Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, December 2

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர்-03


“அல்லாவின் ஆற்றலிலுள்ளா இடர்பாடுகள்” எனும் தலைப்பின் கீழ் செங்கொடி எழுதிய விடயங்களுக்கு மறுப்பாக இத்தொடர் வெளியிடப்படுகிறது.

செங்கொடி எழுதிய “அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்” எனும் தொடரை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

செங்கொடி “அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்” எனும் தலைப்பில் இரண்டு விடயங்களைப் பற்றிய தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அது என்ன என்பதையும் அதற்கான எமது மறுப்பயும் பார்ப்பதற்கு முன் அவர் குறிப்பிட்ட மற்றொரு விடயத்தை முதலில் பார்ப்போம்.

செங்கொடியார் எடுத்த எடுப்பிலேயே இவ்வாறு ஆரம்பிக்கிறார்:

அல்லாவின் ஆற்றல்களாக ஆண்டவனின் சக்தியாக குரான் குறிப்பிடுபவற்றை எல்லாம் குரானிலிருந்து நீக்கிவிட்டால் குரான் பாதியாக குறைந்துவிடும். அந்த அளவுக்கு ஆண்டவனின் பெருமைகளை மிக விரிவாக விளக்குகிறது. அவற்றிலிருந்து சிலவற்றை தருகிறேன், சோர்வடையவேண்டாம்.
அவனைத்தவிர வேறு இறைவனில்லை, அவனுக்குத் தூக்கமில்லை, சோர்வில்லை, மரணமில்லை, அவன் உண்பதில்லை, மறப்பதில்லை, யாரும், எதுவும் அல்லாவுக்கு நிகரில்லை, அவனுக்கு உதவியாளன் யாரும் தேவையில்லை, வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை, பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் இல்லை, எங்கும் இருப்பவன், இறைவன் அமர்ந்திருக்கும் இருக்கை வானம் பூமியைவிட பெரியது, மன்னிப்பவன், கருணையுள்ளவன், யாவரையும் மிகைத்தவன், அனைவரும் அனைத்தும் அடிமை அவன் ஒருவனே ஆண்டை, அவனே அறிவை வழங்குகிறான், அவனே அறிவீனத்தையும் வழங்குகிறான், குழந்தையை தருவதும் அதை இல்லாததாக்குவதும் அவனே, செல்வத்தை வழங்குவதும், ஏழ்மையை தருவதும் அவனே, நோயும் அதன் நிவாரணமும் அவன் புறத்திலிருந்தே, அவன் எதையும் படைக்க நாடி ஆகுக என்றால் உடனே அது ஆகிவிடுகிறது, அவன் ஒருவனே படைத்தவன் ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை. இன்னும் ஏராளம் ஏராளம்.

குர்ஆன் இறைவனுடைய வேதம். அதில் அவனைப்பற்றி அவனுக்கே உரிய வேறு யாருக்குமே இல்லாத அவனுடைய வல்லமைகளை கூறுகிறான். அது சில இடங்களில் விரிவாகவும் பல இடங்களில் சுருக்கமாகவும் உள்ளன. உறுப்படியாக ஒரு விடயம் கூட இல்லாததையெல்லாம் ஏதோ இருப்பதாக காட்டி தொடர்தொடராக எழுதித்தள்ளும் போது சகல வல்லமையும் பொருந்தியவனை பற்றி குறிப்பிட்டால் இவருக்கு சலிப்பு வந்து விடுகிறதாம்! சரி, இனி தலைப்பிற்குள் நுழைவோம்.

மேற்குறிப்பிட்ட தொடரில் விதி மற்றும் படைப்பதற்கு முந்திய இறைவனின் நிலை என்ன என்பது பற்றிய கேள்வியே நிறைந்துள்ளது. இப்பொழுது இவருடைய முதலாவது கேள்வியை எடுத்துக்கொள்வோம்.

குரானில் அனேக இடங்களில் தன் சக்தியையும் பெருமைகளையும் கூறிவிட்டு அவர்கள் (அதாவது மனிதர்கள்) சிந்திக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்புகிறது. இந்த இடத்தில் நாமும் ஒரு கேள்வியை எழுப்புவோம். மனிதர்களை சிந்திக்கச்சொல்லும் குரான் அதாவது அல்லா, மனிதனுக்கு சுயமான சிந்தனை இருப்பதாக ஏற்கிறதா?
அல்லாவிடத்தினில் ஒரு ஏடு இருக்கிறது, அதில் குறிப்பிடப்படாத விசயமே இல்லை. நடந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கும் அத்தனையும் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த ஏட்டில் இருக்கும்படியே உலகமும், பிரபஞ்சமும் இயங்கிவருகிறது. முதல் மனிதனிலிருந்து இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதகுலம் வாழ்ந்தாலும் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் அந்த ஏட்டில் இருப்பதன் படியே நடந்து கொள்கின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால், எடுத்துக்காட்டாக இருவர் சந்தித்துக்கொள்வதாக கொள்வோம். அவர்கள் இருவரும் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொள்ளலாம் அல்லது கோபத்தில் ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளலாம். இந்த இரண்டு செயல்களில் எது நடந்தாலும் அது அல்லாவிடம் இருக்கும் அந்த ஏட்டில் உள்ளபடிதான் நடக்கும். அல்லா அறைந்து கொள்வார்கள் என எழுதிவைத்திருந்தால் ஒருக்காலும் அவர்களால் கைகுலுக்கிக்கொள்ளமுடியாது. இப்படி இருக்கும் நிலையில் எதை மனிதன் சிந்தித்து செய்வது? அதாவது ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. சிந்தனை என்பது அந்தக்கணத்தில் நிகழ்வது அது ஏற்கனவே எழுதி வைத்ததோடு இணங்கிச்செல்வது என்பது எப்போதும் நடைபெற முடியாது. எனவே முஸ்லீம்களே (இதையே தலைவிதியாக பார்ப்பனீய மதமும், தேவனின் தீர்க்கதரிசனமாக கிருஸ்துவ மதமும் இன்னும் ஏதேதோ வகைகளில் அனைத்து மதங்களும் சொல்கின்றன எனவே ஏனைய மத நம்பிக்கையுள்ளவர்களையும் கூட) உங்களிடம் பகுத்து உணரும் அறிவு இருப்பதாக, சிந்திக்கும் திறனிருப்பதாக, வளர்ச்சியடையும் மூளை வாய்க்கப்பட்ட பிறப்பாக நீங்கள் இருப்பதாக ஏற்கிறீர்களா? ஆம் என்றால் எழுதிவைக்கப்பட்ட அந்த ஏட்டில் இருக்கும் படியே அனைத்தும் நடைபெறும் என்பதற்கான உங்கள் விளக்கம் என்ன?
முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். மனிதர்களை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்று குரானில் அல்லா கேள்வி எழுப்புகிறான் என்றால் அதன் பொருள் மனிதனுக்கு சிந்திக்கும் திறனை அல்லா வழங்கியிருக்கிறான் என்பது தான். அதாவது தனக்கிருக்கும் மொத்த ஆற்றலிலிருந்து மனிதனுக்கு சுயமான சிந்தனையை வழங்கியிருப்பதாக கூறும் அல்லா, தன்னிடமிருக்கும் ஏட்டில் உள்ளபடியே எல்லாம் நடக்கும் என முரண்படுவதேன்? ஆனால் மனிதர்களுக்கு (அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும்) சிந்திக்கும் திறன் இருப்பதை நாம் சந்தேகிக்க முடியாது ஏனென்றால் நேரடியாக நாம் அதை பார்க்கிறோம் உணர்கிறோம். என்றால் அந்த ஏட்டில் இருப்பதை மீறி எதுவும் நடக்கமுடியாது என்பது சாத்தியமில்லையல்லவா? எனவே பதிவுசெய்யப்பட்ட அந்த ஏட்டில் உடைப்பு இருப்பது உறுதியாகிறது, அதுவும் முதல் மனிதனை அல்லா உண்டாக்கியது முதலே. இது ஆண்டவனின் முழுமையான ஆற்றலின் முதல் இடர்பாடு.

அதாவது மனிதனை பார்த்து சிந்திக்கமாட்டீர்களா? என்று அல்லாஹ்தானே கேட்கிறான். ஆனால் மனிதனுக்கு சுய அறிவு இருப்பதாக அவன் ஒத்துக்கொள்கிறானா? இல்லை. நடந்தது,நடப்பது,நடக்கவிருப்பது அனைத்தும் அவனிடமுள்ள ஒரு ஏட்டில் இருப்பதாக சொல்கிறான். எனவே ஏன் இந்த முரண்பாடு என்பதே இவருடைய முதல் கேள்வியின் சுருக்கம்.

விதியை நம்புவது என்பது இஸ்லாத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று! இஸ்லாத்தை பொருத்தவரையில் எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவுபூர்வமான விளக்கம் அளிக்க இயலும். எனினும் விதியைப்பற்றி தர்க்கம் செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அதற்கு தடை விதித்துள்ளார்கள்.

ஏனெனில் குர்ஆனில் பல இடங்களில் மனிதனே தனது செயல்பாடுகளை தீர்மானிக்கிறான் என்று கூறியபோதும் ஒரு சில வசனங்கள் இவை அனைத்தையும் இறைவனே தீர்மானிக்கிறான் என்று கூறுகிறது. எனவே, இதைப்பார்க்கும் போது ஒருவித குழப்பம் எமக்கேற்படும். விதி உள்ளதெனில் நான் நல்லவனாக,கெட்டவனாக நடப்பதற்கு நான் எவ்வாறு பொறுப்பேற்பது என்ற கேள்வியும் விதி இல்லையெனில் நான் என்ன செய்வேன் என்று தெரியாதவன் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழும். எனவேதான் விதி இருக்கிறது ஆனால் அதை விளங்கிக்கொள்ளும் அறிவு எமக்கில்லை என்று எமது தோல்வியை ஒப்புக்கொள்வதே ஏற்றதாக இருக்கும்.
ஏனெனில், எமது அறிவைக் கொண்டு அனைத்தயும் விளங்க இயலாது. எமது அறிவுக்கும் எல்லை உண்டு. இதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. எனவே, இவ்வாறான நிலையில் விதியை இறைவன் ஏன் ஏற்படுத்தியுள்ளான் எனும் கேள்வி எழலாம். அதற்கான பதிலை திருக்குர் ஆன் அழகாக கூறுகிறது:
உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும்(விதியை ஏற்படுத்தியுள்ளான்.) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.(57:23)
இதுவே விதியை ஏற்படுத்தியதற்கான நோக்கமாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
விதியை நம்பாதவனுக்கு தாங்கமுடியாத இழப்பு ஏற்பட்டால் அதை எண்ணி எண்ணியே பைத்தியமாகின்றான்.சிலர் இறப்பதும் உண்டு. விதியை நம்புபவனுக்கு இழப்பு ஏற்பட்டால் நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் அவன் செயல் என்று எண்ணுவான். இதுபோல் அளவுக்கதிகமாக புகழ்,செல்வம் என்பவை ஏற்படும் போது கர்வம் கொள்ளாமல் இறைவனின் நாட்டம் என்பான். இதுபோன்ற நிலைகளில் விதியானது ஒரு சுமைதாங்கியாகவும் ஒரு சமனிலைப்படுத்தியாகவும் தொழிற்படுகிறது. இது மனித குலத்திற்கு கிடைக்கும் நன்மையாகும்.(நடந்து விட்ட ஒன்றுக்காகத்தான் விதியன் நினைக்கவேண்டும். விதிப்படி நடக்கும் என்பதற்காக சோம்பேறியாக இருப்பதை இஸ்லாம் தடுக்கிறது என்பதை கவனத்தில் கொள்க!)
இதுவே அவரது முதல் கேள்விகான பதில்!

இனி அவருடைய இரண்டாவது கேள்வியை எடுத்துக்கொள்வோம்.
அடுத்ததொரு இடர்பாடும் இருக்கிறது, அது என்ன?
அல்லாவைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை என குரானில் அனேக இடங்களில் அல்லா குறிப்பிடுகிறான். அப்படி என்றால் எதுவும் படைக்கப்படாத காலம் என்று ஒன்று இருந்திருக்கும் அல்லவா. அந்த காலத்தில் அதாவது அல்லாவைத்தவிர வேறு எதுவுமே இல்லாத காலத்தில் அல்லா இருந்தது எங்கு? தற்போது அர்ஷ் என்னும் சிம்மாசனத்தில் ஆண்டவன் இருக்கிறான், ஆனால் இந்த பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன் என்கிருந்து படைத்தான் என்பதே நம் கேள்வி. ஒரு பொருளைப் படைப்பதற்கான முக்கியமான நிபந்தனையே படைப்பவன் படைக்கப்படும் பொருளுக்கு வெளியில் இருந்தாக வேண்டும் என்பது. இங்கு அல்லாவின் படைப்புத்திறனில் கேள்விகள் எழுப்பப்படவில்லை, வாதத்திற்காக பிரபஞ்சத்தை படைக்கும் திறன் அல்லாவுக்கு இருந்ததாகவே கொள்வோம். கேள்வியெல்லாம் எங்கிருந்து படைத்தான் என்பது தான். இங்கு அல்லா இருக்கும் இடத்தின் முழுமையான முகவரியை தாருங்கள் எனக்கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அர்ஷ் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாக ஒரு கருதல். அதேபோல் பிரபஞ்சத்தை படைக்குமுன் எங்கு இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வியின் மையம். மாறாக நம்பர் 24 படைத்தோன் வீதி, நியூரோபிக்டஸ், ஆண்ரோமீடா. என முகவரி கேட்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம். அல்லா மட்டும் தான் சுயம்பு, அல்லா இருக்கும் இடமும் சுயம்புவல்லவே. அல்லா எப்போதும் இருக்கிறான் என்றால் அவனிருக்கும் இடமும் என்றுதான் கொள்ள முடியும். இடமில்லாத பொருள் இருக்கமுடியாது. ஆக தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை எனும் அல்லாவின் கூற்றில் உடைப்பு இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. அல்லாவின் ஆற்றலிலுள்ள முக்கியமான இடர்பாடாகும் இது.
கடவுள் அர்ஷைப் படைப்பதற்கு முன் எங்கே இருந்தார் என்று கேள்வி கேட்பதன் மூலம் தனது அறியாமையை வெளிப்படுத்துகிறார்.
அதாவது, இவ்வண்ட சராசரங்களை படைப்பதற்கு முன் இறைவன் எங்கிருந்தான் என்பதே இவருடைய இரண்டாவது கேள்வி! இக்கேள்வியில் அறிவார்ந்த வாதமிருப்பது போல் தோண்றினாலும் இது அதிகப்பிரசங்கித்தனமான கேள்வியாகும்.
உதாரணமாக ஒருவன் தன் தந்தையோ அல்லது தாயிடமோ போய் என்னை ஏன் பெற்றாய்? எதற்காக பெற்றாய்? என்னை பெறுவதற்கு முன் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? என்று கேட்டால் அவர்கள் பொறுத்துக்கொள்வார்களா? இல்லை. இதேபோல் ஒரு அரசனிடம் போய் நீ அரசனாவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தாய் என்று கேட்டால் என்ன நடக்கும்?. இதற்கு பதிலளிக்க முடியுமாக இருந்தாலும் இவனுக்கு அரசன் பதிலளிப்பானா? அந்த அவசியமும் கடமையும் அந்த அரசனுக்கு உண்டா என்றால் இல்லை!. ஒரு சாதாரண மனிதனிடம் போய் கேட்டாலே அதிக பிரசங்கித்தனம் என்று கூறும் போது சர்வவல்லமையும் பொருந்தியவனிடம் போய் இதை எவ்வாறு கேட்க முடியும் என்பதை சிந்தியுங்கள்!. அதற்கு பதில் இருந்தாலும் அவனுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இருக்குமா?
அல்லாஹ்வை மனிதனைப் போல் அற்ப ஜந்து என்று முஸ்லிம்கள் நம்பினால் இப்படி கேட்க முடியும். ஆனால் அவன் சர்வ சக்தன் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். செங்கொடியும் இறைவனின் ஆற்றல் குறித்த வசனங்களை இவ்வளவு அதிகமாக சலிப்புத் தட்டும் வகையில் கூற வேண்டுமா எனக் கேட்கிறார். சலிப்புத் தட்டும் அளவுக்கு இறைவனின் ஆற்றல் கூறப்பட்ட பின்பும் செங்கொடிக்கு சராசரி மனிதன் போல் கடவுளை நினைக்க முடிகிறது என்பது தான் விந்தையாக உள்ளது
படைத்தவனே அவன் எனும் போது அவனுக்கு அர்ஷ உட்பட எதுவும் அவசியம் இல்லை எனும் போது அவன் எப்படியும் இருக்க முடியும். எந்தப் பொருளீன் துனையும் இல்லாமல் இருக்க முடியும் என்ற சாதாரண அறிவு கூட செங்கொடிக்கு இல்லை.
யாருடைய நம்பிக்கையை விமர்சிப்பதாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கை எத்தகையது என்பதை புரிந்து அதில் நின்று தான் விமர்சிக்க வேண்டுமே தவிர அவர்கள் நம்பாத வேறு கிரவுண்டில் இருந்து விமர்சிக்கக் கூடாது

இது ஒரு புறமிருக்கட்டும். பிரபஞ்சம் தோண்றுவதற்கு முன் என்ன நிலை இருந்தது? அறிவியல் கூறுவதை பார்ப்போம்.
இப்பிரபஞ்சமானது பெருவெடிப்பின் மூலம் உருவானது. அதற்கு முன் அதாவது பெருவெடிப்பிற்கு முன் என்ன இருந்தது, என்ன நடந்தது? இவ் அண்ட வெளியின் நிலை என்ன என்பதை மனிதர்களால் கண்டுபிடிக்கமுடியாது!. மட்டுமன்றி அதற்குரிய அறிவும் எமக்கு கிடையாது! இது எமது அறிவுக்கு அப்பாற்பட்ட விடயம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பெருவெடிப்பின் விநோதத்தன்மை அந்த அளவுக்கு அதில் செல்வாக்கு செலுத்துகிறது(எமது அறிவியலை தோற்கடித்துவிடுகிறது) என்கிறது அறிவியல்.
ஆக, எந்த விடயம் எமக்கு பதில் கண்டுபிடிக்கமுடியாதோ,சொன்னாலும் புரியாதோ அந்த விடயங்களை தூக்கிப்பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் ஆற்றலில் இடர்பாடு, ஓட்டை உடைசல் என்று வசனம் பேசுவது அறிவிலித்தனத்தையே சுட்டிக்காட்டுகிறது!(இப் பந்தி விதி பற்றிய விடயத்திற்கும் பொருந்தும்)
அடுத்து, அர்ஷ் இப்பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறது என கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு யாரும் கருதுவதில்லை!. அவ்வாறு கருதினால் அது தவறு. அர்ஷ் இப்பிரபஞ்சத்திற்கு மேல் இருப்பதாக நம்புவதே முஸ்லிம்களின் நம்பிக்கை!.
இவர் இந்த கேள்விகளாய் கேட்ட பின் இறுதியாக இவ்வாறு குறிப்பிடுகிறார்:
அல்லாவின் ஐயத்திற்கிடமற்ற ஆற்றலில் நம்பிக்கை கொண்டவர்களே, உங்களின் நம்பிக்கைக்குள்ளிருந்து இவைகளுக்கொரு பதில் கூறுமாறு உங்களை அழைக்கிறேன்.
ஆக, இவரது வேண்டுகோளுக்கிணங்க எமது நம்பிக்கை அடிப்படையில் பதிலளிக்கப்பட்டுவிட்டது! இதற்கு மேல் அறிவியல் ரீதியாகவும் பதிலளிக்கப்பட்டு விட்டது!. எனவே, சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்வின் ஆற்றல் பூரணமானது! எமது அறிவே அவனது ஆற்றலை புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு ஊணமானது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்


6 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஆரம்பத்திலிருந்தே இத்தொடரை படித்து வருகிறேன். தக்க பதில்களுடன் தொடர் போகிறது. மாஷாஅல்லாஹ்.

சென்ற தொடரில் ஒருவரின் பின்னூட்டத்திற்கு...

இந்து மத அடிப்படைவாதத்துல பாதிக்கப்பட்டா முஸ்லிம் மத அடிப்படவாதத்துல சேர்ந்து எதிர்க்கனுமா, ஜூலை மாநாடு, வெட்டு கொல்லு, மோடி என்றெல்லாம் உளற பதிவிற்கு சம்பந்தமின்றி உளற ஆரம்பித்தவருக்கு... //சம்பந்தமில்லாமல் இதுபோன்று உளறுவதை விட்டுவிடுவது நல்லது!// பதில் சொன்னீர்கள்.

இதுதான்.. இதே டெக்னிக்தான்... செங்கொடி உபயோகிக்கும் -எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிரபலமான அவரின் எழுத்து விவாத டெக்னிக். இதை போன்ற அவரின் பினாமிகளை வைத்துத்தான் எல்லா விவாதத்தையும் திசைத்திருப்பி பொருளற்ற வகையில் நீர்த்துப்போக வைப்பார். அவரிடம் கேள்வி கேட்டால்... முற்றிலும் பதிவு சாராமல் விவாதப்பொருளுக்கு வெளியே நின்று கண்டவர்கள் எல்லாம் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் பதில் என்ற பெயரில் எழுதித்தள்ளுவார்கள்.

தயவு செய்து பதிவு சார்ந்ததோ சாராததோ... வேறு யார் பின்னூட்டம் போட்டாலும் (அவர்கள் முஸ்லிம்கள் ஆயினும் சரியே...) அவற்றை வெளியிட்டு இந்த விவாதம் திசை திரும்புதலை தவிர்க்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செங்கொடியின் பின்னூட்டத்தை மட்டுமே அனுமதியுங்கள். மற்ற எந்த யாருடைய பின்னூட்டத்தையும் வெளியிட வேண்டாம் -இந்த என் பின்னூட்டம் உட்பட..!

வானம் said...

இது சூப்பருங்கண்ணே. அப்படியே மேல போங்க. இந்த டெக்னிக்கு ரொம்ப நல்லாருக்கு

A.Mohamed Ihsas said...

வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களே!

கருத்துரைப்பகுதி இருப்பது ஒருவர் தான் வாசித்த இடுகை பற்றி கருத்து வெளியிடுவதற்காகத்தான். அக்கருத்து சில வேளை அது குறித்த கேள்வியாகவும் அமைந்துவிடக்கூடும். அதற்கு தகுந்த பதிலளிப்பது அக்கருத்தை வெளியிட்டவரின் கடமை. அந்த வகையில்தான் நான் வானம் என்பவர் கூறிய சில தவறான கருத்துக்களுக்கு மிகவும் சுருக்கமாக பதிலளித்தேன். அவருடைய கேள்வி என்னுடைய இடுகை சம்பந்தப்பட்ட கேள்வி இல்லாவிட்டாலும் நான் குறிப்பிட்ட விடயங்களை தொட்டு பேசியிருப்பதால் அவருடைய கருத்துக்கு மறுப்பளிக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் அதே இடுகையில் ஹைதர் அலி என்பவர் குறிப்பிட்ட கருத்துக்கு நான் பதிலளிக்கவில்லை. அது தேவையற்ற கேள்வி.

இவ்வாறு சில தீமைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக கருத்துரைப்பகுதியை நிறுத்த இயலாது. காரணம் கருத்துரைப்பகுதி மூலமாகத்தான் அவர்களது நிலையையும் அறிந்து அது தவறெனில் சுட்டிக்காட்டவும் இயலும். ஆயினும் இதுபோன்ற நிலையை தவிர்ப்பது வாசகர்களின் கையிலேயே உள்ளது. அவர்கள் இதை உணர்ந்து இடுகை சம்பந்தமான தங்களது சந்தேகங்களையும் கருத்துகளையும் வெளியிட்டால் சிறப்பாக அமையும்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

Anonymous said...

இந்த இடுகையின் மறுப்பு செங்கொடி தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பார்வையிடலாம்.

http://senkodi.wordpress.com/2011/02/07/senkodi-islam-4/

Anonymous said...

dai...senkdoi ketta kelvikku vilakkam solludda....summa ularaada..

Anonymous said...

Brother Anonymous...

Senkodi kaetta oru kaelvikku kooda micham illaama pathil sollappattuvittathu. unkalukku puriyum thiran illaavittaal kaelunkal thelivu paduththukiroam. naalaantharappaaniyil paesa vaendaam. enathu intha website hack seyyappattullathu. enathu conrolil illai. puthu adress tharukiraen. anku vanthu kaelunkal. www.mohamedihsas.blogspot.com

Post a Comment