Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, April 24

சிந்தனைக்கும் உண்டு கடிவாளம்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-28

குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா? எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

இந்த தொடரில் செங்கொடி 'ஜின்' மற்றும் தாப்பத் எனும் உயிரினத்தைப்பற்றியும் விமர்சித்திருக்கிறார். இது பற்றிய விமர்சனத்தை கிளப்பியதற்கு இவரது பலவீனமே காரணம் என நான் கருதுகிறேன். ஏன்? இவர் ஒரு வருட காலமாக மக்கள் முன்னிலையில் இஸ்லாத்தைப்பற்றி தப்பும் தவறுமாக விமர்சித்த்தது மட்டுமல்லாமல், இதற்கு பதில் சொல்லத்தயாரா என்று சவடாலும் விட்டுவந்தார். அப்போது சகோதரர் பி.ஜே அவர்களிடம் விவாதம் செய்ய கோரியதும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டு பின்னர் மாட்டிக்கொண்டால் மானம் போய்விடும் என்பதற்காக உப்புச்சப்பில்லாத வாதங்களை எடுத்து வைத்து நான் பி.ஜெவுடன் நேரடி விவாதம் செய்ய மாட்டேன் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.

இவரை இப்படியே சும்மா விட்டுவிடக்கூடாது என்பதற்காக இவரது உளறல்களை தோலுரித்து காட்ட நாம் முன்வந்தோம். இவரது வாதத்தில் உண்மையாளராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? ஆஹா! இதுவல்லவா வாய்ப்பு என்று சொல்லி குர்ஆனில் எவை எவை அறிவியல் முன்னறிவிப்பாகவும் வரலாற்று சான்றாகவும் குறிப்பிடுகிறோமோ அவையனைத்தையும் எடுத்துவைத்திருக்க வேண்டும். நாம் பதிலளிக்க முன்வரும் வரையில் அறிவியல் முன்னறிவிப்புகளையும் வரலாற்று உண்மைகளையும் விமர்சித்தவர் பதிலளிக்க ஆரம்பித்தவுடன் எமது நம்பிக்கைக்கோட்பாட்டுடன் தொடர்புடைய விமர்சனங்களை கிளப்ப ஆரம்பித்துவிட்டார். இவற்றை கிளப்பினால் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் ஓடி விடுவார்கள்; நாமும் தப்பி விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். ஆனாலும் நாம் இவற்றுக்கு பதில் சொல்லாமல் விடப்போவதில்லை. எமது நம்பிக்கை கூட எந்தவகையில் சரி என்பதை அல்லாஹ்வின் அருளால் நிரூபிக்கத்தான் போகிறோம்.

முதலாவதாக 'ஜின்' எனும் பகுத்தறிவு உள்ள உயிரினத்தைப்பற்றி விமர்சிக்கிறார்.ஆனால் அவரது விமர்சனத்தை விட அது பற்றிய அறிமுகமே அதிகளவில் உள்ளது. விமர்சிக்க பெரிதாக ஒன்ருமில்ல்லை. அதைப்பற்றி எழுதியாவது பக்கத்தை நிரப்பிக்கொள்ளலாம் என்று நினைத்தாரோ என்னவோ! இவர் என்ன கேட்கிறார் என்றால் ஜின் என்று ஒன்று இருப்பதாக கூறுகிறீர்கள். அப்படி உலகில் எங்கும் காணவில்லையே! அது இருப்பதற்கான எந்த தடையமுமில்லையே என்கிறார். அதைத்தான் நாமும் சொல்கிறோம். ஜின்கள் இருப்பதை ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியாது. ஏன்? அது எமது கண்ணுக்கு தெரியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை. கண்ணுக்குத்தெரியாது எனும் போது காணவில்லையே என்று கேட்பது எவ்வளவு புத்திசாலித்தனம் (?) என்று அனைவருக்கும் புரியும். அடுத்து அப்படியானால் நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்று கேட்கிறார்.

நாங்கள் ஏனைய மதத்தவர்களைப் போலல்ல குரான் சிந்திக்கச் சொல்லியிருக்கிறது எனும் முஸ்லீம்கள் எந்த அடிப்படையில் ஜின்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கூற முடியுமா?


சிங்கள் இருப்பதாக கூறுவதை நாம் நம்புகிறோம். ஏன்? ஏனென்றால் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததாக நாங்கள் நம்புகிறோம். அது இறைவனிடமிருந்துதான் வந்தது! முஹம்மது எனும் நபரால் தயாரித்திருக்கவே முடியாது எனும் அளவிற்கு பல சான்றுகளை கொண்டுள்ளது. (அந்த சான்றுகளில் சிலவற்றை செங்கொடி விமர்சனம் செய்து அவையனைத்தும் தப்பு என்று நிரூபித்துவிட்டோம். அதற்கு பதில் சொல்வார் என்று பார்த்தால் முன்பை விட அதிகமாகவே உளறிக்கொட்டியிருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.) அப்படிப்பட்ட திருக்குர்ஆன் சொல்கிறது சிங்கள் உள்ளது என்று. நாம் தட்காலலத்தில் சரிகாணும் அறிவியல் உண்மைகளும் இன்னும் சில விடயங்களும் சரியாக இருக்கும் போது இது எப்படி தவறாகும்? ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. திருக்குர்ஆனை நிரூபிக்க ஒன்ரல்ள்ள பல விடயங்கள் உள்ளன. அவை அனைத்தும் சரியாக உள்ள போது எமது சக்திக்கப்பாற்பட்ட விடயங்களைக்கூரும் போது அது எப்படி தவறாகும்?

அதுமட்டுமல்ல, இன்னுமொன்றை சிட்ன்தித்துப்பார்க்கும் போது இந்த நம்பிக்கை சரி எனத் தோண்றும். அது என்ன? ஷைத்தானும் ஜின்களின் இனத்தைச் சேர்ந்தவன் என்று இஸ்லாம் கூறுகிறது. அவனது வேலை என்ன? மக்கள் மத்தியில் தவறான, அசிங்கமான செயல்களை ஏவி மக்களை வழிகெடுப்பது. இன்று நாம் பார்க்கிறோம் சிகரட் பிடிப்பது, ஹெராயின், வைன் போன்ற போதைப்பொருள் பாவனை தவறு என்று மனிதனின் அறிவுக்குப்படுகிறது. அப்படித்தான் வைத்தியர்களும் சொல்கின்றனர். இதை அவனும் அறிந்து வைத்திருக்கிறான். ஆனாலும் அவன் அத செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று அவனது அறிவை மழுங்கடிக்கச் செய்கிறது, அவனை அதன் பக்கம் தூண்டுகிறது என்பது தெரிகிறதா? இல்லையா? இந்த செயலுக்கு காரணமாக இருப்பவன் ஷைத்தான் என்று அல்லாஹ் சொல்கிறான். அக்கவே ஷைத்தான் இருக்கிறான் என்றுதானே அர்த்தம். ஷைத்தான் இருக்கிறான் என்றால் அவனது இனமான ஜின் இனமும் இருக்கத்தானே வேண்டும். இதுதான் சிங்கள் தொடர்பான அவரது கேள்விக்கு பதில்.

இறைவன் இருப்பதாக முஸ்லிம்கள் சொல்கிறார்கள். இறைவனைக் காட்ட முடியுமா என்று கேட்பது போல்தான் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது.

அடுத்து தாப்பத் எனும் உயிரினத்த பற்றி கேட்கிறார். இது ஒரு மேட்டரே இல்லை! உலகம் அழிவதற்கான அடையாளமாக பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று. உலகம் அழியும்! அதற்கு முன் இன்னின்ன நடக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பட்டியலையே போட்டுள்ளார்கள். அதில் பல விடயங்கள் நடந்து வருகின்றன. இன்னும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்றன. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் இதையும் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அடையாளம் காட்டிய விடயங்கள் அப்படியே நுனியும் பிசகாமல் இன்று நடந்து கொண்டிருக்கும்போது இது நடக்காது என்று எப்படி சொல்வது? அனைத்தும் தவறாக இருந்தால் இதுவும் தவறாக இருக்கும். எல்லாம் சரியாக இருந்து சில விடயங்கள் இன்னும் நடக்கவில்லை என்பதால் அது நடக்காது என்பதா? இல்லை இனியும் நடக்கும் என்பதா? இதை அப்படியே சொன்னால் பிரச்சனை இல்லை. ஆனால் இவரது சொந்தக் கருத்தையும் இதோடு சொருகி விடுகிறார்.
தைப்பது குறித்த செங்கொடி சுட்டிக்காட்டும் வசனம் இதுதான்:


அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஒஅர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் பேசும். (27:82)


இந்த வசனத்தில் அந்த உயிரினம் பூமியிலிருந்து வெளிப்படும் என்றுதான் உள்ளது. ஆனால் இவரோ இந்த விலங்கு பூமியை பிளந்து கொண்டு வெளிவரும் என்கிறார்.
வெளிப்படுவது என்றால் பிளந்து கொண்டு வரும் என்பதுதான் அர்த்தமா? உள்ளதை உள்ளபடி விமர்சிக்காமல் இப்படி இல்லாத அர்த்தத்தை சேர்ப்பது கயமைத்தனம் இல்லையா?

காலமோ நேரமோ குறிப்பிடாமல் ஒன்று நடக்கும் எனக் கூறினால் அதை போய் என்று யாராலும் கூற முடியாது. கி.பி 2010 ல் நடக்கும் என்று குர்ஆனில் கூறப்பட்டிருந்தால் 2010 வந்து விட்டதே ஏன் தாப்பத்தைக் காணவில்லை என்று கேட்கலாம். காலம் குறிப்பிடாமல் இறுதிக்காலத்தில் நடக்கும் எனக் கூறினால் அதை இப்படி மறுப்பது அறிவுடைமை இல்லை.

பூமியிலிருந்து தாவரங்கள் தானே முளைக்கும்? புழு பூச்சிகள் பொந்துகளில் வாழும், ஆனால் பூமியிலிருந்து திடீரென ஒரு உயிரினம் வெளிப்பட முடியுமா? அப்படி வெளிப்படும் ஒரு உயிரினம் உடனே பேச முடியுமா? எந்தப்பகுதியில் என்ன மொழியில் பேசும்? பேச்சு என்றால் என்ன? ஒரு உயிரினம் சமூக வயப்பட்டிருப்பதன் அடையாளம். தன இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாருவதற்குரிய ஒரு வளர்ச்சி. ஆஅனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? அதுவும் மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?


பூமியை பொத்துக்கொண்டு வரும் என்று குர்ஆனில் இல்லை. இவரது சொதக்கருத்து. அப்படியே பொத்துக்கொண்டு வருவதாக இருந்தாலும் இது கடவுளுக்கு பெரிய விசயமே இல்லை. ஒண்ணுக்கும் உதவாத தண்ணீரிலிருந்து மனிதனைப்படைத்த கடவுளுக்கு இப்படி செய்வது சிரமமல்! இது தவறு என்பதாக இருந்தால் கடவுளே இல்லை என்று நிரூபித்துவிட்டு இவ்வாதத்தை வைக்க வேண்டும். மனிதனுக்கு உள்ளுள்ள ரகசியம் இதற்கு எப்படித்தெரியும் என்று கேட்கிறார். சாதாரணமாக இது யாருக்கு தெரியாததுதான். இறைவன் அறிவித்துக்கொடுத்தால் இது பெரிய விசயமே இல்லை!


அல்லாவுக்கு இவைகளெல்லாம் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான், ஆண்டவனின் மகிமை இது என்பவர்களுக்கு அறிவியல் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை.


இதற்கு நாம் இப்படித்தான் பதில் சொல்வோம் என்று தெரிந்துள்ள செங்கொடி இப்படி சொல்லிவிடக்கூடாது என்பதற்காக கூறுகிறார். ஆனால் இதற்கு இது பதிலா? அல்லாஹ்வுக்கு இயலும் என்றால் நான் அல்லாஹ்வே இல்லை என்று சொல்கிறேன் எப்படி இதை ஏற்றுக்கொள்வேன் என்றாவது கேட்க வேண்டும். அப்படிக்கேட்டால் அல்லாஹ் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அது இவரால் முடியாது என்பதன் கோபம்தான் இது!.  கடவுள் என்பவன் அனைத்துக்கும் ஆற்றலுள்ளவனாக இருக்க வேண்டும். அப்படியில்லாதவன் கடவுளே கிடையாது. அல்லாஹ்வுக்கு அனைத்தும் இயலும் என்பது எமது நிலை! இது தவறு அதாவது அல்லாஹ்வே இல்லை என்று நிரூபித்து விட்டு இந்த வாதங்களை வைக்க வேண்டும். அதுவரை இவற்றை மறுக்க முடியாது.


இன்று கண்டுபிடிக்கப்படும் அறிவியல் நுணுக்கங்கள் கூட குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுவிட்டது, என ஜல்லியடிப்பவர்கள் இந்த உயிரினங்கள் குறித்து என்ன கூறுவார்கள்?


இன்றைய அறிவியல் உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூரியுல்லவன் இன்றைய அறிவியல் உலகால் கண்டுபிடிக்க முடியாத விடயத்தை கூறினால் அதை தவறு என்று எப்படிக் கூறுவது? இதை அறிவியல் மூலம் பொய் என்று நிரூபிக்க இயலாது! ஏன்? அறிவியல் என்பது சோதனைக்குப்பின் வெளிவரும் தகவல். எதை சோதனைக்குட்படுத்த முடியாதோ அவற்றை தவறு என்பது ஆடத்தெரியாதவன் அரங்கம் கோணல் என்பது போல்தான். எப்படி உயிரின் ரகசியத்தை அறிய முடியாதோ அதை ஆய்வு செய்வது சாத்தியமில்லையோ அதுபோல்தான் இந்த விடயங்களும். ஆனால், அறிவுப்போர்வமாக சிந்திக்கும் போது இவை சாத்தியம் என்பதை உணரலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ் 


3 comments:

குலாம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் இஹ்சாஸ் அவர்களே தங்கள் மீது வல்ல நாயன் அருள் பாலிப்பானாக.

அற்புதமான தங்கள் பதிலால் செங்கொடி தங்களுக்கு பதில் சொல்லுவதையே நிருத்திவிட்டாற்போல் இருக்கு. ஆனால் மேலும் அவமானப்படவே அடம்பிடித்து தொடர்ந்துகொண்டிருக்கிறார். பாவம்.

தங்கள் பதிவுகளை பிரசுரிப்பதற்கு முன் பல தடவை proof பார்த்துகொள்ளுங்கள். பல எழுத்துபிழைகளை தவிர்க்கலாம்.

நன்றி.

A.Mohamed Ihsas said...

வஅலைக்குமுஸ்ஸலாம்.
சகோதரர் குலாம் அவர்களே!
நீங்கள் கூறியது போல் இத்தொடரில் பல எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன. இனி நான் இதில் அதிக கவனம் செலுத்துகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

Anonymous said...

சகோதரர் இஹ்சாஸ்! உங்களுடைய பைத்தியகாரத்தனமான பதிலுக்கு செங்கொடியின் கட்டுரை எவ்வளவோ மேல்.எப்படி எப்படி ? நிலவை பிளந்து ஓடியதை பார்த்தார்களாம் ஆனால் யாருமே முகம்மதுவையும் அவரது அற்புதங்களையும் நம்பவில்லையாம்! கொஞ்சமாவது நம்ப முடிகிறதா? தயவு செய்து இதற்கு ஒரு குரான் வசனத்தை எழுதி எப்படி ஒத்து போகிறது பார்தீர்களா? என்று கேட்க வேண்டாம்.முதலில் நிலவு பிளந்தால் எவனாவது நம்பாமல் இருப்பானா?.கொஞ்சம் இந்த காலத்துக்கு பொருத்திப்பாருங்கள் !! இந்த காலத்தில் யாராவது இந்த மாதிரி விதையை செய்து காண்பித்து விட்டால் அவரை என்னவென்று சொல்வீர்கள்!? அதுவும் தூதராக உள்ள ஒருவர் நல்லவர் வேறு ,,,,
அப்படி இருந்தும் ஏற்றுக்கொண்ட நபர்கள் சொற்பமானவர்கள் என்றால் என்ன அர்த்தம்? இது புருடா என்று அர்த்தம் .

பகுத்தறிவு மார்க்கம் என்று இன்னும் என்ன என்னவெல்லாம் சொல்லப்போரிங்கலோ தெரியல போங்க!!

Post a Comment