Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, March 8


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர்-12

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

ஒரு குறிப்பிட்ட வசனத்தை எடுத்துக்கொண்டால் அதற்கான மறுப்பை தெளிவாக பதிவு செய்ய வேண்டும். மறுக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு குழப்பக்கூடாது. அதாவது இது மறுப்பா இல்ல சப்போர்டா என்று தெரியாத அளவுக்கு பெரும்பாலான இடங்களில் குழப்பி வைத்திருக்கிறார் செங்கொடி. விண்வெளி குறித்துவரும் மூன்று குர்ஆன் வசனங்களை எடுத்துக்காட்டி விளக்குகிறார். முதலாவது வசனமாக 86:11ம் வசனம் சம்பந்தப்பட்ட அவரது விளக்கத்தை (?) எடுத்துக்கொள்வோம்.
வசனம் 86:11 ஐ எடுத்துக்கொள்வோம் ‘பொழியும் மழையை உடைய’ என்பதில் ஒன்றுமில்லை. அதற்கு விளக்கமாக அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் திரும்பத்திரும்ப என்பதில் தான் மதவாதிகள் கண்டுபிடித்த அறிவியல் ஒழிந்துகொண்டிருக்கிறது. மழை திரும்பத்திரும்ப வருகிறது, இதில் என்ன அறிவியல் இருக்கிறது? ஆனால் பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் இது திரும்பத்தரும் வானம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வானம் எதை திரும்பத்தருகிறது? மழையை திரும்பத்தருகிறது. ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது யாருக்காவது தெரியுமா? ஒருவருக்கும் தெரியாது. மழையை மட்டுமா திருப்பித்தருகிறது? தொலைபேசி தொலைகாட்சி அலைவரிசைகள் வானத்திற்கு அனுப்பப்பட்டு மீண்டு நமக்கு திரும்பக்கிடைக்கிறது. வானத்தை திருப்பித்தரும் தன்மையோடு படைத்திருப்பதால் தான் இவைகளெல்லாம் சாத்தியமாகின்றன. இந்த அறிவியல் உண்மையை குரான் அன்றே கூறிவிட்டது.
அனுப்பப்படும் அலைவரிசைகளை வானம் திருப்பி அனுப்புகிறதா அல்லது நிலைநிருத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் திருப்பி அனுப்புகின்றனவா என்பது எலோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வானம் திருப்பி அனுப்புவதாக கூறிக்கொண்டு அதையே மாபெரும் அறிவியல் உண்மையாக கூறுவதை என்னவென்பது. பூமியிலுள்ள நீர்நிலைகளின் நீர் தான் மேகமாகி மழையாகிறது என்பதை பத்துப்பாட்டில் வரும் முல்லைப்பாட்டின்  பாடிமிழ் பனிகடல் பருகி எனத்தொடங்கும் பாட்டு தெரிவிக்கிறது. முல்லைப்பாட்டின் காலம் கிபி இரண்டாம் நுற்றாண்டு. ஒருவேளை அல்லா முகம்மதுவுக்கு கொடுக்கும் முன்பே நப்பூதனாருக்கு கொடுத்துவிட்டாரோ.

எடுத்த எடுப்பில் தர்ஜமா விமர்சனத்தை ஆரம்பித்திருக்கிறார். 86:11ம் வசனத்தின் சரியான கருத்து என்ன? இந்த வசனத்திற்கு 2 விதமான மொழிபெயர்ப்புகள் காணப்படுகின்றன.
1. (திரும்பத்திரும்ப) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக. இது ஜான் ட்ரஸ்டின் மொழியாக்கம்.
2. திருப்பித்தரும் வானத்தின் மீது சத்தியமாக! இது பி.ஜேயின் மொழிபெயர்ப்பு. இந்த இரண்டில் பி.ஜே மொழி பெயர்த்ததுதான் சரியானது. ஜான் ட்ரஸ்டினருடைய மொழிபெயர்ப்பு தவறு. ஏன்? அதன் அரபி வாசகம் இதுதான்:
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ (١١)

"இதில் பொழியும் மழையை உடைய" எனும் பொருள்படும் எந்த வாசகமும் இல்லை.
வஸ்ஸமாயி - வானத்தின் மீது சத்தியமாக
தாதிர்ரஜ்இ - திரும்புதலை உடைய / திருப்பித்தரும்

திருப்பித்தரும் வானத்தின் மீது சத்தியமாக என்பதுதான் அதன் சரியான அர்த்தம். வானத்திற்கு திருப்பித்தரும் பண்புள்ளதை நேரடியாகவே அவ்வசனம் சுட்டுகிறது. இதை மறுக்க வானம் திருப்பித்தரும் இயல்புடையதல்ல என்றுதான் வாதிட வேண்டும். அவ்வாறு வாதிடாமல் வானம் மழையை திருப்பித்தருவதை குர்ஆன் மட்டுமாசொல்லியிருக்கிறது? நப்பூதனாரும்தான் சொல்லியிருக்கிறார் என்கிறார். சரி, மழை பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனால் வானம் திருப்பித்தரும் இயல்புடையதென்று நப்பூதனார் சொல்லியிருக்கிறாரா? இருந்தால் காட்டலாம்!. வானம் மழையை மட்டும் திருப்பித்தரவில்லை இன்னும் பல ஒலியலைகளை திருப்பியனுப்புகிறது என்று சொல்வதை மறுக்கப்புகுந்தவர் "தொலைக்காட்சி தொலைபேசி அலைகளை வானம் திருப்பியனுப்புகிறதா? அல்லது செய்மதி அனுப்புகிறதா என்று அனைவரும் அறிவர் என்று கூறுகிறார். சரி, அப்படியென்றால் வானொலி அலைகள், இன்னும் சில ஒலியலைகளை திருப்பியனுப்புவது செய்மதிதாமோ? இவற்றை திருப்பியனுப்புவது வானம் என்பதை அறியவில்லையா? அல்லது மறைக்கிறாரா? வானம் திருப்பியனுப்பும் அலைகளும் உள்ளன, செய்மதிகள் அனுப்பும் அலைகளும் உள்ளன! இதனால் வானம் திருப்பியனுப்புகிறது என்ற கூற்று மிகச்சரியானதும் இறைவேதம் என்பதற்குமான சான்றுமாகும்.

வசனம் 55:33 ல் ‘வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல’ என்று வருவதை இன்று மனிதன் விண்வெளிக்கு சென்றுவருவதோடு பொருத்தி இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் கூறிவிட்டது என்று இன்னொரு அறிவியலை அவிழ்த்து விடுகிறார்கள். இந்த வசனத்தில் அதிகாரம் என வரும் சொல்லை ‘வல்லமையும் என் அனுமதியும்’ என்று விளக்குகிறார்கள். அதாவது அல்லா அனுமதிக்கும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட வல்லமையை பெற்றபிறகு தான் செல்லமுடியும் என்று பொருளாம். இந்த வல்லமை தான் விடுபடு வேகம் என்று கூறுகிறார்கள். பூமியின் புவியிர்ப்பு விசையை மீறி நாம் விண்ணில் செல்லவேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் மட்டுமே புவியை தாண்டிச் செல்லமுடியும். அதற்கு குறைவான வேகத்தில் சென்றால் புவியின் காற்று மண்டல எல்லைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்க வேண்டியது தான். இந்த விடுபடு வேகம் குறித்த அறிவியலைத்தான் அந்த வசனம் சொல்கிறது என்று சத்தியம் செய்கிறார்கள். இந்த வசனத்தில் வானங்கள் என்றும் வருகிறது. ஒருவேளை நம்முடைய பிரபஞ்சத்தைப்போல் இன்னும் பல பிரபஞ்சங்கள் இருந்து அவைகளுக்கும் மனிதன் போய்வருவான் என்று குரான் கூறுகிறதோ. நம்பமுடிந்தவர்கள் நம்பிக்கொள்ளலாம்.

இவரது வாதத்தை மேலோட்டமாக பார்த்தாலே இவர் இந்த வசனத்தை மறுக்கவில்லை; மறுக்க முடியாமல் நழுவிச்செல்கிறார் என்பதை அறிந்து கொள்ள இயலும். இதை பார்ப்பவர்களுக்கு புரியக்கூடாதென்பதற்காக இறுதியில் இவரது அறியாமையை அவிழ்த்துவிட்டுச்செல்கிறார். அது என்ன? இந்த வசனத்தில் வானங்கள் என்றும் வருகிறது. ஒருவேளை நம்முடைய பிரபஞ்சத்தைப்போல் இன்னும் பல பிரபஞ்சங்கள் இருந்து அவைகளுக்கும் மனிதன் போய்வருவான் என்று குரான் கூறுகிறதோ. நம்பமுடிந்தவர்கள் நம்பிக்கொள்ளலாம்.
தற்காலத்தில் ஒரு பிரபஞ்சமில்லை பல பிரபஞ்சங்கள் உள்ளன என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்! இதை அறியாமல் இவரது அறியாமையையே இந்த வாதத்தின் ப்ளஸ் பொயிண்டாக எடுத்துவிடுகிறார். இதனால் இது இறை வேதம் என்பது மேலும் நிரூபணமாகிறது.
மூன்றாவது வசனமாக 6:125ம் வசனத்தை குறிப்பிடுகிறார். அந்த வசனம் என்ன?
ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச்செய்கிறான். அவனை வழி தவறச்செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச்செல்பவனைப்போல் இறுக்கமாக்கிவிடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான். (6:125)
அடுத்த வசனமான 6:125 ல் அல்லா ஐன்ஸ்டினுக்கு முன்பே சார்பியல் கோட்பாட்டை கற்றுத்தருகிறார். இந்த வசனம் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதும் மறுப்பதும் என்னுடைய விருப்பமின்றி நடைபெற இயலாது என அல்லா கூறுவதாக வருகிறது. அல்லா ஒருவனின் இதயத்தை விரித்துவிட்டால் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வான். அவனின் இதயத்தை சுருக்கிவிட்டால் அவனால் இஸ்லாத்தை ஏற்கமுடியாது. இது தான் இந்த வசனம் கூறும் செய்தி. இதில் இதயத்தை சுருக்குவதற்கு ஒரு உவமை கூறப்படுகிறது, வானத்தில் ஏறிச் செல்பவனைப்போல என்று. இந்த உவமையில் தான் விஷயம் இருக்கிறது. ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாட்டில் ஒரு விதி வருகிறது. ஒரு பொருளின் விரைவைப் பொருத்து அதன் உருவம் சுருங்கும் ஆற்றல் கூடும். உருவம் சுருங்குவடையும் ஆற்றல் கூடுவதையும் சாதாரண வேகத்தில் உணரமுடியாது. ஒளியின் வேகத்திற்கு (ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிமி) அருகில் விரையும்போது தான் அதை உணர முடியும். இதுதான் ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாடு. இந்த அறிவியல் அந்த வசனத்தில் இருக்கிறதா? சாதாரணமாக உயரத்தில் ஏறி நின்று பார்த்தால் மனிதனுக்கு ஒரு அச்சம் வரும், இந்த அச்ச உணர்வைத்தான் இதயம் சுருங்குதல் நெஞ்சு சுருங்குவது என்று முகம்மது விவரித்திருக்கிறார். இதில் சுருங்குதல் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு அதை சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்கள். ஒரு கொள்கையை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் நெஞ்சு அல்லது இதயத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லை. இதயம் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துவதற்கு பயன்படும் ஒரு உறுப்பு எனும் அறிவியல் தெரியாமல் இறக்கப்பட்ட வசனமல்லவா இது? ஒரு பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்களே, மறு பாதியையும் எடுத்துக்கொண்டால் இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஆற்றல் கூடிவிடும் என்றாகிறதே. ஒருவேளை அல்லா அப்படித்தான் கூறியிருப்பாரோ.
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் மூலம் இப்படி இந்த வசனத்துக்கு யார் விளக்கம் கூறுகிறார் என்பதை நாம் அறியவில்லை! இக்கருத்து சரியானதுமில்லை! எனினும் இவரது வாதங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாயில்லை. இங்கு உவமையாக கூறப்படுவது வானத்தில் ஏறிச்செல்பவனை! ஆனால் இவர் சொல்கிறார் உயரத்தில் ஏறி நின்றால் வரும் அச்ச உணர்வைத்தான் இப்படி முகம்மது கூறியிருக்கிறார் என்கிறார். இந்த இரண்டுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? ஒன்றும் இல்லை! அச்ச உணர்வை இதயம் சுருங்கும்/ இறுகும் என்று யாரும் அதுவும் அக்காலத்தில் கூற முடியாது. அப்படி கூறுமளவிற்கு முகம்மது நபி படிக்கவுமில்லை. இந்த உவமையை முகம்மது நபிக்கு எப்படி கூற முடியும் என்பதுதான் எமது கேள்வி! இதற்கு இவரால் உறுப்படியாக பதிலளிக்க முடியவில்லை.
இவர் எடுத்து வைக்கும் எந்த வாதமும் உருப்படியற்றது! குர்ஆன் இறை வேதம்தான் என்பது இதன் மூலம் மென்மேலும் உறுதியாகிறது.
வளரும் இன்ஷா அல்லாஹ்


1 comments:

செங்கொடி said...

இதற்கான மறுப்பு செங்கொடியில் பதிவிடப்பட்டுள்ளது, ஆர்வமுள்ளவர்கள் காணலாம்.

http://senkodi.wordpress.com/2012/07/24/senkodi-islam16/

Post a Comment