Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, March 12


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர்-16

கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

கருவரை குறித்த எமது விளக்கத்தை ஆரம்பிக்கும் முன் ஒரு விடயத்தை தெளிவு படுத்தியாக வேண்டும். குர்ஆனை பொறுத்தவரை அதன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழமான பல கருத்துக்களை கொண்டவை. அதிலுள்ள சில அத்தாட்சிகளை காலம்தான் நன்றாக விளக்கும். அக்காலத்திலுள்ளவர்களால்தான் நன்றாக புரிந்துகொள்ள முடியும். இதனால் சில விஞ்ஞான தகவல்களை அறியாத காலத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்பில் சில குறைபாடுகள் காணப்படும். நவீன காலத்தில் அதை இனங்கண்டு சரியான அர்த்தத்தை கொடுக்க இயலும். இதனால்தான் மொழிபெயர்ப்புகளிடையே மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் மூலத்தில் எந்த மாற்றமோ கருத்த திரிக்கும் மாற்றமோ இருக்காது. அப்படி பழைய மொழிபெயர்ப்புகள் இன்னும் திருத்தப்படாமல் வெளிவந்து கொண்டிருப்பதால் அதை தூக்கிப்பிடித்துக்கொண்டு வாதத்தை நிலை நாட்டுவது கயமைத்தனம். இந்த வேலையைத்தான் செங்கொடியும் கையாண்டு வருகிறார். எந்த இடங்களிலெல்லாம் புதிதாக வெளிவந்த மொழிபெயர்ப்புகளாய் பயன்படுத்த இயலுமோ அங்கு எல்லாம் பயன்படுத்திவிட்டு, பல இடங்களில் பழைய மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தி பார்த்தீர்களா? குர்ஆனில் எப்படி இருக்கிறது என்று இதனால்தான் இப்போது இப்படி மாற்றிவிட்டார்கள் என்று நைஸாக நழுவிச்செல்கிறார்.

முதன்முதலாக 'அலக்' எனும் சொல்லின் பொருளுக்கான மறுப்பை (?) ஆரம்பிக்கிறார்.

முதலில் அலக் எனும் வார்த்தையை எடுத்துக்கொள்வோம். அநேக மொழிபெயர்ப்புகளில் இந்த அலக் எனும் அரபு வார்த்தை மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் கருவுற்ற சினைமுட்டை என்று மொழிபெயர்த்திருக்கிறார். பல்நாட்டு அறிஞர்களும் சரிபார்க்கும் வாய்ப்பை பெற்றதாக நண்பர்கள் கருதும் யூசுப் அலி என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் உறைந்த இரத்தக்கட்டி (clot of congealed blood) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக் என்பவர் இந்தச்சொல்லுக்கு அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் விளக்கங்கள் சொல்கிறார். ஆக அலக் எனும் இந்த அரபுச்சொல்லுக்கு எதுதான் சரியான பொருள்? பொதுவாக பழைய மொழிபெயர்ப்புகளில் இரத்தக்கட்டி என்றுதான் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கர்ப்பப்பையில் கருவானது இரத்தக்கட்டியாக இருக்கிறதா? எனும் அறிவியல் ரீதியான கேள்வி எழுந்ததும் அதன் பொருள் அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் பயணப்பட்டு நவீன அறிவியலை உள்வாங்கிக்கொண்டு தற்போது கருவுற்ற சினைமுட்டையாக ஆகியிருக்கிறது. இது தான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்ட அறிவியலின் லட்சணம்.

இதற்கு சகோதரர் பி.ஜே அவர்கள் மொழிபெயர்ப்பில் தெளிவான விளக்கம் உள்ளது. அதையே இதற்கு பதிலாக முன்வைக்கிறேன்.

இவ்வசனங்களின் மூலத்தில் 'அலக்' எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இச் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. இரத்தக்கட்டி, தொங்கிக்கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டது என்றெல்லாம் பொருள் உண்டு. இந்த இடத்தில் இரத்தக்கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில் இரத்தக்கட்டி என்று ஒரு நிலை இல்லை. தொங்கிக்கொண்டிருக்கும் நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் மனிதனின் மூலத்தை கூறும் போது அது ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும். தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.
மனிதன் உருவாவதற்கு ஆணின் உயிரனு, பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவுற்ற சினை முட்டையாக ஆக வேண்டும். இதுதான் மனிதப்படைப்பின் முதல் நிலை. ஆணின் உயிரணு மட்டுமோ, பெண்ணின் சினை முட்டை மட்டுமோ மனிதனின் முதல் நிலை அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொள்வதால் உருவாகும் பொருளிலிருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான்.
இதனால் தான் சுருக்கமாக கருவுற்ற சினை முட்டை என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம். இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இதன் நேரடிப்பொருள். இதன் கருத்துதான் கருவுற்ற சினை முட்டை. (பார்க்க: பி.ஜே தமிழாக்கம் 365ஆவது குறிப்பு. பக்கம்:1320 ஏழாவது பதிப்பு)

அவன் செலுத்தப்படும் விந்த்தின் சிறு துளியாக இருக்கவில்லையா? பின்னர் கருவுற்ற சினை முட்டையானான். பின்னர் (இறைவன்) படைத்துச் சீராக்கினான். அவனிலிருந்து ஆண் பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்.(75:37-39)

இதில் அறிவியலோடு ஒப்பிடும் படிநிலைகள் என்று எதுவுமில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான் எனும் வசனமும், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் செய்தோம் எனும் வசனமும் ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகிறது. அது என்னவென்றால், கரு உருவாகி ஆரம்பக்கட்ட வளர்ச்சிகள் அடைந்தபின்பு குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் தான் அந்தக்கரு ஆணா? பெண்ணா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது தான். ஆனால் அறிவியல் இதை திட்டமாக மறுக்கிறது. உடலுறவு முடிந்து ஆணின் உயிரனுவானது பெண்ணின் சினை முட்டையை எந்தக்கணத்தில் துளைத்து நுழைகிறதோ அந்தக்கணத்திலேயே கருவானது ஆணா? பெண்ணா? என்பது தீர்மானமாகிவிடுகிறது. அதுமட்டுமன்றி அனைத்து விசயங்களும் தோலின் நிறம், அங்கங்களின் அமைப்பு, உயரமா? குள்ளமா? என்பன போன்ற அனைத்து செய்திகளும் டிஎன்ஏ ஏணிகள் மூலம் கருவுக்கு கடத்தப்பட்டு இதன் அடிப்படையிலேயே கருவின் வளர்ச்சி நடைபெறுகிறது.

இது மேற்கண்ட வசனத்திற்கெதிராக எழுப்பிய செங்கொடியின் கேள்வி. அதாவது ஆண், பெண் என்ற பால் நிர்ணயம் ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு சினைமுட்டையை அடைந்ததும் தீர்மானிக்கிறது. ஆனால் குர்ஆனோ கரு வளர்ச்சியடைந்த பின்தான் இலிங்க நிர்ணயம் நடைபெறுவதாக குறிப்பிடுகிறது என்கிறார். குர்ஆன் அப்படி குறிப்பிடவில்லை. இவர் எடுத்த மொழிபெயர்ப்பில்தான் அவ்வாறுள்ளது. 'அவனிலிருந்து' என்று மொழிபெயர்க்கப்பட வேண்டிய இடத்தில் 'அதிலிருந்து' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அங்கு மின்ஹு என்பது அவனிலிருந்து என்பதைத்தான் குறிக்கும். எனவே குர்ஆன் சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளது.

குரானின் கருவளர்ச்சி நிலைகளோடு அறிவியலை ஒப்பிட்டால் அதுவும் ஒப்பிடக்கூடிய அளவில் இல்லை. அதிலும் முதலில் தசைப்பிண்டம் என்றும் பின்னர் மாமிசம் என்றும் இரண்டு வகையாக குறிப்பிடுவதும் பொருத்தமாக இல்லை. அறிவியல் கருவளர்ச்சியை பின்வருமாறு வகைப்படுத்துகிறது. இரண்டாவது மாதத்தில் ஆண் பெண் இன உறுப்புகள், மூன்றாவது மாதம் ஜீரண உறுப்புகள் எலும்புகள், நான்காவது மாதம் தோல் சுமாரான வடிவம் கண்கள் விரல்கள், ஐந்தாம் மாதம் தலைமுடி நகம் பல்முளைகள் முதுகெலும்பு சீராதல், ஆறாவது மாதம் கண்களில் பார்வை நாவில் ருசி, ஏழாவது மாதம் மூளை சீரடைதல் நரம்புகள் என்று தொடர்ச்சியான வளர்ச்சியில் எட்டு ஒன்பதாவது மாதங்களில் எல்லா உறுப்புகளுமே சீரான இயக்கத்திற்கு வந்து இறுதியில் வெளியேறுகிறது

இதிலும் வழக்கம் போல இவரது திருவிளையாடலை காட்டியிருக்கிறார். குர்ஆன் குறிப்பிடும் கருவளர்ச்சி நிலை அறிவியலோடு ஒத்துவரவில்லை என்றால் அதற்குப்பதிலாக அறிவியல் என்ன கூறுகிறது என்று குறிப்பிடாமல் அதாவது  சினை முட்டை கருவுற்றதிலிருந்து என்ன நடக்கிறது என்று குறிப்பிடாமல் அதைத்தாண்டி இரண்டு மாத்தத்தின் பின்னர் உள்ள நிலையை குறிப்பிட்டுள்ளார்.  அதை குறிப்பிட்டால் மாட்டிக்கொள்வோம் என்று மழுப்பியிருக்கிறார்.

அடுத்து 32:9ம் வசனத்தை சுட்டிக்காட்டி இதில் அல்லாஹ் முதலில் செவியையும், பார்வைகளையும் ஏற்படுத்தினான் என்று ஒரு வரிசையை குறிப்பிட்டுள்ளான். இதை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் இது சரியாகத்தான் உள்ளது குர்ஆன் இறைவேதம்தான் என்று வாதிடுகின்றனர். ஆனால் அதன் பின்னர் இதயங்கள் என்று வருகிறது இதை தவிர்த்துவிட்டார்கள் மேலும் குர்ஆன் இதயங்கள் என்று கூறுகிறது என்ன இரண்டு இதயமா உள்ளன? என்று கேட்கிறார்.

பின்னர் அவனைச்சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்கு செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். (32:9)
இந்த இடத்தில் உள்ளங்கள் என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் ஜான் ட்ரஸ்டினர் இதயங்கள் என்று தமிழாக்கம் செய்துள்ளனர். அது தவறு! அதை வைத்துக்கொண்டு வாதாடுகிறார். உள்ளங்கள் என்பதே பொறுத்தமானதும் சரியானதுமாகும்.

அடுத்து குரான் 13:8 வசனத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கிறது என்று ஒரு வரி வருகிறது. அதாவது மனிதனுக்கு கர்ப்ப காலம் பத்து மாதங்கள் என்றால் ஏனைய விலங்குகளுக்கும் இதே காலஅளவு இருப்பதில்லை வெவ்வேறு கால அளவுகளில் அவை பிரசவிக்கின்றன. இதைதான் அந்த வரியில் முகம்மது குறிப்பிடுகிறார். ஆனால் இன்று அந்த வரிகளுக்கு புதிய பொருளை கற்பிக்கிறார்கள். எப்படி என்றால் மனித உடல் அன்னியப் பொருட்களை உடலுக்குள் அனுமதிப்பதில்லை. கண்களில் ஒரு தூசு விழுந்துவிட்டால் கண்கள் ஒரு உருத்துதலை ஏற்படுத்தி கண்ணீரை சுரந்து அதை வெளியேற்றுவதற்கு முயற்சிக்கிறது. மூச்சுக் குழாயில் ஒரு துரும்பு சென்றுவிட்டால் தும்மலின் மூலம் அதை வெளியேற்ற முயற்சிக்கிறது. ஆனால் ஒரு அன்னியப்பொருளான கருவை பத்து மாதங்களாய் உடலுக்குள் தங்க அனுமதித்து அதன் பின்பே வெளியேற்ற முயற்சிக்கிறது. இன்றைய அறிவியலான இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது என்கிறார்கள். இது முழு உண்மையல்ல. எப்படியென்றால் நமது உடல் எல்லா அன்னியப் பொருட்களையும் எதிர்ப்பதில்லை. உடலுக்கு தீங்கு விளைவிப்பதை மட்டும் தான் எதிர்க்கின்றன. நாம் உண்ணும் உணவு உடலுக்கு அன்னியப் பொருள் தான் ஆனால் அதிலுருந்து தான் தனக்கு தேவையான சக்தியை உடல் பெற்றுக்கொள்கிறது. காற்று உடலுக்கு அன்னியப் பொருள்தான் ஆனால் அதிலிருந்து தான் தனக்கு தேவையான ஆக்ஸிஜனை உடல் பெற்றுக்கொள்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டால் வெளியிலிருந்து அன்னியப்பொருட்களான மருந்துகள் உட்செலுத்தப்படுகின்றன, உடல் அவற்றை ஏற்றுக்கொள்கிறது. செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுகின்றன அவைகளையும் உடல் சில நிபந்தனைகளுக்குட்பட்டு ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வாமை என்றொரு நோய் உண்டு, உடலுக்கு தீங்கு செய்யாத பொருட்களைக் கூட தீங்கு செய்பவை என்று தவறாக கருதிக்கொண்டு உடல் எதிர்ப்பதற்குத்தான் ஒவ்வாமை என்று பெயர். ஆக உடல் தீங்கு செய்யும் அன்னியப் பொருட்களை மட்டுமே எதிர்க்கிறது. அந்த வகையில் கரு ஒரு அன்னியப் பொருளும் அல்ல. ஒரே மனித இனத்தின் எதிர்பாலின் உயிரணுவை தன்னுடைய அண்டத்துடன் இணைத்துக்கொள்வதை அன்னியப் பொருள் என்று எப்படி வகைப்படுத்த முடியும்?

இது அவரின் அடுத்த கேள்வி. அன்னிய பொருட்களை உடல் உறுப்புகள் வெளியேற்றுகிறது என்றால் உணவு, ஒட்சிசன், மருந்துகள் போன்றவை அன்னிய பொருட்கள் இல்லையா? அதை ஏன் வெளியேற்றவில்லை. ஒரே மனித இனத்தின் உயிரனுவை தன்னுடைய அண்டத்துடன் இணைத்துக்கொள்வதை எப்படி அன்னியப்பொருள் என்று கூற முடியும் என்கிறார். உணவு, சுவாசம் இன்னும் இவர் குறிப்பிடும் அவ்வன்னியப்பொருள்கள் உடலுக்குத்தேவையானவை. ஒரு ஆணின் உயிரணுவினால் அதற்கு என்ன பயன் இருக்கிறது? அது தேவையானது என்றால் பயன்படுத்தியிருக்க வேண்டுமே! ஏன் பாதுகாத்து ஒரு குறிப்பிட்ட நாட்களின் பின் கட்டாயமாக வெளியேற்றுகிறது? உணவின் போசனைக்கூறுகளை எடுத்து கழிவை வெளியேற்றுவது போன்றா கருவை வெளியேற்றுகிறது? தனக்கு கிடைக்கும் போசனைகளை அதற்கும் சேர்த்து ஷேர் செய்து கொள்கிறது! இது எப்படி சாத்தியம்? கருவை சுமந்து ஒரு பயனும் பெறாமல் அதுவும் குறிப்பிட்ட நாள் வரை தனது கருவரைக்குள் பாதுகாத்து வைத்திருந்து ஏன் வெளியேற்றுகிறது? இதற்கு இன்றைய அறிவியலும் பதில் சொல்லவில்லை! இதை அன்னியப்பொருள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது? உணவுப்பொருட்களுடன் இதை எவ்வகையிலும் கம்பேர் பண்ண முடியாது!

அடுத்து குரான் 39:6 வசனத்தில் சொல்லப்படும் மூன்று இருள்கள் என்பது எதை குறித்து முகம்மது சொன்னார் என்பது தெரியவில்லை (தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்) ஆனால் அந்த மூன்று இருள் என்பது தாயின் அடிவயிறு, கர்ப்பப்பையின் சுவர், குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் என்று அறிவியல் விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால் முகம்மது அந்த மூன்று இருள்கள் என்பதை இப்படி அறிவியல் பூர்வமாக கூறவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். எப்படி என்றால் இதை அறிவியல் விளக்கமறிந்து கூறியவர் இதே வசனத்தில் அவன் உங்களுக்காக கால்நடைகளிலிருந்து எட்டு ஜோடி ஜோடியாக படைத்தான் எனும் பொருளற்ற வசனத்தை சொல்லியிருக்க முடியாது. கால்நடைகளில் எட்டு ஜோடிகள் தான் இருக்கின்றனவா? ஆக ஒரே வசனத்தின் மேல் வரி அர்த்தமற்றதாகவும், கீழ் வரி அறிவியல் பூர்வமாகவும் ஒருவர் கூறியிருக்க முடியாதல்லவா?

39:6ம் வசனம் மூன்று இருள் எனக்கூறுவது எது என்று எனக்குப் புரியவில்லை! அதை முஸ்லிம்கள் தாயின் அடிவயிறு, கர்ப்பப்பையின் சுவர், குழந்தையை சுற்றியிருக்கும் சவ்வுப்படலம் என்று கூறுகின்றனர் என்று முடித்திருந்தால் பரவாயில்லை. ஆனால் இதயும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக முகம்மது நபி அதை அறிவியல் பூர்வமாக கூறவில்லை என்கிறார். உண்மைதான். முகம்மது நபி அப்படி கூறவுமில்லை; அவரால் அப்படி கூறவும் முடியாது! ஏன்? குர்ஆனை அவர் இயற்றவில்லை. இறைவனிடமிருந்துதான் வந்தது. உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு ஜோடியைப்படைத்தான் என்பது பொருளற்ற வசனம் என்கிறார். வசனம் விளங்காவிடின் அது பொருளற்றதாக ஆகி விடுமா?
அந்த வசனத்தை முழுமையாகப்படித்தால் அதன் அர்த்தம் புரிந்துவிடும். மனிதனைப்படைக்க ஒரு ஜோடிதான் இறைவன் படைத்தான். அதுபோல்தான் கால் நடைகளும் என்று கூறுகிறான். பின்னர் ஏன் எட்டு என்று குறிப்பிட வேண்டும்? ஏனென்றால் கால் நடைகள் பல இருந்தாலும் நாம் உண்ணவும் பலியிடவும் பயன்படுத்துவது எட்டுவகைதான். இதைத்தான் அங்கு குறிப்பிடப்படுகிறது. இதை சிந்திக்கும் எவரும் அறிந்து கொள்வர் செங்கொடி போன்றவர்களுக்காக அடைப்பினுள் (பலியிடுவதற்காக) என்று குறிப்பிட்டிருக்கும்.

வளரும் இன்ஷா அல்லாஹ் 

0 comments:

Post a Comment