Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, April 8

நட்சத்திரங்களும் நகைப்பிற்குரிய வாதங்களும்

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-21


இதுவரையும் குர் ஆண் குறிப்பிடும் அறிவியல் உண்மைகளை மறுத்து எழுதியிருந்ததையும் அதில் அவர் கையாண்ட தில்லு முள்ளு வேலைகள், அரைகுறை ஆய்வுகள் போன்றவற்றையும் எடுத்துக்காட்டி அவை அறிவியியல்  உண்மைகள்தான் என்பதை நிரூபித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! இத்தொடரில் நாம் அறிவியல் சான்றாக எடுத்து வைக்காத ஒன்றை அவராக முன்வந்து இது அறிவியலுக்கு முரண்படுகிறது என்று வாதிடுகிறார். அது பற்றி பார்ப்போம்.

விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக (53:1)

இதற்கெதிரான செங்கொடியின் கேள்விக்கணைகள் இதோ:

வசனம் 53:௧ ல் நட்சத்திரம் விழுவதாக குறிப்பிடுகிறது. ஒரு பொருள் விழுவது எனும் சொல் எதைக்குறிக்கும்? ஒரு பொருள் அதன் இடத்திலிருந்து புவியீர்ப்பு விசையால் கவரப்பட்டு இழுத்துக்கொள்ளப்படுவதையே குறிக்கும். இங்கு நட்சத்திரம் விழுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் எத்தன மீது அல்லது எதன் விசையால் கவரப்பட்டு விழுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை. பூமியிலிருந்து மனிதர்களை நோக்கி கூறப்படுவதால் பூமியில் விழுவதாக கொள்வதற்கே வாய்ப்பிருக்கிறது. ஒரு நட்சத்திரம் பூமியில் விழ முடியுமா? பூமியை விட மடங்குகளில் பெரிய அளவில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் எப்படி விழமுடியும்? பூமிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையிலுள்ள தூரம் மிக மிக அதிகம். புவியீர்ப்பு விசை எட்ட முடியாத தூரங்களில் அவை இருக்கின்றன. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமே 14 கோடியே 95 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இவ்வளவு பக்கத்தில் இருக்கும் நட்சத்திரமான சூரியன் பூமியின் மீது விழ வேண்டாம். கொஞ்சம் நெருங்கி வந்தாலே போதும் பூமி காணாமல் போய்விடும். பூமியைவிட சூரியன் அளவில்  98 மடங்கு பெரியது, சூரியனை விட பல ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்கலேல்லாம் விண்ணில் இருக்கின்றன. இவைகளில் எந்த நட்சத்திரம் பூமியின் மீது விழுவது. ஆக விழுகின்ற நட்சத்திரம் என குரான் குறிப்பிடுவதில் ஏதாவது அறிவியல் பார்வை இருக்கிறதா?

அடேங்கப்பா! எவ்வளவு கேள்விகள்! ஒரு பெரிய விடயமே இல்லாத விடயங்களுக்கு இப்படி கேட்பதுதான் இவரது வாடிக்கை! இந்த வசனத்தில் "விழுகின்ற" எனும் சொல்லுக்கெதிராக எழுப்பப்பட்ட கேள்விகளே இவை. இங்கு "விழுகின்ற" எனும் சொல்லுக்கு மூலத்தில் "ஹவா" எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப்பொருள் "விழுதல்" என்பதுதான். ஆனால்,  இச் சொல் சூரியன் சந்திரன் போன்றவற்றுடன் இணைந்து வரும்போது "மறைகின்ற" எனும் பொருளைத்தரும்.எமது கண்களிலிருந்து தென்படாமல் விழுந்துவிட்டது என்பது இதன் அர்த்தம். எனவே இந்த இடத்தில் "மறைகின்ற" எனும் பொருளைத்தான் அவ்வசனம் குறிக்கும். "விழுகின்ற" எனும் நேரடிப்பொருளைப் பயன்படுத்தினால் எமது கண்களிலிருந்து மறைந்து விழுந்துவிட்டது என்பது பொருள். இது, அதாவது "மறைகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக" எனும் வசனம் எந்த அறிவியலோடு முரண்படுகிறது? இவரது கேள்விக்கணைகள் எதுவுமே இதைத்தாக்காமல் உடைந்து நொறுங்கிவிட்டது. இது ஓர் இலக்கியம் அவ்வளவுதான்! இதில் அறிவியலுக்கு மாற்றமான விடயம் இல்லை.

அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். (67:5)

இதை ஷைத்தான்கள் வானத்திலிருக்கும் அல்லாவின் ராஜ்ஜியத்தில், அல்லாவுக்கும் மலக்குகளும் (அல்லாவின் உதவியாளர்கள், ஷைத்தானும் முன்னர் ஒரு மலைக்கு தான்) பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்கிறதாம். அப்படி ஒட்டுக்கேட்க முயர்சிக்கையில்தான் நட்சத்திரங்கள் எறிகட்களாக ஷைத்தான்களை விரட்டுகிறதாம். இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது. இதில் எங்காவது அறிவியல் பார்வை தென்படுகிறதா? அப்படி நட்சத்திரங்கள் பூமியை நெருங்கமுடியுமா? இரவில் வானத்தைக் கவனித்தால் எரிகற்கள் விழுவதை பார்த்திருக்கலாம். இதை வைத்து அவை ஷைத்தானை விரட்டுவதாக முகம்மது சுவாரசியமாக கதைகட்டியிருக்கிறார். அவ்வளவுதான்.

விஷயத்தை கூறிவிட்டு இதில் எப்படி முரணை கண்டுபிடிப்பது என்று யோசித்து அந்த வசனத்தில் இல்லாத கருத்தை தானாக முன்வந்து திணித்துவிட்டு பின்னர் கதையளக்கிறார். எக்ஸ்ட்ரா பிட்டிங்கை சிவப்பு எழுத்துக்களால் அடையாளப்படுத்தியுள்ளேன். அல்லாஹ் இடும் கட்டளைகள் மலக்குகளுக்கு சொல்லப்படும். அதை ஷைத்தான்கள் ஒட்டுக்கேட்பர். இது எமது கண்களுக்கு தென்படும் வானத்தை குறிக்காது. இது முதல் வானத்தின் எல்லையில் நடக்கும் நிகழ்வு. அதை இங்கிருந்து எமது கண்களால் காண இயலாது. அந்த அளவு தூரத்திற்கு மனிதன் கூட செல்லவில்லை. இதை செங்கொடி எமது கண்களுக்கு தென்படும் பூமிக்கு மேலாகக்காணப்படும் வானைக்குறிப்பதாக கற்பனை செய்து கொண்டு கேட்கும் கேள்வி. அதற்கு வசதியாக இரவில் வானத்தில் எரிகற்கள் விழும் நிகல்வைப்பார்த்து கட்டிய கதை என்று தனது கற்பனைக்கு காரணமும் கண்டுபிடிக்கிறார்.

சூரியன் சுருட்டப்ப்படும்போது, நட்சத்திரங்கள் உதிரும் போது (81:1,2) இதற்கெதிரான செங்கொடியின் கேள்வி.

81 ம் அத்தியாயத்தின் முதல் இரண்டு வசனங்கள் நட்சத்திரங்கள் குறித்த அல்லாவின் பார்வை அறிவியலோடு எவ்வளவு தீவிரமாய் முரண்படுகிறது என்பதை இன்னும் விரிவாக அம்பலப்படுத்துகிறது. அந்த வசனங்களில் சூரியன் சுருட்டப்படுகிறது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுகின்றன. நட்சத்திரங்கள் உதிர்கின்றன என்றால், சூரியனும் உதிரத்தானே வேண்டும். ஏனென்றால் சூரியனும் ஒரு நட்சத்திரம் தானே. எனவே சூரியன் ஒரு நட்சத்திரம் என்பது அல்லாவுக்கு தெரியவில்லை. அவருடைய பார்வையில் புள்ளியைப்போல் மினுக்கிக் கொண்டிருப்பதுதான் நட்சத்திரம். அதனால் தான் அவை உதிரவைக்கப்படுகின்றன. சூரியன் பெரியதாய் இருக்கிறது எனவே அது சுருட்டப்படுகிறது. ஐ.ஆர்.எஸ். 5 போன்ற நட்சத்திரங்கள் எல்லாம் உதிரும் போது, அதை விட பத்தாயிரம் மடங்கு சிறிய சூரியன் சுருட்டப்படுகிறது என்றால், இது அறிவியல் பார்வையா?

இந்த கேள்வியின் மூலம் செங்கொடியின் விசாலமான அறிவை (?) எமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார். கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டிற்கு செங்கொடி வந்தார், கம்யூனிஸ்டுக்களும் வந்தனர். சென்கொடிக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது, கம்யூனிஸ்டுகளுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது என்று கூறினால் செங்கொடி கம்யூனிஸ்டு அல்ல என்று சொல்வாரா? அல்லது சென்கொடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார் என்று புரிந்து கொள்வாரா? இதுதான் விளங்கும் திறனா? நட்சத்திரங்கள் உதிரும் போது சூரியன் மட்டும் சுருட்டப்படும் என்றால் சூரியன் நட்சத்திரம் இல்லையா என்று கேட்பதன் லட்சணம் இதுதான். சூரியன் எம்மோடு தொடர்புபட்டது. அது மனிதர்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தது. ஏனைய நட்சத்திரங்கள் அவ்வாறல்ல! இதனால் சூரியனுக்கு வேற கதியும் ஏனைய நட்சத்திரங்களுக்கு ஒரு நிலையம் என்றால் அறிவியலுக்கு முரணாகாது. படைத்தவன் ஒன்றை சுருட்டி ஒன்றை எரிக்கலாம் என்னவும் செய்யலாம்! இது அவனது அதிகாரம். இதில் அறிவியலுக்கு எந்த முரணும் இல்லை! இவருக்கு விளங்கும் திறனும் இல்லை.   

அடுத்து நட்சத்திரங்களால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை என்ன? அதை விளக்க ஒரு ஹதீஸை (?) எடுத்துக்காட்டுகிறார். முதலில் அது ஹதீஸ் கூட இல்லை. அதனால்தான் 3198 க்கும் 3199 இடைப்பட்ட ஹதீஸ் என்று கதை விடுகிறார். அந்த செய்தியில் குறிப்பிடும் மூன்று விடயங்களும் இதுதான்:
  1. வானத்திற்கு அலங்காரமாக உள்ளது.
  2. ஷைத்தான்களை விரட்டுவதற்கான பொருளாக உள்ளது.
  3. வழிகளை அறிந்து கொள்வதற்கான வழிகாட்டியாக உள்ளது.
இந்த விடயங்கள் தவறு என்று வாதிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் சூரியனின் சிறப்புப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையா? என கேட்கிறார். சூரியனின் சிறப்பு பற்றி சொல்லாவிட்டால் இவை தவறு என்றாகிவிடுமா? வாதம் எடுத்து வைக்கும் போது கொஞ்சமாவது சிந்தித்து எழுத வேண்டும்.

இவரது கற்பனைகளையும் தவறான புரிதலையும் தவிர வேறு உருப்படியான வாதங்கள் எதுவும் இல்லை! தலைப்பு மட்டும் அழகாக போடுவார் அவ்வளவுதான்!

வளரும் இன்ஷா அல்லாஹ் 

0 comments:

Post a Comment