Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, March 23

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே 

தொடர்-17


பிர்அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

இதுவரையும் திருக்குர்ஆனில்  என்னென்ன அறிவியல் சான்றுகள் இருப்பதாக முஸ்லிம்கள் குறிப்பிடுகின்றனரோ  அவற்றில் சிலவற்றை மட்டும் மறுப்பு என்ற பேரில் செய்த திருகுதாளங்களை சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த தொடரில் பிர்அவ்ன் சம்பந்தமாக எடுத்து வைக்கும் வாதங்களையும் அதற்கான நமது விளக்கத்தையும் பார்ப்போம்.

மூஸா நபியின் காலத்தில் பிர்அவ்ன் எனும் கொடுங்கோலன் இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி பல்வேறு அட்டூழியங்களையும் புரிந்து வந்ததாகவும் மூஸா நபி அவர்கள் பிர்அவ்னிடமிருந்து மக்களை மீட்டெடுத்ததாகவும் இறுதியில் பிர்அவ்னும் அவனது படையினரும் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் குர்ஆன் குறிப்பிடுகிறது. இதற்கான அத்தாட்சியாக பிர்அவ்னின் உடலை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகிறான். தற்காலத்தில் ஒரு மம்மி கண்டெடுக்கப்பட்டு பல்வேறு சோதனைகளின் பின் இது இரண்டாம் ராம்செஸ் என்பவனின் உடல் என்றும் அவனைத்தான் குர்ஆன் பிர்அவ்ன் என்றும் குறிப்பிடுவதாக மாரிஸ் புகைல் என்பவர் குறிப்பிடுகிறார். அவற்றுக்கு எதிராக  செங்கொடி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு முன் இது பற்றிய சரியான நிலைப்பாடு என்னவென்பதை விளக்க வேண்டும்.

இரண்டாம் ராம்செசின் உடல்தான் பிர்அவ்ன் என்று அல்லாஹ்வோ அல்லது முஹம்மத் நபி (ஸல்) அவர்களோ உறுதிப்படுத்தவில்லை. அவ்வாறு உருதிப்படுத்தியிருந்தால்தான் இது பிர்அவ்னின் உடல் இல்லை. எனவே குர்ஆன் தவறாக கூறியிருக்கிறது என்று கூற முடியும். இரண்டாம் ராம்செசின் உடல் குர்ஆன் குறிப்பிடும் பிர்அவனுடையது இல்லை என்றால் கூட குர்ஆன் தவறு என்று குறிப்பிட இயலாது. குர்ஆன் உறுதிப்படுத்திய எந்த விடயமும் தவறல்ல என்பதை கடந்த தொடர்களில் நிரூபித்துள்ளோம். இரண்டாம் ராம்செஸ் பிர்அவ்ன் இல்லை ஆயினும் இனிமேல் கண்டுபிடிக்கப்படும் என்றால் கூட அது குர்ஆனுக்கு மாற்ரமாகவோ அதை பொய்ப்பிக்கும் விதமாகவோ அமையாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாம் ராம்செஸ்தான் குர்ஆன் குறிப்பிடும் பிர்அவ்ன் என்பதற்கு அதை ஆராய்ந்த மாரிஸ் புகைல் என்பவர் சாட்சியம் அளிக்கிறார். அதில் ஒன்றாக இவரது உடலில் உப்பு படிந்திருப்பதை ஆதாரமாக காட்டுகிறார். இதை மறுக்கும் செங்கொடி
மாரிஸ் புகைல் என்றொரு பிரெஞ்சு மருத்துவர், சவூதி அரசரின் தனி மருத்துவராக பணியாற்றியவர். குரானின் அறிவியல் பார்வை என்ற நூலை எழுதியவர். இவர் எகிப்து அரசின் அனுமதியுடன் மேர்நெப்தாவின் மம்மியை ஆராய்ந்தார். ஆராய்ந்து இது நீரில் மூழ்கி இறந்ததற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தார். அதற்கு அவர் கொடுத்த ஆதாரம் அந்த மம்மியின் உடலில் உப்புத்தன்மை இருந்தது என்பதுதான். ஆனால் உடலை மம்மியாக பதப்படுத்த நேட்ரான் எனும் உப்புத்தான் அந்தக்கால மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

என்று சொல்கிறார். மம்மியை பதப்படுத்த நேர்ரோன் எனும் உப்பு பயன்படுத்தியதாக கூறுகிறார். ஆனால் குறிப்பிட்ட அந்த மம்மியின் உடலிலும் நேர்றான் உப்புத்தான் படிந்திருந்ததா? என்பதை சேர்த்துக்கூறியிருந்தால் அனைவருக்கும் புரிந்திருக்கும். பொதுவாக மம்மியின் உடல்கள் கல்லறைகளிளிருந்துதான் கண்டெடுக்கப்படும். ஆனால் இது, பள்ளத்தாகில்லிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே இது கடலில் வீசப்பட்ட மம்மியாகத்தான் இருக்க முடியும். மேலும் என்னதான் செயற்கையாக பாதுகாத்து வைத்திருந்தாலும் இயற்கையாக பாதுகாத்து வைக்கும் செயற்பாட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த மம்மி அதிகம் சிதையாமல் இருந்தது கூட ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமன்றி கடலில் ஒரு சடலம் இருந்தால் அது மீன்களுக்கு இரையாகி அட்ரஸ் இல்லாமல் போயிருக்கும். ஆனால் இதுவோ நீண்ட காலமாக கடலுக்குள் இருந்தும் அப்படி எந்த சிதைவும் ஏற்படவில்லை.

அடுத்து இரண்டாம் ராம்செஸ் என்பவர் 90 ஆண்டுகாலம் வாழ்ந்ததாகவும், மூட்டு வழியால் இறந்ததாகவும் குறிப்பிடுகிறார். மம்மிக்களின் வரலாற்றில் பலரும் பலவாறு கூறுவார். இதற்கு உதாரணமாக இரண்டாம் ராம்செஸ் பல் வலியின் காரணமாக இறந்ததாகவும் ஒரு இடத்தில் குறிப்பிடுகின்றனர். எது உறுதியானது என்பதை கூற முடியாது. ஏனெனில் இதனை கூறுவதென்றால் அக்காலத்தில் இருந்து கிடைக்கும் ஆதாரத்தின் அடிப்படையில்தான் கூற வேண்டும். இவை வரலாற்றிற்கு முற்பட்டவை. இவற்றை ஒரு ஊகமாகத்தான் கூற முடியும்! உறுதிப்படுத்த முடியாது.

அடுத்து, ஆரம்பத்திலேயே அந்த சடலத்தை வெளிப்படுத்தியிருந்தால் மனிதர்களால் அதை பாதுகாத்து வைக்க முடியாமல் போயிருக்கும் என்பதால் மனிதர்கள் அந்த தொழில்நுட்பம் தெரிந்ததும் இறைவன் வெளிப்படுத்தியிருக்கிறான் என்பது மோசடியானது. ஏனென்றால் செத்த உடல்களை மம்மிகளாக பதப்படுத்தி வைப்பதை மனிதர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே செய்துவருகின்றனர். அவர்கள் பதப்படுத்திய உடலும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

செத்த உடல்களை பாதுகாத்து வைத்திருக்கும் தொழில்நுட்பத்தை அக்கால மக்கள் அறிந்துவைத்திருந்தனர் என்பது உண்மைதான். ஆனால் அவனை கடலில் மூழ்கி இறந்ததும் அவனது ஒட்டுமொத்த படையினர் மட்டுமன்றி அந்த சாம்ராஜ்ஜியமே அழிந்துவிட்டது! பின்னர், யார் அவனுடைய உடலை பாதுகாத்து வைத்திருப்பது?. மேலும் கடலினுல்லிருந்து வெளிப்பட்டிருந்தால் சில நாட்களிலேயே அழுகிப்போயிருக்கும்.

இதில் நகைக்கக்கூடிய செய்தி என்னவென்றால், இவரின் வெற்றித்தூண் எனும் கல்வெட்டில் கிமு 1207ம் ஆண்டில் கானான் மீது படையெடுத்து அதை வென்றதாக பொறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மேர்நெப்தாவின் ஆட்சியில் அவரால் துன்புறுத்தப்பட்டு மூசாவால் தன்னை பின்பற்றியவர்களுடன் செங்கடலை பிளந்து மறுகரையில் குடியிருப்பு உருவாக்கப்பட்டதோ அதுதான் கானான் பிரதேசம் எனப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கடலில் மூழ்கி இறந்துபோன மன்னன், தான் உயிருடன் இருக்கும்போது அந்தப்பகுதியை போரிட்டு வென்றதாக கல்வெட்டு நட்டிருக்கிறான்.

மூஸா நபி கானான் பிரதேசத்துக்குத்தான் குடியேறினார் என்று குர்ஆன் சொல்லவில்லை! அப்படி சென்றிருந்தாலும் இதில் நகைப்புக்கு ஒன்றுமில்லை. மன்னன் இறந்துவிட்டான். அவனது சேனைகளும் ஒழிந்துவிட்டனர். அவனுடைய நாடே அவனிடம் இல்லையெனும் போது அவன் வென்ற நாட்டில் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்?

இவற்றின் மூலம், கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் ராம்செசின் மம்மி பிர்அவ்னுடையதாக இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறு உள்ளது. அப்படி இல்லையென்றால் கூட இதை வைத்துக்கொண்டு குர்ஆனை மறுக்க இயலாது.

வளரும் இன்ஷா அல்லாஹ்    

0 comments:

Post a Comment