Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, April 19

செங்கொடியின் அரை குறை ஆய்வுகள்

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்- 26

குர்ஆனில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.
இதுவரை செங்கொடியின் அறிவியல் தொடர்பான அரை குறை ஆய்வுகளை பார்த்தோம். த்தொடரில் செங்கொடி சின்னப் பிழைகள் என்று விட்ட ஆய்வுக்குரைகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

முதல் முதலில் இவர் எடுத்து வைக்கும் அந்த சிறிய தவறு (?) ஏற்கெனவே கேட்ட கேள்விதான். அது எவ்வளவு அடி முட்டாள்த்தனமான கேள்வி என்பதை எமது மறுப்பிலும் சுட்டிக்காட்டியிருந்தோம். இங்கு மீண்டும் அதை தொட்டிருப்பதால் நாமும் அதை சுட்டிக்காட்டுகிறோம்.

மதவாதிகள் குரானின் அறிவியல் என்றோ, வேதத்தின் அற்புதங்கள் என்றோ பேசத்தலைப்பட்டால் மற்றெல்லாவற்றையும் விட முதலில் எடுத்துக்கொள்ளும் ஒன்று தேனீ. ஆனால் அதே வசனத்திளிருக்கும் இந்த வாக்கியத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவார்கள். குரான் 16:69 ல் அல்லா தேனீக்கள் கனிகளிலிருந்து உணவருந்துவதாகக் கூறுகிறார். கனிகள் என்று பொதுவாக கூறப்பட்டாலும், அந்த இடத்தில் 'தமர்' என்றே அரபியில் குறிக்கப்பட்டிருக்கிறது. தமர் என்பது பழங்களைக் குறிக்கும் பொதுச் சொல்லல்ல. அது பேரீத்தம் பழத்தைக் குறிக்கும் தனிப்பட்ட சொல். ஆக குரான் தேனீக்கள் பேரீத்தம் பலத்தை உண்கின்றன எனும் அறிவியல்(!) உண்மையைப் போட்டுடைத்திருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் தேனீக்கள் பேரீத்தம் பலத்தையோ அல்லது வேறு பழங்களையோ உண்பதில்லை. பூக்களிலிருந்து சேகரிக்கும் தேனையே அவை உண்கின்றன என்பது அல்லவா உண்மை. எல்லாவற்றையும்விட மிகைத்த ஞானமுடைய அல்லா ஏன் இப்படிக் கூறிவிட்டார். அதுவும் எக்காலத்திற்கும் பொருந்தும் குர்ஆனில்.

தேனீக்கள் மலரிலுள்ள குளுக்கோசைத்தான் உண்கின்றன என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவை நன்கு பழுத்த பலன்களிலிருந்தும் தமக்குத்தேவையானத்தை உண்கின்றன. பலன்களில் மட்டுமல்ல, அவை சீநிக்கரைசளிலும் உண்ணும். அதில் குளுக்கோஸ் இருப்பதால்தான் இவ்வாறு செய்கின்றன.
அடுத்து பேரீச்சம் பழத்தில் இருந்து தேனீக்கள் சாப்பிடுவதாக குர்ஆன் கூறுவதாக செங்கொடி கூறுவதன் மூலம் இவரது அறியாமை பளிச்சென்று தெரிகிறது. இவர் கூறுவது போல் குர்ஆனில் கூறப்படவில்லை. அரபு மொழி பற்றி ஆய்வு செய்வதாக இருந்தால் அது பற்றிய அறிவு இருக்க வேண்டும். அந்த அறிவு கூட இல்லாமல் உளறிக்கொட்டியுள்ளார்.
அரபு மொழியில் தமர் என்றால் பேரீச்சம் பலம் என்றுதான் பொருள். ஆனால் குர்ஆனில் தமர் என்ற சொல் இடம்பெறவில்லை.  ஸமர் என்ற சொல்தான் உள்ளது. இதன் பொருள் கனி என்பதாகும். உதாரணமாக பல்லி பள்ளி என்ற இரண்டு சொற்களுக்கும் ஒருவன் ஒரே பொருளைக் கொண்டால் அவனை அறிவீனன் என்போம். அந்த லிஸ்டில் தான் இவரையும் சேர்க்க வேண்டும். 
இரண்டு புள்ளியுள்ள (ثمر) எனும் சொல்லுக்குத்தான் பேரீச்சம் பழம் என்று பொருள். மூன்று புள்ளியுள்ள(ثمر) ஸமர் எனும் சொல்லுக்க்கு கனி என்று பொருள். அந்த வசனத்தில் மூன்று புள்ளியுள்ள ஸ்மர் எனும் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வித்தியாசம் கூடத்தெரியவில்லை. எனக்கு அரபு தெரியும் என்றும், நான் குர்ஆனை அரபு மொழி ரீதியாகவும் ஆய்வு (?) செய்திருக்கிறேன் என்பதை காட்ட முயன்று இப்படி கேவலப்பட்டு நிற்கிரார்.

அடுத்து குர்ஆனில் 24:43ம் வசனத்தில் மழை பெய்யும் விதத்தினை கூறுகிறது. அதில் ஆலங்கட்டி மழை தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது. அதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து (?) ஒரு தவறை (?) கண்டுபிடித்திருக்கிறார்.

வசனம் 24:43 மழை பொழியும் விதம் குறித்து பேசுகிறது. அதன் முழு வசனம் இப்படி இருக்கிறது, “நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து அவற்றை ஒன்றாக இணையச் செய்து அதன் பின் அதை அடர்த்தியாக்குகிறான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான். அதைத் தான் நாடியவர் மீது விழும்படி செய்கிறான்……” என்று போகிறது. இது ஆலங்கட்டி மழை பற்றிய குரானின் புல்லரிக்கவைக்கும் விளக்கம். இந்த விளக்கம் தவறானது, பொருந்தாதது என்பது அவர்களுக்கும் தெரிந்துதான் இருக்கிறது. அதனால் தான் அடைப்புக்குறிக்குள் எழுதி சமன் செய்திருக்கிறார்கள். அடைப்புக்குறியுடன் சேர்த்து இப்படி அவன் வானத்தில் மலைக(ளைப்போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்என்று சமாளித்திருக்கிறார்கள். மழைவிழுவது மேகத்திலிருந்து என்பது தெரிகிறது, ஆனால் சில நேரங்களில் பனிக்கட்டி மழையும் பொழிகிறதே எப்படி? சரிதான் வானத்தில் பனிக்கட்டி மலை ஒன்று இருக்கிறது போலும் எனும் வறண்ட சிந்தனையின் விளைவுதான் இந்த வசனம்.

குரங்கு ஆப்பிழுத்த கதையை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதுபோல்தான் செங்கொடி எதை தவறு என்று குறிப்பிட்டு குர்ஆனை மறுக்கப்புகுந்தாரோ அது ஒரு அறிவியல் உண்மை என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு பதில் கூறுவதற்கு முன் அந்த குர்ஆன் வசனம் என்னவென்பதைப்பார்க்கலாம்:

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான்... (24:43)

இதில் உள்ள செங்கொடி தவறு என்று குறிப்பிடும் அறிவியல் உண்மையை அறிஞர் பி.ஜே அவர்கள் தனது தமிழாக்கத்தில் 419ம் குறிப்பாக தந்திருக்கிறார். அதையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.

419. வான் மழையின் இரகசியம்

இவ்வசனத்தில் (24:43) ''வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது'' என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது.

பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

இம்மேகங்கள் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை.

மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக் கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகிறது.

இந்த பனிக் கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றது. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம்.

இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்த பனிக் கட்டிகள், செங்குத்தாக அடுக்கப்பட்டு, மின் காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக் கட்டிகள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன.

இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத் தான் மேலே தந்திருக்கிறோம்.

இதில் கூறப்பட்டுள்ள மேகங்களை இழுத்தல், அவற்றை அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக் கட்டிகள் செங்குத்தாக நிறுத்தப்படுதல், மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல் போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இந்த வசனம் (24:43) அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம்.

குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

அடுத்த தவறாக செங்கொடி சுட்டிக்காட்டுவது நரகத்தில் வழங்கப்படும் உணவு தொடர்பானவை. குர்ஆனில் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறாக, வெவ்வேறு விதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இந்த முரண் என்று கேட்கிறார். அதை மொத்தமாகப்பார்த்தால் எந்த முரணும் கிடையாது. நரகத்தில் பல படித்தரங்களும், ஒவ்வொரு சாராருக்கும் ஒவ்வொரு விதமான உணவுகளும் தண்டனைகளும் வழங்கப்படும். அதை வெட்டி ஒட்டி பிழையாக பிதற்றுகிறார்.
அவர் சுட்டிக்காட்டும் வசனங்கள்:
இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? (37:62)

கொதிக்க வைக்கப்பட்ட பானமும் இதற்கு மேல் அவர்களுக்கு உண்டு (37:67)

சீழைத்தவிர வேறு உணவும் இல்லை. (69:36)

முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை. (88:6)

இவற்றைச் சுட்டிக்காட்டி முன்னுக்குப்பின் முரண் என வாதிடுகிறார்.

அடுத்திருக்கும் மூன்று வசனங்களும் நரகத்தாரின் உணவுகுறித்த குரானின் கூற்றுகள். அதாவது பூமியில் மனிதர்கள் வாழ்ந்தது போதும் என அல்லா நினைக்கும் ஒரு நாளில் பூமி அழிக்கப்பட்டு அதுவரை பூமியில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும், ஆதி மனிதன் தொடங்கி கடைசி காலம் வரை (கோடானுகோடி ஆண்டுகள் ஆனாலும்) வாழ்ந்த மக்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி வாழ்ந்தவர்கள் சொர்க்கத்திற்கும், அப்படி வாழாதவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். இதில் நரகத்திற்கு அனுப்பப்படும் மனிதர்களின் உணவு என்ன என்பதைத்தான் அந்த மூன்று வசனங்களும் தெரிவிக்கின்றன. இதில் பிரச்சனை என்னவென்றால் மூன்றும் வெவ்வேறு உணவுகளைக் கூறுகின்றன என்பதுதான். முதல் வசனத்தில் ஜக்கூம் என்ற மரமும் கொதிக்கும் நீரும் என அறிவிக்கப்படுகிறது. ஜக்கூம் என்பது ஒருவகையான கள்ளி வகை மரம் என பொருள் கூறுகிறார்கள். ஜக்கூம் என்ற மரமும் குடிப்பதற்கு கொதிக்கும் நீரும் முதல் வசனத்தின் படி நரகத்தாரின் உணவு. ஆனால் 69:36ன் படி சீழ் நீரைத்தவிர வேறு எந்த உணவுமில்லை என அடித்துக்கூறுகிறது. இதே தொனியில் 88:6 விஷச்செடிகள் மட்டும்தான் உணவு வேறில்லை என திட்டவட்டமாகக் கூறுகிறது. என்றால் எதுதான் நரகத்தின் உணவு? நரகம் என்று ஒன்றில்லை என்பவர்களுக்கு இது குறித்த தேவை ஒன்றுமிலை. ஆனால் இருக்கிறது என நம்புபவர்களுக்கு எது உணவு என தெரிந்திருப்பது அவசியமல்லவா?

சில மொழிபெயர்ப்புகளில் விஷச்செடி என்பதை முட்செடி என்பதாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதைக்கொண்டு கள்ளி என்பதும் முட்கள் நிறைந்தது தான், எனவே இரண்டு மூன்றாம் வசனங்களில் தனித்தனியாகவும், முதல் வசனத்தில் இரண்டையும் சேர்த்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று பொழிப்புரை தருகிறார்கள். ஆனால் சீழ், விஷச்செடி வசனங்களில் தனித்தனியே இதைத்தவிர வேறு உணவில்லை என தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. முட்செடி என்பதும் கள்ளி என்பதும் ஒன்றுதான் எனக் கொண்டாலும் முதல் வசனத்தில் ஜக்கூம் மரம் என்று வருகிறது மூன்றாம் வசனத்திலோ விஷச்செடி, என்றால் அல்லா செடிக்கும் மரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பதை ஒப்புக்கொள்வார்களா? இரண்டாம் வசனத்தில் சீழ் நீர் என்பது அருவருப்பான நீர் எனும் பொருளில் நீரின் தரத்தைக்குறிக்கிறது, அது குளிர்ந்திருக்குமா சூடாக இருக்குமா என்ற விபரமில்லை. முதல் வசனத்தில் கொதிக்கும் நீர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதேயன்றி சுகாதாரமான குடிநீரா இல்லையா என்ற விபரமில்லை. எனவே இரண்டையும் ஒன்றெனெக் கொள்வதற்கு இடமில்லை.

37:62,67ம் வசனங்களில் குறிப்பிடப்படும் உணவு மறுமையை நம்பாதவர்களுக்குரியது என்பதை அதற்கு முன்னுள்ள வசனங்களும் (37:51,52,53) 69:36ம் வசனம் அல்லாஹ்வை நம்பாமலும் ஏழைக்கு உணவளிக்காதவர்களுக்கும்(69:33,34) 88:6ம் வசனம் உறுதியாக தீமை செய்தவர்களுக்கும் என்று அந்த வசனங்களுக்கு முன், பின்னுள்ள வசனங்களைப்பார்த்தாலே புரிந்து கொள்ள இயலும். இதில் முரண் எதுவும் கிடையாது. ஆக, இவர் சின்னப்பிழைகள் என்பது ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது.செங்கொடியார் இதுவரையும் என்னென்ன தவறுகளை விட்டுள்ளார் என்பதயும் வாசகர்கள் பார்க்க வேண்டாமா? எனவே, இவரது கேலிக்கூத்தான சில விடயங்களை சுட்டிக்காட்டுகிறேன்.
இவரது மொத்த தொடர்களிலும் உள்ள முக்கிய தவறு என்னவெனில் முஹம்மது நபிதான் இந்த குர்ஆனை இயற்றினார் என்பது. இதுதான் அவரது நிலையாகவும் உள்ளது. ஆனால், இது எள் முனையளவு கூட சாத்தியமில்லை. ஏன்? முகம்மது நபிக்கு எழுதவோ அல்லது படிக்கவோ அல்லது கவிதை இயற்றவோ தெரியாது! அப்படியிருக்கையில் இவற்றை எவ்வாறு அவரால் இயற்றி இருக்க முடியும் என்பதை செங்கொடி விளக்க வேண்டும்.

முதல் தவறு :
நுழைவாயில் எனும் பகுதியில் செங்கொடி அரபு தேசியவாதம், அரபு மாக்ஸியம் என்பன இஸ்லாமியல் இறையியல் என்றார்.
இவை இஸ்லாமிய இறையியல் இல்லை! இவர் தவறாக கூறுகிறார் என்று எமது மறுப்பில் எழுத்யிருந்தோம். அதற்கு மறுப்பெழுதப்புகுந்தவர். அரபிகள் செய்தனர் என்று கூறினார். அரபிகள் செய்தால் எவ்வாறு இஸ்லாம் ஆகும்? என்று அவரது மறுப்பின் மறுப்பில் கேட்டுள்ளோம். எனவே, இவர் இஸ்லாம் இல்லாததை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்வைக்கிறார்.

இரண்டாவது தவறு:
இஸ்லாம்: பிறப்பும் இறப்பும் ஓர் எளிய அறிமுகம் எனும் தொடரில் சைத்தான் அல்லாஹ்வின் எதிரி என்றார். சைத்தான் மனிதனுக்குத்தான் எதிரி! அல்லாஹ்வுக்கு எதிரி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று எமது மறுப்பில் எழுதியிருந்தோம். இதை மறுக்கப்புகுந்தவர், மனிதர்களுக்கு எதிரி என்றால் அதன் உள் அர்த்தம் அல்லாஹ்வுக்கு எதிரி என்பதுதான் என்றார். அது தவறு என்பதை எமது இரண்டாவது மறுப்பில் தெளிவு படுத்தியுள்ளோம். எனவே, அறிமுகம் என்ற பெயரில் தவறு விட்டிருக்கிறார்.

மூன்றாவது தவறு:
குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள் எனும் தொடரில் "எழுதுகோல்" என்பதற்கு எழுதும் தாள் என அர்த்தம் செய்து உளறியிருந்தார். அந்தளவுக்கு இவரது ஆய்வுப்புலமையும் தமிழ் புலமையும் உள்ளது. தொல்காப்பியரும் தோற்றுவிட்டார்.

நான்காவது தவறு:
அதே தொடரில் முஹம்மது நபி மரனித்த இடம் இப்போது மிகப்பெரிய மசூதியாகப்பாதுகாப்படுகிறது என்று கதை விட்டார். அந்தளவுக்கு அவரது இஸ்லாம் பற்றிய வரலாற்று அறிவும் கொள்கை தெளிவும் உள்ளது.

ஐந்தாவது தவறு:
பூமி உருண்டை என யார் சொன்னது? அல்லாவா? மனிதனா? எனும் தொடரில் "பூமி உருண்டையாக இருந்தாலும் நேர்கோட்டில் பயணம் சய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண முடியாது என்ரார். இது எந்தளவுக்கு அபத்தம் என்பதை எமது மறுப்பிலும் குறிப்பிட்டுள்ளோம். சாதாரணமான ஒரு உருண்டையான பொருளை எடுத்துக் கொண்டு அதில் நம் விரலை பயணம் செய்ய வைத்தால் பயணம் புறப்படுவது ஒரு திசையை நோக்கியதாக இருக்கும், ஆனால் 180 டிகிரிக்குப் பின் அதாவது சரி பாதிக்குப் பின் போன திசையில் இருந்து எதிர்த்திசையில் அந்த விரலின் பயணம் ஆரம்பமாகும்.  அதாவது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணித்த அந்த விரல் 180 டிகிரிக்குப் பின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கியதாக மாறுமா மாறாதா? எவ்வளவு விவரமாக உள்லார் என்பது தெரிகின்றதலாவா?

ஆறாவது தவறு:
பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள் எனும் தொடரில் செங்கொடியின் அரபுப்புலமையை எமக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார். அதை இதே தொடரில் மீண்டும் சுட்டியதற்கு இதிலேயே பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது தவறு:
சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு எனும் தொடரில் புத்தர் தந்தையின்றி பிறந்தவர் என்று துணிந்தே இட்டுக்கட்டினார். புத்தர் சுத்தோதனன் என்பவருக்கு பிறந்தவர்.

இவ்வளவுதான் தவறுகள் என்று நினைத்து விட வேண்டாம். இவரது உளறல்களில் உச்ச கட்ட உளறல்களைத்தான் இங்கு தொகுத்து எழுதியுள்ளேன். இவ்வளவும் போதும் இவரது வாதத்தின் சாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள...

வளரும் இன்ஷா அல்லாஹ்

  

1 comments:

Anonymous said...

alhamthuillah

Post a Comment