Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Monday, May 9

ஸம் ஸம் நீரும் செங்கொடியின் சல்ஜாப்பும்


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-31

ஸம் ஸம் நீரூற்றும் குரானும் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

அரைப்பதற்கு எந்த சரக்கும் மாட்டாததால் தேடிப்பார்த்து எதையாவது ஒன்றை அரைக்கவேண்டியதுதான் என்று முடிவுகட்டிய செங்கொடி இப்போது ஸம் ஸம் நீரூற்றைப்பற்றி எழுதித்தள்ளியிருக்கிறார். எழுதித்தள்ளியிருக்கிறார் என்றதும் கேள்விகள் கொத்துக்கொத்தாக உள்ளன என்று நினைத்துவிட வேண்டாம். கேள்வி எங்கே என்று தேடிப்பார்க்கவே சில நிமிடங்கள் தேவை! அந்தளவுக்கு அற்புதமாக அறிமுகம் செய்திருக்கிறார். வழக்கம்போல கேள்வியைவிட அறிமுகமே மிக அதிகம்! எனவே ஆங்காங்ககே கேட்ட ஓரிரு கேள்விகளை மாத்திரம் கவனத்தில் கொள்வோம்.

முதலாவதாக கேட்பது இது 4000 ஆயிரம் வருடங்களாக நீரை தந்துகொண்டிருக்கிறது தவறு என்கிறார். ஏன் தெரியுமா? அதுபற்றிய குறிப்புகள் வரலாற்றில் இல்லையாம் எனவே, அது தவறு என்கிறார். வரலாற்றில் குறிப்பு இல்லாவிட்டால் அந்த நீரூற்று பழமையானது என்பது தவறா? அது நீரை தந்துகொண்டிருப்பது தவறா? என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதால் அதன் பின்னே ஒரு ஆதாரத்தை தூக்கிப்போடுகிறார். அந்த ஆதாரம் என்ன தெரியுமா? இப்பொழுது நாம் ஸம்ஸம் நீரூற்று என்பது அப்துல் முத்தலிப் கட்டிய கிணறாம்!

இப்போதிருக்கும் ஊற்று முகம்மதுவின் காலத்திற்கு சற்றுமுன் முகம்மதின் பெரிய தந்தையான அப்துல் முத்தலிப் என்பவர் குறைஷிகளின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக தோண்டிய கிணறு. 

அப்துல் முத்தலிப் என்பவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையா? என்னே ஓர் ஆய்வு! இவர் வரலாற்றை ஆய்வு செய்யும் லட்சணத்தைப்பார்த்தால் இவருக்கு PhD பட்டம் கொடுக்க அரசு முடிவெடுத்துவிடும். அப்துல் முத்தலிப் என்பவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாத்தா! அவருடைய பெரிய தந்தையல்ல! இந்த லட்சணத்தில்தான் ஸம்ஸம் நீரூற்றைப்பற்றி எந்த வரலாற்றுக்குறிப்பும் இல்லை என்று கூறுகிறார். சரி அது போகட்டும்! அப்துல் முத்தலிப் கட்டியதுதான் இந்த கிணறு என்பதற்கு ஏதாவது ஆதாரத்தை காட்டினாரா? முன்பெல்லாம் எதை குறிப்பிடாலும் ஹதீஸ் எண் தொடக்கம் அறிவிப்பவரின் பெயரையும் சேர்த்துக்குறிப்பிடுபவர் இதற்கு எதையுமே கூறவில்லையே! ஒரு வேளை இதற்கு மறுப்பு என்ற பெயரில் ஏதாவது ஒன்றை எழுதி இழுத்தடிக்க வேண்டும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தவிர்த்துவிட்டாரா? ஒன்றும் புரியவில்லை. வரலாறு என்ற பேரில் புழுகியுள்ளார்! இவரது கயமைத்தனம் முன்பை விட அதிகமாகவே இப்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவர் இதற்கு ஆதாரத்தைக்காட்ட வேண்டும் இல்லையெனில் இவர் பொய்யர் என்பதை இவர் ஒப்புக்கொள்ளாவிட்டலும் மக்களுக்கு புரிந்துவிடும்.

4000 ஆண்டுகளாக அது நீடித்து நிற்கிறது என்பதை மறுத்து அற்புதம் இல்லை என்கிறார். ஆனால் 1500 ஆண்டுகளாக அது வற்றாத நீருற்றாக இருந்து வருவதை அவரே ஒப்புக் கொண்டு இது அதிசயம் தான் என்பதை  ஏற்றுக் கொள்கிறார். கால அளவில் தான் இவருக்கு கருத்து வேறுபாடு உள்ளதே தவிர அது அற்புதம் எனதில் அல்ல என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்

1971ல் எகிப்திய மருத்துவர் ஒருவர் இந்தக் கிணறு குறித்து ஐயம் எழுப்பியதாகவும் அதைத் தீர்ப்பதற்கு மன்னர் பைசல் நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம் இது குறித்து விசாரிக்குமாறு பணித்ததாகவும், அவர்களால் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரிக் ஹுசைன் என்பவர் அந்தக் கிணற்றின் ஆழம் தோராயமாக ஐந்து அடி இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் அந்தக் கிணற்றின் ஆழம் 30 மீட்டர் என்று சௌதி அரசின் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படித்தான் அந்த நீரின் புனிதம் குறித்து கதைகள் கட்டி பரப்பப்படுகிறது. அதுவே மதத்துடன் தொடர்புடையது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆகிவிடுகிறது.

ஒருவர் ஐந்து அடி என்று குறிப்பிடுவதையும் மற்றவர் 30 மீட்டர் என்பதையும் இணைத்து முரண்பாடு எனும் தோற்றத்தை காட்ட முற்படுகிறார். ஐந்து அடி என்பது அந்த கிணற்றில் உள்ள தண்ணீரின் ஆழம்! ஆனால் அதை கிணற்றின் ஆழம் என திரிக்கிறார். அல்லது எந்த தளத்தில் இருந்து அக்கிணற்றின் ஆழம் ஐந்து அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை செங்கொடி காட்ட வேண்டும். அத்தோடு சவூதி இணையதளங்களில் 30 மீட்டர் என்றுள்ளதாக குறிப்பிடுகிரார். அந்த தளத்தையும் சேர்த்து செங்கொடி காட்ட வேண்டும்.

இந்த நீரில் இருக்கும் தனிமங்களின் செரிவு குறித்தும், இது புனித நீராக இருப்பதால்தான் இவ்வாறு இருக்கிறது என்பதாகவும் பிரதாபிக்கின்றனர். ஆனால் இதை விட பழமையான ஊற்றுகளெல்லாம் இதுபோல தனிமங்களின் செரிவுற்றதாக இருந்திருக்கிறது. சீனாவில் லிசான் மலையில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெப்ப நீரூற்று மருத்துவ தன்மை கொண்டதாக பயன்பாட்டில் இருக்கிறது.

லிசான் மலையில் உள்ளது போன்றதா ஸம் ஸம் நீரூற்று? அல்லது அதன் தனிமங்களை போன்றதா லிசான் மலையிலுள்ள நீரூற்று? அந்த நீரூற்று எந்த மாசும் ஏற்படாமல் இப்போதும் பயன்பாட்டில்தான் உள்ளதா? எதை எதோடு முடிச்சுப்போடுகிறார். ஒரு பாலைவனத்தில் எந்தவிதமான நீர்முதலின் துணையுமில்லாமல் இருப்பது ஸஸம் நீரூற்று! லிசான் மலையிலுள்ள கட்டப்பட்ட நீரூற்றும் அவ்வாறுதானா? அங்கு கட்டுவதென்றால் கூட சாத்தியப்படலாம்... ஆனால், ஒரு பாலைவனத்தில் இது சாத்தியமா? நிச்சயமாக இல்லை!

இந்த கிணற்றிலிருந்து எவ்வளவு நீரை இறைத்தெடுத்தாலும் இதன் நீர்மட்டம் குறைவதில்லை என்றும் ஒரு கருத்து உலவுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது சௌதி அரசு ஏன் அந்த கிணற்றை யாரும் அணுக முடியாதபடி பாதுகாத்து வைத்திருக்கிறது என்பதில் இருக்கிறது.

அடடா! என்ன அறிவார்த்தமான பதில்! சவூதி அரசாங்கம் அதை ஒரு புனிதச்சின்னமாக கருதுகிரது! இதனால் அதைப்பாதுகாக்கிறது. அதைப்பாதுகாப்பதால் அவ்வாறு நீர் தரவில்லை என்பதா? எவ்வளவு நீர் எடுத்தாலும் குறைவதில்லை என்பது தவறு என்றால் தெளிவாக நச் என்று ஆதாரத்தை போட வேண்டும். அதை விடுத்து இப்படி அசடு வழிவது விமர்சனம் இல்லை! சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

சவூதி அரசு கிணற்றை யரும் அணுக  முடியாத படி பாதுக்காத்து வருவதால் தினமும் குறைந்தது 20 லட்சம் மக்கள் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவதும் சொந்த ஊருக்கு எடுத்து வருவதும் பொய்யா? அப்படியானால் அந்த தண்ணீர் நைல் நதி சுரங்கப் பாதை வழியாக மக்கவுக்கு கொண்டு வரப்படுகிறது என்றோ அல்லது இது போல் தண்ணீர் எப்படி வருகிறது என்ற  வழியை எடுத்து கூறி மறுக்க வேணடும்
 

இவ்வளவுதான் அவரது தொடரிலுள்ள கேள்விகள். (?) இது மட்டுமில்லாமல் ஒரு முரண்பாடும் உள்ளது ஒரு பந்தியில் ஸம் ஸம் நீரூற்றைப்பற்றி எந்த குறிப்பும் குர்ஆனில் இல்லை என்பவர் இறுதியாக முடிக்கும் போது குர்ஆனில் அப்துல் முத்தலிப் தோண்டிய கிணற்றுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனக்கேட்கிறார். தனக்குத்தானே முரண்பட்டு உளறுபவர் விமர்சனம் செய்ய தகுதியானவர்தானா? தொடரை எழுதும்போது அவதானம் வேண்டும். அதுவும் கடைசிக்கு முதல் பந்தியில் ஒருவாறும் கடைசிப்பந்தியில் இன்னொருவாரும் கேட்பது இவர் எந்தளவுக்கு கவனமாகவும், நிதானமாகவும் உள்ளார் என்பதை படம்பிடித்துக்காட்டுகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

2 comments:

முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் said...

மாஷா அல்லாஹ் சாட்டைய(பதில)டி அருமை.தங்களுடைய பணியை ஏற்றுக்கொண்டு அல்லாஹ் தாங்களை இம்மையிலும் மறுமையிலும் சிறப்பிப்பானாக

Anonymous said...

அந்த அரைவேக்காடு அறிவுஜீவிக்கு (செங்கொடி) தெளிவான பதில்களை தந்துள்ளீர்கள்.

Post a Comment