Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, January 18

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர்-09

பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா? எனும் தொடரிற்கான மறுப்பாக இத்தொடர் வெளியாகிறது. செங்கொடியின் இத்தொடரை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

பூமியின் வடிவம் தட்டை என்றும் இன்னும் பலவாறான கருத்துகள் நிலவி வந்த காலப்பகுதியில் குர்ஆனில் பூமியின் வடிவம் உருண்டையாகத்தான் இருக்க முடியும் என்பதற்கான மறைமுகமான சான்றுகள் காணக்கிடைக்கிறது. இதை மறுக்கப்புகுந்த செங்கொடி எடுத்துவைக்கும் வாதங்களை பார்ப்போம்.

முதலாவதாக குர்ஆனில் இரவுபகல் என்பவற்றின் தோற்றம் குறித்துவரும் வசனங்களையும் அதற்கு இஸ்லாமியர்கள் அளிக்கும் விளக்கத்தையும் ஆய்வுக்கெடுத்துக்கொண்டவர் அதை தவறு என்று மறுக்கவில்லை. மாறாக இதை 1400 வருடங்களுக்கு முன் என்ன 2800 வருடங்களுக்கு முன் இருந்தவர்களாலும் சொல்ல முடியும் என்கிறார். ஆக, இதற்களிக்கும் விளக்கத்தில் எந்த மறுப்பும் அன்னாருக்கில்லை என்றாகிவிட்டது.(இரவு பகலின் தோற்றம் பற்றி விரிவாக விளக்கத் தேவையில்லை. பூமி உருண்டை என்பதற்கு முதன்மையான ஆதாரத்தை மறுப்பதை மட்டும் விரிவாகப்பார்ப்போம்.)

அடுத்து,

வசனம் 79:30 இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான். என்றொரு வசனம், இதில் விரித்தான் என்னும் சொல் இருக்கும் இடத்தில் அரபியில் தஹாஹா என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தஹாஹா எனும் சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்ற பொருளும் உண்டு. பூமியை குறிப்பதற்கு இந்தச்சொல்லை பயன்படுத்தியிருப்பதன் மூலம் பூமி உருண்டை வடிவமானது என்று குரான் தெளிவுபடுத்திவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

இந்த விளக்கத்தை டொக்டர்.ஜாகிர் நாயக் என்பவர்தான் கூறியதாக அறிகிறோம். இதில் எமக்கும் உடன்பாடில்லை. இது தவறு என்பதே எமது நிலை. ஆதலால் இதுபற்றி எந்த விளக்கமும் அளிக்கத்தேவையில்லை.

மேலும் இது குறித்து சகோதரர் பி.ஜே அவர்கள் தனது இணையதளத்தில் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதில்,
அது போல் அறிவுப்பூர்வமாக இஸ்லாத்தை விளக்குகிறேன் என்ற பெயரில் பல சந்தர்ப்பங்களில் தவறாகக் கூறி இருக்கிறார். உதாரணமாக والأرض بعد ذلك دحاها79:30 வசனத்தில் பூமியை இதன் பின் விரித்தான் என்று கூறப்படுகிறது. இந்த வசனத்தில் தஹாஹா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி இவர் குறிப்பிடும் போது தஹா என்றால் முட்டை என்று பொருள். பூமி முட்டை வடிவில் இருப்பதை அன்றே குர்ஆன் கூறி விட்டது என்று கூறுகிறார்.

அரபு மொழி அறியாதவர்கள் ஆஹா ஓஹோ என்று இதைப் புகழ்வார்கள். இவர் கூறுகிறபடி தஹாஹாவுக்குப் பொருள் செய்தால் அதன் பின் பூமியை அவன் முட்டை என்று வரும். குர்ஆனைக் கேலிக் கூத்தாகுகிறார் என்று தான் அரபு மொழி அறிந்தவர்கள் கூறுவார்கள். தஹா என்பது வினைச் சொல்லாகும். அதன் பொருள் விரித்தான் என்பதாகும். வினைச் சொல்லுக்கு முட்டை என்று பொருள் கொள்வது அறியாமையாகும். இது போல் இவர் தப்பும் தவறுமாக எழுதியதைக் குறித்து சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த ஒரு பெரியவர் டாக்டர் பக்ருத்தீன் அவர்கள் என்னிடம் கேட்ட போது ஜாகிர் நாயக் தவறுகளைப் பட்டியல் போட்டு அவரிடமே விளக்கம் கேளுங்கள் என்று கூறினேன். ஆங்கிலப்புலமை உடைய அவர் ஆங்கிலத்த்தில் ஜாகிர் நாயக்கின் தவறுகளைச் சுட்டிக்காட்டி நேரடியாகக் கடிதம் எழுதினார். அதன் நகலையும் எனக்கு அனுப்பினார். ஆனால் ஜாகிர் நாயக்கிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் நினைவூட்டல் கடிதம் எழுதியும் பதில் இல்லை என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த விடயம்தான் நாம் கவனிக்க வேண்டிய விடயம். அது என்ன? துல்கர்னைன் எனும் முற்காலத்தில் வாழ்ந்த மன்னனின் பயணக்குறிப்பு! அதில் பூமி உருண்டைதான் என்பதை சிந்திப்பவர்கள் தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள இயலும். இதைப்பற்றி இவர் கூறுவதைப் பார்ப்போம்.
பூமி உருண்டை என்பதற்கு குரானில் இன்னொரு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். குரானில் 18 ஆவது அத்தியாயம் வசனங்கள் 84 லிருந்து 98 வரை துல்கர்னைன் என்ற ஒரு மன்னனின் பயணத்தைப்பற்றி விவரிக்கிறது. அதாவது  அந்த மன்னன் ஒரு வழியில் பயணிக்கிறான், வழியில் ஒரு சமுதாய மக்களை காண்கிறான் அங்கு சூரியன் சேறு நிறைந்த நீரில் மூழ்குகிறது, தொடர்ந்து செல்கிறார் மீண்டும் சூரியன் உதிப்பதை காண்கிறார். இது தான் அந்த பதினைந்து வசனங்களின் சாரம். பூமியில் நேர்கோட்டில் பயணம் செய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கிறாரென்றால் பூமி உருண்டையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனவே இந்த வசனங்கள் பூமி உருண்டை என்பதை உணர்த்தி நிற்கிறது என்கிறார்கள். பூமி உருண்டையாக இருந்தாலும் நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது என்பது ஒரு புறமிருந்தாலும், அந்த மன்னர் நேர் கோட்டில் தொடர்ந்து சென்றதால் பூமி உருண்டையாயிருக்கும் பட்சத்தில் அவ்வாறு காணமுடிந்தது என்று சாதிக்கிறார்கள். ஆனால் குரானில் அவர் ஒரே திசையில் சென்றார் என கூறவில்லை என்பதே உண்மை. 18:85 ம் வசனம் அவர் ஒரு வழியில் சென்றார் என்றும் 18:89 ம் வசனம் பின்னர் ஒரு வழியில் சென்றார் எனவும் இருக்கிறது.
இவர் இதுவரை காலமும் எடுத்துவைத்த வாதங்களில் இந்த வாதம் ஓரளவு பரவாயில்லை. குர்ஆனில் 18:85 இல்ஒரு வழியில் சென்றார்” என்றும் 18:89 ம் வசனம்பின்னர் ஒரு வழியில் சென்றார்” எனவும் கூறுகிறது. இதன் மூலம் துல்கர்னைன் தொடர்ந்து ஒரு வழியில் செல்லவில்லை என்று வாதிடுகிறார். குர்ஆனில் இவ்வாறிருப்பது உண்மைதான். ஆனால் இவர் புரிந்துகொண்ட விதம் தவறானது!. அதில் செல்லும் வழி என்பது பயணம் செய்த வீதியை குறிக்கவில்லை. மாறாக அவ்வீதியின் ஊடகத்தைக்குறிக்கிறது. இதை முழுமையாக வாசித்தால் இதை அறிந்துகொள்ள இயலும். எப்படி? சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக்கண்டார்.” என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம் அவர் இது வரை பயணம் செய்த வழி தரைவழிப்பயணம் எனபதையும் மேற்குத்திசை நோக்கி பயணம் செய்தார் என்பதையும் அறியலாம். அந்த இடத்தில் வாழ்ந்த மக்களை சந்தித்துவிட்டு பயணத்தை தொடர்கயில் பின்னர் ஒருவழியில் சென்றார். முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தபோது......” என்று வருகிறது. இதிலிருந்து பின்னர் ஒருவழியில் சென்றார் என்பதன் அர்த்தம் கடல் மார்க்கமாக அல்லது நீர்மார்க்கமாக பயணம் செய்ததை குறிப்பிடுகிறது என்பதை அறியலாம். இவ்வாறு பொருள்       கொள்வதற்குத்தான் அதன் அரபு சொறகளும் வழிவகுக்கிறது. இதன் மூலம் பூமி உருண்டை என்பதை சிந்திப்பவர்கள் அறிந்துகொள்ள முடியுமா முடியாதா?
அடுத்து,பூமி உருண்டையாக இருந்தாலும் நேர் கோட்டில் பயணம் செய்யும் ஒருவரால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காணமுடியாது
இப்படி பொத்தாம் பொதுவாகக் கூறாமல் இவ்வாறு நிகழாது என்பதை அறிவியல் காரணத்துடன் அவர் விளக்க வேண்டும்.
சாதாரணமான ஒரு உருண்டையான பொருளை எடுத்துக் கொண்டு அதில் நம் விரலை பயணம் செய்ய வைத்தால் பயணம் புறப்படுவது ஒரு திசையை நோக்கியதாக இருக்கும், ஆனால் 180 டிகிரிக்குப் பின் அதாவது சரி பாதிக்குப் பின் போன திசையில் இருந்து எதிர்த்திசையில் அந்த விரலின் பயணம் ஆரம்பமாகும்.  அதாவது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணித்த அந்த விரல் 180 டிகிரிக்குப் பின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கியதாக மாறுமா மாறாதா? என்பதற்கு செங்கொடி பதில் சொல்லட்டும்.
ஒரு பொருள் உருண்டையாக இருந்தால் கிழக்குத்த்சையில் போனவர் மேற்குத்திசயில் வருவது முடியுமான காரியமே! இது இன்றுள்ள அனைவருக்கும் தெரியும். இவர் இவ்வாறு கூறுவதன் பின்னனி என்னவென்பது தெரியவில்லை!
இதற்கு மேலாக பூமியின் வடிவம் தட்டை என்று தான் குர்ஆன் கூறுகிறது என்கிறார். எப்படியெனில், குர்ஆனில் பூமியை விரித்திருப்பதாக கூறுகிறான். இதை வைத்துக் கொண்டு அவர் கேட்கும் கேள்விகளை பாருங்கள்:

.....பூமியை தட்டை என பொருள் கொள்ளும்படி பூமியை விரித்திருப்பதாக கூறுகிறது. இவைகளையும் பூமி உருண்டை எனக் கூறுவதாக திரிக்கிறார்கள்.  விரிப்பு என்பதன் பொருளை பூமிக்கு எப்படி பொருத்துகின்றனர்விரிப்பு என்றால் அவை சமதளத்தில் மட்டுமல்ல கோளத்தின் மீதும் பரப்பலாம் எனவே விரிப்பு என்ற உவமையின் மூலம் பூமி தட்டை என்பதை அல்ல உருண்டை என்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது என்று ஜல்லியடிக்கின்றனர்.  பூமி அதன் புவியியல் அமைப்பில் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கிறது அ) இன்னர் கோர் எனப்படும் உட்கரு ஆ) அவுட்டர் கோர் எனப்படும் வெளிக்கரு இ) மேண்டில் எனப்படும் மேலோடு. இதில் உட்கரு திடப்பொருளாகவும், வெளிக்கரு எரிமலைக்குளம்பாக திரவப்பொருளாகவும் இருக்கிறது. மேலோடு நாம் காணும் கடல், மலை, நிலம் என்று மேற்பரப்பாகவும் இருக்கிறது. இந்த மேலோட்டைதான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற விரிப்பாக ஆக்கியிருப்பதாக பொருள் சொல்கிறார்கள். பூமியின் மேலோட்டை குரான் விரிப்பாக குறிப்பிடுவதாகவே கொள்வோம். எந்த வடிவத்தில் அந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்கிறது? சமதளத்திலா? அல்லது உருண்டை வடிவத்திலா? என்ற கேள்விக்கு குரானில் விடை இருக்கிறதா? பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. பூமி உருண்டையா தட்டையா என்று தெரியாது எனக்கொண்டால் குரானிய வசனங்களின் படி உருண்டை தான் என எப்படி உறுதிப்படுத்துவது?
ஒருவர், குறித்த ஒன்றுக்கு விளக்கம் அளித்தால் அந்த விளக்கம் தவறு என்பவர் அதை நிரூபிக்க வேண்டும். அதற்கு இயலாதவந்தான் இவரைப்போன்று ஒன்றுக்கும் உதவாத கேள்விகளைக் கேட்பான். நாம் சொல்வதென்ன? விரிப்பு என்பது பூமியின் மேற்பாகத்தை உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற வகையில் மாற்றியது தான் என்கிறோம். இது தவறு என்றால் அதை நிரூபிக்க வேண்டும்!.
ஒரு உருண்டையான பொருளின் மீது விரிப்பு அதன் வடிவிற்கேற்ப விரிக்காமல் எந்த வடிவில் விரிக்க முடியும்? இவர் உண்மையில் அறிவுடந்தான் எழுதுகிறாரா?
குர்ஆன் விஞ்ஞானப் புத்தகமல்ல! அது ஒரு வாழ்க்கை வழிகாட்டி! என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டோம். அதனுள் அறிவியல் கூறுகள் இருந்தால் அதைத்தான் பேச வேண்டும். அதை விடுத்து, இந்த கேள்விகளுக்கு விடை இருக்கிறதா? இல்லையா? என்று கேட்பது சரியில்லை. இவர் இவ்வாறு கேட்பதற்கு காரணமே இவர் விரித்தான் என்பதை விளங்கிக் கொண்ட விதமே! பூமியை விரித்தான் என்பதை பூமியில் விரித்தான் என்று விளங்கிக்கொண்டார். இதை  பூமி உருண்டையாக இருப்பதனால் அதன் மேலும் விரிப்பை பரப்ப முடியும் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. எனும் அவரது கூற்று நிரூபிக்கிறது.
இறுதியாக,
மேற்கூறிய விவரங்களெல்லாம் குரான் இறங்கிய வேளையில் மக்களுக்கு பூமி உருண்டை எனும் அறிவியல் தெரியாமல் இருந்ததாகவே எடுத்துக்கொண்டு விளக்கப்பட்டவை. ஆனால்  பூமி உருண்டை எனும் அறிவு பன்னெடுங்காலத்திற்கு முன்பே மக்களிடம் இருந்தது என்பது தான் மெய். கிரேக்கர்கள் சீனர்கள் இந்தியர்கள், அராபியர்கள் கடலாடிய செய்திகள் பண்டைய இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன. கடலில் செல்லும் கப்பலும், கரைக்கு திரும்பும் கப்பலும் கரையிலிருந்து பார்க்கையில் கடலுக்குள் கீழ் வளைந்து செல்வதுபோலவும், கீழ் வளைவாக மேலேறி வருவதையும் கண்டு பூமியின் வடிவம் உருண்டை என்பதை பட்டறிவாகவே விளங்கி வைத்திருந்தனர். மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பூமி உருண்டை என‌ முத‌லில் கூறிய‌வ‌ர் பைலோலாஸ் எனும் கிரேக்கர் ஆண்டு கிமு 450. கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‌எரோட்ட‌ஸ்த‌னிஸ் எனும் கிரேக்கர் பூமியின் சுற்ற‌ள‌வை தோராய‌மாக‌க‌ண‌க்கிட்டு 25000 மைல் என்று கூறினார். இன்றைய‌ துல்லிய‌மான‌ க‌ண‌க்கீடு 24902.4 மைல். அதே கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஹிப்பார்க்கஸ் என்பவர்  பூமியை அட்சரேகை கடகரேகை எனும் கற்பனைக்கோடுகளால் பூமியை பிரித்தார். கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தாலமி எனும் எகிப்திய மாலுமி பூமியை வரைபடமாக வரைந்தார். இதன் பிறகு கிபி ஆறாம் நூற்றாண்டில் தான் அரேபியாவில் முகம்மது பிறக்கிறார். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களோ முகம்மதுவின் காலத்தில் பூமி உருண்டை எனும் அறிவு மக்களுக்கு இல்லை என்று இன்றும் வெட்கமில்லாமல் கூறித் திரிகிறார்கள்.
பூமி உருண்டை எனபது கிரேக்கர்களுக்கும், இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் கடலோடிகளுக்கும் தெரிந்ததுதான் என்கிறார். முகம்மது நபிக்கு முன்னர் பூமி உருண்டை எனும் கருத்து ஒரு சிலரிடம் அரிதாகவே காணப்பட்டது. ஆனால் அதை அன்றைய உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை முகம்மது நபிக்கு பின்னர் வந்த அறிவியலாளர்கள் பூமி உருண்டை என்று கூறியதை ஏன் மறுத்தனர்?. இந்தியா, சீனா, கிரேக்கம் போன்ற நாடுகளில் குறிப்பிட்டது முகம்மது நபிக்கு எப்படித் தெரியும்? அவர் என்ன அறிவியல் நூல்களை படித்து இதை எழுதிக் கொண்டாரா? இல்லை வேறு யாரிடமும் கேட்டு எழுதினாரா?. இப்போது உள்ளது போல் மேற்கண்ட நபர்கள் கண்டு பிடித்ததை புத்தகமாக வெளியிட்டு அது அரபு தேசத்தை அடைந்ததா? அல்லது இணைய தளம் மூலம் முஹம்மது அறிந்து கொண்டாரா? முஹம்மது நபி வாழ்ந்த பகுதியில் இது போன்ற ஞானம் இல்லாமல் இருந்தும், அவருக்கு படிப்பறிவு இல்லாமல் இருந்தும் இவர் குறிப்பிடக் கூடிய நபர்களின் நூல்கள் எதுவும் உலகில் இல்லாது இருந்தும் அப்படியே இருந்தாலும் அவை அரபு மொழியில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தும் முஹம்மது இதைக் கூறினால் அது போதாதா? மனிதன் என்ற முறையில் அவர் தெரிந்திருக்க முடியாத ஒன்றை அவர் சொல்லி இருக்கிறார் என்று ஆகாதா?
இவர் சுட்டிக் காட்டும் நபர்கள் படிப்பாளிகள்.ஆய்வு செய்தவர்கள். விஞ்ஞானிகள். முஹம்மது நபியும் இது போல் விஞ்ஞானியாக இருந்து இப்படி கூறி இருந்தால் தான் செங்கொடியின் கேள்வி எடுபடும்.
அது போக இவர் எடுத்துக் காட்டும் விஞ்ஞாணிகள் கூறியதாக 2000 ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட அந்த விஞ்ஞானிகள் வழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல்களின் ஆதாரத்தில் இதை சென்கொடி நிரூபிப்பாரா? 2000 ஆண்டுக்கு முன்னே இதைக் கண்டு பிடித்ததாகச் சொன்னவர்கள் விஞ்ஞானம் வளர்ந்த பிறகு வாழ்ந்த எழுத்தாளர்களா? 2000 ஆண்டுக்கு முன்னே சம்மந்தப்பட்டவரகளே எழுதினார்களா? என்பதை மேலதிகமாக கேட்கிறோம்.
இவருக்கு குர்ஆனில் என்ன குறிப்பிட்டிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையோ, நியாய உணர்வோ இவரிடம் இல்லை என்பதற்கு இது ஒரு சான்று.

வளரும் இன்ஷா அல்லாஹ்

3 comments:

Bucker said...

அண்ணே, குரான எழுதியது முகமதா அல்லது அல்லாவான்னு இப்போ எனக்கு சந்தேகம் வருதுண்ணே.

Anonymous said...

இதற்கான மறுப்பு பதிவிடப்பட்டுள்ளது. ஆரவமுள்ளவர்கள் காணலாம்

http://senkodi.wordpress.com/2011/12/21/senkodi-islam-12/

Anonymous said...

சகோதரர் பக்கர் அவர்களே,

உங்களுக்கு வரும் சந்தேகங்களை தெளிவ குறிப்பிடுங்கள். தீர்த்து வைக்கிறோம்.
இன்ஷா அல்லாஹ். இத்தலம் முடக்கப்பட்டுவிட்டது. புதிய தளத்தில் தொடர்பு கொள்க. அதன் முகவரி www.mohamedihsas.blogspot.com

Post a Comment