Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, April 10

சிக்கிக்கொண்டது யார்: அல்லாஹ்வா? செங்கொடியா?

செங்கொடியின் கர்ப்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-23

கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

குர்ஆனில் சில வசனங்கள் உள்ளன. அவை காலம் சம்பந்தமாக பேசுகின்றன. அவைக்கெதிராக செங்கொடி அமைத்த தொடரே இது. அவரது வாதங்களையும் அதற்கான நமது பதிலையும் பார்க்க முன் அந்த வசனங்கள் எவை எவை என்பதை அறிந்து கொள்வோம்.

(முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது. (22 :47 )

வானத்திலிருந்து பூமி வரை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் வருடங்கள் அளவுடையது. (32:5)

வானவர்களும், ஜிப்ரீலும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர். (70:4)

இந்த வசனங்களிற்கான விளக்கத்தை செங்கொடி விளங்கிய விதமே தவறாக உள்ளது. இது காலத்தை சுட்டும் வசனங்கள் அல்ல! மாறாக வேகத்தை குறிக்கும் வசனங்கள் என்று முஸ்லிம்கள் கூறுவதாக குறிப்பிடுகிறார். அப்படி நாம் சொல்வது இல்லை!

ஆனால் இவைகள் காலம் காட்டும் வசனங்களல்ல வேகத்தை சுட்டும் வசனங்கள் என்கிறார்கள் மதவாதிகள்.

அப்படியானால், நாம் என்ன சொல்கிறோம்? நாம் சொல்வது இது காலத்தை குறிக்கும் வசனங்கள்தான். ஆனாலும் காலம் என்பது ஒவ்வொருவரின் பயண வேகத்தை பொருத்தும் மாறுபடும் என்பதே! ஒட்டுமொத்த கேள்விகளும் புரிதலில் ஏற்பட்ட கோளாறுதான்.

ஆனால் இப்போது அந்த வசனத்தின் பொருளை நேரடியாக எடுத்துக்கொண்டால் ஒரு சிக்கல் வருகிறது. 22:47, 32:5 வசனங்களில் ஒரு நாளுக்கு இணையாக ஆயிரம் ஆண்டுகளைக் குறிப்பிடும் குரான் 70:4 ம் வசனத்தில் ஒரு நாளுக்கு இணையாக ஐம்பதாயிரம் ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. இதில் 22:47 ம் வசனமும் 70:4 ம் வசனமும் ஒரே கேள்விக்கு பதிலாக கூறப்படும் வசனங்கள், அதாவது யுகமுடிவு நாட்கள் எப்போது வரும்  எனும் கேள்விக்கு பதிலாக கூறப்படும் வசனங்கள். எனவே இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காகத்தான் இரண்டு வசனங்களும் வேறு வேறு விஷயத்தை கூறுவதாக பிரித்துப் பொருள் கொண்டு சமாளித்திருக்கிறார்கள். 22:47 ம் வசனத்தில் அல்லாவின் கட்டளை பூமிக்கு வந்து சேரும் வேகத்தை குறிப்பதாகவும் அதாவது யுகம் முடியட்டும் என்று அல்லா கட்டளையிட்டுவிட்டால் அது மனிதர்களின் வேகத்தை விட 365000 மடங்கு அதிக வேகத்தில் பூமியை வந்தடையும் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும்; 70:4 ம் வசனத்தில் வானவர்கள் (அல்லாவின் உதவியாளர்கள்) பூமிக்கு  
வந்து செல்லும் வேகத்தை குறிப்பதாகவும் அதாவது பல்வேறு வேலைகளுக்காக பூமிக்கு வந்து செல்லும் வானவர்கள் மனிதர்களின் வேகத்தை விட 18250000 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கிறார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும் அவ்வசனங்களுக்கு வியாக்கியானங்கள் அளிக்கிறார்கள்.

மறுப்பதாக இருந்தால் தெளிவாக மறுக்க வேண்டும். இவர்கள் இப்படி சமாளிக்கிறார்கள் இது பொருத்தமல்ல! தவறாக சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டும். முரண்பாடு என்றால் என்ன முரண்பாடு? அதற்கு அளிக்கும் விளக்கம் சரியா? தவறா? தவறு என்றால் எப்படி? என்பதை அழகாக நிரூபிக்க வேண்டும். தமது கேள்விகளை வாதமாக தெளிவாக எடுத்து வைக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல் இப்படி முரண்பாடுள்ளது இதற்கு இப்படி சமாளிக்கிறார்கள், இப்படி வியாக்கியானம் கொடுக்கிறார்கள் என்பதோடு முடித்து விடுகிறார். வாதங்களையும் ஒழுங்காக எடுத்து வைப்பதாக தெரியவில்லை. 70:4 ம் வசனம் வானவர்களின் பயண வேகத்தை குறிக்கிறதா இல்லையா? 22:47 ம் வசனம் அல்லாஹ்வின் கட்டளைகள் இறங்கும் வேகத்தை குறிக்கிறதா? இல்லையா? இரண்டும் வேறு வேறாக இருக்கும் போது எப்படி முரண்பாடு வரும்? இவற்றுக்கு சரியான பதில் கூற வேண்டும்; சொதப்பக்கூடாது! அப்போதுதான் யார் சரியாக சொல்கிறார், யார் குழப்பியடிக்கிறார் என்பதை மக்கள் அறிந்து கொள்வர். அடுத்து அற்புதமான (?) எமது மதக்கொள்கையோடு பலமாக மோதக்கூடிய (?) விடயத்தை கேட்கிறார்.

மதவாதிகளின் வியாக்கியானங்களின் படியே அவற்றை வேகங்களாக பொருள் கொண்டாலும் அந்த வேகங்களின் மனிதர்களின் வேகம் ஒப்பிட்டு மடங்குகளாக கூறப்படுகிறது. அன்றைய மனிதர்கள் பயணிக்கும் வேகம் என்றால் ஒட்டக வேகம் அல்லது குதிரை வேகம். இந்த வேகங்கலோடு ஒப்பிட்டு ஆயிரம் ஆண்டு, ஐம்பதாயிரம் ஆண்டு என்று குரான் கூரியிருக்குமானால் இன்று மனிதர்களின் வேகம் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அதிகரித்து விட்டது. இன்றைய மனிதனின் விரைவுப்படி ஆயிரம் ஆண்டு, ஐம்பதாயிரம் ஆண்டு என்பதை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மட்டுமல்லாது மனிதனின் வேகம் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும், அப்படி அதிகரித்துச் செல்லச் செல்ல இந்த குரான் வசனங்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் மதக்கொள்கையோடு மிகப் பலமாக மோதக்கூடிய ஒரு விசயமல்லவா? எப்படிச் செய்வார்கள்? இஸ்லாமியர்கள் விளக்கம் கூறுவார்களா? 

அடேங்கப்பா! பலமாகத்தான் மோதுகிறது! எமது மதக்கோட்பாடோடு அல்ல! அறிவுக்கும் விளங்கும் திறனுக்கும் எதிராக இந்த கேள்வி பலமாகத்தான் மோதுகிறது. அந்த வசனங்களில் மலக்குகளின் வேகத்தோடும், அல்லாஹ்வின் கட்டளைகள் பயணிக்கும் வேகத்தோடும் மனிதர்களின் வேகம் ஒப்பிட்டு கூறப்பட்டிருக்கிறதா? அல்லது மலக்குகளின் பயண வேகமும், அல்லாஹ்வின் கட்டளை பயணிக்கும் வேகமும் எமது கணிக்கும் நாட்களுக்கும் ஒப்பிட்டு கூறப்படுகிறதா? அந்த வசனங்கள் எதிலுமே நீங்கள் பயணிக்கும் வேகம் என்றோ உங்கள் வேகம் என்றோ கூறப்படவில்லை. மாறாக "நீங்கள் கணக்கிடும்"  வருடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்கள்  1400 வருடங்களுக்கு முன்பும் சரி, இப்போதும் சரி, இனி வரும் காலங்களிலும் சரி ஒன்றாகத்தான் கணிக்கபடுகிறது. இவராக ஏதாவது ஒன்றை கற்பனை செய்து கொண்டு அது குர்ஆனில் கூறப்படுவதாக எண்ணிக்கொண்டு கேள்வி கேட்டுவிட்டு குர்ஆன்  தவறாக சொல்லியிருக்கிறது. என்று ஜல்லி அடித்துவிட்டு சென்று விடுவார். செங்கொடியின் கற்பனைக்கோட்டயிலுள்ள     விரிசல்கல்தான் அவரது கேள்விகளுக்கு காரணம் எனும் நமது தலைப்பு இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது. வல்லரசாக இருந்த ரஷ்யாவை சோம்பேறிகளின் நாடாக்கி அவ்வல்லரசை உடைத்து சின்னாபின்னமாக்கிய கம்யூனிசத்தை ஆதரிக்கிரோமே இந்த நிலை உலகம் பூராவும் என்ன, இந்தியாவில் வந்தால் கூட இந்தியா உறுப்படாது போய்விடுமே எனும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் உலக நடைமுறையுடனும் யதார்த்தத்துடனும் மிகப்பலமாக மோதக்கூடிய கம்யூனிசம் இவருக்கு சரியாகப்படுகிறது; இஸ்லாம் தவறாகப்படுகிறது.

ஒளியின் வேகத்தை ஒட்டி ஒரு பொருள் பயணம் செய்யும்போது அதன் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது சார்பியல் கோட்பாட்டின் ஒரு பகுதி. இதைப் பயன்படுத்தித் தான் அந்த வசனங்களுக்கு வேகம் எனும் பொருளைக் கொண்டுவருகிறார்கள். அதாவது, அதிவிரைவாகச் செல்லும் போது வாழ்நாள் அதிகரிப்பதால்தான் ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமானதாக ஆகமுடிகிறது என்பது அவர்கள் முடிபு. ஆனால் இதிலும் சிக்கல் இருக்கிறது. ஒளியின் வேகத்தை ஒட்டி விரைகையில் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது ஒரு பகுதிதான். மற்றொரு பகுதி உருவம் சுருங்கும் என்பது. எடுத்துக்காட்டாக ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது அதன் வாழ்நாள் இரண்டு மடங்காகும் என்றால் அதன் நீளம் அரை மீட்டராகும்.

இதன்படி, இந்த விரைவில் உயிரினங்கள் பயணிக்க முடியாது அல்லது பயணித்தால் உயிருடனிருக்க முடியாது என்றாகிறது. ஏனென்றால் அளவு குறைந்தாக வேண்டும். இந்த சமன்பாட்டைக் கொண்டுதான் ஒருவிதத்தில் கணக்கிட்டு ஒளியின் வேகத்தை விட அதிக வேகம் பிரபஞ்சத்தில் இருக்கமுடியாது என்கிறார்கள். ஆனால் அல்லாவின் உதவியாளர்களான வானவர்களால் எப்படி ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டு உயிருடன் இருக்கமுடிகிறது எனும் கேள்வி இங்கு தவ்ர்க்கவியலாமல் எழுகிறது.

ஒளியின் வேகத்தை ஒட்டி ஒரு பொருள் பயணம் செய்தால் அதன் வாழ்நாள் அதிகரிக்கும் என்றும், அதன் நீளம் குறையும் என்றும் சிறப்பு சார்பியல் கோட்பாடு குறிப்பிடுவதாக சொல்கிறார். இதற்கு இவர் தகுந்த சான்றைக்காட்ட வேண்டும். ஒரு பொருளின் பயண வேகத்திற்கேற்ப அதன் காலம் சுருங்கும் அதாவது ஏனையவர்களின் நேரக்கணிப்பை விட அப்பொருளின் பயண வேகத்திற்கேற்ப ஒப்பீட்டளவில் குறைவு என்றும் ஒரு பொருள் வேகமாக பயணித்தால் அதை அவதானிப்பவருக்கு அப்பொருள் சிரியதாகுவதாக தென்படும் என்பதுதான் சிறப்பு சார்பியல் கோட்பாடு. இது இல்லையென்றால் அதை நிரூபிக்க வேண்டும். இவரின் விளக்கத்தின் படி உயிருள்ள பொருள் என்ன உயிரற்ற ரொக்கட், ஸ்பேஸ் ஷட்டல்கள் கூட பயணிக்க முடியாது. ஏன்? அளவு குறைந்தால் ஒரு கட்டத்தில் ஒன்றுமில்லாமல் சீரோவாக போய்விடும். நீளம் குறையக்குறைய பல சிக்கல்களும் ஏற்படும். எனவே இந்த கேள்வி அடிப்படையற்றது.

ஒளியை மிகைத்த வேகம் என்பது பிரபஞ்சத்தில் இல்லை. ஆனால் வானவர்கள் சர்வ சாதாரணமாக ஒளியை விட மிகைத்த வேகத்தில் பயனித்துக்கொண்டிருக்கிரார்களே எப்படி?

வானவர்கள் ஒளியை மிகைத்த வேகத்தில் பயணிக்கிறார்கள் என்று மொட்டையாக சொல்லக்கூடாது! அது எப்படி என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி இதை நிரூபித்து விட்டு கேள்வியைக்கேட்க வேண்டும். நம்பர் கூடுதலாக இருந்தால் ஒளியின் வேகத்தை மிகைத்தது என்பதாகாது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

0 comments:

Post a Comment