Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, March 9


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர்-13

கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

நீங்கள் பார்க்கக்கூடிய தூணின்றி வானங்களைப்படைத்தான் (31:10)
இந்த வசனம் ஈர்ப்பு விசையப்பற்றி பேசுகிறது என்பது முஸ்லிம்களின் வாதம். இதை மறுக்கப்புகுந்தவர் விடும் கதையை முதலில் பார்ப்போம்:
அறிவியல் வளராத காலங்களில் அனுபவம் அதிகம் பெற்ற முதியவர்களிடம் தங்கள் ஐயங்களை இளையவர்கள் கேட்ப்பார்கள். நீண்ட தூரம் போனால் என்னவாகும்? பூமி முடிந்து கீழே விழுந்து விடுவோம். காற்று எப்படி வீசுகிறது? பொழுது போகாத தேவதைகள் வானிலிருந்து காற்றை வாயால் ஊதுகிறார்கள். சூரியனும் சந்திரனும் எப்படி அந்தரத்தில் நிற்கின்றன? தூண்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்படி தூண்கள் இருப்பதாக தெரியவில்லையே? என்று சிறுவர்கள் கேட்டால் தலையில் குட்டி வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் முகம்மது பார்க்கமுடியாத தூண்கள் என்று வசனத்தை கட்டி அனுப்பிவிட்டார். இன்றோ அது ஈர்ப்புவிசை எனும் அறிவியல் ஆடை கட்டிக்கொண்டு வந்துநிற்கிறது.

முஹம்மது நபி என்னவோ அக்காலத்தில் அறிவியல் படித்த பெரியவர் என்றும் அவரது தோழர்கள் என்னவோ இவரிடம் உலக விடயங்களைப்பற்றி கேட்டு தெளிவு பெற்றுக்கொண்டனர் என்றும் நினைத்துவிட்டார் போலும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலக இயக்கங்களைப்பற்றியோ உயிரியல், பௌதிகவியல் பற்றியோ க்லாஸ் எடுக்க வரவில்லை! மக்களை நேர்வழியின் பக்கம் அழைக்க வந்தவர். அவரிடம் போய் இப்படிப்பட்ட விடயங்களை யாரும் கேட்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் உலக விடயங்களில் நபித்தோழர்கள் முஹம்மது நபியை நாடவில்லை என்பதும் அவ்வாறு நாடக்கூடாது என்பதும்தான் அவரது போதனை. இந்தக்கட்டுக்கதையை இவரால் நிரூபிக்க முடியுமா?

ஒரு கோளின் ஈர்ப்புவிசை என்றால் அது அந்தக்கோளின் எல்லா இடத்திலும் இருக்கும், வானமும் சூழ இருக்கிறது. சூழ இருக்கும் வானத்துடன் எல்லா இடங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும் ஒன்றை தூண்கள் என்று ஒப்பீடு செய்வது சரியாக இருக்குமா? தூண் என்றால் ஒரு இடத்தில் இருக்கும் இன்னொரு இடத்தில் இருக்காது. ஒன்றை ஒன்று தாங்கிப்பிடிப்பதற்கு எல்லா இடத்திலும் தூண்களாகவே இருக்கவேண்டும்  என்பது அவசியமில்லை. பூமிக்கு புவியீர்ப்பு விசை இருக்கிறது இதைத்தான் குரான் பார்க்கமுடியாத தூண் எனக் குறிப்பிடுகிறது என்றால், இரண்டு தூண்களுக்கிடையே இடைவெளி போல் புவியில் ஈர்ப்புவிசை செயல்படாத இடமும் இருக்கிறதோ?
தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது?

இது மேற்கண்ட வசனத்துக்கு எதிராக செங்கொடி எழுப்பிய கேள்வி! எதுவுமே தெரியாத பாமரன் கூட கேட்கத்துணியாத கேள்வியை அறிவியல் போர்வை போர்த்திக்கொண்டு கேட்கிறார். ஒரு பொருளை உவமிக்கும் போது அதற்கிடையிலான பொதுவான விடயத்தைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். 'செங்கொடி ஒரு மண்ணாங்கட்டி' என்று ஒருவர் கூறினால் அவருக்கு என்ன வாய் இல்லையா? அவருக்கு என்ன கால் இல்லையா? மண்ணாங்கட்டி பேசுமா? எழுதுமா இவர் பேசுகிறாரே? மண்ணாங்கட்டி உழைக்ககூட செய்யுமா? என்று ஒருவன் கேட்டால் அவனை என்னவென்போம்? செங்கொடி ஒரு மண்ணாங்கட்டி என்றால் மண்ணாங்கட்டியின் ஒன்றுமற்ற தன்மை உவமிக்கப்படுகிறது என்று படித்தவன் மட்டுமல்ல படிக்காத பாமரன் கூட இவ்வாறுதான் விளங்கிக்கொள்வான். பூமியில் உள்ள பொருட்கள் சிதறிவிடாவண்ணமும், வானம், பூமி, கோள்கள் என்பன தமக்கிடையே விட்டு விலகிவிடாவண்ணமும் இருப்பதற்காக ஈர்ப்பு விசை செயற்படுகிறது. ஒரு தூண் எவ்வாறு தாங்கிக்கொண்டும் ஒன்றயொன்று விட்டு விலகிவிடாதவாறு தாங்கிப்பிடித்திருக்கிறதோ அது போன்றுதான் இந்த ஈர்ப்பு விசையும் தொழிற்படுகிறது! தூண் செய்யும் வேலையை கண்ணுக்குத்தெரியாத வகையில் ஈர்ப்புவிசை செய்து கொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளும் திறன் கூடவா இல்லை.? தந்தை ஒரு குடும்பத்திற்கு தூணாக இருக்கிறார் என்றால் அவருக்கு கை இருக்கிறதே தூணுக்கும் கை, கால் போன்றவை இருக்குமா? என்று கேட்பார்போலும்!

சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்(31:29)

இதை மறுக்கப்புகுந்தவர் சம்பந்தமில்லாமல் உளறிக்கொட்டுகிறார். அதாவது கோள்களின் சுழற்சி சம்பந்தமாக கொப்பர்னிகஸ் சொல்வதற்கு முன்பு, குர்ஆன் சொல்வதற்கு முன்பே அரிஸ்டாக்கஸ், ஹிப்பார்க்கஸ் போன்றோர் சொல்லிவிட்டதாக கூறுகிறார். இவர்களுக்கும் அரேபியாவில் வாழ்ந்த முகம்மது நபிக்கும் என்ன தொடர்பு? இவர்களது  புத்தகங்கள் அரபியில் அக்காலத்திலேயே இருந்ததா? அப்படி இருந்ததால் முகம்மது நபி அதை படித்துவிட்டு இவ்வாறு எழுதியிருக்கிறாரா? எதை எதோடு முடிச்சுப்போடுகிறார்?. இவர்கள் ஏற்கனவே கூறியிருந்தால் ஏன் கொப்பர்னிகஸ் போன்றோர் கூறும்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்? இவர் சுய நினைவுடன்தான் இருக்கிறாரா அல்லது ஏதும் மப்பில் உளறுகிறாரா? (கம்யூனிசம் எனும் போதைதான் இவ்வாறு எழுதத்தூண்டுகிறதோ என்னவோ?) இதெல்லாம் போகட்டும்! இது உண்மையாக இருப்பினும் இவர் சுட்டும் வசனத்திற்கும் அரிஸ்டாக்கஸ், ஹிப்பார்கஸ், கொப்பர்னிகஸ் என்போரின் கண்டுபிடிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏன்? இவை கோள்களின் சுழற்சியைப்பற்றி பேசவில்லை; அதன் ஓட்டத்தை பற்றி பேசுகிறது. சூரியன் சந்திரன் போன்றவை சுழல்வதாக அவ்வசனத்தில் இல்லை. அவை சென்று கொண்டிருப்பதாக, ஓடுவதாக என்றுதான் உள்ளது. சூரியனின் ஓட்டம் பற்றி கொப்பர்னிகஸ் கூட விளக்கவில்லை! இது அதி நவீன கண்டுபிடிப்பு. ஒருவேளை இதையும் அரிஸ்டாக்கஸ் போன்றோர் கண்டுபிடித்துவிட்டனரோ?

சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது(36:38)

இவர் இறுதியாக இந்த வசனத்தை குறிப்பிடுகிறார்(இந்த வசனமும் இதற்கு முன் கூறிய வசனமும் ஒன்றுதான். அதற்கு ஒரு அர்த்தமும் இதற்கு நாம் கூறும் அர்த்தமும் செய்கிறார்) இந்த வசனமும் சூரியன் ஓடுவதாக சொல்கிறது. இதை மறுக்க வறு வழியே இல்லை என்பதால் புகாரியில் 3199 இல் இடம்பெரும் ஒரு ஹதீஸை சுட்டிக்காட்டி இருக்கிறார்! அந்த ஹதீஸ் இதுதான்:

அபூதர் (ரலி) அறிவிப்பதாவது:
நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் அது எங்கு செல்கிறது என்று தெரியுமா? என என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்றேன். நபி அவர்கள், அது அர்ஷுக்கு கிழே சஜ்தா செய்வதற்காக செல்கிறது. அங்கு அது மீண்டும் கிழக்கில் உதயமாவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாள் அது சஜ்தா செய்ய அது ஏற்க்கப்படாமல் வந்த வழியே திரும்பிச்சென்றுவிடு என்று கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும். இதைத்தான் சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும் எனும் 36:38ம் இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.

இந்த ஹதீஸை சுட்டிக்காட்டி இது முஹம்மது நபியின் விளக்கம்! இவர்கள் அவருக்கு மாற்றமான ஒரு விளக்கத்தை கூறுகின்றனர் என்று முடிக்கிறார். இந்த வசனத்திற்கு இதுதான் விளக்கம் என வரும் மேற்கூறிய ஹதீஸ் இருப்பது உண்மைதான். ஆனால் இது ஏற்க முடியாத ஹதீஸாகும். ஏனெனில், குர்ஆனில் அதே வசனத்தில் சூரியன் ஓடுவதாகக்கூறுகிறது. ஆனால் விளக்கத்தை கவனித்தால் சூரியன் சுற்றுவதாக வருகிறது. மேலும் அர்ஷ் பூமிக்கு கீழ் உள்ளதாக வருகிறது. குர்ஆனிலும் இன்னும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் அர்ஷ் வானம் பூமி அனைத்துக்கும் மேலே உள்ளதாக குறிப்பிடப்படிகிறது. எனவே குறிப்பிட்ட அந்த ஹதீஸ் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக்கும் நிகழ்கால உண்மைக்கும் மாற்றமாக உள்ளதால் 'குர்ஆனிற்கு முரண்படும் ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டிய இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்' எனும் ஹதீஸ்கலை விதியிற்கேற்ப இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள இயலாது!

எனவே குர்ஆனில் வரும் இந்த வசனங்கள் நவீன அறிவியலைத்தான் கூறுகிறது என்பது புலனாகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்  

1 comments:

செங்கொடி said...

இதற்கான மறுப்பு செங்கொடியில் பதியப்பட்டுள்ளது. ஆர்வமுடையவர்கள் காணலாம்.

http://senkodi.wordpress.com/2012/09/14/senkodi-islam-17/

Post a Comment