செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு
பகுதி-01
அன்புள்ள சகோதரர்களே,
செங்கொடி என்பார் தனது செங்கொடியின் சிறகுகள் எனும் வலைத்தளத்தில் "இஸ்லாம்:கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே" எனும் தொடரை எழுதி வருகிறார். அதற்கு மறுப்பாக கடந்த இரண்டு மாதங்களாக நான் “செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் மறுப்புத்தொடரை எழுதி அவருக்கு இதை முறைப்படி அறிவிக்கவும் செய்தேன். அதன் விளைவாக எனது மறுப்பிற்கான மறுப்பை எழுதும் நோக்கில் “செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைக்களம்” எனும் பகுதியை ஆரம்பித்திருக்கிறார். அந்த மறுப்பின் மறுப்பாக இத்தொடர் இனி வெளிவரும் என்பதை வாசகர்களுக்கு அறிவித்துக்கொள்கிறேன்.
நான் எனது முதலாவது மறுப்பாக செங்கொடி நேரடி விவாதம் செய்வதாக அறிவித்திருந்தும் பின்னர் வாபஸ் வாங்கிவிட்டதைப்பற்றி விரிவாக அலசத்தேவயில்லை என்று எண்ணி ஒரு தகவலுக்காக சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அவர் எழுதிய முதலாவது மறுப்பின் மறுப்பிலிருந்து இதை விரிவாக எழுத வேண்டிய தேவையை விளங்கிக்கொண்டேன். இனி அதைப்பற்றிப்பார்ப்போம்.
முதலில்,இவர் இப்படியொரு தொடரை எழுதுவதற்கான காரணமாக அவர் குறிப்பிடுவதை கேளுங்கள்.
“இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் இந்தத்தொடர், பிஜேவுடன் நேரடி விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதல்ல. நிகழ் உலகின் சுரண்டல்களுக்கு எதிராக, அதிகார வர்க்கங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியுமா எனும் எண்ணத்தில், அனைத்து மதங்களுமே வர்க்கச் சுரண்டல்களுக்கு ஆதரவாகவும், அதை எதிர்க்கும் போராட்டங்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றன என்றாலும், நான் பிறந்த மதம் எனும் அடிப்படையில் இஸ்லாமிய புனிதங்களுக்கு எதிராக உண்மைகளைப் பேசுவதனூடாக சமூகப் போராட்டங்களுக்கு பயணப்படவைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதுதான்.
இவர் இவ்வளவு காலமும் எழுதிய தொடர்கள் மூலம் சுரண்டலகளுக்கெதிராக, அதிகார வர்க்கங்களுக்கெதிராக நடக்கும் போராட்டங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை கூட்டுவதற்கான விடயம் காணப்பட்டதா? இஸ்லாம் சுரண்டலகளுக்கு ஆதரவாக இருப்பதைப்பற்றியா இவ்வளவு காலமும் எழுதினார்? இஸ்லாமிய புனிதங்களுக்கெதிராக உண்மைகளைப்பேசுவதால் (?) சமூக போராட்டங்களுக்கு வழி வகுக்குமா? இவர் குறிப்பிடும் நோக்கத்திற்கும் இவர் எழுதுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. இன்னும் சொல்லப்போனால் அது பற்றி இதுவரை வாய்கூட திறக்கவில்லை.
இவர் நேரடி விவாததிற்கு ஒத்துக்கொண்ட காரணத்தைக்குறிப்பிடுகிறார். அது என்ன? எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது என்று பி.ஜே சொன்னதாலும் தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல்களாலும் நேரடி விவாதத்திற்கு ஒத்துக்கொண்டாராம். பின்னர் ஏன் வரவில்லை என்று கேட்கிறீர்களா? அதற்கும் பதில் சொல்கிறார் "ஆனால் எந்த நோக்கத்திற்காக நான் எழுதத்தொடங்கினேனோ அந்த நோக்கத்திற்கு நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே பொருத்தமானது என்பதோடு மட்டுமல்லாது, நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே சிறந்ததாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்" இந்த உணர்வு ஒத்துக்கொள்வதற்கு முதல் வரவில்லையா? என்றெல்லாம் கேட்கக்கூடாது! இது காலம் கடந்து பிறந்த ஞானம் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.
''என்னுடைய அந்த உணர்தலை வெளிப்படுத்தும் விதமாகவும், எப்போது விவாதம் செய்யப்போகிறீர்கள் என தொடர்ந்துகொண்டே இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் நான் ஏன் பிஜேவுடன் நேரடி விவாதம் செய்யவேண்டும் எனும் இடுகையாக வெளியிட்டேன். எது நோக்கத்திற்கு சரியானது? எது சிறப்பானது? என்பதில் நான் நின்றுகொண்டிருப்பதால் வடிவத்திற்கு முதன்மையளிக்கவில்லை.''
வடிவத்திற்கு முதன்மை அளிக்கவில்லையென்றால் ஏன் நேரடி விவாதம் செய்ய் விரும்பவில்லை என்று இடுகையிட்டு எழுத்து விவாதம் செய்ய நான் ரெடி என்றும் நேரடி விவாததிற்கு தயாரில்லை என்றும் கூற வேண்டும்? வடிவத்திற்கு முதன்மையளிக்கவில்லை என்றால் ஒத்துக்கொள்ளவேண்டியதுதானே!
''என்னுடைய அந்த உணர்தலை வெளிப்படுத்தும் விதமாகவும், எப்போது விவாதம் செய்யப்போகிறீர்கள் என தொடர்ந்துகொண்டே இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் நான் ஏன் பிஜேவுடன் நேரடி விவாதம் செய்யவேண்டும் எனும் இடுகையாக வெளியிட்டேன்."
நான் ஏன் பி.ஜேவுடன் நேரடி விவாதம் செய்ய விரும்பவில்லை என்று எழுதிய இவர்து கட்டுரையில் காணப்படும் அபத்தங்களை பார்ப்போம்
அபத்தம் 1.
நேரடி விவாதத்தில் விளக்கங்களை தருவதற்கு குறுகிய கால அவகாசம் இருப்பதால் இருக்கும், விளக்கங்களையே சிறப்பாக எடுத்துவைக்க இயலாமல் போகலாம்; மட்டுமன்றி உடனடியாக எதிர்வாதம் புரிய வேண்டியதிருப்பதால் துல்லியமான, தெளிவான விளக்கங்களை தரவியலாமல் போகலாம்.
அழகிய பதில்:
விவாததில் குறுகிய நேரம் போதாவிடின் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளாலாம். இதை ஒப்பந்த்தத்தில் தீர்த்துக்கொள்ளலாம். உடனடியாக விவாதம் புரிய முடியாவிட்டால் 5 அல்லது 10 நிமிட இடைவெளியின் பின் வாதத்தைத்தொடங்கும் ஏற்பாட்டை செய்துகொள்ளலாம். நேரடி விவாத்ததில் என்னென்ன குறை இருப்பதாக கருதுகிறாரோ அவற்றை ஒப்பந்தம் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
அபத்தம் 2.:
இணைய விவாதத்தை தவிர்ப்பதற்கு கூறப்படும் இன்னொரு காரணம், ஓரிரு நாட்களில் முடித்துவிடலாம், இணையத்திலென்றால் நீண்டுகொண்டே செல்லும். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்; விவாதம் என்பது ஒரு பிரச்சனை குறித்தோ அல்லது குற்றம் குறித்தோ ஆன விசாரணை அல்ல. கொள்கை குறித்தான விவாதம் உடனடி தோசையைப்போல் ஓரிரு நிமிடங்களில் வெந்துவிட வேண்டுமென நினைப்பதும் ஒரு விதத்தில் அறியாமை தான். நம்பிக்கையோடு ஊடாடி நிற்கும் ஒன்றை சில நாட்களில் உதிரவைத்துவிட முடியும் என்பதும் மத நம்பிக்கையைப் போன்றதொரு மூட நம்பிக்கையாகத்தான் இருக்கமுடியும். எது சரி என்பதை முடிவு செய்ய வேண்டுமென்றால் அந்தக் கொள்கைகளின் எல்லாத் தளங்களிலும் ஊடுருவிச் செல்லும் விவாதம் நடத்தினால்தான் முடியும். ஆண்டுக் கணக்கில் நீண்டாலும் கூட, ஆழமாகவும், விரிவாகவும், விளக்கமாகவும், செய்யப்படும் விவாதமே அந்த இலக்கை நோக்கி எட்டுவைக்கும். அதற்கு எந்த விதத்திலும் நேரடி விவாதம் ஏற்றதல்ல.
அழகிய பதில்:
நடுநிலையாக சிந்திப்பவன் எடுத்துவைக்கும் வாததைத்தான் பார்ப்பான். இவ்வளவு காலம் நம்பி இருந்தது நம்பவில்லை என்று சிந்திக்கமாட்டான். பிரச்சைனையை தீர்ப்பதற்கு பல ஆண்டுகள் கழிந்தாலும் கழியுமே தவிர ஒரு கொள்கை சரியா தவறா என்பதற்கு நீண்ட நாள் தேவயில்லை. அவன் மனதில் மாற்ம் ஏற்படுத்துவது நம்மால் முடியாது. இது சரியா தவறா என்று நிரூபிப்பதற்காகத்தான் விவாதம் நடிபெறும்.
அபத்தம் 3
இல்லை, இது சரியில்லை, நேரடி விவாதம் தான் சரியானது என நினைப்பவர்கள், இதுவரை நடத்திய விவாதங்களில் ஒரு முடிவை வந்தடையமுடிந்ததா என்பதை நினைவுபடுத்திக் கூறட்டும். இரண்டு நாள் கச்சேரி நடத்திவிட்டு உன் முடிவு உனக்கு என்முடிவு எனக்கு என்று செல்வதற்கு விவாதம் எதற்கு?
அழகிய பதில்:
நேரடி விவாதத்தில் முடிவு எட்டவில்லை என்று கூறினால் இவரிடம் அதே பாணியில் நாமும் கேட்கிறோம், இணைய விவாதம் சிறந்தது என்றால் இதுவரை தாங்கள் நடத்திய விவாதங்களில் ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கிறதா? இருவர் விவாதம் நடத்திக்கொண்டிருக்கும் போது மூன்றாவதாக ஒருவர் வந்து கலந்து கொள்வார். பின்னர் வரிசையாக பலரும் வருவர் இறுதியில் ஆரம்பித்த இருவருமின்றி வேறு இருவர் வாதம் நடத்திக்கொண்டிருப்பர். இதை விட நேரடி வாதம் பல மடங்கு சிரந்தது!. எந்த விவாதமாக இருந்தாகும் சிந்திக்கும் மக்கள்தான் ஒரு முடிவை எடுப்பர்!
அபத்தம் 4.
பிஜே அவர்களின் இணைய தளத்தில் விவாதம் குறித்த விளக்கமொன்று இப்படிக் குறிப்பிடுகிறது, //கிறிஸ்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்// இது ஏற்கத்தக்க நிலையல்ல. இவர்கள் யாருடனும் விவாதிப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதால், இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்வதற்கு முன்னால் இவர்களுடன் விவாதம் செய்திருக்க வேண்டும் என்பது சரியான நடைமுறையல்ல. மதம் என்பது தனிப்பட்ட ஒன்றல்ல, அதுகுறித்து விமர்சனம் செய்ய எவருக்கும் உரிமையுண்டு. அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல விரும்பினால் அவர்களுக்கு உகந்த எந்த ஊடகத்திலும் அதைச் செய்யலாம். அந்த விமர்சனங்களுக்கு இந்த வழியில்தான் பதில் சொல்ல வேண்டும் என எப்படி நிபந்தனை விதிக்க முடியாதோ அதுபோலவே நேரடி விவாதம் செய்ய முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்க முடியாது.
அழகிய பதில்:
இஸ்லாம் குறித்து விவாதம் செய்வதற்கு முன்னால் இவர்களுடன் விவாதம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. இஸ்லாம் குறித்த விமர்சனங்களயும் விவாதங்களையும் எதிர்கொள்ள இஸ்லாமியர்களின் சார்பில் ஒரு கூட்டம் தயாராகவுள்ளபோது அவர்களுடன் விவாதம் செய்வதுதான் ஏற்றது. மாறாக விவரமற்ற மக்களிடம் போய் கதையளப்பதில் எந்த பயனுமில்லை என்றுதான் கூறப்பட்டுள்ளது. இதை மற்றவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கக்கூடாது என்பது பொருளல்ல.
அபத்தம் 5
நேரடி விவாதங்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன? நிச்சயம் விளம்பரங்களாகத்தான். எந்தத் தரப்பிலிருந்தும் மற்றத்தரப்பை சலனப்படுத்தக் கூடச் செய்யாத விவாதங்களையும் நாங்கள் வென்றுவிட்டோம் என அறிவித்துக்கொள்வதன் மூலம் மிகைமதிப்பை ஏற்படுத்தி அறிவிக்கப்படாத விளம்பரங்களாய் செயல்படுத்துவதுதான் நேரடி விவாதங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எந்த மாற்றத்தையும் செய்ய அதிகாரமில்லாத ஒன்றைப் பற்றி விவாதம் நடத்த முடியுமா? எதைத்தொடுத்தாலும் அதில் எங்கள் நிலைபாடு சரியானதுதான் என விளக்கம் கொடுக்க மட்டுமே முடிந்த ஒரு இடத்திலிருந்து தன்னிலை விளக்கம் தான் செய்யமுடியுமேயன்றி விவாதம் செய்யமுடியாது. எனவே விவாதம் என்பதே ஒரு உத்திதான். தவிரவும் இந்த விவாதங்கள் வியாபார ரீதியிலும் பயன்படுத்தப்படுகின்றன. நான்கு டிவிடிக்கள் அடங்கிய திகவுடனான விவாதத்தை சௌதியில் 20 ரியாலுக்கு(தோராயமாக 250 ரூபாய்) விற்கிறார்கள். ஆக செம்மையான விளம்பர, வியாபார திட்டமிடல்களுடன் நடத்தப்படும் விவாதங்களில் பங்கேற்பது அறிதல் எனும் வழியிலன்றி, துணைபோதல் எனும் வழியிலேயே அமையும்.
அழகிய பதில்:
வெல்லாத விவாததை வென்றுவிட்டோம் என்பதால் மக்கள் நம்பிவிடப்போவதில்லை. மாற்றம் செய்ய வேண்டுமென்றால் அதை நிரூபிக்க வேண்டும். முடியாவிட்டால் மூடிக்கொண்டு இருக்க வேண்டும். சரியான நிலைப்பாட்டிலுள்ளவர்கள் சரி என்றுதான் வாதிடுவார்கள். அது தவறு என்று நிரூபிக்க முடியாவிடில் தம்து இயலாமைஅயி ஒப்புக்கொள வேண்டுமேயள்ளாமல் இவர்கள் என்ன சொன்னாலும் மாற்றிக்கொள்ளமாட்டார்கள் என்று உளறிக்கொட்டக்கூடது. ஒரு சிடியை விற்கும் போது அதற்கு செலவழிக்கப்பட்ட தொகையை ஈடுகட்டவேண்டிய தேவை இருக்கிறது. அநியாயத்திற்கு சிடி விற்பதில்லை. இதுதான் பிரச்சனை என்றால் தங்களுடன் நடைபெறவிருக்கும் விவாத(ஒத்துக்கொண்டால்) சிடியினை இலவசமாகவே உழைக்கும் ஏழை மக்களுக்கு கொடுக்கிறோம்!
அபத்தம் 6:
யாருடன் விவாதம் செய்வது? உழைக்கும் மக்களின் இல்லாமையை பயன்படுத்தி அவர்களை மதங்களின் பிடியில் ஒட்டச்செய்யும் மத அமைப்புகளுடன் விவாதம் செய்வதைவிட அந்த மக்களிடம் நேரடியாக அவர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளினூடாக சமூகத்தை உணரச்செய்யும் விவாதங்களே தேவையாகவும் இன்றியமையாததாகவும் இருக்கின்றன. அந்த வகையில் விவாதமல்ல அம்பலப்படுத்தல்களே அவசியமாக இருக்கிறது. அந்த அமபலப்படுத்தல்களுக்கு பதில் கூற விரும்பினால் எங்கும் எதிலும் கூறலாம். மாறாக நேரடி விவாதம் எனும் திரைகளின் பின்னே மறைந்துகொண்டு பதில் கூறுவதிலிருந்து நீண்ட நாள் தவிர்க்கவியலாது.
அழகிய பதில்:
விவாதம் என்பதும் அம்பலப்படுத்தல் என்பதும் விவரமுள்ளவர்களுடன் செய்தால்தான் அதில் அர்த்தமிருக்கும். உழைக்கும் மக்களில் விவரமுள்ளவர்களுமிருப்பார்கள் அதிகம் விவரமற்றவர்களும் இருப்பார்கள். விவரமுள்ளவர்களிடம் இவர்களின் வாதம் செல்லாது. உழைக்கும் மக்களிற்கு தெளிவு படுத்துவதென்று வைத்துக்கொண்டாலும் இணைய விவாதம் ஒத்துவராது! ஏன்? நேரடி விவாதத்திற்கு செலவழிக்கும் நேரம், பொருளாதாரத்தை விட இணைய விவாததிற்கு செலவழிக்கும் நேரமும் பொருளாதாரமும் அதிகம்!. இதில் பாமரர்களுக்கு இணைய விவாதத்தை பார்க்கவும் முடியாது! இவர்களுக்கு மிகப்பொருத்தம் நேரடி விவாதம்தான். நேரடி விவாதத்தில் கலந்த்கொள்வதென்பது துணிவுடையவர்களின் களம்! மாறாக மறைந்துகொள்வதற்கான திரை கிடையாது.
இவர் நேரடி விவாதத்திற்கு எதிராக குறிப்பிடுவது எதுவும் பொருந்தவில்லை என்பது தெளிவு. இவரது வாதங்கள் அனைத்தும் ஆடத்தெரியாதவன், அரங்கத்தில் பிழை உள்ளது என்று கூறிய கதையாகவுள்ளது!
இதுதான் விவாதம் சம்பந்தப்பட்ட விடயம். அடுத்து,
விமர்சனத்தை எதிர்த்து வளர்வது சரியான வளர்ச்சியல்ல. விமர்சனத்தை உள்வாங்கி அலசிப் பார்த்து தன்னுள் தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்வதே சரியான வளர்ச்சி.
விமர்சனத்தை எதிர்த்துவளர்வதென்றால் அதை ஒதுக்குவது என்பதல்ல! தன்னை நோக்கிவரும் விமர்சனத்தை எதிர்கொண்டு எந்த விமர்சனமும் சரியல்ல என்று நிரூபிப்பதுதான்!. இது இஸ்லாத்தை தவிர வேறு எதற்கும் பொருந்த்தாது. விமர்சனததை உள்வாங்குவது கமியூனிசத்திற்கும் ஏனையவற்றுக்கும்தான் பொருந்தும் அதுவும் தற்காலிகத்தீர்வைத்தான் தரும்!.
இறுதியாக,
பிஜே அவர்கள் பதிலில் தென்படுவதாக நான் குறிப்பிட்ட அதே தொனி நண்பரின் மறுப்பிலும் தொழிற்படுகிறது. மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி.
தவறாக இருப்பின் மாற்றிக்கொள்வதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஒரு விடயம் தனக்கு பிடிக்காவிடின் மற்றவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது அறியாமை!
1 comments:
இந்த இடுகையின் மறுப்பு செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டுவிட்டது. ஆர்வமுள்ளவர்கள் பார்வையிடலாம்
http://senkodi.wordpress.com/2011/08/24/senkodi-islam-8/
Post a Comment