Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, November 12

செங்கொடியின் கற்பனை கோட்டையின் விரிசல்கள் வழியே


தொடர்-01

செங்கொடி தனது விமர்சனத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் நுழைவாயில் எனும் தலைப்பினூடாக மத நம்பிக்கை பற்றியும்  அதன் வீரியத்தைப்பற்றியும் குறிப்பிட்டுவிட்டு, தான் இஸ்லாமிய கருத்துக்களை மறுப்பதற்கான அதாவது இத் தொடரை எழுதுவதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

செங்கொடியின் நுழைவாயில் எனும் தொடரை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்


இதன் பின்னர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

மதப்பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்கள் தேடிப்போய் கேட்பது குறைவு.மத விளக்க நூல்களை படிப்பது குறைவு.ஆனால் திரைப்பட நிகழ்ச்சியின் அல்லது விளையாட்டின் விளம்பர இடைவேளையில் தெரியாமல் இது போன்ற நிகழ்ச்சிகள் பார்வைக்கு வந்துவிட்டால் கூட இதன் தாக்கம் மக்களின் மனதில் இருக்கை போட்டு அமர்ந்துவிடுகிறது.

மேற்கண்ட பாராவில் இவர் குறிப்பிட்டுள்ள விஷயம் இவரது விசாலமான(?) அறிவை எடுத்துக் காட்டுகிறது.
இஸ்லாத்தைப் ற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் எழுதப் புகும் ஒருவருக்கு அது குறித்த தெளிவான அறிவு இருக்க வேண்டும். முஸ்லிம்கள் இஸ்லாம் மார்க்கத்தை அறிந்து கொள்வதில் காட்டும் ஆர்வம் கூட இவரது கண்களுக்குத் தெரியவில்லை. புரட்சிகர மார்க்ஸியம் ரைகள் நிகழ்த்தும் கூட்டங்களில் பத்துப் பதினைந்து பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு உபதேசம் செய்யும் நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு இப்படித்தான் முஸ்லிம்களும் இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு எழுதிய அபத்தமே இது.
முஸ்லிம்கள் இஸ்லாத்தில் அதிக ஆர்வம் காட்டி முஸ்லிம் என்று தம்மை இனம் காட்டிக் கொள்கிறார்கள் என்றும் மேற்படியார் தான் இதைத் தொடர்ந்து எழுதியுள்ளார். முரண்பாடுகளின் மொத்த உருவமான புரட்சிகர மார்க்ஸியத்தின் பாதிப்பினால் தனக்குத் தானே முரண்படுகிறார்
மேலும் விளம்பர இடைவேளையில் பார்க்கும் நிகழ்ச்சி இருக்கை போட்டு அமர்ந்து விடுகிறது என்று அவர் கூறுவதிலும் அவர் அறியாமையின் மொத்த உருவமாக இருப்பதை அறியாலாம்.
ஈடுபாடு இல்லாமல், தற்செயலாக காதில் விழும் இஸ்லாமியக் கருத்துக்கள் மக்கள் மனதில் இருக்கை போட்டு அமர்ந்து கொள்கிறது என்றால் அது தான் இஸ்லாத்தின் உண்மைக்கு சான்று. அவ்வவு ஆர்வம் காட்டாதவர்களின் காதுகளில் விழுந்தவுடன் ஈர்க்கும் அளவுக்கு இஸ்லாம் மட்டுமே உள்ளது.

மேற்படி இவரின் கூற்று முஸ்லிம்களுக்கு குறிப்பாக தவ்ஹீத்வாதிகளுக்கு அறவே பொருந்தாது! மதப் பிரச்சாரக் கூட்டமாயினும் சரி, மத விளக்க நூல்காளாயினும் சரி மக்கள் அதிகளவு ஈடுபாடு செலுத்துகின்றனர்.அது மட்டுமல்ல! நேரடி கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக கேள்விகேட்க செல்வதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு இன்னுமொன்றையும் குறிப்பிடவேண்டியுள்ளது. திரைப்படமோ அல்லது விளையாட்டு விளம்பர இடைவேளையின் போதோ இஸ்லாமிய நிகழ்ச்சிகள் பார்வைக்கு வருவதில்லை!(அவ்வாறு வந்தால் குறிப்பிடவும்) ஏனைய மத நிகழ்ச்சிகள் அதுவும் அத்தொலைக்காட்சி நிறுவனத்தினர் நடத்தினால்(அதுவும் விஷேட தினங்களில்) மாத்திரமே வெளிவரும். விளாம்பர இடைவேளைகளில் அதிகமாக அனுசரனையாளர்களின் விளம்பரமே இடம்பெறுகிறது என்பதையும்  அறிந்து கொள்ள வேண்டும்! ஆக இவ்வாறான இவரது கூற்று ஏனைய மதத்தினருக்கு பொருந்தினாலும் முஸ்லிம்களுக்கு பொருந்தவே செய்யாது!.

அடுத்ததாக,

அரசு, பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் போது அவர்களின் மத அடையாளமே முன்னிறுத்தப்படுகிறது. இதனாலும்,அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது.இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்து பாசிசங்களுக்கும் தேவையாகும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்து பாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன் செல்ல வேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பைகேள்விக்குள்ளாக்குவது முன் நிபந்தனையாகிறது.

பொதுவாக பாதிக்கப்பட்டால் பொதுவாக அடையாளப்படுத்துவதும், முஸ்லிம் என்ற காரனத்துகாக பாதிக்கப்பட்டால் அதை அடையாளப்படுத்துவதும் அறிவுடையோரின் செயல் தான்.மின்சாரம் இல்லா விட்டால் அதற்காக முஸ்லிம் அடையாத்துடன் முஸ்லிம்கள் போராடியதில்லை. வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்டால் முஸ்லிம் என்ற காரத்துக்காகவே அந்த பாதிப்பு இருப்பதால் அதை அடையாளப்படுத்தாமால் வேறு எதை அடையாளப்படுத்துவது? அறிவோடு தான் இவர் எழுதுகிறாரா?
இந்தச் சாதராண அறிவு கூட இல்லாதவர் விமர்சனம் செய்வதற்கு தகுதி அற்றவராகிறார்.

அரசியல் விழிப்புணர்வுகள் இந்து பாசிசத்திற்கு தேவையகவும் உதவியாகவும் இருப்பதாக கூறுகிறார்.இது எவ்வாறூ உதவியாக இருக்கிறது என்பதை சற்று விளாக்கினால் நன்றாக இருக்குமே!. அது மட்டுமல்லாமல், போகிறபோக்கில் சமூக போராட்டங்களில் ஈடுபட முஸ்லிம்கள் அவர்களது மத நம்பிக்கையையும்,மத பிடிப்பயும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார். இதில் துளியளவு கூட உண்மயில்லை.இதற்கு எடுத்துகாட்டாக ஜூலை 4 மா நாட்டை குறிப்பிடலாம்.இதன் தாக்கம் பிரதமர் வரைக்கும் சென்றதை அறிந்திருபார். இதை முஸ்லிம்கள் மத நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்காமலேயே சாதித்து காட்டியுள்ளனர். எதிர்வரும் ஜனவரி 4 மாநாடும் இன்ஷா அல்லாஹ் அவ்வாறு  அமையும் என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற சமூக போராட்டங்களை மத நம்பிக்கைக்கு எதிராகவும் தடையாகவும் இருந்தால்தான் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இதை இஸ்லாம் தாரளாமாக அனுமதிக்கும் போது எதற்காக கேள்விக்குள்ளாக்க வேண்டும்?

இறுதியாக மற்றொரு விடயத்தையும் குறிப்பிடுகிறார்:-

அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்கள் எல்லாம் இன்றைய நிதி மூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள்.புரட்சிகர மார்க்ஸியமே இன்றைய சமூக தேவையாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கும் இத்தொடர் பயன்படுமென நம்புகிறேன்.

மார்க்ஸியத்தை விட இவரது புரட்சிகர மார்க்ஸியம் எந்த அளவுக்குமுணை மழுங்கியுள்ளது என்பதை அவர் இந்த தலைப்புக்குள் நுழையும் போது தோலுரித்துக் காட்டப்படும்.

மேலும்,இதன் மூலம் அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் என்பவை இஸ்லாமிய இறையியலாக சித்தரித்து காட்ட முற்படுகிறார். அரபு தேசியவாதம் என்பதும் அரபு மார்க்ஸியம் என்பதும் இஸ்லாமிய இறையியல் கிடையவே கிடையாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இவரது புரட்சிகர(?) மார்க்ஸியமே இன்றைய சமூக தேவை என்பதை எவ்வாறு உணர்த்தப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
                                                                                                                                                வளரும் இன்ஷா அல்லாஹ்

8 comments:

sultangulam@blogspot.com said...

அழகான தொடக்கம். அல்ஹம்துலில்லாஹ்

வானம் said...

ஓப்பனிங்கல்லாம் நல்லாத்தான் இருக்கு.ஆனா பினிஷிங் சரியில்லையே?

ஹைதர் அலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

//அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்கள் எல்லாம் இன்றைய நிதி மூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள்//

அதெப்படி இறையியலை விட்டுக்கொடுக்காமல்
கம்யூனிஸம் பேச முடியும்
இஸ்லாத்தை பொறுத்த வரை ஒரு உறையில் ஒரு வாள் தான் இருக்க முடியும்

ஹைதர் அலி said...

ஏஜ்சல் சொல்கிறார்:
(பருப்பொருள்கள்) புலன்களால் தொட்டு உணர முடியக் கூடியவைகளே
உலகில் உண்மையானவைகள்”

வானம் said...

அண்ணே ஹைதர் அலி,
இறையியலை விட்டுக்கொடுத்தல் இல்லை,புறக்கணித்தால்தான் கம்யூனிசம் பேச முடியும். பொருள்முதவாதமும்,கருத்து முதல்வாதமும் ஒன்றுக்கொன்று அடிப்படையாகவே முரண்பட்டது.அப்புறம் எப்படி அதையும் வச்சுக்கலாம்,இதையும் வச்சுக்கலாம்னு சொல்லமுடியும்?

கட்டுரையில என்ன சொல்ல வரீங்க? இந்து மத அடிப்படைவாதத்துல பாதிக்கப்பட்டா முஸ்லிம் மத அடிப்படவாதத்துல சேர்ந்து எதிர்க்கனுமா? அப்ப நீங்க அதிகாரத்துக்கு வந்தா அதே மோடி வேலையத்தான பாப்பீங்க.
ஜூலை மாநாட்டுக்கு பிறகு அப்படி என்ன தாக்கத்தை ஊழல் நாயகன் மண்ணுமோகன் கிட்ட பாத்தீங்க? கொலைகார மோடியையும்,அத்துவானியையும் தூக்கி ஜெயில்ல வச்சிட்டாரோ? சொல்லவே இல்ல.
சக மனிதர்களோட மொழிக்கோ,பண்பாட்டுக்கோ மதிப்பு கொடுக்காம இறை மறுப்பாளர்களையும், இணை வைப்பவர்களையும் வெட்டு,கொல்லு-ன்னு சொல்லுற ஒரு கடவுளையோ,அவர் தூதர்ன்னு சொல்லிக்கிட்டவரையோ எப்படி நியாயப்படுத்துறீங்கன்னு பாக்கலாம்?(இது பிரசுரமாகுமான்னே தெரியல)
சீக்கிரம் அடுத்த கட்டுரையோட வாங்க.

A.Mohamed Ihsas said...

சகோதரர் வானம்,

//கட்டுரையில என்ன சொல்ல வரீங்க? இந்து மத அடிப்படைவாதத்துல பாதிக்கப்பட்டா முஸ்லிம் மத அடிப்படவாதத்துல சேர்ந்து எதிர்க்கனுமா? அப்ப நீங்க அதிகாரத்துக்கு வந்தா அதே மோடி வேலையத்தான பாப்பீங்க.//

இப்படி நான் கட்டுரையில் எங்கு கூறி இருக்கிறேன் என்று தெரியப்படுத்தவும்!

//ஜூலை மாநாட்டுக்கு பிறகு அப்படி என்ன தாக்கத்தை ஊழல் நாயகன் மண்ணுமோகன் கிட்ட பாத்தீங்க? கொலைகார மோடியையும்,அத்துவானியையும் தூக்கி ஜெயில்ல வச்சிட்டாரோ? சொல்லவே இல்ல.//

இதிலிருந்து உங்களுக்கு ஜூலை மாநாடு பற்றி எதுவும் தெரியாது என்று விளங்குகிறது. மோடியையொ அல்லது அத்வாநியையொ கைது செய்ய சொல்லி மாநாடு நடத்தவில்லை! முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டே மாநாடு நடத்தப்பட்டது! சம்பந்தமில்லாமல் இதுபோன்று உளறுவதை விட்டுவிடுவது நல்லது!

//சக மனிதர்களோட மொழிக்கோ,பண்பாட்டுக்கோ மதிப்பு கொடுக்காம இறை மறுப்பாளர்களையும், இணை வைப்பவர்களையும் வெட்டு,கொல்லு-ன்னு சொல்லுற ஒரு கடவுளையோ,அவர் தூதர்ன்னு சொல்லிக்கிட்டவரையோ எப்படி நியாயப்படுத்துறீங்கன்னு பாக்கலாம்?(இது பிரசுரமாகுமான்னே தெரியல)//

இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாததால் எழுந்த கேள்வியே இது! இஸ்லாம் இறை மருப்பாலர்கலயொ அல்லது இணை வைப்பவர்கலையோ கொள்ளும்படி சொல்லவில்லை! வம்புக்குவருபவர்களை(உன்னோடு சண்டை செய்ய வரும்போது) விடாதே என்றுதான் போதிக்கிறது. இஸ்லாத்தைப்போன்று எந்த மதமும் மனித நேயத்தை சொல்லவில்லை! த்ப்டர்ந்து வாருங்கள் உங்கள் ஆதங்கத்திற்கும் சேர்த்து பதிலளிக்கப்படும்!

Anonymous said...

இந்தப் பகுதிக்கான மறுப்பு செங்கொடி தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமிருப்பவர்கள் காணலாம்.

http://senkodi.wordpress.com/2011/01/01/senkodi-islam-2/

ராஜவம்சம் said...

அல்ஹம்துலில்லாஹ் தொடருங்கள் வெற்றியையும் நேர்வழியையும் நோக்கி.

Post a Comment