Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, May 4

மிஃராஜும் மிரளும் செங்கொடியும்

செங்கொடியின்கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-30

விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

மிஃராஜ் எனும் விண்வெளிப்பயணம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடைபெற்றதாக குர்ஆனும் நபிமொழிகளும் கூறுகின்றன. இதை ஒவ்வொரு முஸ்லிமும் நம்பியாக வேண்டும். இதுவும் நம்பிக்கை தொடர்பானதுதான். அதனால்தான் இதையும் ஒரு கருப்பொருளாக செங்கொடி எடுத்துக்காட்டுகிறார். இந்த தொடரில் வழக்கம்போல கேள்வியை விட அறிமுகமே விரிவாக உள்ளது. அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு இவரது கேள்வியை எடுத்துக்கொள்ளலாம்.

இதில் அவர் கேட்கும்  கேள்வி என்ன? முஹம்மது நபி ஓரிரவிற்குள் ஏழு வானங்களையும் கடந்து சென்றதாக குறிப்பிடுகிறோம். ஒரு பிரபஞ்சத்தின் அளவே 2500 கோடி ஒளியாண்டுகள். இது நொடிக்கு நொடி விரிந்துகொண்டே செல்கிறது. உலகில் ஒளியின் வேகத்தை விட அதிவேகமானது இல்லை! அப்படியிருக்கும் போது ஓரிரவினுள் ஒரு பிரபஞ்சத்தையே கடக்கமுடியாது எனும்போது எப்படி ஏழு வானங்களையும் கடந்து சென்றார்? என்று கேட்கிறார்.

ஒரு பிரபஞ்சத்தின் அளவு 2500 கோடி ஒளியாண்டுகள் என்பது அதன் விரிவை அதாவது அதன் நீளவாக்கில் அதன் விரிவைக்குறிப்பது! ஏழு பிரபஞ்சங்களும் சீடி போன்று தட்டையாக ஒன்றன்மேல் ஒன்று அடுக்கியது போன்று உள்ளது. அதற்கிடையிலான குறுக்கு நீளமும் 2500 கோடி ஒளியாண்டுகள்தானா? சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் சம்பந்தப்படுத்தி சப்பைக்கட்டு கட்டுவதற்குப்பெயர்தான் இவரது மறுப்பு (?). ஒருவேளை 2500 கோடி ஒளியாண்டுகள் என்றே வைத்துக்கொள்வோம். இது இந்த காலத்து அளவு! 1400 ஆண்டுகளுக்கு முன்பும் இந்த அளவுதானா இருக்கும்? நிச்சயமாக இதை விட பல கோடி மடங்கு குறைவாகத்தான் இருக்கும். அடுத்து, ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணித்தது போல உள்ளதே என்கிறார். ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகம் உலகில் இல்லை என்பது உண்மை! ஆனால், இதைவிட வேகமாக பயணிக்க வைக்க படைத்தவனுக்கு முடியும்! அவன் சர்வ சக்தியுள்ளவன். உதாரணமாக, விண்டோஸ் எனும் கம்பியூட்டர் ஒப்ரேட்டின்க் சிஸ்டத்தை உருவாக்கியவர் பில் கேட்ஸ். இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் அதன் அட்மினிஸ்ட்ரேட்டர் சிஸ்டத்தை யாராலும் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு பாதுகாப்பானது! எந்தவொரு ஹேக்கரினாலும் அதை உடைக்க, ஹேக் செய்ய முடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அது எந்தவடிவில் வருமோ அந்த வடிவில்தான் பயன்படுத்தமுடியும். நாமாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தவோ அதன் அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டினை மாற்றியமைக்கவோ, அதை கண்டுபிடிக்கவோ முடியாது. ஆனால் இதை உருவாக்கிய பில்கேட்சிற்கு முடியும்! அவர் நினைத்த நபருக்கு சொல்லிக்கொடுக்கவும் முடியும். அப்படி மாற்றும்போதோ வேறொரு நபருக்கு சொல்லிக்கொடுக்கும்போதோ இது சாத்தியமில்லை எனலாமா? முடியாது! அவ்வாறுதான் படைத்த இறைவனுக்கும். அவன்தான் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தினையும் உருவாக்கினான். இதை ஒரு சிஸ்டமேடிக்காக இயங்க வைக்கிறான். இதனால் அந்த சிஸ்டத்திற்கு கடவுளும் விதிவிலக்கல்ல என கூற முடியாது! அப்படியிருக்கும்போது இந்த கேள்வி எந்தவகையிலும் அறிவுபூர்வமானது அல்ல! இன்னுமொன்றைப்புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, இவ்வுலகில் ஒளியை மிகைத்த வேகம் இல்லை என்று கூறினாலும் பெருவெடிப்பு நிகழ்ந்த போது வெடித்துச்சிதறிய துகள்கள் சென்ற வேகம் ஒளியைவிட மிகைத்தது என்று கூறுகின்றனர்! அப்படியிருக்கும்போது இவை அசாத்தியம் என்று கூறமுடியாது! படைத்தவனுக்கு இவை சர்வசாதாரணம். இவையை மறுக்கவேண்டுமெனில் கடவுள் இல்லை என்றுதான் முதலில் வாதிட வேண்டும்.
இவரது தொடரில் கேட்ட ஒரே ஒரு கேள்வி இதுதான்.

ஆக நம்புவதற்கு கூட துளியும் வாய்ப்பளிக்காத இதுபோன்ற கட்டுக் கதைகளைத்தான் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரே வேதம் என முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கடவுள் இருக்கிறான் என்பவர்களுக்கு இது நம்புவதில் துளியும் சங்கடம் இல்லை! குர்ஆன் இறைவேதம் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன! அப்படியிருக்கும்போது இதுவும் சரிதான்! சாத்தியம்தான்! இதை நம்ப முடியாது என்றால் கடவுள் இல்லை என்று முதலில் நம்ப வேண்டும். இது தவறு! பகுத்தறிவுக்கு துளியும் சம்பந்தமில்லாத கருத்து என்பது எமது நிலை.
மனிதர்களால் முடியாததெல்லாம் கடவுளால் முடியும் என்றெல்லாம் இதை எளிதாக குறுக்கிவிட முடியாது. அறிவியலை திணிக்க எங்கெல்லாம் வாய்ப்பிரிக்கிறதோ அங்கெல்லாம் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய அறிவியலை கூறிவிட்டது என ஜல்லியடிப்பதும், வெளிப்படையாகபல்லிளிக்கும் இடங்களில் அல்லாவின் அருள் என பதுங்கும் அப்பட்டமான மோசடி. என்ன மோசடியாக இருந்தாலும் எங்கள் மதம் என்பவர்கள் விலகிச் செல்லுங்கள். சிந்திக்கும் திறனுள்ளவர்கள் சிந்திக்கலாம்.

சென்கொடிக்கு இதை மறுக்க மிஞ்சி மிஞ்சிப்போனால் இவ்வாறுதான் கூறமுடியும். மாறாக கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாது! அந்த வினையால் உதிர்த்த முத்துக்கள்தான் இது! இவருடைய கையாளாகாத்தனத்தை எண்ணி பரிதாபப்படத்தான் முடியும்...! எனவே இதை கண்டுக்ள்ளத் தேவையில்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ் 

 

5 comments:

Anonymous said...

குர்ஆனும் குத்துப்பாட்டும்…!
/////நோய் வந்தால் அதற்கான மருத்துவத்தை செய்யுங்கள் என்று கூறுவதற்கா குர்ஆன் வந்தது? இதை கடவுள் கூறுவதற்கு என்ன தேவை இருக்கிறது? இதில் நோய் பற்றிய என்ன முன்னறிவிப்பு உள்ளது? திருக்குறளில் மடமைகளும் பொய்களும் நடமுறைக்கு ஒத்துவராத கருத்துக்களும் உள்ளன. இதை எப்படி ஏற்றுக்கொள்வது?திருக்குறள் இலக்கிய நயமிக்கது! ஆனால் குர்ஆனின் இலக்கிய நயத்துடன் ஒப்பிட்டால் திருக்குறள் அட்ரஸ் இல்லாமல் போய்விடும்.//////
சரியாகச் சொன்னீர்கள் இஹ்சாஹ். கடவுளுக்கு இதைவிடத் தேவையான பல பணிகள் உள்ளன என்பது இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?
கடவுள், தனது தூதரின் கனவுகளிலும், நினைவுகளிலும் ஆறுவயது பெண்குழந்தையின் உறுப்பைக் கண்பித்து கிளுகிளுப்பூட்ட வேண்டும். அவர் அளவற்ற பெண்களுடன் சல்லாபிக்க ஏதுவாக ஆண்மையை அதிகப்படுத்த லேகியம் தயார் செய்யவேண்டும், மருமகளை(வளர்ப்புமகனின் மனைவி) கூட்டிக் கொடுக்க வேண்டும், மனைவியரின் சதித்திட்டங்களைக்(?) கோள்மூட்டி விடவேண்டும், எந்தத் தொழிலும் செய்யாமல் பொருளீட்ட புனிதப் போர்களை உருவாக்க வேண்டும், போரில் பெண்களையும், குழந்தைகளையும் சூறையாட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அற்ப காரணங்களைக் கூறி சதித்திட்டங்களை உருவாக்க வேண்டும், இதற்கெல்லாம் பக்கபலமாக வானவர் படையை எந்நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், ஆள்சேர்க்க சொர்கலோக சல்லபாக்கதைகளைக் கூறவேண்டும், எவனாவது மாற்றுக் கருத்து கொண்டால் பூச்சாண்டி கதைகளைக் கூறி திகிலூட்ட வேண்டும். இப்படி இன்னும் ஏராளமான தேவைகள் இருக்கையில், நோயாம் …! அதற்கு மருத்துவமாம்…! என்ன இது 'சின்னப்புள்ளத்தனமா' இருக்கு…!
மேற்கூறிய, புரட்சிகரமான, உண்மையான, நடைமுறைக்குகந்த, மனிதநேயமிக்க கருத்துக்களை 1400 ஆண்டுகளுக்கும் மேலக உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அரபுநாட்டு குர்ஆனை, 'அட்ரஸ்' இல்லாத திருக்குறளுடன் எப்படி ஒப்பிடலாம்? செங்கொடி., குர்ஆனை, அரபுமொழி குத்துப்பாட்டுகளுடன் அல்லவா ஒப்பிட்டிருக்க வேண்டும்?
///குர் ஆன் அப்படிப்பட்டதல்ல! கவிஞர்களுக்கு விளங்கியது போல் பாமர மக்களுக்கும் விளங்கியது! (ஆனால் திருக்குறல் அப்படிப்பட்டதல்ல! அது தமிழ் மொழியிலிருந்தாலும் அதை அதே தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்தே பாமரர்களுக்கு கூற வேண்டும். இல்லையெனில் விளங்காது)///
திருக்குறள் பொழிப்புரையில் யாருக்கும் குழப்பமோ சர்ச்சையோ இல்லை. ஆனால் குர்ஆனின் நிலை தலைகீழானது. நண்பர் இஹ்சாஸ் அவர்களே நீங்கள், உங்களது மறுப்பில், கூற முயற்சிப்பது, குர்ஆன் மிகத்தெளிவானது. பாமரர்களுக்கும் எளிதில் விளங்கக்கூடியது. என்பதுதானே?. சுமார் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக, குர்ஆனுக்கு தப்ஸீர் என்ற விளக்கவுரைகள் எழுதிக் குவித்தும் குர்ஆனின் குழப்பம் தீரவில்லை. இந்த வினாடி வரை புதிதுபுதிதாக விளக்கம் கூறப்பட்டுக் கொண்டிருப்பது நாங்கள் அறியததல்லவே?. ஷியாக்களும், அஹ்மதியாக்களும், submitterகளும் உருவாக்கியதும் அவர்களைப் பெருகச் செய்து கொண்டிருப்பதும் இதே குர்ஆன்தான் என்பதை மறந்தது விட்டீர்களா?
குர்ஆன் அட்ரஸை கண்டுபிடிக்க உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களைக் காண்போம்
அலிஃப் லாம் மீம் (கு 2:1, 8:1), அலிஃப் லாம் மீம் ஸாத் (கு 7:1), அலிஃப் லாம் மீம் ரா (கு 10:1, 11:1) …
இவ்வசனங்களின் பொருள், கவிஞர்கள், அறிஞர்கள், இலக்கியவாதிளாகிய மதவாதிகளுக்கு விளங்கிவிட்டதா? இல்லையா?
அலிஃப் லாம் மீம் றா இவை வேதத்தினுடைய-தெளிவான குர்ஆனுடைய வசனங்களாகும் (கு 15:1) என்று குர்ஆனே கூறிய பிறகும் இவைகளின் பொருளை எங்களைப் போன்ற பாமரர்களிடம், மறைப்பது இஹ்சாஸ் போன்ற அறிஞர்களுக்கு அழகல்ல…! மேற்கூறிய குர்ஆன் வசனங்களின் பொருளை நீங்கள் தெளிவுபடுத்தத் தவறுகின்ற பட்சத்தில், குர்ஆனின் சவாலுக்கு நான் தரும் பதில்,
"லாலாக்கு டோல் டப்பிமா இவை தெளிவான பாடலுடைய சந்தங்களாகும்"
"ஏய் தில்லா டாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு இவை தெளிவான வாழ்வியலின் வசனங்களாகும்"
“அஜக்குயின்ன அஜக்குதான் குமுக்குயின்னா குமுக்குதான்”
பொருளற்ற குறியீடுகள் வேதத்தின் தெளிவான வசனங்கள் என்று சுயபாரட்டல்கள் செய்து கொள்ளும் போது, நான் குறிப்பிட்ட இவைகளுக்கு என்ன குறை? இந்த பதிலை யாரை நடுவராகக் கொண்டுதள்ள முடியும்? குர்ஆனின் உரிமையாளர் என்று கூறப்படும் அல்லாஹ்வே அதனைக் கவிதையில்லை, அது முஹம்மதிற்குத் தேவையுமில்லையென்று கூறிய பிறகும், அதில் இலக்கிய ஆராய்ச்சியின் அவசியமென்ன? குர்ஆனின் சவால் இன்றுவரை மறுக்கப்படவில்லையெனில்; சவால், ஒரு அத்தியாயத்திலிருந்து இரண்டு வேதங்கள் வரை வளர்ச்சியடைந்தது ஏன்? மேற்கண்ட பின்வாங்கலின் பொருள் என்ன?

தஜ்ஜால்

A.Mohamed Ihsas said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் தஜ்ஜால் அவர்களே!

உங்களது ஆரம்பமே கிறுக்குத்தனமாக உள்ளது. இஸ்லாம் தவறு என்று உங்கள் உள்ளத்தில் உதித்த உணர்வு மூட்டைகளின் குப்பைகளை குப்பைத்தொட்டியாக நினைத்து இங்கு கொட்டிவிட்டு சென்றுள்ளீர்கள். அதில் எந்தவித அறிவுபூர்வமான வாதமும் இருப்பதாக தெரியவில்லை! முழுக்க முழுக்க பிதற்றலாகவே உள்ளது. நாம் உங்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். உங்களுக்கு இஸ்லாத்தில் தவறாக படுகின்ற விடயங்களை ஒழுங்கான முறையில் வாதமாக எடுத்து வைத்தால், அதில் ஏதும் சரக்கு இருந்தால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்! அதற்கு மாறாக இப்படி பசப்புவது கோமாளித்தனம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் எடுத்து வைத்துள்ள எந்த வாதங்களும், எனது கருத்துக்களும் இந்த இடுகையுடன் தொடர்புபட்டதல்ல! எங்கேயோ எழுதியதை இங்கு வந்து கொட்டியுள்ளீர்கள்! உங்கள் அறிவை (?) எண்ணி மிகவும் வியப்பாக உள்ளது.
உங்கள் வாதம்:
///குர் ஆன் அப்படிப்பட்டதல்ல! கவிஞர்களுக்கு விளங்கியது போல் பாமர மக்களுக்கும் விளங்கியது! (ஆனால் திருக்குறல் அப்படிப்பட்டதல்ல! அது தமிழ் மொழியிலிருந்தாலும் அதை அதே தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்தே பாமரர்களுக்கு கூற வேண்டும். இல்லையெனில் விளங்காது)///
திருக்குறள் பொழிப்புரையில் யாருக்கும் குழப்பமோ சர்ச்சையோ இல்லை. ஆனால் குர்ஆனின் நிலை தலைகீழானது. நண்பர் இஹ்சாஸ் அவர்களே நீங்கள், உங்களது மறுப்பில், கூற முயற்சிப்பது, குர்ஆன் மிகத்தெளிவானது. பாமரர்களுக்கும் எளிதில் விளங்கக்கூடியது. என்பதுதானே?. சுமார் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக, குர்ஆனுக்கு தப்ஸீர் என்ற விளக்கவுரைகள் எழுதிக் குவித்தும் குர்ஆனின் குழப்பம் தீரவில்லை. இந்த வினாடி வரை புதிதுபுதிதாக விளக்கம் கூறப்பட்டுக் கொண்டிருப்பது நாங்கள் அறியததல்லவே?. ஷியாக்களும், அஹ்மதியாக்களும், submitterகளும் உருவாக்கியதும் அவர்களைப் பெருகச் செய்து கொண்டிருப்பதும் இதே குர்ஆன்தான் என்பதை மறந்தது விட்டீர்களா?

நமது பதில்:
என்னுடைய கருத்தொன்றை எடுத்துக்காட்டி அதற்கு பதில் என்ற பேரில் ஒன்றை கட்டவிழ்த்து சென்றுள்ளீர்ர்கள். நான் எடுத்து வைத்த வாதத்திற்கு பதில் சொல்லாமல் புதிதாக ஒன்றை கேட்கின்றீர்கள். எனவே குர்ஆன் அனைவருக்கும் புரியும்! திருக்குறள் தமிழிலில் எழுதப்பட்டாலும் தமிழர்களுக்கு புரியாது என்ற எனது வாதம் சரியாகிவிட்டது. நீங்கள் கேட்பது என்ன? நீங்கள் எடுத்து வைக்கும் வாதத்தில் குர்ஆன் விளங்கவில்லை என்று வராது. மாறாக குர்ஆனுக்கு விளக்கமளித்தவர்களின் விளக்கத்தில்தான் குழப்பம் உள்ளது என்று வரும். இதைக்கூடவா உங்களால் புரிய முடியவில்லை? தப்ஸீர் நூல்களில் குர்ஆனுக்கு விளக்கம் என்ற பெயரில் சில கட்டுக்கதைகளையும், குப்பைகளையும் எழுதி உள்ளனர் என்று நாமும் கூறிவருகிறோம். இதனால் குர்ஆன் விளங்கவில்லை என்ற உங்கள் வாதத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லையே! ஷீயாக்கள், அஹ்மதியாக்கள் பொன்ற வழிகேடர்கள் பெருகி வருவது குர்ஆன் மூலம் என்றதிலிருந்து உங்களின் அறிவின் ஆழம் எத்தகையது என்று புரிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் குர்ஆனையே விமர்சிப்பவர்கள். முஸ்லிம்கள் எனும் போர்வையில் இருப்பதால் இவர்கள் முஸ்லிம்களாகிவிட முடியாது! இவர்கள் முஸ்லிம்களே கிடையாது! இவர்கள் குர்ஆனிலிருந்து வைக்கும் ஆதாரங்கள் எல்லாமே இவர்கலுக்கெதிரானவை என்பதை அனைவருமே புரிந்து வைத்துள்ளனர். இவர்களது வாதங்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் எடுபடுவதில்லை!. மாறாக இவர்கள் மக்களில் சில ஏமாளிகலை மூலைச்சலவை செய்தே தங்கள் பக்கம் ஆள் பிடிக்கின்றனர்.

உங்கள் வாதம்:
அலிஃப் லாம் மீம் (கு 2:1, 8:1), அலிஃப் லாம் மீம் ஸாத் (கு 7:1), அலிஃப் லாம் மீம் ரா (கு 10:1, 11:1) …
இவ்வசனங்களின் பொருள், கவிஞர்கள், அறிஞர்கள், இலக்கியவாதிளாகிய மதவாதிகளுக்கு விளங்கிவிட்டதா? இல்லையா?
அலிஃப் லாம் மீம் றா இவை வேதத்தினுடைய-தெளிவான குர்ஆனுடைய வசனங்களாகும் (கு 15:1) என்று குர்ஆனே கூறிய பிறகும் இவைகளின் பொருளை எங்களைப் போன்ற பாமரர்களிடம், மறைப்பது இஹ்சாஸ் போன்ற அறிஞர்களுக்கு அழகல்ல…!

நமது பதில்:
நீங்கள் எனது கட்டுரையை முழுமையாக வாசித்திருந்தால் இதை கேட்டிருக்க மாட்டீர்கள்! இதற்கு நாம் பொருளிருக்கிரது என்று கூறவே இல்லை! மாறாக இவை இலக்கிய நயத்தை உயர்வாக்க பயன்படுத்தப்படும் சொற்கள். இதுபோன்ற சொற்கள் அரபிகளிடம் வழக்கத்திலிருந்ததால்தான் இதுபற்றி வாயே திறக்கமல் பல கவிஞர்களும் ஆடிப்போயினர்! திருக்கூறளில் உயிரளபடை சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவைக்கு மட்டும் என்ன அர்த்தம் உள்ளதா?

A.Mohamed Ihsas said...

உங்கள் உளறல்:
"லாலாக்கு டோல் டப்பிமா இவை தெளிவான பாடலுடைய சந்தங்களாகும்"
"ஏய் தில்லா டாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு இவை தெளிவான வாழ்வியலின் வசனங்களாகும்"
“அஜக்குயின்ன அஜக்குதான் குமுக்குயின்னா குமுக்குதான்”
பொருளற்ற குறியீடுகள் வேதத்தின் தெளிவான வசனங்கள் என்று சுயபாரட்டல்கள் செய்து கொள்ளும் போது, நான் குறிப்பிட்ட இவைகளுக்கு என்ன குறை?

நமது பதில்:
இவ்வளவுதான் உங்கள் இலக்கிய (?) தரமா? எனது பதிலோடு ஒப்பிட்டு பாருங்கள் இதன் அபத்தம் உங்களுக்கே புரியும்!

உங்களது பிதற்றல்:
இந்த பதிலை யாரை நடுவராகக் கொண்டுதள்ள முடியும்? குர்ஆனின் உரிமையாளர் என்று கூறப்படும் அல்லாஹ்வே அதனைக் கவிதையில்லை, அது முஹம்மதிற்குத் தேவையுமில்லையென்று கூறிய பிறகும், அதில் இலக்கிய ஆராய்ச்சியின் அவசியமென்ன?

நமது பதில்:

உங்களது வாதத்தின் அழகுக்கு நடுவரும் கேட்கிறதா? பதில் சொல்லிவிட்டோம். மூளையுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். அல்லாஹ் இது கவிதையில்லை என்றதாக குறிப்பிட்டுள்ளீர்கள் இதற்கு ஆதாரத்தைக்காட்டுங்கள்! (முஹம்மதிற்கு கவிதை தேவையில்லை என்பதற்கு ஆதாரம் உள்ளது! அதைக்காட்டிவிட வேண்டாம்)

Dr.Anburaj said...

சகோதரர் இத்காஸ் அவர்களே தங்களின் கட்டுரைகள் வெறும் வெத்து வேட்டுகள்.கருத்துக்கள் ஏதும்யில்லாமல் வெறம் வார்த்தை ஜால்களைக்காட்டி தங்களின் அரபித்துவ பற்றை விசுவாசத்தைக்காட்டி வருகின்றீர்கள். குரான் வலக்கரம் பற்றிய பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது. தபாரக் ஜஸ்உவின் தமிழ் தீப்ஸீர் அல்ம் ஆரிஜ் பக்கம் 110- யுத்தத்தில் கைப்பற்றிய பெண்களில் முகமமதுக்கு 5% அதன்படி அவருக்கு மனைவியர்கள் 9-13 ...... சரியாக எண்ணிக்கை தெரியவில்லை - போக பல குமுஸ் வைப்பாட்டிகள். இப்படி வாழ்வது ஒரு ஆன்மீகவாதிக்கு அழகில்லை. இப்படிப்பட்டவர்களை ஆன்மிகவாதிகளாக உலகிற்கு ஒளி என்றெல்லாம் சிலாகிப்பது பையித்தியக்காரத்தனம்.ஸ்ரீகௌதம புத்தனைப்பாருங்கள் என்ன அன்பு அன்பு ஸ்ரீஆதிசங்கரரைப்பாருங்கள் என்ன அன்பு ..... இயேசு சிறலுவையில் அறைந்தவனை பிதாவே இவர்களை மன்னியும்இதாங்கள் செய்வது என்னவென்று அறிகிலார் என்று பிராத்தனை செய்கிறார் இதைவிட்டு விட்டு மருமகளைக் கட்டியவன், 6 வயது சிறுமியை திருமணம் செய்தவன், காலையில் கணவனைக் கொன்று மாலையில் மனைவியை மணம் முடித்தவன்-சோபியா - மரியா என்ற அடிமைப்பெண்ணை உமர மகள்-மனைவி விட்டில் ” புணர்ந்து ” மனைவியிடம் கடுமையாக வசசை வாங்கிக் கொண்டவர்...................... மிகவும் அசி்கமாக உள்ளது. இந்துவாக மாறிவிடுங்கள். இந்துமதத்தை சீர்திருத்த வேண்டும். அரேபியாவை மறந்து இந்தியாவின் ஆனமீக மறவை தனித்தே தூய்மைப்படுத்துவோம்.வாருங்கள்.

Dr.Anburaj said...

செங்கொடி இறையில்லா இஸ“லாம் www.answeringislam www.alisena போன்ற வலை தளங்களை வருகின்றேன். அரேபிய மதம் மிகவும் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது. 25 ஆகஸ்ட 2013 ல் எழுதப்பட்ட எனது கடிதத்திற்கு பதில் உரைக்கவிரும்பவில்லையே ஏன ஐயா.
குரான் ஆட்சயில் உள்ள அனைத்து இடங்களும் இரத்தக்ளறியாக வே உள்ளது.அன்பும் அமைதியும் இல்லவே இல்லை. இந்த புத்தகத்தை இப்படி சீராட்ட வேண்டுமா ? சரக்கு ஏதும் யில்லை குரானில்.மாறாக விஷம் நியை உள்ளது

Post a Comment