Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, March 10


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர்-14

பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

கால் நடைகளில் உங்களுக்கு படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது. (16:66)

இது பால் எதிலிருந்து உற்பத்தியாகிறது என்ற விளக்கத்தை தருகிறது. இதை தவறு என்கிறார் செங்கொடி. இதோ அவரது விளக்கம்:

வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்பது பால் உற்பத்தியாகும் இடமாக குரான் குறிப்பிடுவது. பால் உற்பத்தியாவது மார்பகங்களிளிருந்து அதாவது மடுக்களிளிருந்து தானே என்பவர்கள் மதவாதிகள் எடுக்கும் அறிவியல் வகுப்புகளையும் கவனிக்கவேண்டும். முன் காலத்தில் இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று மக்கள் நம்பி வந்தனர். உண்ணப்படும் உணவானது கூழாக அரைக்கப்பட்டு அதிலுள்ள சத்துக்கள் குடல்களினால் உறிஞ்சப்பட்டு அது தான் பாலாகவும் இரத்தமாகவும் இன்ன பிற பொருட்களாகவும் மாறுகிறது. அதாவது அரைக்கப்பட்ட உணவுக்கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட நிலையிலிருந்து தான் பால் உற்பத்தியாகிறது. இதுதான் சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து எனும் குரான் வசனத்திற்கு மதவாதிகளின் விளக்கம். இவர்கள் சொல்லும் இந்த அறிவியல் ஓரளவுக்கு சரியானது தான். ஆனால் இது பாலுக்கு மட்டும் அல்ல, உடலின் அனைத்து ஆற்றலும் இந்த பரிமாற்றத்தின் மூலம் தான் கிடைக்கிறது. நடப்பதற்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும்  இடையிலிருந்து கிடைக்கிறது. கறிக்கோழியின் இறைச்சி எப்படிக்கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும்  இடையிலிருந்து கிடைக்கிறது. சரிதான், உயிரினங்கள் அனைத்திற்கும் அது இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் அது உண்ணும் உணவிலிருந்து தான் பெற்றுக்கொள்கின்றன. அந்த உணவு வயிற்றில் அரைத்து கூழாக்கப்பட்டு குடல்களினால் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தேவைப்படும் ஆற்றல்களாக மாற்றப்படுகின்றன. எஞ்சிய சக்கைகள் கழிவுகளாக வெளித்தள்ளப்படுகின்றன. இது பொதுவான அறிவியல். ஆனால் பால் எப்படி உற்பத்தியாவதாக அறிவியல் கூறுகிறது?
பிரசவ நேரம் நெருங்கியதும் புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது, இந்த புரோலாக்டின் மடுக்களை அடைந்ததும், ஆரஞ்சு சுளைகளை பிரித்துப்பார்த்தால் அதில் நெருக்கமாக இருக்கும் மொட்டுக்களைப்போல் மடுக்களில் இருக்கும் அல்வியோல் எனும் சுரப்பிகள் ஒரு வித திரவத்தை சுரக்கின்றன. இது தான் காம்புகள் வழியாக வெளியேற்றப்பட்டு பால் என அழைக்கப்படுகிறது. சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இதில் நேரடியாக தொடர்பு ஒன்றுமில்லை. காம்புகளிளிருந்து கரக்கப்படுவது தான் பால் என்பது அனைவரும் அறிந்தது தான், முகம்மதுவும் கூட. அதை வித்தியாசமாக சொல்ல நினைத்த முகம்மது, உடலில் எங்கிருந்தோ உற்பத்தியாகி வருகிறது எனும் நினைப்பில் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்று பொதுவாக சொல்லி வைத்திருக்கலாம். 

மேலே உள்ள வசனம் தவறானது என்றால் அது எப்படி தவறானது என்பதை நிரூபிக்க வேண்டும். அதாவது பால் இரத்தத்திற்கும் சானத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள ஒரு பதார்த்தம்தான் மடுக்களுக்கு சென்று மாற்றங்களுக்குள்ளாகி பாலாக மாறுகிறது என்பதை தவறு என்று சொல்ல வேண்டும். அப்படி கூறாமல் இது ஓரளவு சரியானதுதான் ஆனால் பால் மட்டுமா இப்படி உருவாகிறது இன்னும் என்னென்னவோ இந்த நிலையில்தான் உருவாகிறது என்கிறார். எல்லாவற்றிற்கும் இப்படித்தான் என்பதால் பால் இவ்வாறு உருவாகும் என்பது தவறாகுமா? என்னே மறுப்பு இது! உடலுக்கு சக்தி கிடைப்பது கலச்சுவாசம் மூலம். அதாவது ஒவ்வொரு செல்லிலும் இழைமனி எனும் சக்திப்பிறப்பாக்கி உள்ளது இங்குதான் குளுக்கோஸ், ஒட்சிசன் சேர்ந்து ATP எனும் சக்தி மூலக்கூறாகவும் இன்னும் சில பொருள்களும் உண்டாகும். இதற்கான மூலப்பொருள் சிறுகுடல் அகத்துறிஞ்சலிலிருந்துதான் கிடைக்கிறது. இதை ஏற்பவர் பாலிற்கான மூலப்பொருள் இந்த நிலையில்தான் கிடைக்கிறது என்று ஏற்பவருக்கு இந்த வசனத்தை ஏற்பதற்கு ஏன்  பிடிவாதம் பிடிக்கிறார்? மடுக்களில் பால் உற்பத்தியாவதால் அதற்கு தேவையான மூலப்பொருள் உருவாகும் முறையை கூறுவதால் தவறு என்று கூறுகிறாரா? தவறு என்று கூட கூறவில்லை சரி என்கிறார், பின்னர் மடுக்களிலிருந்து உருவாகிறது என்கிறார் பின்னர் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் பால் உற்பத்திக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்கிறார்(சாணத்திற்கும், இரத்தத்திற்கும் பால் உற்பத்தியில் சம்பந்தம் இல்லை என்பது சரிதான். அதற்கு இடைப்பட்ட நிலையில்தான் பால் உற்பத்தியாகிறது) என்னதான் சொல்லவருகிறார்? இவரும் குழம்பி மற்றவரையும் குழப்புகிறார்.

தேனீக்களின் வயிறுகளிலிருந்துதான் தேன் வெளியாகிறது என்று குர்ஆன் கூறுகிறது. இதைத்தான் இன்றைய நவீன அறிவியலும் கூறுகிறது. ஆனால் செங்கொடியோ குர்ஆன் அறிவியலை பேசவில்லை. அதாவது அதன் வயிறுகளிலிருந்து தேன் வெளியாகவில்லை என்கிறார்.

இதோ தேன் உற்பத்தி பற்றிய செங்கொடியின் விளக்கம்:
குரான் தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுவதாக கூறுகிறது. வயிற்றிலிருந்து வெளிப்படுவதாக இருந்தால் உணவாக உண்டது செரித்து கழிவாக வெளிப்படுவதாக இருக்கும். தேனீ ஏன் தேனை சேமிக்கவேண்டும் எனும் ஆதாரக் கேள்வியோடு இது முரண்படுகிறது. வெயிர்காலங்களில் சுறுசுறுப்பாக செயல்படும் தேனீக்கள், குளிர்காலங்களில் சேமித்த தேனையே உணவாகக் கொள்கிறது. கூட்டிலிருக்கும் ராணித்தேனீ, ஆண் தேனீக்களின் உணவும் தேன் தான், அதாவது வேலைக்காரத் தேனீக்கள் மட்டும்தான் தேனை சேகரிக்கின்றன. ஏனைய தேனீக்கள் அதை உண்கின்றன. என்றால் தேனீக்கள் தங்களின் கழிவுகளையே மீண்டும் உண்கின்றனவா? அவ்வாறல்ல, தேனீக்கள் உணவாக தேனை உண்ணும் போது வயிற்றுக்கும், சேகரிக்கும் போது வேறொரு பையிக்கும் அனுப்புகின்றன. வேலைக்காரத் தேனீயின் உடலில் தேனை செரிப்பதற்கான வயிறும் தேனை சேகரிப்பதற்கான பையும் தனித்தனியே அமைந்திருக்கின்றன. சேகரிப்பதற்கான பை ராணித்தேனீயின் உடலிலோ, ஆண் தேனீயின் உடலிலோ இல்லை. மலர்களிலிருந்து சேகரிக்கப்படும் அமுதம் (நெக்டர்) அந்தப்பையில் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது, இதையே அடைகளில் சேமிக்கிறது. இந்த திரவத்தில் அடைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது, இதன் பெருமளவு நீர்மம் குறைக்கப்பட்டு இறுகிய பின்பே தேனாகிறது. எனவே குரான் வயிற்றிலிருந்து எனக் குறிப்பிடுவது தவறான கூற்றாகும்.
என்ன சொல்கிறார் என்று புரிகிறதா? தேன் தேனீக்களின் வயிறுகளிலிருந்து உருவாகிறது எனும் குர்ஆனின் கூற்று தவறு; தேனிக்களால் சேமிக்கப்பட்ட குளுக்கோஸ் அதன் வயிற்றில் நெக்டார் பையினுள் சேமிக்கப்படுகிறது; பின்னர் இதை அடைகளில் சேமிக்கிறது; எனவே குர்ஆனின் கூற்று தவறு. என்ன இது? அந்தர் பல்டி அடிப்பதை பார்த்திருக்கிறேன். இது அதையும் தாண்டிய அல்டிமேட் பல்டியாக இருக்கிறது! செங்கொடிக்கு கிறுக்குப்பிடித்து இருக்கிறது; செங்கொடி நன்றாக யோசிக்கிறார்; எனவே செங்கொடிக்கு பைத்தியம் என்று நான் கூறினால் என்னை என்னவென்பீர்கள்? ஒரு பந்தியிலேயே இப்படி பல்டி அடிக்கிறார்! இவரது விளக்கம் அதன் வயிற்றிலிருந்துதான் வெளிப்படுகிறது என்கிறது. ஆனால் முன்னுக்கும் பின்னுக்கும் குர்ஆன் வயிற்றிலிருந்து வெளிப்படுகிறது என்று சொல்வது தவறு என்கிறார். சுய நினைவுள்ள எவனாவது இப்படி எழுதுவானா? வயிற்றிலிருந்து வெளியாகிறது என்றால் அது அதன் கழிவாகத்தான் இருக்கும் என்பவர் அது வயிற்றிலுள்ள நெக்டார் பையிலிருந்துதான் வெளியாகிறது என்கிறார். இவரது உளறலை விட்டுவிட்டு இவரது விளக்கத்தை எடுத்துக்கொண்டால் அது குர்ஆனின் வசனத்தை மெய்ப்பிக்கிறது. எனவே குர்ஆன் கூறுவது முற்றிலும் உண்மை. இது படைத்த இறைவனால்தான் சொல்ல முடியும் படிக்காத முஹம்மது நபி (ஸல்) அவர்களால் சொல்ல முடியவே முடியாது. திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது.

இந்த வசனத்தை முழுமையாக கவனித்தால் வேறொரு உண்மையும் தெரியவரும். “பின் நீ எல்லாவிதமான கனிகளிருந்தும் உணவருந்தி உன் இறைவன் எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல். அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறதுஇது தான் முழுமையான வசனம். இதில் கனிகளிருந்து உணவருந்தி என்று வருகிறது. எந்த தேனீ கனிகளை உணவாக உட்கொள்கிறது? அதிலும் எல்லாவிதமான கனிகளிருந்தும் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இடத்தில் அரபியில் தமர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமர் என்றால் பேரீத்தம் பழத்தை குறிக்கும் சொல்லாகும். ஆக முகம்மது சொல்வது தேனீ பேரீத்தம் பழத்தை உணவாக உட்கொள்கிறது என்று. குரான் இறை வேதம் என அடம் பிடிப்பவர்கள் பதில் சொல்லலாம்.

சில தேனீக்கள் பழங்களிலிருந்தும் குளுக்கோசை சாப்பிடுகின்றன.குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது. அடுத்து இவரின் அரபு புலமையை (?) எமக்கு வெளிச்சம்போட்டுக்காட்டுகிறார். அது என்ன? குர்ஆனில் பழங்கள் என்று மொழிபெயர்த்த இடத்தில் தமர் என்று வருகிறது. தமர் என்றால் பேரீச்சம் பழம்! எனவே தேனீ பேரிச்சம் பழம்தான் சாப்பிடுகிறது என்று முஹம்மது நபி கூறுகிறார் என்கிறார். அரபு மொழி ஏனைய மொழியைப்போன்றது அல்ல. ஒரு எழுத்து மாறினாலே அதன் அர்த்தம் மாறிவிடும். அரபியில் உள்ளம் என்பதற்கும் கல்ப் என்றுதான் கூறுவர் நாய்க்கும் கல்ப் என்றுதான் கூறுவர். எனினும் இரண்டிற்கும் இடையிலான உச்சரிப்பு வித்தியாசம். உள்ளத்தை குறிக்கும் கல்பிற்கு قلب  இவ்வாறும் நாயைக்குறிக்கும் கல்பிற்கு كلب இவ்வாறும் எழுதுவர் அரபியில் இவ்விரண்டு எழுத்துக்கும் உசசரிப்பில் வித்தியாசம் உள்ளதால் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம். தமிழில் இதற்கொத்த உச்சரிப்போ எழுத்தோ இல்லை. சரி இவர் குறிப்பிடும் விடயத்தை எடுத்துக்கொள்வோம். பேரீச்சம்பழத்திற்கு (تمر) தமர் என்பதற்கு இரண்டு புள்ளி உள்ள  தா (ت) என்ற எழுத்தும் பொதுவாக பழம் என்பதற்கு ஸமர் (ثمر) மூன்று புள்ளி உள்ள ஸ (ث) எனும் எழுத்தும் பயன்படும். 16:69ம் வசனத்தில் மூன்று புள்ளி உள்ள ஸமர் ثمر)  (அதாவது கனி எனும் சொல்தாம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேறுபாடு கூடவா தெரியவில்லை? குர்ஆனை விமர்சிப்பதற்கு அரபி ஞானம் தேவை என்று நாம் சொல்வதில்லை. தமிழ் மொழிபெயர்ப்பை வைத்து விமர்சித்தால் நாம் இவ்வாறு கூறமாட்டோம். அரபியை தூக்கிப்பிடிப்பதென்றால் அரபு தெரியாம அல்லது அறை குறை அறிவுடன் விமர்சிப்பது முறையல்ல! அரபு தெரியாவிட்டால் சும்ம இருந்திருக்க வேண்டும். வம்பை விலைகொடுத்து வாங்கக்கூடாது.

இறுதியாக தேனீக்களின் நடனம் பற்றி குர்ஆன் கூறுவதை கூறி அதை மறுக்காமல் அதற்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார் இதனால் இதில் எந்த விளக்கமும் தேவையில்லை. இவர் அறிவியலையும் குர் ஆனையும் படாத பாடு படுத்துவிட்டு பழியை குர்ஆன் மீது தூகிப்போதுவது காமடியாக உள்ளது.

ஒரு வேண்டுகோள்: செங்கொடி என்பதை "செம காமெடி" என்று மாற்றி வைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
   

1 comments:

idris said...

Thannai arivu jeeviaga kanbithhu kolla ninaithu, ularugirar, ivarukkellam time spend panrathu waste

Post a Comment