Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, February 3


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர்-10

கடல்கள் பற்றிய அல்லாஹ்வின் புனைகதைகள் எனும் செங்கொடியின் கட்டுரைக்கு மறுப்பாக இத்தொடர் வெளியாகிறது.
திருக்குர்ஆன் கடல்கள் பற்றி சில அறிவியல் சான்றுகளை கூறுவதாக நாம் சொல்கிறோம். இரு கடல்களுக்கிடையிலான தடுப்பு, கடலுக்கடியிலும் அலைகள், ஆழ்கடல் இருள் போன்ற நவீன கண்டுபிடிப்புகள் குர்ஆனில் அன்றே சொல்லப்பட்டுவிட்டதாக கூறிவருகிறோம். இதை மறுக்கப்புகுந்த செங்கொடி இவை தவறு என்று வாதிடவில்லை. மாறாக இது அந்த காலத்திலும் தெரிந்ததுதான். அதை முஹம்மது அறை குறையாக கூறியிருக்கிறார் என்பது அவரது வாதத்தின் சுருக்கம்.

குர்ஆன் கடல்களுக்கிடையிலான தடுப்பு பற்றி என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை. (27:61)

இரண்டு கடல்களை சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. (55:19,20)

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். (25:53)

இவை இரண்டு கடல்களுக்கிடையே ஒரு தடுப்பு இருப்பதாக தெளிவாக கூறுகிறது. இவை தவறு என்று செங்கொடி வாதிடவில்லை மாறாக இது பண்டைய கடலாடிகளுக்கு தெரிந்திருந்தது. அதை முஹம்மது கேட்டுத்தான் கூறியுள்ளார் என்கிறார். பண்டைய கடலாடிகளுக்கு இரு கடல்களுக்கிடையிலான வேறுபாடு (ஒன்று இனிப்பு, மற்றது உவர்ப்பு என்பது) தெரிந்திருந்தாலும் இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என்ன நிலை என்பதை அறிந்திருக்கமாட்டார்கள். அவை அனுபவத்தில் காண இயலாது. ஆய்வுகள் மூலமாகத்தான் அறியமுடியும். இல்லை, இதை அனுபவத்தில் கடலாடிகள் தெரிந்திருந்தனர் என்று கூறுவாரானால் அதை நிரூபிக்க வேண்டும்; யூகத்தை கூறக்கூடாது. ஒரு வாதத்திற்காக இது கடலாடிகளுக்கு தெரிந்த்தது என்றே வைத்துக்கொள்வோம். இதை முஹம்மது எப்படி கூறியிருப்பார்? அவர் கடற்பயணம் மேற்கொண்டாரா? அல்லது கடலாடிகளிடம்தான் கேட்டார் என்றால் அக்கால அந்த அரபிக்காடலாடி யார் என்பதற்கெல்லாம் செங்கொடி என்ன பதில் சொல்லப்போகிறார்?

இதுபற்றி அறிவியலாளர்கள் என்ன கூறுகின்றனர்? இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் அவற்றிக்கிடையே ஒரு தடையுள்ளது. இதனால் அதன் அடர்த்திக்கும், உவர்த்தன்மைக்கும், இனிப்புக்குமிடையே வேறுபாடு உள்ளது. இவையிரண்டும் சேர்ந்திருப்பதுபோல் இருப்பினும் ஒன்றோடொன்று கலக்காது! (Principal Of Oceonography பக்கம் 92,93)
இது அறிவியல்! இதை குர்ஆன் கூறுகிறதா இல்லையா?
இரண்டு கடல்களுக்கிடையே ஒரு தடுப்பு இருப்பதாக கூறுகிறது. ஆனாலும் அவை என்ன வகையினாலான தடுப்பு? என்ன பண்புகளினாலான தடுப்பு? அவற்றின் செயல்பாடு? எதுவும் விளக்கப்படவில்லை.
அதை விளக்குவதற்கு அது ஒன்று விஞ்ஞானத்தையே கூறவந்ததல்ல! இதை முன்னரும் குறிப்பிட்டுவிட்டோம். இருப்பினும் இவரது கேள்விக்கு பதில் அதிலேயே உள்ளது. தடுப்பு என்பதற்கு மூலத்தில் "பர்சக்" எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கண்ணுக்குத்தெரியாத தடுப்பு என்று பொருள்படும். தடுப்பின் செயல்பாடு தடுப்பதுதான்! வேறெதுவாக இருக்கும்?இதுகூடத்தெரியவில்லையா?

அடுத்து, கடலுக்குள் எல்லையிருப்பதாக குர் ஆன் குறிப்பிடுகிறது என்று ஒரு வசனத்தை காட்டுகிறார். "அவன் தான் இரண்டு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று மிக்க இனிமையும் சுவையுமுள்ளது, மற்றொன்று உப்பும் கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்"(25:53) இது ஜான் ட்ரஸ்டினரின் தமிழாக்கம். இதில் வரம்பு எனுமிடத்தில் "பர்சக்" எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு வரம்பு என்று பொருள் கிடையாது. இதன் சரியான அர்த்தம் திரை அல்லது தடுப்பு என்பதுதான்.
கடலுக்குள் நீரோட்டங்கள் இருக்கின்றன, இந் நீரோட்டங்கள் நிலத்தில் ஓடும் ஆறுகளைப்போல் கடலுக்குள் ஓடுகின்றன. ஒருகடலிலிருந்து மற்றொரு கடலுக்கு, ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பாயும் பல கடலடி நீரோட்டங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். இரண்டு கடல்களுக்கிடையே மீற முடியாத தடுப்பு இருக்கிறதென்றால் நீரோட்டங்கள் எப்படி நகர்கின்றன? இனப்பெருக்கத்திற்காகவும், பருவ மாற்றங்களுக்காகவும் சிலவகை மீன்கள் இடம்பெயர்கின்றன, ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு சர்வ சாதாரணமாக வந்து போகின்றன? கடல்களுக்கு இடையே இருக்கும் தடையை மீன்களால் எப்படி தகர்க்க முடிந்தது? ஒன்று தெளிவாகிறது கடலாடி அனுபவமில்லாத முகம்மது, கடலாடிகளிடமிருந்து கடல்நீரின் சுவை வேறுபாடுகளைப்பற்றி அரைகுறையாக செவியுற்று அதையே தன்னுடைய குரானில் தடையாக அரங்கேற்றிவிட்டார். அதையே இவர்கள் மாபெரும் அறிவியல் உண்மையாக அளந்துவிடுகிறார்கள்.
கடலுக்குள் தடுப்பிருந்தால் இவை எவ்வாறு நடக்கின்றது என்று ஒரு பட்டியலையே இட்டுள்ளார். கடலுக்கிடையில் உள்ள தடுப்பு என்ன என்று குர்ஆன் கூறுவதைப்பார்த்தாலே இந்த கேள்விகளின் மடமையை புரிந்துகொள்ளலாம். கடல்களுக்கிடையே உள்ள தடுப்பு இரு வேறு கடல்கள் சேர்ந்திருந்தாலும் ஒன்றோடொன்று கலக்காது என்று கூறும் வசனத்தின் மூலம் தடுப்பு அவை கலக்கக்கூடாது என்பதற்காகத்தான். இது மற்றவற்றை கட்டுப்படுத்தாது!. இவருக்கு சந்தேகமிருந்தால் இதை எழுதி உள்ள அறிவியலாளர் டேவிஸ் என்பாரிடம் கேட்கட்டும் அல்லது அவரும் தவறாகக்கூறொயிருக்கிறார் என்று எழுதட்டும்.

அடுத்து ஆழ்கடல் இருள் பற்றி குறிப்பிடும் குர்ஆன் வசனத்தை குறிப்பிட்டு மறுப்பார் என்றுபார்த்தால் இது கடலோடு தொடர்பு கொள்ளத்தொடங்கியவுடனே எளிதாக்ப்புரியும் விடயம் என்கிறார். ஆழ்கடலுக்குள் சென்றுபார்த்தவர்கள்தான் இவ்வாறு கூற முடியும்! மலே மிதப்பவர்களால் கூற முடியாது! அக்காலத்தில் ஆழ்கடலுக்குள் அதற்குரிய கருவிகள் (ஒட்சிசன் சிலிண்டர் போன்ற) துணையின்றி அவ்வளவு இலேசாக செல்ல இயலாது. இதை எளிதானது என்பது எவ்வளவு அபத்தம். இது எளிதானதுதான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிப்பாரா செங்கொடி? இவர் குர்ஆனிலுள்ளதை மறுப்பதற்காக எவ்வளவு பெரிய அபத்தத்தையும் பொய்யையும் துணிந்துகூறுவார் போலும்!.

இவர் வில்லியம் ஹய் என்பாரின் செய்தியை குறிப்பிடுகிறார். அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதை ஆதாரங்களுடன் தந்தால் பரிசீலிக்கலாம். அறிவியல் உண்மை என்பவை சவூதியிலிருந்து வரும் ஆய்வுக்கட்டுரை மட்டுமே என்கிறார். சில கட்டுரைகள் சவூதியில் வெளியாவது உண்மைதான். ஒட்டுமொத்தமும் சவூதியிலிருந்து வெளிவருவதில்லை!. சவூதிலிருந்து வருவதால் அது பொய்யாகுமா? கமியூனிசம் ரஷ்யா, ஜேர்மனி போன்றவற்றின் இறக்குமதிதான். அதன் கிறுக்குக்கொள்கைகளும் அங்கிருந்துதான் வந்தது! ஓரு செய்தியை தவறு என்பதற்கு இவை அளவுகோள் கிடையாது.

கடல்கள் பற்றிய அறிவியல் உண்மைகளில் ஆழ்கடல் அலைகள் பற்றிய செய்தியையும் சேர்த்தே தமிழக மற்றூம் இலங்கை முஸ்லிம்கள் கூறிவருகின்றனர். இது இவர் குறிப்பிட்டுக்காட்டிய ஆழ்கடல் இருள் பற்றிய (24:40) வசனத்தில்தானுள்ளது. இதுபற்றி எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. மழுப்புவதற்கு எதுவும் கிடைக்கவில்லை போலும்!

வளரும் இன்ஷா அல்லாஹ் 







4 comments:

அறிவு said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே,

தங்கள் அறிவை மேலும் மேலும் வல்ல நாயன் விசாலமாக்குவானாக.

அருமையான முறையில் பதில்களை பதிவு செய்து வருகிறீர்கள். அல்லாஹ் தங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக.

தங்கள் ஆக்கங்களை இலகுவாக தேடி எடுக்கும் வகையில் home page - ஐ வடிவமைத்தால் நம்பர் வாரியாக வாசிக்க வசதியாக இருக்கும்.

உதாரணமாக 7,8 ம் பதில்கள் எங்கு இருக்கு என்று தெரியவில்லை.

ஆவன செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

Bucker said...

//Principal Of Oceonography பக்கம் 92,93)//

இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அந்த வரிகளையும் குறிப்பிடுங்கள். இன்னும் சிறப்பாக இருக்கும்.

Anonymous said...

you are so week in geography man. Try to learn more. don't try to compare science with religion books because this is like shaking your finger on rotted shit.

Anonymous said...

சகோதரர் அனானிமஸ் அவர்களே

நான் புவியியலில் வீக்காக இருந்தால் அது எப்படி என்று கொஞ்சம் தளிவாக சொல்லலாம் அல்லவா? அதற்கு திராநியிள்ளமால் கோழைத்தனமான கமன்ட் அடிக்க வேண்டாம். முடிந்தால் எமது வாதத்தை மறுத்து கமன்ட் எழுதுங்கள். அதற்கும் சேர்த்து பதிலளிப்போம். இன்ஷா அல்லாஹ். மேலும் வார்த்தைகளில் நாகரீகத்தை கடைபிடியுங்கள். இந்த தளம் முடக்கப்பட்டு தற்போது எனது கட்டுப்பாட்டில் இல்லை. எனது புதிய தளத்தில் உங்கள் விமர்சனங்களை பதிய முடியும். அங்கு வந்து பதியவும். அதன் முகவரி: www.mohamedihsas.blogspot.com

Post a Comment