Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, April 9

குர்ஆனின் காலப்பிழைகளா? செங்கொடியின் கணிப்பின் குறைகளா?

செங்கொடியின் கற்பனைக்கோட்டயின் விரிசல்கள் வழியே... தொடர்-22

குரானின் காலப்பிழைகள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

செங்கொடி குர்ஆனின் காலப்பிளைகளாக இரண்டு விடயங்களை குறிப்பிடுகிறார். அவை இரண்டும் சரிதானா எனப்பார்ப்போம். முதலாவதாக,

"உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்" (என்று பிர்அவ்ன் கூறினான்.) (7:124)  

"என் சிறைத்தோலர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானுக்கு மதுவைப்புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப்படுவார். அவரது தலையை பறவைகள் சாப்பிடும்." (12:41)

இந்த வசனங்களில் செங்கொடி கண்டுபிடித்த (?) காலப்பிழை என்ன தெரியுமா? அதுதான் சிலுவையில் அறிதல் எனும் தண்டனை.

பெர்சிய (இன்றைய ஈரான்) மன்னனான முதலாம் டேரியஸ் எனும் மன்னனால் கி.மு 519 ல் தரப்பட்டதுதான் வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனை.

அதாவது குர்ஆன் குறிப்பிடும் யூசுப் (அலை), பிர்அவ்ன் என்பவர்கள் இந்த முதலாம் தேரியசுக்கு முந்திய, மிகப்பலமையானவர்கள். வரலாற்றில் முதன் முதல் சிலுவை தண்டனை பதியப்பட்ட காலம் இந்த முதலாம் டேரியசின் காலம். எனவே குர்ஆன் பிழையாக சொல்லியிருக்கிறது அல்லது முகம்மது இட்டுக்கட்டியவைதான் இவை என்கிறார் செங்கொடி.
வரலாற்றில் முதல் முதல் சிலுவைத்தண்டனை ஆரம்பிக்கப்பட்டது முதலாம் டேரியசின் காலம் என்று சொன்னால்தான் குர்ஆன் குறிப்பிட்டது தவறாகும். ஆனால், வரலாற்றில் அறியப்பட்ட சிலுவைத்தண்டனை முதலாம் டேரியசின் காலம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதற்கு முந்தைய காலத்திலும் இருந்திருக்கக்கூடும். ஆனால் அவை வரலாற்றில் பதியப்படவில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

இதில் எந்த காலப்பிளையும் கிடையாது. ஆனாலும், இது போன்ற சிலுவைத்தண்டனைகள் எகிப்தின் மிகப் பழங்காலத்தில் கையாளப்பட்டு வந்துள்ளன என்பதுதான் உண்மை. சுமார் கி.மு 3150 காலப்பகுதிகளிலேயே ஆண்ட நார்மர்-மேன்ஸ், அஹா போன்றவர்களின் காலத்திலேயே இந்த சிலுவைத்தண்டனைகள் இடம்பெற்றுள்ளதாக பண்டைய எகிப்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இவரின் கூற்றில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை! சிலுவை என்றவுடன் தற்போது நடைமுறையிலிருக்கும் சிலுவைதான் என்று எண்ணிவிடக்கூடாது. ஒவ்வொரு பிரதேசத்தினரும் ஒவ்வொரு விதமான வடிவில் இந்த தண்டனையை நிறைவேற்றினர். அதன் வடிவம் வித்தியாசம். இயேசுவின் வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்ட சிலுவை வரலாற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அவ்வளவுதான்.

அடுத்த காலப்பிளையாக (?) செங்கொடி குறிப்பிடுவது:

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். (7:54)

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? (41:9)

அதன் மேலே முலைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை நிர்ணயம் செய்தான். (41:10)

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். (41:12)

இந்த வசனங்களை சுட்டிக்காட்டி மொத்தமாக கூறும்போது ஆறு நாட்கள் (7:54) என்றும் தனித்தனியாக குறிப்பிடும் போது (41:9-12) எட்டு நாட்கள் என்றும் வருகிறது. எனவே இது காலப்பிழை அல்லவா? என்று கேட்கிறார்.
அதை மொத்தமாக பார்த்தால் எந்த முரண்பாடும் வராது. பூமியை படைத்து, அதில் மலைகளையும் உருவாக்கி, உணவுகளை நிர்ணயம் செய்ய நான்கு நாட்கள். பின்னர் ஏழு வானங்களை அமைக்க இரண்டு நாட்கள் மொத்தம் ஆறு நாட்கள் இதில் எந்த கணக்குப்பிலையோ அல்லது காலப்பிலையோ கிடையாது.

முதல் இரண்டு நாட்களில் பூமி படைக்கப்பட்டது என்றால் எந்த அடிப்படையில்  கணக்கிடப்பட்டது? ஏனென்றால் பூமி படைக்கப்பட்டு அதில் உணவு வகைகளுக்காக நான்கு நாட்களைச் செலவு செய்து அதன்பிறகுதான் வானமும் ஏனையவையும் வருகின்றன. வானம் படைக்கப்படாமல் அதில் சூரியன் படைக்கப்படாமல் எந்த மையத்தில் பூமி சுழன்று நாட்கள் கணக்கிடப்பட்டது? (வானமா பூமியா எது முதலில் படைக்கப்பட்டது என்பது குறித்து ஏற்கெனவே எழுதப்பட்டதையும் இதனுடன் சேர்த்து படித்துக்கொள்ளவும்) பூமி உருவாகி பல கோடி ஆண்டுகள் நெருப்புக்கோளமாக சுற்றிக்கொண்டிருந்ததை எந்தக்கனக்கில் சேர்ப்பது?

அல்லாஹ் இங்கு ஆறு நாட்கள் எனக்குறிப்பிடுவது நமது கணக்குப்படி அல்ல. ஏனெனில் அல்லாஹ்விடம் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றது. அவனது நிலையிலிருந்து கூறப்பட்டது. குர்ஆனில் காலப்பிழைகள் என்று கஷ்டப்பட்டு கண்டுபிடித்தது இவ்வளவுதான். அதிலும் ஒரு உருப்படியான வாதங்கள் இல்லை. இவரது ஒட்டு மொத்த வாதங்களும் தவாறான புரிதலின் அடிப்படையிலும் அரைகுறை ஆய்வின் அடிப்படையிலும் அமைந்ததுதான்.

வளரும் இன்ஷா அல்லாஹ் 

1 comments:

Dr.Anburaj said...

செங்கொடியின் கருத்துக்கள் மிக்க ஆழமானவை. சரியானதும் ஆகும்.தாங்கள்தான் One who refuses to submit his opinions to the test of free discussion is more in love with his own opinion than with truth என்பதற்கு இணங்க தவறான கொள்கையை அது குரானில் உள்ளது என்பதற்கான நியாயப்படுததுகின்றீர்கள். இருப்பினும் இன்றுமுதல் தங்களின் வலைதளத்தை படிக்கின்றேன்.

Post a Comment