Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, January 13


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே
தொடர்-07

செங்கொடியின் குரான் கூறுவது அறிவியலாகுமா எனும் தலைப்பிலான கட்டுரைக்கு மறுப்பாக இத்தொடர் வெளியாகிறது.இவரது தொடரை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இவர் குர்ஆன் கூறுவது அறிவியலாகுமா எனும் தலைப்பில் கட்டுரையை அமைத்திருந்தாலும் இஸ்லாத்தை மார்க்கம் என்று கூருவது தொடர்பான சில விடயங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். அதை முதலில் பார்ப்போம்.

இஸ்லாம் மதமல்ல மார்க்கம் அதாவது வாழ்க்கைக்கான வழிகாட்டி எனவே அதை மதம் என்று கூறுவது தவறு என்பவர்கள், ‘இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மட்டுமே கொண்டிருக்கவில்லை, அது ஒரு மனிதனுக்கு அவன் வாழ் நாளில் அனைத்து கணங்களுக்கும் தேவையான குறிப்புகளை வழங்கி அவனை வழி நடத்துகிறது என்றும் இதில் கட்டாயம் ஒன்றுமில்லை என்றும் ஏனைய மதங்களின் இருப்பையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் தவறான பாதையை உணர்த்தி அவர்களை அழைக்கவும் செய்வதால் இது மதமல்ல மார்க்கம் என்கிறார்கள். சரியோ தவறோ தனக்கென ஒரு வாழ்முறையை அல்லது வாழ்க்கைக்கான வழிமுறையை சொல்லாத மதம் எது? பார்ப்பனீய இந்து மதத்தில் சாதிய்ய படிமுறைகள் வாழ்முறையாக இருக்கிறது. பௌத்தத்தில் ஆசையை துறப்பது வழிமுறையாக இருக்கிறது. கன்பூசியத்தில் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வது வாழ்முறையாக இருக்கிறது. கிருத்தவத்தில் சகித்துக்கொள்வது வாழ்முறையாகவும், இஸ்லாத்தில் ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொள்வது வாழ்முறையாகவும் இருக்கிறது.இவைகளை அடிப்படையாகக்கொண்ட சட்டங்களின் வாயிலாக தம்மை பின்பற்றுபவர்களின் வாழ்வில் தமக்கிசைந்த கட்டுக்கோப்பை கொண்டுவரவே எல்லா மதங்களும் விரும்புகின்றன. இதில் இஸ்லாத்திற்கு என்ன தனிச்சிறப்பு?

எல்லா மதங்களும் ஒரு கொள்கையை தனக்கென ஒரு வழிமுறையை சொல்லுகின்றது. ஆனால் அம்மதங்கள் அனைத்தும் இஸ்லாத்தைப்போன்று அனைத்துத்துறைகளையும் பேசுவதில்லை. ஒன்றிரண்டு விடயங்களை பேசிவிட்டு இன்னும் பல துறைகளுக்கு தேவையான விடயங்களை கூறாமலே இருந்துவிடுகின்றன. இந்தவகையில் இஸ்லாம் அனைத்து மதங்களை விடவும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதுதான் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு.

எல்லா மதங்களும் தமக்குள் செய்தே ஆக வேண்டுமென்று சிலவற்றையும் சில விதிவிலக்குகளையும் கொண்டிருக்கின்றன. எல்லாமதங்களும் விட்டு வெளியேறுவோரை எச்சரிக்கின்றன இதில் இஸ்லாத்தில் மட்டும் விலக்கிருக்கிறதா என்ன?

எல்லா மதங்களும் செய்தாக வேண்டும் என்று சிலவற்றையும் செய்யக்கூடாது என்று சிலவற்றையும் கூறுகின்றன. மதங்கள் மாத்திரமல்ல அரசியல் கட்சிகளாயிருந்தாலும் வேறு இயக்கங்களாக இருந்தாலும் இதுதான் நிலை! இது கம்யூனிசத்திற்கும் பொருந்தும். நாம் இவற்றில் எதைப்பார்க்க வேண்டும்? அது சொல்லுகிற மெஸ்ஸேஜை பார்க்க வெண்டுமா? அல்லது இவ்வாறு சொல்லிவிட்டதே என்று பார்க்க வெண்டுமா? இஸ்லாம் தன்னை விட்டு வெளியேறுவொரை எச்சரிக்கின்றது. அது ஏனைய மதங்களை போன்றா உள்ளது? இஸ்லாத்தை விரும்பியவர் ஏற்றுக்கொள்ளலாம்; விரும்பாதவர் விலகிக்கொள்ளலாம். இதில் பூரண சுதந்திரம் உண்டு! ஆனால் அவரவரிற்கு அதற்குரிய பிரதிபலன் கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகின்றது. அவ்வளவுதான்!

மார்க்கம் என்றால் வழி என்று பொருள், வழி என்றானால் அதில் பயணிக்கும் மக்களுக்கு தம் வழியை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வேண்டும். எல்லா மதங்களுமே தம்மை பின்பற்றும் மக்களை மூளை இல்லாத பிறப்பாகவே பார்க்கின்றன. அவர்களின் செயல்கள் ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டுவிட்டதாக கூறுகின்றன. இதில் எங்கே சுதந்திரம் வருகிறது?

வழி என்றால் அதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக சாக்கடைகளையும் குப்பைகளும் நிறைந்த வழியயும் தெர்ந்தெடுப்பேன் என்று கூறுவதுதான் அறிவுடமையா? அதற்குப்பெயர்தான் சுதந்திரமா? இதை தடுத்தால் அடக்குமுறை என்பதா?

மதம் என்பதன் பொருள் என்ன? பரிசீலனைக்கு இடமின்றி ஒரே விதமான சிந்தனையினூடான வெறி என்பது தான். இந்த இலக்கணத்தினின்று இஸ்லாம் மாறுபடுகிறதா என்ன? பின் எப்படி அதை மதம் எனவழைக்காமல் மார்க்கம் என்றழைப்பது?

இஸ்லாம் பரிசீலனைக்கு அப்பாற்பட்டதுதான். ஏன்? அதில் மாற்றம் செய்ய வேண்டிய எதுவும் கிடையாது!. அவ்வாறிருந்தால் அதை நிரூபித்துவிட்டு இக்கேள்வியை இஸ்லாத்தை நோக்கி எழுப்பலாம். அதுவரை இக்கேள்வி இஸ்லாத்திற்கு பொருந்தாது. ஏனைய அனைத்துக்கும் பொருந்தும். கம்யூனிசத்திற்கும் பொருந்தும்.

இனி அவரது தலைப்புக்குட்பட்ட விடயத்தை அலசுவோம்.

பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் அறிவியல் பற்றி பேசும்போது ஒரு கண்ணோட்டத்தை வகுத்துக்கொண்டு அதன்படி பேசுவார்கள். கிமு கிபி என்பது போல் காலத்தை இஸ்லாத்திற்கு முன் இஸ்லாத்திற்கு பின் என்று பிரித்துக்கொண்டு முகம்மதுக்கு முன்னுள்ள காலம் அறியாமைக்காலம் என்ற தொனியிலிருந்துதான் பேசுவார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தை அறியாமைக்காலம் என்று சும்மா கூறுவதில்லை. அக்காலத்தில் நடைபெற்ற நடவடிக்கைகளையும் மேலும் வரலாற்று நிகழ்வுகளையும் வைத்துத்தான் அவ்வாறு கூறுகிறோம். இது அன்னாருக்கு தெரியாதா? அல்லது அவ்வாறு காட்டிக்கொள்கிறாரா? அக்காலம் அறியாமைக்காலம் இல்லாமல் என்ன? ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்காலம் போல் என்று நினைத்துவிட்டாரா?
இந்த அடிப்படையில் இருந்துதான் குரானின் வசனங்கள் அறிவியலை (அதாவது அந்த நேரத்தில் கண்டறியாததாக கருதப்படும் அறிவியலை) மெய்ப்பிப்பதால் இது முகம்மதின் வாக்காக இருக்கமுடியாது. கடவுள் என்ற ஒரு சக்தி இருந்து, அது எல்லாவற்றையும் அறிந்திருந்து கூறியதால் தான் இப்படி சாத்தியமாயிற்று என்ற திசையில் பேசுவார்கள். ஆனால் மெய்யாக இவர்கள் குறிப்பிடுவதுபோல் குறிப்பிட்ட வசனம் அறிவியல் கூறுகளை விளக்குமா? என்றால் இருக்காது சாதாரணமாக அந்த வசனம் வெளிப்பட்ட சூழல் குறித்த, தேவை குறித்த விளக்கமாக இருக்கும், ஆனால் அதை பிரித்து, நுணுகி, யூகம் செய்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலோடு ஏதாவது விதத்தில் ஒத்துப்போவது போல் பொருள் கொண்டு, ஆஹா குரான் ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது என விதந்து போற்றுவார்கள்.
குர்ஆன் அறிவியலை கூறும் ஒரு விஞ்ஞான புத்தகமல்ல! குர்ஆன் அக்காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளூக்கு தீர்வாகவும், இஸ்லாமிய கோட்பாட்டை விளக்குமுகமாகவும் அவ்வப்போது அருளப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் தற்காலத்தில் அதை இறை வேதம் என்று நிரூபிப்பதற்காக அதனுள் அறிவியல் கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது. எந்த மனிதனும் அவனது காலத்தின் அறிவிற்குட்பட்டுத்தான் பேசுவான்; நூலும் இயற்றுவான். ஆனால் குர்ஆன் மட்டும் இக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அறிவியல் கூறுகளை மறைமுகமாக கூறியிருப்பது அதை சிந்திக்கும்போது எம்மால் அறிய முடிகிறது. (இதை தவறு என்று எவ்வாறெல்லாம் உளறியிருக்கிறார் என்று அடுத்தடுத்த தொடரில் எதிர்பாருங்கள்) இது இறை வேதம் என்பதற்கு சான்றாகும்.

இவைகளையும் மீறி குரானின் வசனங்களை அறிவியல் நேரடியாக ம‌றுக்கும் வேளைகளில் அது யூகத்தின் அடிப்படையிலான கோட்ப்பாடுதான் நிரூபிக்கப்பட்ட அறிவியலல்ல என திருப்பிப்போடுவார்கள்.

இவர் எதைப்பொறி வைத்துப்பேசுகிறார் என்பது புரிகிறது. அது ஒரு கற்பனைக்கோட்டைதான். அறிவியலல்ல!(இது பற்றி தனியாக ஒரு தொடர் எழுதியிருக்கிறார். அதற்கு மறுப்பெழுதும் போது மேலதிக விபரங்களை குறிப்பிடுவோம்.)

இவர் இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் குர்ஆன் மட்டுமா அறிவியலை சொல்கிறது பண்டைய இலக்கியங்கலும்தான் அறிவியலை சொல்கிறது என்று அள்ளிப்போடுகிறார் ஒரு பட்டியலையே. அவை என்னவென்பதையும் அதில் அறிவியல் உள்ளதா என்பதயும் பார்க்கலாம்.

கம்பராமாயணத்தில் வரும் ஒரு செய்யுளின் ஒரு பகுதியை குறிப்பிடுகிறார். அது என்ன?
மண்ணின் மேலவன் தேர் சென்ற சுவடெலா மாய்ந்து விண்ணின் ஓங்கியதொரு நிலை....... இதில் கம்பன் விமானத்தைப்பற்றி கூற்கிறான் என்கிறார். இவர் கூறுவதில் உண்மையாளராக இருந்தால் அதன் கருத்தை குறிப்பிட்டு அதில் உள்ள அறிவியல் கூறை நிரூபித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய்வுமில்லை. அதில் அறிவியலுமில்லை.

அடுத்தது ஈசோ உபனிசத்தில் இருக்கும் ஒரு வசனத்தைக்குறிப்பிடுகிறார். அது நகர்கிறது, அது நகரவில்லை, அது தூரத்தில் உள்ளது அது அருகேயும் உள்ளது, அது உள்ளே இருக்கிறது, வெளியேயும் இருக்கிறது. இதில் குவாண்டம் மெக்கானிசம் இருப்பதாக குறிப்பிடுகிரார். இதில் குவாண்டம் மெக்கானிசம் கூறப்படுகிறதா? “அது” என்று குறிப்பிடுவது எது? அது நகர்கிறது; நகரவில்லை என்று உளறிக்கொட்டியதை பக்கத்திலுமுள்ளது தூரத்திலுமுள்ளது என்ற பைத்தியக்காரத்தனத்தை அறிவியல் என்று கூறுகிறார். இவருக்கு உண்மையில் அறிவியல் தெரியுமா  என்பதே சந்தகமாக இருக்கிறது.

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்...  என்று அவ்வையார் கூறியது அடர்த்திபற்றிய கோட்பாட்டை கூற்கிறது என்கிறார். ஒரு செய்யுளை குறிப்பிட்டால் அதன் கருத்தை குறிப்பிட்ட பின்னரே இதில் அறிவியலுள்ளதா இல்லையா என்று கூற முடியும். அந்த வாசகத்தை மட்டும் வாசித்துக்காட்டி அர்த்தம் செய்யாமல் பேசுவது கயமைத்தனம். இந்த செயலை இவர் செய்திருக்கிறார். இதன் (இவர் குறிப்பிட்ட வாசகத்தின்) உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? ஆழமான கடலில் உள்ள நீரில் நன்றாக தாழும்படி அமுக்கி அள்ளினாலும்..... இதில் அடர்த்திபற்றிய கோட்பாடு உள்ளதா? ஒன்றும் இல்லை. இப்பாடலின் மையக்கருத்தே இவர் மறுக்கும் விதிப்பயன் பற்றியதுதான் எனபதை அறிந்து கொள்ள வேண்டும்.

சாணிலும் உளன் அனுவை சதகூறிட்ட கோணிலும் உளன்  இது அணுப்பிளவு பற்றி வருகிறது என்கிறார். மேலோட்டமாக பார்த்தால் உண்மைதான். ஆனால் நன்றாக கவனித்தால் இது தவறு என்பதை புரிந்து கொள்ளலாம். எப்படி? அனுவை பிளக்கலாம் என்றால் அதை துண்டு துண்டாக உடைப்பது என்பது பொருளல்ல. ஒரு காலத்தில் அனுதான் ஒரு சடப்பொருளின் அடிப்படை என்றும் இது மிகவும் நுண்ணியது என்றும் இதை மேலும் பிரிக்க முடியாது என்றும் கருதிவந்தனர். பிற்காலத்தில் இது தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது அனுவை நியூத்திரன்(இந்தியர்கள் நியூற்றான் என்பர்), இலத்திரன்(எலக்ரான்), புரோத்தன்(புரோட்டான்) என்று இன்னும் பல கூறுகளாக வகைப்படுத்தலாம். அனுவினுள்ளும் இதுபோன்ற பல கூறுகள் உள்ளது என்று கூறுகின்றனர். இவர் அதை அறிவியலுள்ளது என்றாரோ அது அறிவியலுக்கு நேரெதிரானது என்றாகிவிட்டது.

திருக்குறளில் நிர்வாகவியல், குறுந்தொகையில் உளவியல், பட்டினப்பாலையில் நகர் நிர்மாணம், சீவக சிந்தாமணியில் தொலைக்காட்சி, திருப்பாவையில் வானியல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இவைகளில் மேற்படியார் குறிப்பிட்டது இருக்க இயலாது. அவ்வாறிருந்தாலும் ஆச்சரியத்திற்கு ஒன்றுமில்லை. ஏன்? இவர்கள் அனைவரும் படித்தவர்கள்! முஹம்மது நபியைப்போன்று எழுதப்படிக்க தெரியாதவர் அல்லர்! முஹம்மது நபியைப்போன்று எழுதப்படிக்கத்தெரியாத ஒருவர் இவ்வாறு சொல்லியிருக்க சாத்தியமில்லை. அது இறைவனின் புறத்திலிருருந்து வந்தாலே தவிர.

லூயி கார்ல், ஐன்ஸ்டீனுக்கு முன்பே சார்பியல் கோட்பாட்டை தன்னுடைய கதைகளில் விளக்கியதாக கூறுகிறார்கள். பாராசூட், கருவியல் உட்பட ஏராளமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு முன்பே படமாக வரைந்து வைத்தவர் லியானர்டோ டாவின்சி. அறிவியல் தெளிவு ஏற்படுவதற்கு முன்பே எப்படி இவைகளை அவர்களால் கூற முடிந்தது? முகம்மதுவுக்கு அல்லா போல வேறு ஏதோ ஒரு கடவுள் அவர்களுக்கு கூறிச்சென்றனரா? இவைகளையெல்லாம் அவர்களின் கற்பனைத்திறனுக்கு சான்றாக கூறமுடியுமேதவிர சம்பந்தப்பட்டவர்களின் தெய்வீகத்தொடர்புகளுக்கு சான்றாக ஆகாது.

லூயி கார்ல் விடயத்தில் இவருக்கே சந்தேகமுள்ளது. இதை விளக்கியதாக கூறுகிறார்கள் எனும் இவரது கூற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம். லியானாடோ டாவின்சி என்பவர் முஹம்மது நபியைப்போலுள்ளவர் கிடையாது. இவர் நன்றாகப்படித்தவர். இவர் மறுமலர்ச்சிக்காலத்தில் வாழ்ந்தவர் கூட. இவர் கூறுவதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. கடவுள் வந்து கூறிச்சென்றார் என்று எண்ணவும் இயலாது.

வேத வசனங்களை அறிவியல் வயப்பட்டு பொருள் விளக்குபவர்கள், அறிவியல் கண்ணோட்டத்தோடு எல்லா வசனங்களையும் அணுகுவார்களா? என்றால் நிச்சயமாக மாட்டார்கள். அணுகியிருந்தால் குரானில் சொல்லப்படும் ஜின்களை எப்படி மெய்ப்பிப்பது எனும் பார்வை அவர்களுக்கு தோன்றியிருக்கும்.

குர்ஆன் விஞ்ஞானப்புத்தகமல்ல! அறிவியல் மூலம் அனைத்திற்கும் தீர்வு காண இயலாது. அதில் அறிவியல் உள்ள வசனங்களைமட்டுமே அறிவியலுக்கு எடுத்துக்கொள்வோம். இது பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். ஆனால் இதன் மூலம் ஏராளமான குர் ஆன வசனங்களை அறிவியல் மூலம் நிறுவிவிட்டால் அது மொத்தமாக இறை வேதம் என்றாகிவிடும். அதன்பின் அதில் குறிப்பிடும் அறிவியல் மூலம் தீர்வு காண இயலாத அனைத்தும் சரி என்றாகிவிட்டால் ஜின்களைப்பற்றி தனியாக நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஆனால் குர்ஆன் இறை வேதம் என்ப்தற்கு பல சான்றுகல் உள்ளன.

பார்ப்பனீய இந்து மதத்தை பொருத்தவரை அது அறிவியலுக்கு எதிரானது என்பது அனைவருக்கும் தெரியும். கிருத்தவமோ கலிலியோ, புருணோ என்று வரலாறுகளை வைத்திருக்கிறது. ஆகவே இஸ்லாம் மட்டுமே இதுபோன்ற மதங்களிலிருந்து வேறுபட்டு அறிவியலை அரவணைத்துச்செல்கிறது எனும் தோற்றத்தை உண்டாக்குவதன் மூலம் எங்கள் மதமே உயர்ந்தது எனவே அதில் வந்து சேர்ந்துகொள்ளுங்கள் என்று ஆள் பிடிக்கும் வேலைதானே தவிர வேறொன்றும் இல்லை. எனவே மதவாதிகளின் கைகளில் அறிவியல் வஞ்சகமாக பயன்படுவதற்கு எதிராக இனி குரானின் வசனங்களை அலசுவோம்.

இஸ்லாம் அறிவியலை அரவணைத்துச்செல்வது என்பது தோற்றமல்ல உண்மை. கோல்டன் ஏஜ் ஒஃப் இஸ்லாம் எனும் காலத்தில் அறிவியலின் உச்சகட்டத்தில் இருந்தவ்ர்கள் முஸ்லிம்கள்தான். தற்கால அறிவியலுக்கு மூலமாக இருந்த்தௌம் முஸ்லிம்களதான். இதை யாரும் மறுக்க முடியாது. சரியாக இருந்தால் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதில் எந்த தவறும் கிடியாது. வரட்டுத்தத்துவங்களையும், கற்பனைக்கோட்டைகளயும் கொண்ட கம்யூனிசத்தையே வெட்கமிலாமல் கூவித்திர்யும்போது இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வது ஒன்றும் கீழ்த்தரமானதல்ல!.

இவர் அறிவியல் என்று பசப்பித்திரிந்ததை இனி அலசுவோம்!

வளரும் இன்ஷா அல்லாஹ்

1 comments:

Anonymous said...

இதற்கான மறுப்பு செங்கொடியில் பதிவிடப்பட்டுள்ளது ஆர்வமுடையவர்கள் காண்க.

http://senkodi.wordpress.com/2011/10/26/senkodi-islam-10/

Post a Comment