Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, March 11


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர்-15

விந்து குறித்த குரானின் விந்தைகள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

அது முதுகுத்தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. (86:7)

தற்காலத்தில் விந்தானது விதைப்பையில் உருவானாலும் அது முதுகந்தண்டிற்கும் முன்பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிக்கு சென்றுதான் வெளியேறுகின்றது என்று கண்டுபிடித்திருக்கின்றனர். இது முஸ்லிம்களின் வாதம் இதை மறுப்பதாக இருந்தால் இது தவறு அல்லது பொய் என்று நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு செங்கொடி எப்படி பூசிமெழுகுகிறார் என்று பாருங்கள்:

விரைப்பையில் விந்து உற்பத்தியானாலும் அது நேரடியாக அங்கிருந்து வெளிப்பட்டு விடாமல் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்து தான் வெளித்தள்ளப்படுகிறது. இதை இப்போதைய அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் இதை ஆயிரத்துநானூறு ஆண்டுகளுக்கு முன்பு  படிப்பறிவில்லாத ஒருவரால் சொல்லியிருக்க முடியுமா? எனவே தான் குரானை இறைவன் தான் இறக்கினான் என கூறுகிறோம் என்கிறார்கள். விந்து விரைப்பையில் உற்பத்தியானாலும் செமினல்வெசிக்கிள்ஸ் எனும் சுரப்பியில் சுரக்கும் திரவத்தையும், ப்ராஸ்டேட் எனும் சுரப்பியில் சுரக்கும் திரவத்தையும் சேர்த்துக்கொண்டு தான் வெளியேறுகிறது. ஆனால் அந்த இரண்டு சுரப்பிகளும் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையில் இல்லை என்பது தான் கவனிக்கவேண்டியது.

முதுகுத்தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து விந்து வெளிப்படுகிறது என்று நாம் கூறினால் இவர் அந்த இடத்தில் சுரப்பிகள் இல்லை என்கிறார். கோடம்பாக்கத்துக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்குக்கு விலை சொல்லும் கதைதான் இது! அந்த இடத்தில் சுரப்பிகள் இருப்பதாக குர்ஆன் கூறவில்லை அந்த இடத்திலிருந்து விந்து வெளிப்படுவதாகத்தான் குர்ஆன் கூறுகிறது. குர்ஆன் குறிப்பிடுவது தவறு என்றால் அங்கிருந்து விந்து வெளியாகவில்லை என்று நிரூபிக்க வேண்டும் நிரூபிப்பாரா?  இல்லாவிடில் இப்படித்தான் கதையளப்பாரா?
இந்த வசனத்திற்கு பலரும் பலவாறு விளக்கம் கூறுகிறார்கள். முதுகந்தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையே என்றால் அது விறைப்பை தூண்டும் செயல் என்றும் இன்னும் ஒருவித கருத்தையும் கூறுகின்றனர். அதை எடுத்துப்போட்டு விளக்குகிறார். நாம் அந்த கருத்துக்களை ஏற்பதில்லை என்பதால் அதை தவிர்க்கிறோம். தவறான ஒரு விளக்கத்திற்கு மறுப்பளிக்கும் செங்கொடி சரியான விளக்கத்திற்கு மழுப்பலையே பதிலாக அளிக்கிறார்.

விந்து குறித்த இன்னொரு விந்தையான தகவலும் குரானில் இருக்கிறது. வசனம் 76:2 கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்…… இந்த வசனத்தில் இருக்கும் கலப்பான இந்திரியத்துளி என்பதற்கு ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் என்று விளக்கமளிக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு பொருளைக் கொள்வதற்கு இந்த வசனத்தில் இடமில்லை. கலப்பான இந்திரியத்துளி என்று இரண்டையும் ஒரே நிலையில் வைத்து குறிப்பிடுகிறது குரான். அவ்வாறன்றி ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினை முட்டையும் வேறுவேறு தன்மையிலானவை. உயிரணு, சினை முட்டை என்று அறிவியல் வளர்ந்த பிறகு மதவாதிகள் குறிப்பிட்டாலும், அந்த வசனம் விந்துத் திரவத்தைத் தான் குறிப்பிடுகிறது. அதாவது ஆண்களுக்கு நீர்த்த நிலையில் வெளிப்படும் விந்துவைப் போலவே பெண்களுக்கும் நீர்த்த நிலையில் ஒரு திரவம் வெளிப்படுகிறது. ஆண்களுக்கு உயிரணுவை தாங்கி வரும் விந்துவைப் போல் பெண்களுக்கு வெளிப்படும் திரவம் சினை முட்டையை தாங்கி வருவதில்லை. அத்திரவத்தின் பயன் உயவு மட்டும் தான். ஆனால் இந்த அறிவியல் ஆயிரத்துநானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முகம்மதுவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பெண்களுக்கு வெளிப்படும் திரவத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த முகம்மது அதுவும் ஆண்களிடமிருந்து வெளிப்படுவதைப் போல்தான் என்று எண்ணிக்கொண்டு கலப்பு இந்திரியத் துளி என்று தன குரானைப்படைக்க, இன்று அதை மதவாதிகள் உயிரனுக்கலாகவும் சினை முட்டையாகவும் மொழிபெயர்க்கிறார்கள்.

கலப்பு விந்துத்துளி என்பதை ஆணின் உயிரணு, பெண்ணின் சினை முட்டை என்று பொருள் கொள்ள இயலாதாம். ஏன்? உயிரணு என்பதும் சினைமுட்டை என்பதும் வேறு வேறு! இதை ஒரே நிலையில் வைத்து குர்ஆன் குறிப்பிடுகிறது என்கிறார். உயிரணுவும் சினை முட்டையும் வேறு வேறாக இருந்தாலும் அது சேரும்போது வரும் கலவையைத்தான் குர்ஆன் குறிப்பிடுகிறது. இதையே கலப்பு விந்துத்துளி என்று குர் ஆன் கூறுகிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை. சீனியும் நீரும் வேறு வேறுதான். அது இரண்டும் சேரும்போதுதான் சீனிக்கலவை வரும் சீனிக்கலவை என்றால் அது தவறு! ஏன்?  சீனியும் நீரும் வேறு வேறு அதை இணைக்க முடியாது என்று கூறுவதா? அதில் வரும் விந்துத்துளி என்பது உயிரனுவைத்தான் குறிக்கும். எனவே இவ்வாறு குர்ஆன் குறிப்பிட்டது தவறில்லை. இத முகம்மது நபியால் சொல்லவும் முடியாது! அவருக்கு இந் நவீன கருவியலும் தெரியாது.

வளரும் இன்ஷா அல்லாஹ்


0 comments:

Post a Comment