Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, January 15


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர் -08

பிரபஞ்சமும் அதனை கட்டுப்படுத்த அழைத்த அல்லாவும். எனும் தலைப்பிலான தொடருக்கு மறுப்பாக இத்தொடர் வெளியாகிறது. செங்கொடியின் அந்த தொடரை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இத்தொடரில் செங்கொடி குர்ஆனில் பிரபஞ்சம் பற்றி குறிப்பிடுபவை அறிவியலல்ல என்று வாதிடுகிறார். அதற்கான எமது மறுப்பை பார்ப்பதற்கு முன் ஒரு விடயத்தைக்குறிப்பிட வேண்டும்.
குர்ஆனில் அறிவியல் சான்றுகள் இருந்தாலும் அதனை சில இஸ்லாமிய அறிஞர்கள் தவறான முறையில் கூறி வருகின்றனர். எவ்வாறெனில் ஒரு குறிப்பிட்ட வசனம் அறிவியல் உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். அதை நாமே ஏற்றுக்கொள்ளாத தவறான விளக்கங்கள் மூலமும் அறிவியல் என்ற பெயரில் இல்லாததையும் கூறி திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் எனக்குறிப்பிட்டு வருகின்றனர். அது போன்ற சில விடயங்களை செங்கொடி சுட்டிக்காட்டி அதை மறுத்து எழுதியிருக்கிறார். அதை நாம் ஏற்றுக்கொண்டு உண்மையான அறிவியல் பூர்வமான வாதங்களை மாத்திரமே எடுத்துவைப்போம். இதை செங்கொடி கூறியதை ஏற்றுக்கொண்டு விட்டதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இனி அவர் எடுத்துவைக்கும் வாதங்களையும் அதற்கான மறுப்பையும் பார்ப்போம்.

இவர் குர் ஆன் வசனங்களை சரியாக அடையாளம் காட்டியிருப்பினும் அதை அவர் தவறாக விளங்கிக்கொண்டு வாதிடுகிறார். எவ்வாறெனில்,

வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் ……….. அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? வசனம் 21:30
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான் விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. வசனம் 41:11

இந்த இரண்டு வசனங்களும் தான் பெருவெடிப்புக்கொள்கையை விளக்குவதாக இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுகிறார்கள். முதல் வசனத்தில் வானங்களும் பூமியும் இணைந்திருந்ததாகவும் பின்னர் அவைகள் பிரிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இரண்டாவது வசனமோ வானத்திற்கு முந்தைய நிலை புகை என்றும் அதை பின்னர் வானமாகவும் பூமியாகவும் மாற்றியதாக குறிப்பிடுகிறது.

இதில் இவர் இரண்டாவது வசனம் வானத்திற்கு முந்தைய நிலை புகை என்று கூறுவதாக கூறியுள்ளார். ஆனால் அவ்வசனத்தில் அவ்வாறில்லை. அதில் வானம் புகையாக இருந்தது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. எதையும்  நடுநிலையுடன் நிதானமாக படிக்கவேண்டும்.

இந்த இரண்டின் பொருளும் எப்படி பெரு வெடிப்புக் கொள்கையை பேசுவதாக அறியப்படுகிறது? விண்மீன்கள் (ட்சத்திரங்கள்) தோன்றுவதற்கு முன் அதாவது ஆரம்பகால பிரபஞ்சத்தில் 72 விழுக்காடு கரும்பிண்டமாக இருந்தது எனவும் இக்கரும்பிண்டங்களின் திணிவிலிருந்து விண்மீன்கள் தோன்றின என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். கரும்பிண்டங்கள் என்பது எந்த ஒரு பொருளுமாக இல்லாமல் ஆற்றலாக இருந்தன. இந்த இடத்தில் இதை பொருலாக இல்லாமல் ஆற்றலாக என்பதை புகை என்பதாக உருவகப்படுத்தி, அந்தப்புகையிலிருந்து நட்சத்திரங்களும் ஏனைய பொருட்களும் தோன்றின என்பதாக பொருள் எடுத்துக்கொண்டு மேற்கண்ட வசனங்கள் பெருவெடிப்புக்கொள்கையை கூறுவதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

இவ்வாறு எந்த அறிஞர் கூறினார் என்பது தெரியவில்லை. எனினும் இது தவறாகும். இதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். செங்கொடி தவறாக விளங்கியதன் மூலமும் மேலும் மேற்கூறிய கூற்றுக்கும் மறுப்பாக எழுதியதனால் அதில் நாம் மறுப்பதற்கு எதுவுமில்லை.

இவர் முழுக்க முழுக்க இரண்டாவது வசனத்தில்தான் அறிவியல் இல்லை என்று வாதிட்டுள்ளார். ஆனால் இவர் சுட்டிக்காட்டும் முதல் வசனத்திலுள்ளதைப்பற்றி எந்த வித மறுப்பையும் தெரிவிக்கவில்லை. ஒரு வேளை அதை சரி என்று ஏற்றுக்கொண்டாரோ என்னவோ!

அப்படியெனில் குர்ஆன் பிரபஞ்சம் படைக்கப்பட்டது பற்றி எவ்வாறு கூறுகிறது? அவர் குறிப்பிடும் இரண்டாவது வசனத்தின் உண்மை விளக்கம் என்ன?

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வெண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)

இதன் மூலம் வானங்களும் பூமியும் முதலில் ஒன்றாக இருந்தது என்றும் அதை பின்னர் பிரித்து பிளந்தெடுத்தோம் என்றும் அல்லாஹ் கூறுகிறான். இது தற்கால விஞ்ஞானிகள் கூறும் பிரபஞ்சத்தின் தோற்றத்தை அப்படியே எடுத்துக்காட்டுகிறது. இதன் பின் உருவான தூசுப்படலத்த்லிருந்துதான் ஏனைய கிரகங்கள் தோன்றின என்று குறிப்பிடுகின்றனர் விஞ்ஞானிகள். அதையே திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது.

பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்...........(41:11) இதுதான் திருக்குர்ஆன் கூறும் பிரபஞ்சத்தின் தோற்றம்!. இதுதான் இவ்வசனத்தின் விளக்கம்.

குர்ஆனில் அறிவியல் சான்றுகள் இல்லை என்று பிதற்றியது இவருடைய அரைகுறை ஆய்வுகள்தான்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

2 comments:

செங்கொடி said...

இந்த இடுகைக்கான மறுப்பு செங்கொடி தளத்தில் இடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் காண்க.

http://senkodi.wordpress.com/2011/11/23/senkodi-islam-11/

thiagu1973 said...

//வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் ……….. அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? வசனம் 21:30
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான் விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. வசனம் 41:11//

வானம் தனியாகவும் பூமி தனியாக ஒரு பருபொருளாக இருந்து இரண்டும் ஒன்றாக இணைந்து இருந்ததை போல பொருள்வருகிறது இந்த வசனத்தில் சரியா

ஆனால் விஞ்ஞானம் அப்படியா கூறுகிறது

மதம் என்பதை விஞ்ஞானமாக்க முயலாதீர்கள்

Post a Comment