தொடரில் செங்கொடி 'ஜின்' மற்றும் தாப்பத் எனும் உயிரினத்தைப்பற்றியும் விமர்சித்திருக்கிறார். இது பற்றிய விமர்சனத்தை கிளப்பியதற்கு இவரது பலவீனமே காரணம் என நான் கருதுகிறேன். ஏன்? இவர் ஒரு வருட காலமாக மக்கள் முன்னிலையில் இஸ்லாத்தைப்பற்றி தப்பும் தவறுமாக விமர்சித்த்தது மட்டுமல்லாமல், இதற்கு பதில் சொல்லத்தயாரா என்று சவடாலும் விட்டுவந்தார். அப்போது சகோதரர் பி.ஜே அவர்களிடம் விவாதம் செய்ய கோரியதும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டு பின்னர் மாட்டிக்கொண்டால் மானம் போய்விடும் என்பதற்காக உப்புச்சப்பில்லாத வாதங்களை எடுத்து வைத்து நான் பி.ஜெவுடன் நேரடி விவாதம் செய்ய மாட்டேன் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.

இவரை இப்படியே சும்மா விட்டுவிடக்கூடாது என்பதற்காக இவரது உளறல்களை தோலுரித்து காட்ட நாம் முன்வந்தோம். இவரது வாதத்தில் உண்மையாளராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? ஆஹா! இதுவல்லவா வாய்ப்பு என்று சொல்லி குர்ஆனில் எவை எவை அறிவியல் முன்னறிவிப்பாகவும் வரலாற்று சான்றாகவும் குறிப்பிடுகிறோமோ அவையனைத்தையும் எடுத்துவைத்திருக்க வேண்டும். நாம் பதிலளிக்க முன்வரும் வரையில் அறிவியல் முன்னறிவிப்புகளையும் வரலாற்று உண்மைகளையும் விமர்சித்தவர் பதிலளிக்க ஆரம்பித்தவுடன் எமது நம்பிக்கைக்கோட்பாட்டுடன் தொடர்புடைய விமர்சனங்களை கிளப்ப ஆரம்பித்துவிட்டார். இவற்றை கிளப்பினால் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் ஓடி விடுவார்கள்; நாமும் தப்பி விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். ஆனாலும் நாம் இவற்றுக்கு பதில் சொல்லாமல் விடப்போவதில்லை. எமது நம்பிக்கை கூட எந்தவகையில் சரி என்பதை அல்லாஹ்வின் அருளால் நிரூபிக்கத்தான் போகிறோம்.

முதலாவதாக 'ஜின்' எனும் பகுத்தறிவு உள்ள உயிரினத்தைப்பற்றி விமர்சிக்கிறார்.ஆனால் அவரது விமர்சனத்தை விட அது பற்றிய அறிமுகமே அதிகளவில் உள்ளது. விமர்சிக்க பெரிதாக ஒன்ருமில்ல்லை. அதைப்பற்றி எழுதியாவது பக்கத்தை நிரப்பிக்கொள்ளலாம் என்று நினைத்தாரோ என்னவோ! இவர் என்ன கேட்கிறார் என்றால் ஜின் என்று ஒன்று இருப்பதாக கூறுகிறீர்கள். அப்படி உலகில் எங்கும் காணவில்லையே! அது இருப்பதற்கான எந்த தடையமுமில்லையே என்கிறார். அதைத்தான் நாமும் சொல்கிறோம். ஜின்கள் இருப்பதை ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியாது. ஏன்? அது எமது கண்ணுக்கு தெரியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை. கண்ணுக்குத்தெரியாது எனும் போது காணவில்லையே என்று கேட்பது எவ்வளவு புத்திசாலித்தனம் (?) என்று அனைவருக்கும் புரியும். அடுத்து அப்படியானால் நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்று கேட்கிறார்.

நாங்கள் ஏனைய மதத்தவர்களைப் போலல்ல குரான் சிந்திக்கச் சொல்லியிருக்கிறது எனும் முஸ்லீம்கள் எந்த அடிப்படையில் ஜின்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கூற முடியுமா?


சிங்கள் இருப்பதாக கூறுவதை நாம் நம்புகிறோம். ஏன்? ஏனென்றால் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததாக நாங்கள் நம்புகிறோம். அது இறைவனிடமிருந்துதான் வந்தது! முஹம்மது எனும் நபரால் தயாரித்திருக்கவே முடியாது எனும் அளவிற்கு பல சான்றுகளை கொண்டுள்ளது. (அந்த சான்றுகளில் சிலவற்றை செங்கொடி விமர்சனம் செய்து அவையனைத்தும் தப்பு என்று நிரூபித்துவிட்டோம். அதற்கு பதில் சொல்வார் என்று பார்த்தால் முன்பை விட அதிகமாகவே உளறிக்கொட்டியிருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.) அப்படிப்பட்ட திருக்குர்ஆன் சொல்கிறது சிங்கள் உள்ளது என்று. நாம் தட்காலலத்தில் சரிகாணும் அறிவியல் உண்மைகளும் இன்னும் சில விடயங்களும் சரியாக இருக்கும் போது இது எப்படி தவறாகும்? ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. திருக்குர்ஆனை நிரூபிக்க ஒன்ரல்ள்ள பல விடயங்கள் உள்ளன. அவை அனைத்தும் சரியாக உள்ள போது எமது சக்திக்கப்பாற்பட்ட விடயங்களைக்கூரும் போது அது எப்படி தவறாகும்?

அதுமட்டுமல்ல, இன்னுமொன்றை சிட்ன்தித்துப்பார்க்கும் போது இந்த நம்பிக்கை சரி எனத் தோண்றும். அது என்ன? ஷைத்தானும் ஜின்களின் இனத்தைச் சேர்ந்தவன் என்று இஸ்லாம் கூறுகிறது. அவனது வேலை என்ன? மக்கள் மத்தியில் தவறான, அசிங்கமான செயல்களை ஏவி மக்களை வழிகெடுப்பது. இன்று நாம் பார்க்கிறோம் சிகரட் பிடிப்பது, ஹெராயின், வைன் போன்ற போதைப்பொருள் பாவனை தவறு என்று மனிதனின் அறிவுக்குப்படுகிறது. அப்படித்தான் வைத்தியர்களும் சொல்கின்றனர். இதை அவனும் அறிந்து வைத்திருக்கிறான். ஆனாலும் அவன் அத செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று அவனது அறிவை மழுங்கடிக்கச் செய்கிறது, அவனை அதன் பக்கம் தூண்டுகிறது என்பது தெரிகிறதா? இல்லையா? இந்த செயலுக்கு காரணமாக இருப்பவன் ஷைத்தான் என்று அல்லாஹ் சொல்கிறான். அக்கவே ஷைத்தான் இருக்கிறான் என்றுதானே அர்த்தம். ஷைத்தான் இருக்கிறான் என்றால் அவனது இனமான ஜின் இனமும் இருக்கத்தானே வேண்டும். இதுதான் சிங்கள் தொடர்பான அவரது கேள்விக்கு பதில்.

இறைவன் இருப்பதாக முஸ்லிம்கள் சொல்கிறார்கள். இறைவனைக் காட்ட முடியுமா என்று கேட்பது போல்தான் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது.

அடுத்து தாப்பத் எனும் உயிரினத்த பற்றி கேட்கிறார். இது ஒரு மேட்டரே இல்லை! உலகம் அழிவதற்கான அடையாளமாக பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று. உலகம் அழியும்! அதற்கு முன் இன்னின்ன நடக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பட்டியலையே போட்டுள்ளார்கள். அதில் பல விடயங்கள் நடந்து வருகின்றன. இன்னும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்றன. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் இதையும் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அடையாளம் காட்டிய விடயங்கள் அப்படியே நுனியும் பிசகாமல் இன்று நடந்து கொண்டிருக்கும்போது இது நடக்காது என்று எப்படி சொல்வது? அனைத்தும் தவறாக இருந்தால் இதுவும் தவறாக இருக்கும். எல்லாம் சரியாக இருந்து சில விடயங்கள் இன்னும் நடக்கவில்லை என்பதால் அது நடக்காது என்பதா? இல்லை இனியும் நடக்கும் என்பதா? இதை அப்படியே சொன்னால் பிரச்சனை இல்லை. ஆனால் இவரது சொந்தக் கருத்தையும் இதோடு சொருகி விடுகிறார்.
தைப்பது குறித்த செங்கொடி சுட்டிக்காட்டும் வசனம் இதுதான்:


அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஒஅர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் பேசும். (27:82)


இந்த வசனத்தில் அந்த உயிரினம் பூமியிலிருந்து வெளிப்படும் என்றுதான் உள்ளது. ஆனால் இவரோ இந்த விலங்கு பூமியை பிளந்து கொண்டு வெளிவரும் என்கிறார்.
வெளிப்படுவது என்றால் பிளந்து கொண்டு வரும் என்பதுதான் அர்த்தமா? உள்ளதை உள்ளபடி விமர்சிக்காமல் இப்படி இல்லாத அர்த்தத்தை சேர்ப்பது கயமைத்தனம் இல்லையா?

காலமோ நேரமோ குறிப்பிடாமல் ஒன்று நடக்கும் எனக் கூறினால் அதை போய் என்று யாராலும் கூற முடியாது. கி.பி 2010 ல் நடக்கும் என்று குர்ஆனில் கூறப்பட்டிருந்தால் 2010 வந்து விட்டதே ஏன் தாப்பத்தைக் காணவில்லை என்று கேட்கலாம். காலம் குறிப்பிடாமல் இறுதிக்காலத்தில் நடக்கும் எனக் கூறினால் அதை இப்படி மறுப்பது அறிவுடைமை இல்லை.

பூமியிலிருந்து தாவரங்கள் தானே முளைக்கும்? புழு பூச்சிகள் பொந்துகளில் வாழும், ஆனால் பூமியிலிருந்து திடீரென ஒரு உயிரினம் வெளிப்பட முடியுமா? அப்படி வெளிப்படும் ஒரு உயிரினம் உடனே பேச முடியுமா? எந்தப்பகுதியில் என்ன மொழியில் பேசும்? பேச்சு என்றால் என்ன? ஒரு உயிரினம் சமூக வயப்பட்டிருப்பதன் அடையாளம். தன இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாருவதற்குரிய ஒரு வளர்ச்சி. ஆஅனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? அதுவும் மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?


பூமியை பொத்துக்கொண்டு வரும் என்று குர்ஆனில் இல்லை. இவரது சொதக்கருத்து. அப்படியே பொத்துக்கொண்டு வருவதாக இருந்தாலும் இது கடவுளுக்கு பெரிய விசயமே இல்லை. ஒண்ணுக்கும் உதவாத தண்ணீரிலிருந்து மனிதனைப்படைத்த கடவுளுக்கு இப்படி செய்வது சிரமமல்! இது தவறு என்பதாக இருந்தால் கடவுளே இல்லை என்று நிரூபித்துவிட்டு இவ்வாதத்தை வைக்க வேண்டும். மனிதனுக்கு உள்ளுள்ள ரகசியம் இதற்கு எப்படித்தெரியும் என்று கேட்கிறார். சாதாரணமாக இது யாருக்கு தெரியாததுதான். இறைவன் அறிவித்துக்கொடுத்தால் இது பெரிய விசயமே இல்லை!


அல்லாவுக்கு இவைகளெல்லாம் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான், ஆண்டவனின் மகிமை இது என்பவர்களுக்கு அறிவியல் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை.


இதற்கு நாம் இப்படித்தான் பதில் சொல்வோம் என்று தெரிந்துள்ள செங்கொடி இப்படி சொல்லிவிடக்கூடாது என்பதற்காக கூறுகிறார். ஆனால் இதற்கு இது பதிலா? அல்லாஹ்வுக்கு இயலும் என்றால் நான் அல்லாஹ்வே இல்லை என்று சொல்கிறேன் எப்படி இதை ஏற்றுக்கொள்வேன் என்றாவது கேட்க வேண்டும். அப்படிக்கேட்டால் அல்லாஹ் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அது இவரால் முடியாது என்பதன் கோபம்தான் இது!.  கடவுள் என்பவன் அனைத்துக்கும் ஆற்றலுள்ளவனாக இருக்க வேண்டும். அப்படியில்லாதவன் கடவுளே கிடையாது. அல்லாஹ்வுக்கு அனைத்தும் இயலும் என்பது எமது நிலை! இது தவறு அதாவது அல்லாஹ்வே இல்லை என்று நிரூபித்து விட்டு இந்த வாதங்களை வைக்க வேண்டும். அதுவரை இவற்றை மறுக்க முடியாது.


இன்று கண்டுபிடிக்கப்படும் அறிவியல் நுணுக்கங்கள் கூட குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுவிட்டது, என ஜல்லியடிப்பவர்கள் இந்த உயிரினங்கள் குறித்து என்ன கூறுவார்கள்?


இன்றைய அறிவியல் உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூரியுல்லவன் இன்றைய அறிவியல் உலகால் கண்டுபிடிக்க முடியாத விடயத்தை கூறினால் அதை தவறு என்று எப்படிக் கூறுவது? இதை அறிவியல் மூலம் பொய் என்று நிரூபிக்க இயலாது! ஏன்? அறிவியல் என்பது சோதனைக்குப்பின் வெளிவரும் தகவல். எதை சோதனைக்குட்படுத்த முடியாதோ அவற்றை தவறு என்பது ஆடத்தெரியாதவன் அரங்கம் கோணல் என்பது போல்தான். எப்படி உயிரின் ரகசியத்தை அறிய முடியாதோ அதை ஆய்வு செய்வது சாத்தியமில்லையோ அதுபோல்தான் இந்த விடயங்களும். ஆனால், அறிவுப்போர்வமாக சிந்திக்கும் போது இவை சாத்தியம் என்பதை உணரலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ் 


Thursday, April 21

தடயமுள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்- 27

தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

குர்ஆனில் அல்லாஹ் ஏதாவதொன்றை அத்தாட்சியாக அறிவித்தால் அவற்றுக்கொரு தடயம் இருக்கும். அது குறிப்பிட்ட காலத்தில் வெளியாகும். அப்படி வெளியாகாத அத்தாட்சிகளை கண்டுபிடித்து (?) செங்கொடி விவரித்திருக்கிறார். அதில் உள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

...உமது உணவும் பானமும் கெட்டுப்போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்.)... (2:259) 

இதில் அத்தாட்சியாக அல்லாஹ் அம்மனிதனைக்குறிப்பிடுகிறான். இதை தெரிந்து கொண்டே வேண்டுமென்றே இதில் எது என்று கேட்கிறார்.

இதில் அத்தாட்சி என்பது எது? கழுதையா? மனிதனா? எந்த விதத்தில் அது மீள் சாட்சியாகப் போகிறது?

இதில் உள்ள அத்தாட்சி என்ன? அதைப்பார்க்கும்போதே அறிந்து கொள்ளலாம். அதாவது ஒரு பொருளை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் தொழிநுட்பம் உள்ளது என்பதுதான் அந்த அத்தாட்சி! அதைத்தான் இந்த செயல் மூலம் அல்லாஹ் நிகழ்த்திக்காட்டுகிறான். மனிதனுக்கே இது முடியும் எனும்போது படைத்தவனுக்கு முடியாதா? என்பதை இதிலிருந்து அறியலாம். இதை அறியாத செங்கொடி அவன் இறந்து கிடந்தாலும், உறங்கிக்கிடந்தாலும் உடலளவில் குறைந்தபட்ச சிறு மாற்றம் கூட ஏற்படவில்லை. ஏனென்றால் நூறு ஆண்டுகள் கழித்து, சில மணிநேரம் உறங்கியதுதாகத்தான் ஆண்டவனுக்கு பேட்டியளிக்கிறார். என்று கேட்கிறார். செங்கொடி எதையெல்லாம் தவறு என்று கூற முட்படுகிறாரோ அவை அறிவியல் உண்மையாக உள்ளதை தெரிந்து கொள்ளலாம். தவளையும் தன் வாயால் கெடும் என்பது இதைத்தானோ?

நூஹுடைய சமுதாயம் தூதர்களைப் பொய்யர்கள் எனக் கூறிய போது அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்கு படிப்பினையாக ஆக்கினோம். (25:37)

இதில் நாம் "படிப்பினை" என்று தமிழாக்கம் செய்துள்ள இடத்தில் செங்கொடி "அத்தாட்சி" என்று தமிழாக்கம் செய்துள்ளார். இதுபோன்று சில தமிழ் ஆக்கங்களிலும் காணப்படுகிறது. ஆனாலும், இதற்கு சரியான அர்த்தம் "படிப்பினை" என்பதுதான். ஏன்? இதன் மூலத்தில் உள்ள ஆயத் எனும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. எந்த அர்த்தம் எங்கு பொருந்துமோ அதைத்தான் செய்ய வேண்டும். இந்த இடத்தில் இது அத்தாட்சி எனும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இதன் கருத்தே விளக்குகிறது. இங்கு அத்தாட்சி என்று பொருள் கொள்வதாக இருந்தால் இறந்தவர்களின் உடலோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்டதோ பாதுகாக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.  அவ்வாறுதான் பிர்அவ்ன் உடல் சம்பந்தப்பட்ட வசனத்தில் வருகிறது. இங்கு அப்படி எதுவும் இல்லை என்பதால் இவர்களிடம் உங்களுக்கு படிப்பினை உள்ளது என்பதுதான் சரியான அர்த்தமாகும். இதை விளங்கிக்கொள்ளாமல் சில கேள்விகளை கேட்கிறார். எனவே அவை அடிப்படையிலேயே தவறு என்பதால் இதற்கான பதிலை அடியோடு தவிர்க்கிறோம்.

அடுத்து, இவர் எந்த சம்பந்தமுமில்லாத ஒரு வசனத்தை இதோடு கட்ட முயல்கிறார். அதற்காக இவராகவே முன்வந்து அந்த வசனத்துக்கு ஒரு புதிய பொருளை, அதில் இல்லாத கருத்தையும் திணித்து விடுகிறார்.

இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது. (18:9) 

இந்த வசனத்தில் கிருபை (கருணை) என்று கூறப்படுவது அத்தாட்சி என்கிறார். இங்கு அருள் என்பது அத்தாட்சியா? கிடையவே கிடையாது. அருளுக்கும் அத்தாட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை! இங்கு அருள் எனக்கூறப்படுவது துல்கர்னைன் எழுப்பிய சுவர்தான். அது மறுமை நாள் நெருங்கும் போது உடையும் என்பதுதான் அதன் அர்த்தம். இவர் தனது கருத்தை நிலை நாட்ட எத்தகைய கயமைத்தனத்தையும் மேற்கொள்வார் என்பதற்கு இது ஒரு சான்று.

அந்த இடம் எங்கே என்று கேட்கிறார். அப்படி ஒரு இடம் உலகில் என்றும் சொல்கிறார். இன்று செய்மதியை வைத்து உலகில் எந்த மொல்லையிலுள்ளதையும் அறிந்து கொள்ளலாம் என்ற இறுமாப்பில் கூறுவதுதான் இது. இன்று எவ்வளவு செய்மதிகள் வந்தும் கூட காட்டுப்பகுதியினுள் உள்ள விடயங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தனக்கடத்தல் வீரப்பன் காட்டுக்குள்தான் இருந்தான். அவனை செய்மதிகள் மூலமாக கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லையே! இந்த வசனங்களில் கூறப்படுவதைப்பார்த்தால் அது நகர்ப்புறம் என்றோ கிராமப்புறம் என்றோ கருத இயலாது. ஒரு காட்டுப்பகுதியாகத்தான் இருக்க முடியும். இதுபோல் எத்தனையோ மர்ம இடங்கள் கண்டுபிடிக்கப்படாமல்தான் உள்ளன. தான் வாசிக்கும் வசனங்களை எல்லாம் எப்படியாவது கோர்த்து கதை கட்ட வேண்டும் என்பதற்க்காகத்தான் இப்படிப்பட்ட தில்லுமுல்லு வேலைகளை கையாள்கிறார்.

வாய்ப்புள்ள இடங்களை நீட்டி முழக்குவதும், அல்லாதவற்றை இருட்டடிப்பு செய்வதும் மதவாதிகளின் வழக்கம். இந்த வழக்கச் சகதிக்குள்தான் மதங்களின் வேதங்களின் புனிதங்கள் பிரபெடுக்கின்றன.

எங்களுக்கு எதையும் நீட்டி முழக்க வேண்டிய அவசியமோ, ஒழித்து வைக்கும் அவசியமோ கிடையாது. இவர் எவையெல்லாம் தவறு என்று வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறாரோ அவையனைத்தும் அறிவியல் உண்மைகளும், தவறே அற்ற வசனங்களுக்கும்தான் உள்ளன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

வளரும் இன்ஷா அல்லாஹ்   

Tuesday, April 19

செங்கொடியின் அரை குறை ஆய்வுகள்

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்- 26

குர்ஆனில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.
இதுவரை செங்கொடியின் அறிவியல் தொடர்பான அரை குறை ஆய்வுகளை பார்த்தோம். த்தொடரில் செங்கொடி சின்னப் பிழைகள் என்று விட்ட ஆய்வுக்குரைகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

முதல் முதலில் இவர் எடுத்து வைக்கும் அந்த சிறிய தவறு (?) ஏற்கெனவே கேட்ட கேள்விதான். அது எவ்வளவு அடி முட்டாள்த்தனமான கேள்வி என்பதை எமது மறுப்பிலும் சுட்டிக்காட்டியிருந்தோம். இங்கு மீண்டும் அதை தொட்டிருப்பதால் நாமும் அதை சுட்டிக்காட்டுகிறோம்.

மதவாதிகள் குரானின் அறிவியல் என்றோ, வேதத்தின் அற்புதங்கள் என்றோ பேசத்தலைப்பட்டால் மற்றெல்லாவற்றையும் விட முதலில் எடுத்துக்கொள்ளும் ஒன்று தேனீ. ஆனால் அதே வசனத்திளிருக்கும் இந்த வாக்கியத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவார்கள். குரான் 16:69 ல் அல்லா தேனீக்கள் கனிகளிலிருந்து உணவருந்துவதாகக் கூறுகிறார். கனிகள் என்று பொதுவாக கூறப்பட்டாலும், அந்த இடத்தில் 'தமர்' என்றே அரபியில் குறிக்கப்பட்டிருக்கிறது. தமர் என்பது பழங்களைக் குறிக்கும் பொதுச் சொல்லல்ல. அது பேரீத்தம் பழத்தைக் குறிக்கும் தனிப்பட்ட சொல். ஆக குரான் தேனீக்கள் பேரீத்தம் பலத்தை உண்கின்றன எனும் அறிவியல்(!) உண்மையைப் போட்டுடைத்திருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் தேனீக்கள் பேரீத்தம் பலத்தையோ அல்லது வேறு பழங்களையோ உண்பதில்லை. பூக்களிலிருந்து சேகரிக்கும் தேனையே அவை உண்கின்றன என்பது அல்லவா உண்மை. எல்லாவற்றையும்விட மிகைத்த ஞானமுடைய அல்லா ஏன் இப்படிக் கூறிவிட்டார். அதுவும் எக்காலத்திற்கும் பொருந்தும் குர்ஆனில்.

தேனீக்கள் மலரிலுள்ள குளுக்கோசைத்தான் உண்கின்றன என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவை நன்கு பழுத்த பலன்களிலிருந்தும் தமக்குத்தேவையானத்தை உண்கின்றன. பலன்களில் மட்டுமல்ல, அவை சீநிக்கரைசளிலும் உண்ணும். அதில் குளுக்கோஸ் இருப்பதால்தான் இவ்வாறு செய்கின்றன.
அடுத்து பேரீச்சம் பழத்தில் இருந்து தேனீக்கள் சாப்பிடுவதாக குர்ஆன் கூறுவதாக செங்கொடி கூறுவதன் மூலம் இவரது அறியாமை பளிச்சென்று தெரிகிறது. இவர் கூறுவது போல் குர்ஆனில் கூறப்படவில்லை. அரபு மொழி பற்றி ஆய்வு செய்வதாக இருந்தால் அது பற்றிய அறிவு இருக்க வேண்டும். அந்த அறிவு கூட இல்லாமல் உளறிக்கொட்டியுள்ளார்.
அரபு மொழியில் தமர் என்றால் பேரீச்சம் பலம் என்றுதான் பொருள். ஆனால் குர்ஆனில் தமர் என்ற சொல் இடம்பெறவில்லை.  ஸமர் என்ற சொல்தான் உள்ளது. இதன் பொருள் கனி என்பதாகும். உதாரணமாக பல்லி பள்ளி என்ற இரண்டு சொற்களுக்கும் ஒருவன் ஒரே பொருளைக் கொண்டால் அவனை அறிவீனன் என்போம். அந்த லிஸ்டில் தான் இவரையும் சேர்க்க வேண்டும். 
இரண்டு புள்ளியுள்ள (ثمر) எனும் சொல்லுக்குத்தான் பேரீச்சம் பழம் என்று பொருள். மூன்று புள்ளியுள்ள(ثمر) ஸமர் எனும் சொல்லுக்க்கு கனி என்று பொருள். அந்த வசனத்தில் மூன்று புள்ளியுள்ள ஸ்மர் எனும் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வித்தியாசம் கூடத்தெரியவில்லை. எனக்கு அரபு தெரியும் என்றும், நான் குர்ஆனை அரபு மொழி ரீதியாகவும் ஆய்வு (?) செய்திருக்கிறேன் என்பதை காட்ட முயன்று இப்படி கேவலப்பட்டு நிற்கிரார்.

அடுத்து குர்ஆனில் 24:43ம் வசனத்தில் மழை பெய்யும் விதத்தினை கூறுகிறது. அதில் ஆலங்கட்டி மழை தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது. அதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து (?) ஒரு தவறை (?) கண்டுபிடித்திருக்கிறார்.

வசனம் 24:43 மழை பொழியும் விதம் குறித்து பேசுகிறது. அதன் முழு வசனம் இப்படி இருக்கிறது, “நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து அவற்றை ஒன்றாக இணையச் செய்து அதன் பின் அதை அடர்த்தியாக்குகிறான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான். அதைத் தான் நாடியவர் மீது விழும்படி செய்கிறான்……” என்று போகிறது. இது ஆலங்கட்டி மழை பற்றிய குரானின் புல்லரிக்கவைக்கும் விளக்கம். இந்த விளக்கம் தவறானது, பொருந்தாதது என்பது அவர்களுக்கும் தெரிந்துதான் இருக்கிறது. அதனால் தான் அடைப்புக்குறிக்குள் எழுதி சமன் செய்திருக்கிறார்கள். அடைப்புக்குறியுடன் சேர்த்து இப்படி அவன் வானத்தில் மலைக(ளைப்போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்என்று சமாளித்திருக்கிறார்கள். மழைவிழுவது மேகத்திலிருந்து என்பது தெரிகிறது, ஆனால் சில நேரங்களில் பனிக்கட்டி மழையும் பொழிகிறதே எப்படி? சரிதான் வானத்தில் பனிக்கட்டி மலை ஒன்று இருக்கிறது போலும் எனும் வறண்ட சிந்தனையின் விளைவுதான் இந்த வசனம்.

குரங்கு ஆப்பிழுத்த கதையை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதுபோல்தான் செங்கொடி எதை தவறு என்று குறிப்பிட்டு குர்ஆனை மறுக்கப்புகுந்தாரோ அது ஒரு அறிவியல் உண்மை என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு பதில் கூறுவதற்கு முன் அந்த குர்ஆன் வசனம் என்னவென்பதைப்பார்க்கலாம்:

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான்... (24:43)

இதில் உள்ள செங்கொடி தவறு என்று குறிப்பிடும் அறிவியல் உண்மையை அறிஞர் பி.ஜே அவர்கள் தனது தமிழாக்கத்தில் 419ம் குறிப்பாக தந்திருக்கிறார். அதையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.

419. வான் மழையின் இரகசியம்

இவ்வசனத்தில் (24:43) ''வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது'' என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது.

பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

இம்மேகங்கள் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை.

மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக் கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகிறது.

இந்த பனிக் கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றது. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம்.

இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்த பனிக் கட்டிகள், செங்குத்தாக அடுக்கப்பட்டு, மின் காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக் கட்டிகள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன.

இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத் தான் மேலே தந்திருக்கிறோம்.

இதில் கூறப்பட்டுள்ள மேகங்களை இழுத்தல், அவற்றை அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக் கட்டிகள் செங்குத்தாக நிறுத்தப்படுதல், மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல் போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இந்த வசனம் (24:43) அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம்.

குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

அடுத்த தவறாக செங்கொடி சுட்டிக்காட்டுவது நரகத்தில் வழங்கப்படும் உணவு தொடர்பானவை. குர்ஆனில் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறாக, வெவ்வேறு விதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இந்த முரண் என்று கேட்கிறார். அதை மொத்தமாகப்பார்த்தால் எந்த முரணும் கிடையாது. நரகத்தில் பல படித்தரங்களும், ஒவ்வொரு சாராருக்கும் ஒவ்வொரு விதமான உணவுகளும் தண்டனைகளும் வழங்கப்படும். அதை வெட்டி ஒட்டி பிழையாக பிதற்றுகிறார்.
அவர் சுட்டிக்காட்டும் வசனங்கள்:
இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? (37:62)

கொதிக்க வைக்கப்பட்ட பானமும் இதற்கு மேல் அவர்களுக்கு உண்டு (37:67)

சீழைத்தவிர வேறு உணவும் இல்லை. (69:36)

முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை. (88:6)

இவற்றைச் சுட்டிக்காட்டி முன்னுக்குப்பின் முரண் என வாதிடுகிறார்.

அடுத்திருக்கும் மூன்று வசனங்களும் நரகத்தாரின் உணவுகுறித்த குரானின் கூற்றுகள். அதாவது பூமியில் மனிதர்கள் வாழ்ந்தது போதும் என அல்லா நினைக்கும் ஒரு நாளில் பூமி அழிக்கப்பட்டு அதுவரை பூமியில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும், ஆதி மனிதன் தொடங்கி கடைசி காலம் வரை (கோடானுகோடி ஆண்டுகள் ஆனாலும்) வாழ்ந்த மக்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி வாழ்ந்தவர்கள் சொர்க்கத்திற்கும், அப்படி வாழாதவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். இதில் நரகத்திற்கு அனுப்பப்படும் மனிதர்களின் உணவு என்ன என்பதைத்தான் அந்த மூன்று வசனங்களும் தெரிவிக்கின்றன. இதில் பிரச்சனை என்னவென்றால் மூன்றும் வெவ்வேறு உணவுகளைக் கூறுகின்றன என்பதுதான். முதல் வசனத்தில் ஜக்கூம் என்ற மரமும் கொதிக்கும் நீரும் என அறிவிக்கப்படுகிறது. ஜக்கூம் என்பது ஒருவகையான கள்ளி வகை மரம் என பொருள் கூறுகிறார்கள். ஜக்கூம் என்ற மரமும் குடிப்பதற்கு கொதிக்கும் நீரும் முதல் வசனத்தின் படி நரகத்தாரின் உணவு. ஆனால் 69:36ன் படி சீழ் நீரைத்தவிர வேறு எந்த உணவுமில்லை என அடித்துக்கூறுகிறது. இதே தொனியில் 88:6 விஷச்செடிகள் மட்டும்தான் உணவு வேறில்லை என திட்டவட்டமாகக் கூறுகிறது. என்றால் எதுதான் நரகத்தின் உணவு? நரகம் என்று ஒன்றில்லை என்பவர்களுக்கு இது குறித்த தேவை ஒன்றுமிலை. ஆனால் இருக்கிறது என நம்புபவர்களுக்கு எது உணவு என தெரிந்திருப்பது அவசியமல்லவா?

சில மொழிபெயர்ப்புகளில் விஷச்செடி என்பதை முட்செடி என்பதாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதைக்கொண்டு கள்ளி என்பதும் முட்கள் நிறைந்தது தான், எனவே இரண்டு மூன்றாம் வசனங்களில் தனித்தனியாகவும், முதல் வசனத்தில் இரண்டையும் சேர்த்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று பொழிப்புரை தருகிறார்கள். ஆனால் சீழ், விஷச்செடி வசனங்களில் தனித்தனியே இதைத்தவிர வேறு உணவில்லை என தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. முட்செடி என்பதும் கள்ளி என்பதும் ஒன்றுதான் எனக் கொண்டாலும் முதல் வசனத்தில் ஜக்கூம் மரம் என்று வருகிறது மூன்றாம் வசனத்திலோ விஷச்செடி, என்றால் அல்லா செடிக்கும் மரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பதை ஒப்புக்கொள்வார்களா? இரண்டாம் வசனத்தில் சீழ் நீர் என்பது அருவருப்பான நீர் எனும் பொருளில் நீரின் தரத்தைக்குறிக்கிறது, அது குளிர்ந்திருக்குமா சூடாக இருக்குமா என்ற விபரமில்லை. முதல் வசனத்தில் கொதிக்கும் நீர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதேயன்றி சுகாதாரமான குடிநீரா இல்லையா என்ற விபரமில்லை. எனவே இரண்டையும் ஒன்றெனெக் கொள்வதற்கு இடமில்லை.

37:62,67ம் வசனங்களில் குறிப்பிடப்படும் உணவு மறுமையை நம்பாதவர்களுக்குரியது என்பதை அதற்கு முன்னுள்ள வசனங்களும் (37:51,52,53) 69:36ம் வசனம் அல்லாஹ்வை நம்பாமலும் ஏழைக்கு உணவளிக்காதவர்களுக்கும்(69:33,34) 88:6ம் வசனம் உறுதியாக தீமை செய்தவர்களுக்கும் என்று அந்த வசனங்களுக்கு முன், பின்னுள்ள வசனங்களைப்பார்த்தாலே புரிந்து கொள்ள இயலும். இதில் முரண் எதுவும் கிடையாது. ஆக, இவர் சின்னப்பிழைகள் என்பது ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது.செங்கொடியார் இதுவரையும் என்னென்ன தவறுகளை விட்டுள்ளார் என்பதயும் வாசகர்கள் பார்க்க வேண்டாமா? எனவே, இவரது கேலிக்கூத்தான சில விடயங்களை சுட்டிக்காட்டுகிறேன்.
இவரது மொத்த தொடர்களிலும் உள்ள முக்கிய தவறு என்னவெனில் முஹம்மது நபிதான் இந்த குர்ஆனை இயற்றினார் என்பது. இதுதான் அவரது நிலையாகவும் உள்ளது. ஆனால், இது எள் முனையளவு கூட சாத்தியமில்லை. ஏன்? முகம்மது நபிக்கு எழுதவோ அல்லது படிக்கவோ அல்லது கவிதை இயற்றவோ தெரியாது! அப்படியிருக்கையில் இவற்றை எவ்வாறு அவரால் இயற்றி இருக்க முடியும் என்பதை செங்கொடி விளக்க வேண்டும்.

முதல் தவறு :
நுழைவாயில் எனும் பகுதியில் செங்கொடி அரபு தேசியவாதம், அரபு மாக்ஸியம் என்பன இஸ்லாமியல் இறையியல் என்றார்.
இவை இஸ்லாமிய இறையியல் இல்லை! இவர் தவறாக கூறுகிறார் என்று எமது மறுப்பில் எழுத்யிருந்தோம். அதற்கு மறுப்பெழுதப்புகுந்தவர். அரபிகள் செய்தனர் என்று கூறினார். அரபிகள் செய்தால் எவ்வாறு இஸ்லாம் ஆகும்? என்று அவரது மறுப்பின் மறுப்பில் கேட்டுள்ளோம். எனவே, இவர் இஸ்லாம் இல்லாததை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்வைக்கிறார்.

இரண்டாவது தவறு:
இஸ்லாம்: பிறப்பும் இறப்பும் ஓர் எளிய அறிமுகம் எனும் தொடரில் சைத்தான் அல்லாஹ்வின் எதிரி என்றார். சைத்தான் மனிதனுக்குத்தான் எதிரி! அல்லாஹ்வுக்கு எதிரி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று எமது மறுப்பில் எழுதியிருந்தோம். இதை மறுக்கப்புகுந்தவர், மனிதர்களுக்கு எதிரி என்றால் அதன் உள் அர்த்தம் அல்லாஹ்வுக்கு எதிரி என்பதுதான் என்றார். அது தவறு என்பதை எமது இரண்டாவது மறுப்பில் தெளிவு படுத்தியுள்ளோம். எனவே, அறிமுகம் என்ற பெயரில் தவறு விட்டிருக்கிறார்.

மூன்றாவது தவறு:
குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள் எனும் தொடரில் "எழுதுகோல்" என்பதற்கு எழுதும் தாள் என அர்த்தம் செய்து உளறியிருந்தார். அந்தளவுக்கு இவரது ஆய்வுப்புலமையும் தமிழ் புலமையும் உள்ளது. தொல்காப்பியரும் தோற்றுவிட்டார்.

நான்காவது தவறு:
அதே தொடரில் முஹம்மது நபி மரனித்த இடம் இப்போது மிகப்பெரிய மசூதியாகப்பாதுகாப்படுகிறது என்று கதை விட்டார். அந்தளவுக்கு அவரது இஸ்லாம் பற்றிய வரலாற்று அறிவும் கொள்கை தெளிவும் உள்ளது.

ஐந்தாவது தவறு:
பூமி உருண்டை என யார் சொன்னது? அல்லாவா? மனிதனா? எனும் தொடரில் "பூமி உருண்டையாக இருந்தாலும் நேர்கோட்டில் பயணம் சய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண முடியாது என்ரார். இது எந்தளவுக்கு அபத்தம் என்பதை எமது மறுப்பிலும் குறிப்பிட்டுள்ளோம். சாதாரணமான ஒரு உருண்டையான பொருளை எடுத்துக் கொண்டு அதில் நம் விரலை பயணம் செய்ய வைத்தால் பயணம் புறப்படுவது ஒரு திசையை நோக்கியதாக இருக்கும், ஆனால் 180 டிகிரிக்குப் பின் அதாவது சரி பாதிக்குப் பின் போன திசையில் இருந்து எதிர்த்திசையில் அந்த விரலின் பயணம் ஆரம்பமாகும்.  அதாவது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணித்த அந்த விரல் 180 டிகிரிக்குப் பின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கியதாக மாறுமா மாறாதா? எவ்வளவு விவரமாக உள்லார் என்பது தெரிகின்றதலாவா?

ஆறாவது தவறு:
பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள் எனும் தொடரில் செங்கொடியின் அரபுப்புலமையை எமக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார். அதை இதே தொடரில் மீண்டும் சுட்டியதற்கு இதிலேயே பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது தவறு:
சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு எனும் தொடரில் புத்தர் தந்தையின்றி பிறந்தவர் என்று துணிந்தே இட்டுக்கட்டினார். புத்தர் சுத்தோதனன் என்பவருக்கு பிறந்தவர்.

இவ்வளவுதான் தவறுகள் என்று நினைத்து விட வேண்டாம். இவரது உளறல்களில் உச்ச கட்ட உளறல்களைத்தான் இங்கு தொகுத்து எழுதியுள்ளேன். இவ்வளவும் போதும் இவரது வாதத்தின் சாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள...

வளரும் இன்ஷா அல்லாஹ்