Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, May 14

சத்தியமே வெல்லும்

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... முடிவுரை

செங்கொடி என்பவர் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக "இஸ்லாம்:கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே" எனும் தொடரின் கீழ் இஸ்லாத்தைப்பற்றி விமர்சித்து வருகிறார். அது தொடர்பாக நேரடி விவாதத்திற்கு வருவதாக செங்கொடி சம்மதித்திருந்தும் பின்னர் முடியாது என்று ஒதுங்கி விட்டார்.(இவர் முடியாது என்றதற்கான காரணங்கள் ஏற்புடையதல்ல என்பதை ஏற்கனவே நாம் தெளிவு படுத்தியும் உள்ளோம்.) இதன் பின்னர், நாமே இவரது வாதங்களுக்கு மறுப்பளிக்க முன்வந்தோம்! அல்லாஹ்வின் அருளால் இதுவரை அவர் எவற்றையெல்லாம் விமர்சித்தாரோ அவை அனைத்தும் தவறு என்பதையும் நிரூபித்துக்காட்டியுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!

ஆனாலும் செங்கொடி இதன் பின்னும் தொடர்வார் என்றே கருதுகிறேன். ஏனெனில், இவர் இறுதியாக எழுதிய தொடரில் அது சம்பந்தமாக இன்னும் எழுதவிருப்பதை தெரிவிக்கிறார். ஆனால், அக் குறிப்பிட்ட தலைப்பு எழுத்து விவாதத்தின் மூலம் சரியாக முடிவு எட்ட முடியாது. ஆகவே, நாம் இவருக்குப் பயந்து பின்வாங்காமல் துணிவுடன், "நீங்கள் நேரடியாகவே விவாதத்திற்கு வர வேண்டும்” என அழைப்பு விடுக்கிறோம். அந்த அழைப்பை செங்கொடி கட்டாயம் ஏற்றே ஆக வேண்டும். ஏனென்றால், நான் நேரடி விவாதம் செய்யமாட்டேன் என்பதற்கு அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு வாதங்களையும் தவறு என்று நிரூபித்துள்ளோம். நாம் இஸ்லாத்தைப்பற்றி விமர்சித்ததும் அதுக்குப்பயந்து கொண்டு ஓடி ஒழியவில்லை; மாறாக துணிவுடன் களத்தில் குதிக்கத்தயாராக இருகிறோம் என்பதை காட்டும் முகமாகவே நேரடி விவாதத்திற்கும் அழைக்கிறோம். ஆனால், செங்கொடி சாக்குப்போக்கு கூறி ஓடி ஒழியவே நினக்கிறார். முதல் தடவையாக விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஏற்க மறுத்த செங்கொடி ஈற்றில் ஏற்றுக்கொண்டார். பின்னர் நான் ஏன் பி.ஜேவுடன் நேரடி விவாதம் செய்ய விரும்பவில்லை? எனும் கட்டுரையில் அவர் வாபஸ் வாங்கியதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு எமது "செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு" எனும் பகுதியில் முதலாவது பகுதியிலேயே அவை ஏற்கத்தக்கவையல்ல என்பதை எழுதியுள்ளோம். அதைப்பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

செங்கொடிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாகவே அழைப்பு விடுத்தார் பி.ஜே. ஆனால் செங்கொடி நான் பி.ஜேவுடன் விவாதம் செய்ய மாட்டேன் என்றுதான் தலைப்பிட்டுள்ளார். ஆக, செங்கொடிக்கு பி.ஜேவுடன் விவாதம் செய்ய விருப்பமில்லை என்றால் போகட்டும்! பி.ஜே தவிர்ந்த ஏனைய அறிஞர்களுடனாவது விவாதத்திற்கு வருவாரா? செங்கொடியின் நிலை உண்மையிலேயே சரியானது என்றிருந்தால் அவர் விவாதத்திற்கு தயக்கம் தெரிவிக்கக்கூடாது! ஏன்? ஒரு டெஸ்டில் கேள்விகளையும் கொடுத்து அதற்கான ஆன்ஸரையும் கொடுத்து தயாராகிக்கொண்டு வா என்றால் எந்த மாணவனும் பரீட்சை எழுத தயங்க மாடான். அது போல்தான் செங்கொடியின் கேள்விகளுக்கு பதிலையும் கொடுத்து முடிந்தால் நேரடி விவாதத்துல் வந்து உங்கள் நிலையை நிரூபித்துக்காட்டுங்கள் என்று அழைப்பு விட்ட பின்னும் தயங்கினால் என்ன அர்த்தம்? விவாதத்தில் நாம் அழித்த பதிலை விட மிகவும் சிறப்பான முறையில் பதிலளிக்க முடியும் என்பதால் இன்னும் பயனுடையதாக இருக்கும்.

இது போன்ற எழுத்து விவாதங்கள் மக்களை சென்றடைவதை விட நேரடி விவாதங்கள் நேரடியாகவும் துரிதமாகவும் உழைக்கும் மக்களைசென்றடையும். எழுத்து விவாதத்தில் ஏற்படும் நேர விரயம், பொருளாதார விரயத்தை விட நேரடி விவாதத்தில் மிக மிக குறைவாகவே ஏற்படும்! ஆனால், பயன் நிறைவாக இருக்கும் என்பது யதார்த்தம் என்பதனால்தான் நேரடி விவாதத்திற்கு நாம் அழைக்கிறோம். இதன் பிறகும் மறுத்தால் இவரது வாதத்தில் இவருக்கே தெளிவில்லை என்பதுதான் அர்த்தம்

இதன் காரணமாகவே, இவரது அனைத்து விமர்சனத்திற்கும் பதிலளித்துவிட்டு விவாததுக்கு வருமாறு அழைக்கிறோம். இதன் பிறகும் அவர் ஒரு முடிவு சொல்லாமல் இழுத்துக்கொண்டு சென்றால் இவர் அறிவு நாணயமற்றவர் என்பதுதான் கருத்து!

எனது மனமார்ந்த நன்றிகள்...

இந்த தொடர் எழுதுவதற்கு என்னைத்தூண்டிய முக்கிய காரணம் செங்கொடியின் நேரடி விவாதம் தொடர்பான மழுப்பல்தான். நான் விமர்சனத்திற்கு புதியவன்; அனுபவமில்லாதவன்; மேலும் ஓர் மாணவன் என்பதால்  எனக்கு அவ்வப்போது இணைய வசதிகளை ஏற்படுத்தித்தந்த எனது நண்பர்களுக்கும் கொள்கைச்சகோதரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

இஸ்லாத்திற்கெதிராக எத்தகைய பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டாலும் அது சத்தியத்தின் முன் சமாத்யாகும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (21:18)

0 comments:

Post a Comment