Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Monday, December 27

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே
தொடர்-04

முஸ்லிம்களின் வாழ்க்கை வழிகாட்டியாகவும் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதமுமாக நம்பப்படுவது திருக்குர்ஆன். இதில் முஸ்லிம்கள் மிகவும் உறுதியாக உள்ளனர். இதில் எப்படியாவது ஒரு சந்தேகத்தை கிளப்பி முஸ்லிம்களை குழப்பி விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டு "குரானின் சவாலுக்கு பதில்" என்ற தொடரை எழுதியிருக்கிறார் செங்கொடியார். அதைப்பற்றி இத்தொடரினூடாக பார்ப்போம்.

குரானின் சவாலுக்கு பதில் என்ற தொடரை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

திருக்குர்ஆன் தன்னை ஒரு இறை வேதம் என்று நிரூபிப்பதற்காக இரண்டு விடயங்களை கூறுகின்றது.

1. இதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை.
2. இதைப்போல் யாரும் இயற்ற முடியாது என்ற அறைகூவல்.

இந்த இரண்டு விடயங்களையும் செங்கொடி உடைத்திருக்கிறார் (?). அது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

இதில் முரண்பாடு இல்லை என அறிவிப்பதோடு மட்டுமல்ல மனிதர்களுக்கு எதிராக ஒரு சவாலும் விடுகிறது. இதைப்போல் ஒரு அத்தியாயத்தையேனும் உங்களால் கொண்டுவர முடியுமா? என்பதுதான் அது.
ஆக குரான் நான் அனுப்பியது தான் என்று நிரூபிப்பதற்கு ஆண்டவன் நேரடியாக மனிதர்களிடம் முன்வைக்கும் சான்றுகள் இவை இரண்டுதான் (மறைமுகமாக நிறைய இருப்பதாக இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள் அவைகளை பின்னர் காண்போம்). இதில் முரண்பாட்டை காண முடியுமா? என்பதும் இதுபோல் ஒன்றை கொண்டுவர முடியுமா? என்பதும். மெய்யாகவே குரான் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டுதான் இருக்கிறதா?
சாதாரணமாக, வேத வசனங்களுக்கு பொருள் கூறுவோர், முரண்பாடோ, பிழையோ அமைந்துவிடாவண்ணமே மொழிபெயர்ப்பர். அடைப்புக்குறிக்குள் விளக்கங்கள் எழுதிவைத்து அது சுலபமாக புரிந்து கொள்வதற்கான ஏற்பாடு என்று சொல்லிக்கொள்வர். ஆனால், குறிப்பிட்ட ஒரு வசனத்தை வாசிக்கும் ஒருவர் எப்படி அந்த வசனத்தை புரிந்து கொள்ளவேண்டுமோ அதற்கேற்ற வகையில் தான் அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் வழிகாட்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு வசனம் எப்படி புரிந்து கொண்டால் முரண்பாடோ, பிழையோ இல்லாதவண்ணம் தோற்றமளிக்குமோ அப்படி புரிந்துகொள்வதற்கு உதவியாகத்தான் அந்த அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, கொலை செய்துவிட்டால் அதற்கு பகரமாக பழிவங்குவது குறித்த ஒரு வசனம் 2:178 இப்படி இருக்கிறது,
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை……”
இந்த வசனத்தை மொழிபெயர்ப்புகளில் பார்த்தால் அடைப்புக்குறியோடு சேர்த்து இப்படி இருக்கும்,
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை……”
அடைப்புகுறி இல்லாதபோது உள்ள வசனத்தின் பொருளும், அடைப்புக்குறியோடு உள்ள வசனத்தின் பொருளும் எப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன என்று பாருங்கள். குரானிலுள்ள பெரும்பாலான வசனங்களின் பொருள் இப்படி அடைப்புக்குறிக்குள் அடைபட்டுக்கிடப்பதுதான்.

குர்ஆனை மொழிபெயர்க்கும் போது அடைப்புக்குறிக்குள் விளக்கம் எழுதுவதற்கு ஒரு அற்புதமான உள்நோக்கம் கற்பிக்கிறார். அது என்ன? அடைப்புக்குறி பயன்படுத்துவதால் குர்ஆனில் உள்ள முரண்பாடுகள் தெரிவதில்லை என்பது. இது அப்பட்டமான பொய். குர்ஆன் அறபு மொழியில் உள்ளது; நாம் தமிழ் பேசுகிறோம். அறபு மொழியின் இலக்கிய நடையும்,மொழி நடையும் தமிழ் மொழியிலிருந்து மாறுபட்டது. அறபிலுள்ளதை அப்படியே(அறபு மொழி பிரகாரம்) மொழிபெயர்ப்பு செய்ய இயலாது! இதனால் தமிழ் மொழி நடைக்கேற்றவாரு மொழியாகம் செய்யும்போது சில இடங்களில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும், வாசிப்பவருக்கு இலகுவாக புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் அடைப்புக்குறியினுல் சில சொற்கள் இடப்படும். மாறாக முரண்பாடை மறைப்பதற்கு கிடையாது. சரி, இவர் குறிப்பிடும் அந்த முரண்பாட்டை (?) பார்ப்போம்.

2:178ம் வசனத்தை குறிப்பிட்டு அடைப்புக்குறி இல்லாதபோது இப்படி இருக்கிறது, அடைப்புக்குறி உள்ளபோது எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா? என்று மொட்டையாக கூறுகிறார்.   ஆனால் என்ன முரண்பாடு உள்ளது என்று குறிப்பிடவில்லை!. முரண்பாடு உள்ளது என்று குறிப்பிட்டால் போதும் என்று நினைத்துவிடார்போலும்! முதலில் என்ன முரண்பாடு என்பதை தெளிவு படுத்துவதுதான் சரியான முறை!. 2:178ம் வசனம் கொலைக்குப்பதிலாக பழிவாங்குவதைப்பற்றி குறிப்பிடுகிறது.(இதை அவரும் ஒத்துக்கொள்கிறார்) இந்த வசனத்திற்கு சகோதரர் பி.ஜே அவர்கள் மொழி பெயர்த்த விதத்தினை எடுத்துக்காட்டியுள்ளார்.(விமர்சனம் செய்யும்போது அந்த வசனத்தை முழுமையாக வெளியிட்டிருந்தால் புட்டு வெளியாகியிருக்கும்.)  ஆனால் ஜான் ட்ரஸ்ட் வெளியிட்ட தர்ஜுமாவில் இதே வசனம் எப்படி மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது என்பதை பாருங்கள்!

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;அடிமைக்கு அடிமை;பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும்,நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும்.இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

இந்த மொழிபெயர்ப்பில் இவர் குறிப்பிட்ட அடைப்புக்குறி விளக்கத்தை காணோம்!. ஆனால் இந்த இரண்டுக்குமிடையே என்ன முரண்பாடு இருக்கிறது?(பி.ஜேயின் மொழியாக்கத்திற்கு கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன் வெளியான தர்ஜுமா இது என்பதை கவனத்திற்கொள்க!) அடைப்புக்குறி இட்டு இந்த முரண்பாட்டை (?) மறைதிருக்கிறார்கள் என்கிறார். இவர் (ஜான் ட்ரஸ்ட்அடைப்புக்குறி இடவில்லையே இதை நேரடியாக எடுத்துக்காட்டியிருக்கலாமே!இதற்கென்ன சொல்லப்போகிறார்?இந்த தர்ஜுமாவை விட எளிய முறையிலும், சிறந்த முறையிலும் மொழிபெயர்க்கும்போது விளங்கிக்கொள்வதற்காக போடப்பட்டதையே விளங்க முடியவில்லை எனில் இவருடைய அறிவுக்கூர்மை எத்தகையது என்பதை இலகுவாக அறிந்துகொள்ளலாம். இது அவருடைய எடுத்துக்காட்டு! எடுத்துக்காட்டு ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. அடுத்து இவருடைய நேரடி முரண்பாட்டை (?) எடுத்துக்கொள்வோம்!

குரான் 2:29 “அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்
இந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன? அல்லா முதலில் பூமியை படைத்து அதன்பின்னர் பூமியிலுள்ள அனைத்தையும் படைத்து அதற்கும்பின்னர் வானத்தை படைத்தான். இதே பொருளில் அதாவது முதலில் பூமி பின்னர் வானம் எனும் பொருளில் இதைவிட இன்னும் தெளிவாக குரான் அத்தியாயம் 41 வசனங்கள் 9லிருந்து 12வரை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக முதலில் வானம் பின்னர் பூமி என்னும் பொருளில் குரான் அத்தியாயம் 79 வசனங்கள் 27 லிருந்து 31 வரை சொல்லப்பட்டிருக்கிறது,
படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா அல்லது வானமா? அதை அவன் நிருவினான். அதன் முகட்டை உயர்த்தி சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும் மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்
முதலில் உள்ள வசனங்களில் பூமி முதலில் வானம் பின்னர் என்று கூறியதற்கும் பின்னர் உள்ள வசனங்களில் வானம் முதலில் பூமி பின்னர் என்று கூறுவதற்கும் இடையில் இருப்பது முரண்பாடில்லையா? எது முதலில் படைக்கப்பட்டது(!) பூமியா? வானமா?

79ம் அத்தியாயம் 27-31 வரை உள்ள வசனங்கள் வானத்தைப்படைத்து பின்னர் பூமியைப்படைத்ததாக கூறவில்லை. மாறாக படைக்கப்பட்ட பூமியை விரித்ததாகத்தான் கூறுகிறது. முதன் முதலில் படைக்கப்படுவதை விரித்தல் என்று கூறுவதில்லை! பூமியைப்படைத்தான்; பின்னர் வானத்தைப்படைத்தான்; பின்னர் அதை விரித்தான். இதில் எந்த முரண்பாடுமில்லை. இவருடைய நேரடி முரண்பாடும் ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. இனி இவர் குர்ஆன் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட (?) வடிவை பார்ப்போம்!

நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
இது குறள். சற்றேறக்குறைய குரானுக்கு ஆறு நூற்றாண்டுகள் முந்தியது. இந்தக்குறளை குரானின் ஒரு வசனத்திற்கு மாற்றாக கூறினால், குரானின் மூலத்தில் அணுக்கமான நம்பிக்கை கொண்டவர்களே இதை எப்படி மறுப்பீர்கள்? எந்த விதத்தில் மறுப்பீர்கள்? இலக்கிய நயத்துடன் கட்டமைப்பும் கொண்ட மாற்று இது. மருத்துவம் குறித்த வழிகாட்டுதல், நோய் பற்றிய முன்னறிவிப்பு, மக்கள் நலம் என அனைத்தும் கொண்ட ஒரு வசனமாக கூறினால் யாரை நடுவராக கொண்டு இதை தள்ளமுடியும்?

இக்குறள் குர்ஆனுக்கு மாற்றீடாக முடியுமா என்பதற்கு இதன் கருத்தைப்பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். "நோய் இன்னதென்று அறிந்து, அந்த நோயின் காரணத்தயும் ஆராய்ந்து, உடல் நிலைக்கேற்றவாறு செய்வதே சிறந்த மருத்துவம் ஆகும்”. இதுதான் இக்குறளின் கருத்து. நோய் வந்தால் அதற்கான மருத்துவத்தை செய்யுங்கள் என்று கூறுவதற்கா குர்ஆன் வந்தது? இதை கடவுள் கூறுவதற்கு என்ன தேவை இருக்கிறது? இதில் நோய் பற்றிய என்ன முன்னறிவிப்பு உள்ளது? திருக்குறளில் மடமைகளும் பொய்களும் நடமுறைக்கு ஒத்துவராத கருத்துக்களும் உள்ளன. இதை எப்படி ஏற்றுக்கொள்வது? திருக்குறள் இலக்கிய நயமிக்கது! ஆனால் குர்ஆனின் இலக்கிய நயத்துடன் ஒப்பிட்டால் திருக்குறள் அட்ரஸ் இல்லாமல் போய்விடும். இதனால் இவருடைய வாதம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. இப்படி இவர் கூறுவதற்கு காரணம் குர்ஆனைப்பற்றிய அறியாமையே. இதை அன்னாரும் ஒத்துக்கொள்கிறார்.

இதைப்போல் ஒரு அத்தியாயத்தையேனும் உங்களால் கொண்டுவர முடியுமா? என்பதுதான் அது. ஆனால் இதைப்போல் என்பதற்கு எந்த வரையரையும் அல்லா கூறவில்லை. குரானின் உள்ளடக்கத்தைபோலா? அது கூறும் பொருள் போலவா? அதன் ஓசை நயம் போலவா? அதன் வடிவமைப்பைப் போலவா? அல்லது இவை அனைத்தையும் போலவா? ஒரே ஒரு வசனத்தை மட்டுமே கொண்ட அத்தியாயமும் இருப்பதால் ஒரு வசனமாவது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இது அன்னாருடைய வாக்குமூலம்!ஆதலால் குர்ஆனைப்பற்றி சிலவற்றை கூறுகிறேன் அதற்கேற்றாற்போல் முயற்சிக்கவும்!

இதைப்போல் என்பதற்கு எந்த வரையரையும் கூறாததால் அதன் உள்ளடக்கம், பொருள், ஓசை நயம், வடிவமைப்பு என்பவற்றை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றை கொண்டுவருமாறுதான் கூறுகிறது. ஏனெனில் குர்ஆன் என்பதே இவை அனைத்தயும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த தொகுப்புதான். எனவே, இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றை இயற்ற வேண்டும் அல்லது கொண்டுவர வேண்டும்!.

பொதுவாக ஒரு உயந்த இலக்கியப்படைப்பை இயற்ற வேண்டுமெனில் அதில் நிறைய பொய்களையும், மிகையான உவமை, உருவகம் போன்றவையும் பயன்படுத்துவர்! ஆனால் குர்ஆன் இவை அனைத்தும் இன்றி உண்மையை மட்டும் கொண்டே அமைந்துள்ளது. மேலும் ஒரு படைப்பானது எந்தளவுக்கு உயர்ந்த தரத்தை கொண்டுள்ளதோ அந்தளவுக்கு பாமர மக்களைவிட்டும் தூரமாகும்! ஆயினும் குர் ஆன் அப்படிப்பட்டதல்ல! கவிஞர்களுக்கு விளங்கியது போல் பாமர மக்களுக்கும் விளங்கியது! (ஆனால் திருக்குறல் அப்படிப்பட்டதல்ல! அது தமிழ் மொழியிலிருந்தாலும் அதை அதே தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்தே பாமரர்களுக்கு கூற வேண்டும். இல்லையெனில் விளங்காது.) இவைதவிர இன்னுமுள்ளன. இவ்வளவும் போதும்!

மேற்கூறிய வரையறைகளுக்குட்பட்டு செங்கொடியார் மீண்டும் குர்ஆனின் சவாலை ஏற்றுக்கொள்வார் என நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இஸ்லாமிய சகோதரர்களே நீங்களும் எதிர்பாருங்கள்; முஸ்லிமல்லாத சகோதரர்களும் எதிர்பார்க்கவும்...!


வளரும் இன்ஷா அல்லாஹ்

1 comments:

Anonymous said...

இந்த இடுகையின் மறுப்பு செங்கொடி தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பார்வையிடலாம்.

http://senkodi.wordpress.com/2011/03/17/senkodi-islam-5/

Post a Comment