Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, January 1

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர் - 06

ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும் எனும் தொடருக்கான மறுப்புத்தொடராக இது வெளியாகிறது. செங்கொடியின் இத்தொடரினை முழுமையாக வாசிக்க இங்க க்ளிக் செய்யவும்.

செங்கொடியின் இத்தொடரில் மறுப்பளிப்பதற்குரிய விடயங்கள் அவ்வளவாக இல்லை. ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாற்றை கூடுதல் குறைவுடன் கூறியுள்ளார் அவ்வளவுதான். ஆனாலும் அவரது சில கேள்விகளுக்கு பதிலும் அவருடைய தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
செங்கொடியின் வாதம்
முகம்மது இறந்த பிறகான முதல் நூறு ஆண்டுகளில் உள்ள அறிவிப்பாளர்களின் தன்மை எப்படி அறியப்பட்டது? ஏனென்றால் ஹதீஸ்களை திரட்டும் பணி நூறு ஆண்டுகளுக்குப்பிறகுதான் தொடங்குகிறது. அதன் பிறகு தான் ஹதீஸ் ஆசிரியர்கள் அறிவிப்பாளர்களின் குண நலன்களைப்பற்றிய குறிப்புகளை திரட்டியிருக்கிறார்கள்.
நமது பதில்
உலகத்தில் எந்த மனிதனின் வரலாறு குறித்தும் என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும். காந்தி, நேரு, காரல் மார்க்ஸ் மற்றும் யாராக இருந்தாலும் அவர் கூறியதாக செய்ததாக எதை வேண்டுமானாலும் விட்டு அடிக்க முடியும். அது சரியா தவறா என்று உருதி செய்ய எந்த உரைகல்லும் கிடையாது. ஆனால் உலக வரலாற்றில் முஹம்மது நபி குறித்து மட்டும் தான் யார் எதை சொன்னாலும் அது சரியா தவறா என்று கண்டு பிடிக்க சரியான உரைகல் உண்டு. உலக வரலாற்றில் எவருக்கும் கிடைக்காத இந்தத் தனிச்சிறப்பு இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது என்று வரலாறு வியந்து நிற்கிறது. இதை தோராயமானது என்று சொல்ல காழ்ப்புணர்வும், ஊட்டப்பட்ட கம்யூனிச போதையும் தவிர இதற்குக் காரணமாக இருக்க முடியாது. (கம்யூனிசத்தின் முகத்திரையை நாம் கிழிக்கும் போது இது தெளிவுபடுத்தப்படும்)
முஹம்மது நபி இறந்த பின் வந்த முதல் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்தவர்களின் நம்பகத் தன்மை அவர்களிடமிருந்து அறிவிக்கும் நபரிடமிருந்தும் அவரை அறிந்து வைத்திருந்த நபர்களிடமிருந்தும் அவர்களின் உறவினகளிடமிருந்தும் இன்னும் பல வழிகளில் அறியப்படும். இதற்காக இப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பல ஊர்களுக்கும் சென்று அவர்களது விபரங்களை திரட்டி எடுத்தனர். இதில் ஒரு நபரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காவிடின் அல்லது அப்படி ஒரு நபர் இல்லை என்று தெரியவந்தால் அவர் சம்பந்தமாக வரும் அந்த ஹதீஸ் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு இவர் கேட்பதற்கு காரணம் ஹதீஸின் நம்பகத்தன்மை உறுதியானதல்ல என்று இவர் நினைப்பதுதான். இதை ஹதீஸ்களின் நம்பகத்தன்மை என்பது தோராயமானது தான். எனும் இவரது கூற்றிலிருந்து அறிந்து கொள்ளமுடியும். இக்கூற்று ஏனையவர்களின் வரலாற்றுக்கு பொருந்தினாலும் முஹம்மது நபியின் வரலாற்றுக்கு இது பொருந்தாது. ஏன்? முஹம்மது எனும் ஒரு தனி நபரின் வரலாற்றை (வரலாறு என்பது நபியவர்களின் ஹதீஸையும் உள்ளடக்கும்) பாதுகாப்பதற்காக சுமார் ஐந்து இலட்சம் பேரின் வரலாற்றுக்குறிப்பு இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டுவருகிறது. இப்படியிருக்கும் போது இவை உறுதியானதல்ல என்று எப்படி கூறமுடியும்? இதை இவர் அறியவில்லையா? அல்லது அறிந்தும் அறியாதவாரு காட்டிக் கொள்கிறாரா

செங்கொடியின் வாதம்
அடுத்து, இரண்டு ஹதீஸ்களைக்குறிப்பிட்டு ஹதீஸ்களின் உள்ளடக்கத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விளக்குகிறார்ஆனால் அந்த ஹதீஸோ அல்லது அந்த விளக்கமோ சரியானதல்ல என்கிறார்
அவர் குறிப்பிடும் முதலாவது ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனசாட்சி அடிப்படையில் நடந்து மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்காக நற்காரியங்களை செய்கிறவன் அறிவாளியாவான். தன் உள்ளத்தை மனோ இச்சையில் விட்டுவிட்டு அல்லாஹ்விடத்தில் ஆசைப்படுகிறவன் வீணனாவான்.
அவர் குறிப்பிடும் இரண்டாவது ஹதீஸ் 100 கொலை செய்த ஒருவருக்கு அல்லாஹ்வால் மன்னிப்பளிக்கப்பட்ட புகாரியில் இடம்பெரும் செய்தியை குறிப்பிடுகிறார்.குறிப்பிட்டு ஒரு விளக்கத்தையும் அளிக்கிறார் அது என்ன?
மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் அதிகாரபூர்வமான தொகுப்புகளில் உள்ளது. முதலாவது திர்மிதியிலும் இரண்டாவது புஹாரியிலும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றொன்று ஏற்றுக்கொள்ளப்படாதது. திர்மிதி, நவவி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று குறிப்பிட்டிருந்தாலும் முதல் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாதது. ஆனால் இரண்டாவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவது ஹதீஸில் நூறு கொலைகள் என்று வந்தாலும் அல்லாவின் மன்னிக்கும் தயாள குணத்திற்கு மெருகூட்டுவதாய் அமைந்துள்ளது. ஆனால் முதல் ஹதீஸில்மனசாட்சி அடிப்படையில் நடந்துஎன்பது அல்லாவின் எல்லைக்கு அப்பாற்பட்டு போகும்கூறு இருக்கிறது. ஆக இந்த இரண்டு ஹதீஸ்களின் ஏற்பிலும் உள்ளடக்கம் தீர்மானகரமான பங்காற்றியிருக்கிறது.
நமது பதில்
இவரது மேற்படி விளக்கம் சரியானதா? இவர் குறிப்பிடும் மேற்கண்ட இரு ஹதீஸ்களும் ஏற்றுக்கொள்ளப்படாதவை. ஏன்? முதல் ஹதீஸ் அல்லாவின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்று மறுப்பதாக காரணம் கூறுகிறார். ஆனால் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனப்படுகிறது. இதில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் உள்ளனர். சுப்யான் பின் வகீவு, அபூபக்ர் பின் அபீ மர்யம் ஆகியோர். இது அறிவிப்பாளர் வரிசையே பலவீனமாய்ப் போய்விடுவதால் கருத்தைக் கவனிக்கவேண்டிய அவசியம் கிடையாது. அடுத்து இவர் குறிப்பிடும் 100 கொலை செய்து மன்னிக்கப்பட்ட ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றிருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு முரண்படுவதால் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அடுத்து, கருத்தைக்கவனித்து ஹதீஸகள் எடைபோடப்படுவதற்கு சமகால எடுத்துக்காட்டாக முஹம்மது நபிக்கு சூனியம் செய்யப்பட்டது சம்மந்தமாக கூறப்படும் கருத்தை குறிப்பிடுகிறார். (இந்த ஹதீஸை பலவீனமென்பதற்கு கூறப்படும் நியாயங்களே 100 கொலை செய்தவன் சம்பந்தப்பட்ட ஹதீஸிலும் பொருந்தும் என்பதை நினவில் கொள்க!.)
செங்கொடியின் வாதம்
இங்கு ஹதீஸ் ஆசிரியர்கள் வகுத்த விதிமுறைகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஆனால் அந்த ஹதீஸின் உள்ளடக்கமான கருத்து விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஏற்பதா? மறுப்பதா? என விவாதிக்கப்படுகிறது.
நமது பதில்
இது சம்பந்தமாக இவர் குறிப்பிடும் மேற்கண்ட விடயம் தவறு. ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்பட்டால் மறுக்க வேண்டும் என்பது ஹதீஸ்கலை விதிதான். உதாரணத்திற்கு சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
இமாம் ஜுர்ஜானியின் கூற்று.
ஆதாரபூர்வமான் ஹதீஸ் எதுவென்றால் அதில் மட்டரகமான் வார்த்தைகள் இருக்காது.அதன் அர்த்தம் குர் ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.
நூல்: அத்தஃரீஃபாத், பாகம்:1 பக்கம்:113
இமாம் சுயூத்தியின் கூற்று
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று: விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக் இருப்பதாகவும். அல்லது உறுதியான குர் ஆனுடைஅய கருத்திற்கு எதிராக அந்தஸ் செஉதி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ் நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.
நூல்:தத்ரீபுர்ராவி, பாகம்:1,பக்கம்276
இதுபோல் பல சான்றுகளுள்ளன. ஒரு ஹதீஸ் சரியா தவறா என்ரு விவாதிக்கும்போது அந்த ஹதீஸ் பற்றிய விடயங்கள்தான் விவாதிக்கப்படும். இதனால் ஹதீஸ் கலையில் இப்படியொரு விதியுள்ளது என்றாகிவிடாது. (ஹதீஸ்கலை சம்பந்தமாக அறிய விரும்பும் சகோதரகள் இந்த லிங்கினை பார்க்கவும்! பார்க்க மேலும் பார்க்க)

செங்கொடியின் வாதம்
இவைகளின் மூலம் விளங்குவதென்ன? ஒரு ஹதீஸ் என்ன கூறுகிறது என்பது தான் மையப்படுத்தப்பட்டு ஏற்பதும் மறுப்பதும் தீர்மானிக்கப்படுகிறது, அவற்றை மறைப்பதற்குத்தான் அறிவிப்பாளர் வரிசை போன்ற விதிமுறைகளெல்லாம் என்பது தெளிவு.
நமது பதில்
ஹதீஸின் கருத்து மையப்படுத்தப்படுவது உண்மைதான். அந்த கருத்து குர்ஆனுக்கு முரண்படுகிறதா இல்லையா என்றுதான் மையப்படுத்தப்படும். எனது அறிவுக்கு உடன்படுகிறதா இல்லையா என்று மையப்படுத்தப்படுவதில்லை. பொத்தாம்பொதுவாக அவரவர் அறிவுக்கேற்றவகையில் மறுக்கலாம் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அறிவிப்பாளர் வரிசை என்பது இதை மறைப்பதற்காகத்தான் என்பது உண்மையாகவிருந்தால் எதுவெல்லாம் குர்ஆனுக்கு முரண்படுகிறதோ அவையெல்லாம் அறிவிப்பாளர் வரிசையிலும் குறையுள்ளது என்றும் எதுவெல்லாம் குர்ஆனுக்கு முரண்படாதோ அது அறிவிப்பாளர் வரிசையில் சரியாக இருக்கும் என்று வரும். ஆனால் அப்படி இருப்பது கிடையாது. அறிவிப்பாளர் வரிசயில் குறையுள்ள ஹதீஸ்களில் பெரும்பாலான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாதவையே.
செங்கொடியின் வாதம்
அடுத்து,
முகம்மதின் தலையில் எத்தனை நரைமுடி இருந்தது என்று எண்ணிச்சொல்லும் அளவுக்கு ஹதீஸ்கள் அவரின் வாழ்க்கையை படம்பிடித்துக்காட்டுகின்றனஎன்று........ என்பதெல்லாம் உயர்வு நவிற்சி தான்.
நமது பதில்
முஹம்மதின் தலையில் எத்தனை நரை முடி இருக்கிறது என்று எண்ணிச்சொல்லுமளவிற்கு ஹதீஸ்கள் உள்ளதென்பது ஒன்றும் உயர்வு நவிற்சி கிடையாது. அது உண்மையானதுதான். நபியவர்களின் தலையில் 20 நரைமுடிகூடைல்லை என்று புகாரியில் 3547,3548ம் ஹதீஸாக பதியப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் உள்ளதுதான் சொல்லப்படும் உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றாம் என்பன கூறப்படாது. அவ்வாறு கூறுவது குற்றம்.
செங்கொடியின் வாதம்
இறுதியாக,
குரானின் மொத்த வசனங்களில் சில மக்காவில் அருளப்பட்டவை, சில மதீனாவில் அருளப்பட்டவை; இன்னும் சில வசனங்கள் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவிலா என்று முடிவுசெய்ய இயலாதவை. குரான் வசனங்களிலேயே மக்காவிலா மதீனாவிலா எங்கு அருளப்பட்டது என்பதை ஹதீஸ்களின் துணையோடு தீர்க்க முடியவில்லை.
நமது பதில்
எது ஹதீஸின் அடிப்படையில் தீர்க்க முடியவில்லையோ அது தேவை இல்லை என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு. அனைத்து குர்ஆன் வசனங்களும் மக்கவில் அருளப்பட்டதா மதினாவில் அருளப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள எந்த அவசியமுமில்லை. இதை அறிந்து கொண்டு எந்த சட்டமும் வகுக்கப் போவதில்லை. மிகச் சில வசங்களுக்கு இது தேவைப்படும். அதற்கு ஆதாரம் உள்ளது. அல்லாஹ் ஒருவன் என்பது மக்காவில் இறங்கினால் என்ன? மதீனாவில் இறங்கினால் என்ன? இதைக் கூட இவரல் விளங்க முடியவில்லை குர்ஆன் வசனம் அருளப்பட்டதா இல்லையா என்பதே கவனிக்க வேண்டும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்

0 comments:

Post a Comment