எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் தொடரினூடாக இதுவரை செங்கொடி விமர்சித்த அனைத்துக்கும் பதிலளிக்கப்பட்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்! இதுவரை நாம் எழுதிய அனைத்தையும் ஒரே தொகுப்பாக வெளியிடப்படுகிறது.
இஸ்லாம் என்பது அல்லாஹ்வினால் இம்மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு அதை இறுத்தித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலம் பூரணமாக்கிவிட்டான் என்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதுபோல் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கும் சுரண்டல்களையும் தடுத்துவிட்டது. இஸ்லாத்தில் இடைத்தரகர்களோ, மூட நம்பிக்கைகளோ சிறிதுமில்லாமல் அதன் வாசலை முற்றிலுமாக அடைத்துவிட்டது. ஆனால், இன்று இஸ்லாத்தில் இல்லாத தகடு, தாயத்து, தர்கா வழிபாடு போன்றவற்றை இஸ்லாத்தினுள் புகுத்தி அதையே இஸ்லாம் என்று நடைமுறப்படுத்தி மார்க்கத்தின் பெயரால் சில அறிஞர்கள் (?) பிழைப்பு நடத்தி வந்தனர்; இன்றும் நடத்தி வருகின்றனர். அதிலொன்றுதான் கேடு கெட்ட தர்கா வழிபாடு.
முன்னைய காலத்தில் வாழ்ந்து மரணித்த நல்லாடியார்களின் கப்ருகளின் மீது ஓரு வழிபாட்டுத்தலத்தை எழுப்பி அதில் மக்கள் தங்களது தேவைகளை கேட்டல், அவர்களுக்காக அறுத்துப்பலியிடல் போன்ற செயல்களை செய்து வருகின்ரனர். இது இஸ்லாத்தின் அடிப்படையோடு பலமாக மோதுகின்ற ஒரு மாபாதகச்செயலாக கருதப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் ஷிர்க எனும் நிரந்தர நரகத்தில் கொண்டு போய்ச்சேர்த்து விடும் கொடிய இணைவைத்தலாகும். இதை அறியாத சில மக்கள் இதுதான் சரியானது என்றெண்ணி தமது வாழ்க்கையையே நாசம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இறந்தவர்கள் இறந்தவர்களே!
ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இறந்த ஒரு மனிதனால் கேட்கவோ, பார்க்கவோ முடியாது!
குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச்செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை. (திருக்குர் ஆன் 35:19-22)
மரணித்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்று அல்லாஹ் தெளிவாகவே சொல்லிவிட்டான். ஆனால் இன்று மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றனர்? அவ்லியாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் செவியேற்பார்கள். எமது கோரிக்கையை நிவர்த்தி செய்வார்கள் என்று குருட்டுத்தனமாக நம்பி நரகத்தின் கொள்ளிக்கட்டையாகிக்கொண்டிருக்கின்ரனர். இதை விட்டும் அல்லாஹ் எம்மை காப்பாற்ற வேண்டும்.
ஷா வலியுல்லாஹ்வின் பெயரில் நடக்கும் பித்தலாட்டம்
தர்கா வழிபாடு இந்தியாவிலும் இலங்கையிலும் மலிந்து கானப்படுகிரது. ஊருக்கொரு அவ்லியா தெருவுக்கொரு அவ்லியா என்றும் பத்தாமல் நாலுக்கு நாள் புதுப்புது அவ்லியாக்கள் முளைத்துக்கொண்டும் இருக்கின்ரனர். அந்த வகையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு பிரபல்யமான தர்காவாக நாகூர் தர்காவை எடுத்துக்காட்டலாம் இது மட்டுமன்றி அடையாளங்காணப்படாத தர்காக்கள் இன்னும் இருக்கின்றன.
அண்மையில் சன் தொலைக்காட்சியில் 'நிஜம்' எனும் நிகழ்ச்சியில் பழவேற்காடு ஏறி அருகிலுள்ள வேநாடு எனும் ஊரில் அமையப்பெற்றிருக்கும் ஷா வலியுல்லாஹ் என்பவரின் தர்கா எடுத்துக்காட்ட்டப்பட்டது. இதில் அந்த தர்காவில் நடக்கும் ஒரு கேலிக்கூத்தான செயல் ஒன்று வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த தர்காவில் அடக்கப்பட்டிருக்கும் ஷா வலியுல்லாஹ் சுவாசிக்கிரார். அவர் சுவாசிப்பதால் அவரது அடக்கத்தலத்தில் மூச்சு விடுவதுபோன்ற ஒரு செயல் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு அமாவாசையும் இப்படி மூச்சு விடுகிறார் (?) என்ற அவ்வற்புதத்தை பார்க்கவென சாரை சாரையாக மக்கள் இங்கு குழுமுகின்றனர். ஆனால் இங்கு மூச்சு விடுவதாக இவர்கல் கருதும் செயல் உண்மையிலேயே மூச்சு விடுவதுதானா? இல்லை ஏதாவது வேதியல் மாற்றமா? என்பதையும் தொகுத்து வெளியிட்டுள்ளனர். இது ஒரு வேதியல் மாற்றம் என்று அடித்துக்கூறுகின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான விளக்கங்களுக்கு வீடியோவை பார்த்து அறிந்து கொள்க!) ஆனால் இந்த அவ்லியா பக்தர்களோ இது அந்த அவ்லியாவின் கராமத் என்று அறிவை இழந்து பேசுவது மிகவும் வேதனையாகவுள்லது. இது அறிவியலும் இல்லை! இஸ்லாத்திலும் இதற்கு ஆதாரம் இல்லை! என்பதை ஏனோ சிந்திக்க மறந்துவிட்டனர்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
இதுபோன்ற கேவலமான செயல்கள் இஸ்லாத்தை பற்றிய தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தும் என்றாலும் அல்லாஹ்வின் அருளால் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஏகத்துவ எழுச்சியினால் இதை சரிவர மக்கள் அடையாளம் கான ஆரம்பித்துள்ளனர். இதன் எதிரொலி அந்த வீடியோ விவரனத்தில் பேசும் தொகுப்பாளர் "இதுபோன்ற சடங்குகள் இஸ்லாத்திலேயே கேள்விக்குறியானதுதான்" என்று பேசியது தெளிவாக படம்பிடித்துக்காட்டுகிரது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்!
இனி களத்தில் இறங்க வேண்டியது நம் கடமை!
இந்த தர்கா வழிபாட்டுக்கெதிராக களமிரங்கிப்போறாடும் ஓர் அமைப்பாக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கானப்படுகிரது. இதுபோன்ற பல்வேறு தர்காக்களை எதிர்த்துப்பேசினாலும் இந்த தர்கா பற்றி ஏதாவது விழிப்புணர்வு நடந்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்லது. அதுவும் இது போன்ற மூட நம்பிக்கை ஏனைய தர்காகளில் இல்லை! இது பற்றி அப்பிரதேச மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது ஒவ்வொரு ஏகத்துவ வாதியின் கடமை! இதை செயல்படுத்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்வரவேண்டும்.