Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, April 7

அபயமளிக்கும் நகரமும் ஆய்வின் சிகரமும் (?) அம்பலம்!

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-20 

மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா? எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

இத்தொடரில் மக்காவானது பாதுகாப்பான மற்றும் அபயமளிக்கும் நகரம் என குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளன. அவை தவறு என்பதை அழகாக நிரூபிக்கிறார் (?) செங்கொடி. முதலாவதாக மக்காவில் யுத்தம் நடைபெற்றுவிட்டதே எப்படி அது சரியாகும் என கேட்கிறார்:

முகம்மது நடத்திய போரிலேயே அந்த நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது. அபயமளிக்கும் அந்த நகரம் பற்றிய அல்லாவின் வாக்குறுதி முகம்மதாலேயே பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. முகம்மதுவுக்கும் அது பாதுகாக்கப்பட்ட நகரம் என்பது தெரியும். அதனால் தான் ந்முகம்மது அல்லா எனக்கு மட்டும் அனுமது தந்திருக்கிறான் என்று சமாளிக்கிறார்.

.........எச்சரிக்கை மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை, எனக்குப்பின்னர் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை........ புஹாரி ஹதீஸ் எண் 112

ஆனால் முகம்மதுவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வசங்கப்படுவதாக குரான் வசனமோ, ஹதீஸ்களோ இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் முற்காலத்தில் தள்ளிவிட்டு முகம்மதுவுக்கு பிறகான 1400 ஆண்டுகளாக அது தாக்குதளில்லாமல் பாதுகாக்கப்படுவதாக வழக்கம் போல புளகமடைகிரார்கள்.

முஹம்மது நபி போர் நடத்துவதற்கு அல்லாஹ் அனுமதித்தானா? அதற்கு ஏதாவது குர்ஆன் வசனமோ அல்லது ஹதீஸோ இருக்கிறதா? என்று கேட்பவர் அதற்கு முன் குறிப்பிட்ட அந்த விடயம் ஹதீஸ் இல்லாமல் வேறு என்ன? அவரே அனுமதித்ததாக வரும் ஹதீஸை போட்டுவிட்டு பின்னர் போர் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டதாக எங்கே ஹதீஸ் உள்ளது என கேட்கிறார்! என்னே அறிவு! முதலில் மக்காவில் போர் நடைபெற்றதா என்பதை கவனிக்க வேண்டும். மக்காவில் யுத்தம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு அதுவும் சிறிது நேரத்துக்குத்தான். எனினும் அங்கு யுத்தம் நடைபெறாமல் எதிரிகள் சரணடைகிறார்கள். எந்தவித சண்டையும் இரு தரப்பினரிடையே நடைபெறாமல் வெற்றி முஸ்லிம்களின் பக்கம் கிடைக்கிறது. இந்த வேளையில் ஒரு கொலை அங்கு இடம்பெறுகிறது. இதை கண்டித்து வந்த ஹதீஸில் தனக்கு வசதியானதை மட்டும் எடுத்துக்கொண்டு தனக்கு பாதகமானதை விட்டுவிட்டார். அந்த ஹதீஸ் இதுதான்:

 பனூ லைஸ் கூட்டத்தார் குஸாஆ கூட்டத்தாரில் ஒருவரை கொலை செய்ததற்குப் பிரதியாக அவர்களில் ஒருவரை குஸாஆ கூட்டத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்றுவிட்டார்கள். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் தம் வாகனத்தில் அமர்ந்தவர்களாக சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ் இந்த மக்கா மா நகரில் கொலையைத் தடை செய்துள்ளான். மேலும் மக்காவாசிகளின் மீது அல்லாஹ் தன்னுடைய தூதரையும், இறை நம்பிக்கையாளர்களையும் ஆதிக்கம் செலுத்த வைத்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப்போவதுமில்லை. எச்சரிக்கை! எனக்கு கூட பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்துக்கிடமின்றி இப்போதிருந்தே (முழுமையாக) தடை செய்யப்பட்டுவிட்டது..... (புகாரி 112)
எனவே அங்கு யுத்தம் நடைபெறவில்லை என்பது தெளிவு!

அடுத்து 1979நவம்பர் 20ம் தேதி இடம்பெற்ற திடீர் சம்பவம் குறித்து குறிப்பிட்டுவிட்டு இவ்வாறு வினா எழுப்புகிறார்:

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், எனக்குப்பிறகு மக்காவில் போரிட யாருக்கும் அனுமதி வழங்கபடாது என்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியிருக்க சவுதி அரசு எந்த அனுமதியின் பெயரில் போரிட்டது? அல்லாவின் அனுமதி இல்லாமல் போரிட முடியுமா? இதில் இரண்டு முடிவுகளுக்கு வரலாம். ஒன்று அல்லாவின் பெயரால் முகம்மது கூறியது பொய்யாக இருக்கவேண்டும், இரண்டு அல்லாவை மீறி சவுதி அரசு போரிட்டிருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். எது உண்மை என்று முஸ்லீம்கள் சொல்வார்களா?

அங்கு நடந்தது யுத்தம் என்றால் இக்கேள்வி கேட்பதில் ஒரு நியாயம் உள்ளத்! ஆனால், அங்கு நடந்தது யுத்தம்மோ அல்லது மக்கா நகரை நோக்கி நடந்த தாக்குதலோ இல்லை! இஸ்லாத்தை பின்பற்றுகிறோம்; அதை தூய்மையாக சொல்லப்போகிறோம் என்ற கிறுக்குத்தனத்தில் சவூதியிலுள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இது சும்மா சொன்னால் கேட்கமாட்டார்கள் என்பதால் மக்கா நகரினுள் வந்து பள்ளிவாசலை கைப்பற்றிவிட்டதாகவும் எண்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கத்திக்கொண்டிருந்தனர். இந்த மடையர்களை பிடிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையைத்தான் ஏதோ யுத்தம் நடந்ததாக பிதற்றுகிறார். பொதுவாக மக்கா எல்லைக்குள் கலகம் கூட விளைவிக்கக்கூடாது. அவ்வாறு விளைவிப்பதற்காக நடவடிக்கை எடுத்தல் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதாக வராது.


அப்ரஹா மன்னன் மக்காவின் மீது படையெடுத்த போது அதை அழித்த அல்லா இந்தப்போரில் இரண்டுமே இஸ்லாமியத்தரப்பாக இருந்ததால் எதை ஆதரிப்பது என்று தெரியாமல் நடுநிலை வகித்து விட்டதால் தான் பள்ளியை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? அல்லது குர்ஆனில் மக்காவின் பாதுகாப்பு குறித்து அறிவித்ததெல்லாம் வெறும் பகட்டுத்தானா?


ஆபிரகாவுக்கும் இந்த நிகழ்வுக்குமிடையே எந்த ஒற்றுமையும் கிடையாது! அப்ரஹா கஅபாவை அழிப்பதற்காக படைஎடுத்தான். ஆனால் இவர்கள் கஅபாவை அழிக்க வரவில்லை! தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இதற்குள் சென்றால்தான் முடியும் என நினைத்து வந்தனர்! இவர்கள் புனிதத்தை பேணவில்லை எனும் குற்றத்திற்கு உள்ளாகி தண்டனை அனுபவிப்பார்கள்! இது மக்காவின் பாதுகாப்பு குறித்த குர்ஆன் குறிப்பிடுவதற்கு எதிரானதல்ல.


அடுத்து மக்காவிற்கு உலகின் பல இடங்களிலிருந்தும் கனி வகைகள் வரும் என்று அல்லாஹ் குறிப்பிடும் முன்னறிவிப்பிற்கு பதில் சொல்லும் இலட்சணம் இதோ:


மக்கா குறித்து இன்னொரு வேடிக்கையான செய்தியும் குர்ஆனில் இருக்கிறது.
......ஒவ்வொரு வகை கனி வர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாக கொண்டுவரப்படுகிறது....... குரான் 28:57


அதாவது உலகிலுள்ள எல்லாவகைப் பழங்களும் மக்காவிற்கு இறக்கமதி செய்து கொண்டுவரப்படுகின்றதாம். முன்னரே இப்படி நடக்கும் என்று அறிவித்திருப்பதால் இதுவும் குரான் இறைவனின் வேதம் என்பதற்கான சான்றாம். சவூதியின் பொருளாதாரத்தையே தலை கீழாக புரட்டிபோட்டு டாலர்களில் குளிக்கவைத்த எண்ணெய் வளம் குறித்த மூச்சு கூட விடாத குரான் பலன்களைப்பற்றி பேசுவது வேடிக்கையானது தானே.


இதுதான் மறுப்பளிக்கும் இலட்சனமோ! மக்கா ஒரு பாலைவனப்பிரதேசம் அங்கு ஒழுங்கான உணவு கிடைக்காது. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு முன்னறிவிப்பு செய்து அது இன்றளவும் நடந்து வருவது வேடிக்கையானதா? எண்ணெய் வளம் குறித்து பேசாவிடின் இது தவறாகிவிடுமா? ஆனால் இந்த வசனத்தை கவனிக்கும் போது அந்த முன்னறிவிப்பு கூட மறைமுகமாக இருக்கிறது. எப்படி? பொதுவாக பாலைவனமாக இருக்கும் பிரதேசம் சோலைவனமாக மாற வேண்டுமெனில் அது பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டால்தான் சாத்தியம். இது சாத்தியம்தான், எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் ஒரு புரட்சி நடக்கும் என்பதை இதனூடாக அறிந்து கொள்ளலாம். மேலும் அரபிகள் இப்படி பணக்காரர்களாக ஆவார்கள் என்று முன்னரிவிப்புச்செய்த ஹதீஸ்களும் உள்ளன.


வளரும் இன்ஷா அல்லாஹ்      

     

0 comments:

Post a Comment