Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, April 21

தடயமுள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்- 27

தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

குர்ஆனில் அல்லாஹ் ஏதாவதொன்றை அத்தாட்சியாக அறிவித்தால் அவற்றுக்கொரு தடயம் இருக்கும். அது குறிப்பிட்ட காலத்தில் வெளியாகும். அப்படி வெளியாகாத அத்தாட்சிகளை கண்டுபிடித்து (?) செங்கொடி விவரித்திருக்கிறார். அதில் உள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

...உமது உணவும் பானமும் கெட்டுப்போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்.)... (2:259) 

இதில் அத்தாட்சியாக அல்லாஹ் அம்மனிதனைக்குறிப்பிடுகிறான். இதை தெரிந்து கொண்டே வேண்டுமென்றே இதில் எது என்று கேட்கிறார்.

இதில் அத்தாட்சி என்பது எது? கழுதையா? மனிதனா? எந்த விதத்தில் அது மீள் சாட்சியாகப் போகிறது?

இதில் உள்ள அத்தாட்சி என்ன? அதைப்பார்க்கும்போதே அறிந்து கொள்ளலாம். அதாவது ஒரு பொருளை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் தொழிநுட்பம் உள்ளது என்பதுதான் அந்த அத்தாட்சி! அதைத்தான் இந்த செயல் மூலம் அல்லாஹ் நிகழ்த்திக்காட்டுகிறான். மனிதனுக்கே இது முடியும் எனும்போது படைத்தவனுக்கு முடியாதா? என்பதை இதிலிருந்து அறியலாம். இதை அறியாத செங்கொடி அவன் இறந்து கிடந்தாலும், உறங்கிக்கிடந்தாலும் உடலளவில் குறைந்தபட்ச சிறு மாற்றம் கூட ஏற்படவில்லை. ஏனென்றால் நூறு ஆண்டுகள் கழித்து, சில மணிநேரம் உறங்கியதுதாகத்தான் ஆண்டவனுக்கு பேட்டியளிக்கிறார். என்று கேட்கிறார். செங்கொடி எதையெல்லாம் தவறு என்று கூற முட்படுகிறாரோ அவை அறிவியல் உண்மையாக உள்ளதை தெரிந்து கொள்ளலாம். தவளையும் தன் வாயால் கெடும் என்பது இதைத்தானோ?

நூஹுடைய சமுதாயம் தூதர்களைப் பொய்யர்கள் எனக் கூறிய போது அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்கு படிப்பினையாக ஆக்கினோம். (25:37)

இதில் நாம் "படிப்பினை" என்று தமிழாக்கம் செய்துள்ள இடத்தில் செங்கொடி "அத்தாட்சி" என்று தமிழாக்கம் செய்துள்ளார். இதுபோன்று சில தமிழ் ஆக்கங்களிலும் காணப்படுகிறது. ஆனாலும், இதற்கு சரியான அர்த்தம் "படிப்பினை" என்பதுதான். ஏன்? இதன் மூலத்தில் உள்ள ஆயத் எனும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. எந்த அர்த்தம் எங்கு பொருந்துமோ அதைத்தான் செய்ய வேண்டும். இந்த இடத்தில் இது அத்தாட்சி எனும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இதன் கருத்தே விளக்குகிறது. இங்கு அத்தாட்சி என்று பொருள் கொள்வதாக இருந்தால் இறந்தவர்களின் உடலோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்டதோ பாதுகாக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.  அவ்வாறுதான் பிர்அவ்ன் உடல் சம்பந்தப்பட்ட வசனத்தில் வருகிறது. இங்கு அப்படி எதுவும் இல்லை என்பதால் இவர்களிடம் உங்களுக்கு படிப்பினை உள்ளது என்பதுதான் சரியான அர்த்தமாகும். இதை விளங்கிக்கொள்ளாமல் சில கேள்விகளை கேட்கிறார். எனவே அவை அடிப்படையிலேயே தவறு என்பதால் இதற்கான பதிலை அடியோடு தவிர்க்கிறோம்.

அடுத்து, இவர் எந்த சம்பந்தமுமில்லாத ஒரு வசனத்தை இதோடு கட்ட முயல்கிறார். அதற்காக இவராகவே முன்வந்து அந்த வசனத்துக்கு ஒரு புதிய பொருளை, அதில் இல்லாத கருத்தையும் திணித்து விடுகிறார்.

இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது. (18:9) 

இந்த வசனத்தில் கிருபை (கருணை) என்று கூறப்படுவது அத்தாட்சி என்கிறார். இங்கு அருள் என்பது அத்தாட்சியா? கிடையவே கிடையாது. அருளுக்கும் அத்தாட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை! இங்கு அருள் எனக்கூறப்படுவது துல்கர்னைன் எழுப்பிய சுவர்தான். அது மறுமை நாள் நெருங்கும் போது உடையும் என்பதுதான் அதன் அர்த்தம். இவர் தனது கருத்தை நிலை நாட்ட எத்தகைய கயமைத்தனத்தையும் மேற்கொள்வார் என்பதற்கு இது ஒரு சான்று.

அந்த இடம் எங்கே என்று கேட்கிறார். அப்படி ஒரு இடம் உலகில் என்றும் சொல்கிறார். இன்று செய்மதியை வைத்து உலகில் எந்த மொல்லையிலுள்ளதையும் அறிந்து கொள்ளலாம் என்ற இறுமாப்பில் கூறுவதுதான் இது. இன்று எவ்வளவு செய்மதிகள் வந்தும் கூட காட்டுப்பகுதியினுள் உள்ள விடயங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தனக்கடத்தல் வீரப்பன் காட்டுக்குள்தான் இருந்தான். அவனை செய்மதிகள் மூலமாக கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லையே! இந்த வசனங்களில் கூறப்படுவதைப்பார்த்தால் அது நகர்ப்புறம் என்றோ கிராமப்புறம் என்றோ கருத இயலாது. ஒரு காட்டுப்பகுதியாகத்தான் இருக்க முடியும். இதுபோல் எத்தனையோ மர்ம இடங்கள் கண்டுபிடிக்கப்படாமல்தான் உள்ளன. தான் வாசிக்கும் வசனங்களை எல்லாம் எப்படியாவது கோர்த்து கதை கட்ட வேண்டும் என்பதற்க்காகத்தான் இப்படிப்பட்ட தில்லுமுல்லு வேலைகளை கையாள்கிறார்.

வாய்ப்புள்ள இடங்களை நீட்டி முழக்குவதும், அல்லாதவற்றை இருட்டடிப்பு செய்வதும் மதவாதிகளின் வழக்கம். இந்த வழக்கச் சகதிக்குள்தான் மதங்களின் வேதங்களின் புனிதங்கள் பிரபெடுக்கின்றன.

எங்களுக்கு எதையும் நீட்டி முழக்க வேண்டிய அவசியமோ, ஒழித்து வைக்கும் அவசியமோ கிடையாது. இவர் எவையெல்லாம் தவறு என்று வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறாரோ அவையனைத்தும் அறிவியல் உண்மைகளும், தவறே அற்ற வசனங்களுக்கும்தான் உள்ளன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

வளரும் இன்ஷா அல்லாஹ்   

0 comments:

Post a Comment