Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, April 29

அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றலுடையவன்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-29

மீனின் வயிற்றில் மனிதனைப்பாதுகாத்த அல்லா எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

அல்லாஹ் யூனுஸ் நபியை கண்டித்த  விதம் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதாவது யூனுஸ் நபியை ஒரு மீன் விழுங்கியதாகவும் பின்னர் அவர் திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரியதால் அவரை விட்டுவிட்டதாகவும் அல்லாஹ் கூறுகிறான். இதில் செங்கொடி பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார்.
மீனின் வயிற்றுக்குள் சென்ற ஒருவர் எப்படி உயிருடன் வெளியில் வந்தார்? அதுவும் மீனின் வயிற்றுக்குள்ளிருந்து நடந்தவைகளை அசைபோட்டு சிந்தித்து அல்லாவை வேண்டித் தொழுது பின்னர் வெளியேற முடிந்திருக்கிறது என்றால்... சிறு குழந்தைகள் கூட கேட்டால் சிரித்து விடக்கூடிய தன்மையில் இருக்கும் இந்தக் கதையை தங்கள் வேதத்தில் வைத்திருப்பவர்கள் தான் தங்கள் மதம் அறிவியல் மதம் என்றும் நாளை கண்டுபிடிக்கப்படவிருக்கும் அறிவியல் உண்மைகள் கூட தங்கள் வேதத்தை மீறி இருக்க முடியாது என்றும் அளந்து விடுகிறார்கள்.

 அல்லாஹ்வை ஏதோ ஒஅர் அற்பனைப்போன்று நினைத்துக்கொண்டுதான் இக்கேள்வியைக்கேட்கிறார். அவன் அனைத்துக்கும் சக்தியுள்ளவன் என்பதை மறுக்கும் விதமாக கேட்கிறார். நாம் மீண்டும் சொல்கிறோம், அல்லாஹ் இருக்கிறான். அவனுக்கு எதுவும் சிரமமல்ல! தான் நாடியதைச் செய்பவன் என்பது எமது நிலை. இதுபோன்ற சம்பவங்களை மறுக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லை என்பதை இவர் நிரூபித்தாக வேண்டும்! இதுவரை அவர் நிரூபிக்கவில்லை. அப்படியிருக்கும்போது இப்படி கேட்பது இவரது இயலாமையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. இந்த சம்பவம் இருப்பதால் அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய வசனங்கள் இருப்பதென்பது தவறாம். என்ன மறுப்பு பாருங்கள். அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்க முடியாமல் முழித்துக்கொண்டும் அதை மறுக்க முடியாமல் உளறிக்கொட்டிக்கொண்டும் இருப்பவர் எப்படி மறுக்கிறார் என்று பாருங்கள்! இந்த சம்பவம் இருப்பதால் அறிவியல் முன்னறிவிப்புகள் உள்ள வசனங்கள் தவறாகிவிடுமா? என்ன எழுதுகிறோம் என்பதை சிந்தித்துதான் எழுதுகிறாரா?
இந்த சம்பவத்தை கூறும் வசனத்தில் மீன் என்று மொழிபெயர்க்கும் இடத்தில் 'ஹூத்' எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சொல் திமிங்கிலத்தை குறிக்கும் சொல். நீலத்திமிங்கிலங்கள் பிரம்மாண்டமான உடலமைப்பைக்கொண்டவை. அவை ஒரே தடவையில் 50 பேரை  நாக்கில் வைத்திருக்கும் அளவுக்கு விசாலமானவை. 50 பேரை வைத்திருக்க முடியும் எனும் போது ஒரு நபரை அதனுள் வைக்க படைத்த இறைவனுக்கு முடியாதா? அவன் நம்மைப்போன்றவனா? எமது நம்பிக்கைக்குள் இருந்து விமர்சிக்காமல் வெளியே போய் விமர்சித்து தன அதிமேதாவித்தனத்தை அடிக்கடி நிரூபித்துக்கொண்டிருக்கிறார் செங்கொடி. எப்படி விமர்சிப்பது எனும் அறிவு கூட இவருக்கில்லை.

ஒவ்வொரு உயிரினமும் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்காக பல்வேறு அமிலங்களை தங்கள் செரிமான உறுப்புகளில் சுரக்கின்றன. வெளிப்புற தோள்களில் பட்டால் அரித்துவிடக்கூடிய அளவில் நொதித் தன்மையுடன் இருக்கின்றன. ஆனால் ஒரு மீனின் வயிற்றில் ஒரு மனிதன் சில நாட்கள் வசதியாக வாழ்ந்துவிட்டு வெளியில் வந்ததாக கதை சொல்கிறது குரான்.

இவரது உளறலுக்கு ஒரு அளவே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று! இந்த சம்பவத்தை விமர்சிப்பவர் அதன் பின்னுள்ள வசனங்களில் உள்ளதைக்குரிப்பிட்டாரா? அப்படி குறிப்பிடாவிட்டாலும் இதை அவர் விளக்கிக்கூறும் போதாவது குறிப்பிட்டாரா? இல்லை! யூனுஸ் நபி மீன் வயிற்றில் வசதியாக வாழ்ந்தார் என்பது அப்பட்டமான பொய்!
அவற்றை நோயுற்றவராக வெட்டவெளியில் எறிந்தோம்.(37:145)

அவர் நோயுற்றவராக வெளியே எறியப்பட்டுள்ளார் என்றால் அவர் மீனின் வயிற்றினுள் சொகுசாக வாழ்ந்தார் என்று எப்படி புரிந்து கொள்வது? இவரது உளறலுக்கும் கயமைத்தனத்திற்கும் ஒரு அளவில்லை எனும் அளவிற்கு இவரது தொடர் முழுவதும் கொட்டிக்கானப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் செறிவுள்ள அசிட்களும் தாக்கத்தை ஏற்படுத்தும் நொதியங்களும் உள்ளதுதான்! ஆனால் இந்த மீனினுள்ளும் அப்படி உள்ளதா? என்பதையும் சேர்த்து விளக்க வேண்டும். அப்படி இருந்தாலும் இந்த வசனம் தவறாகாது! அவர் நோயுற்றவராகத்தான் வெளியே எறியப்பட்டுள்ளார் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து ஒரு சமுதாயத்தை குரங்குகளாக மாற்றிய சம்பவத்தையும் செங்கொடி விமர்சிக்கிறார். இந்த சம்பவம் இரண்டும் விமர்சனத்திற்கு உரிய விடயமே இல்லை! இதை விமர்சிக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லை என்று வாதிட வேண்டும்! அல்லது உலக விடயங்களில் குர்ஆன் தவறாக கூறியுள்ளது என்றாவது வாதிட வேண்டும்! எதையும் செய்யாமல் இவற்றை விமர்சிப்பது கையாளாகத்தனம்!

குரங்குகளின் மூதாதை விலங்கு ஒன்றிலிருந்து படிப்படியாக பல லட்சம் ஆண்டுகளில் உருமாறி வந்தவன்தான் மனிதன் என பரிணாமம் கூறினால் அதற்கு எதிராக ஆயிரம் கேள்விகளை எழுப்பும் மதவாதிகள், இங்கே ஒரே நொடியில் மனிதனை குரங்காக மாற்றிய குரங்காக மாற்றிய இந்த கதைக்கு எதிராக ஒற்றை ஒரு கேள்வியையேனும் எழுப்ப முன்வருவார்களா?

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது குருட்டுவாதம்! அதை நாம் ஏற்கமாட்டோம்! ஆனால் இது அல்லாஹ் செய்வது. அவனுக்கு இது சிரமமல்ல என்பதுதான் எமது வாதம்! இதற்கெதிராக நாம் எந்த கேள்வியும் கேட்க வேண்டிய அவசியமில்லை! ஏன்? அவன் சர்வ சக்தன் என்று நாம் நம்புகிறோம்! அவ்வாறில்லை என்று நிரூபித்துவிட்டு வாதிட வேண்டும்.

ஒரு விலங்கைவிட அறிவிலும், செயலிலும், நினைவிலும், பரிமாற்றத்திலும், கருவிகளை  பயன்படுத்துவதிலும் மேம்பாடு கொண்டவன் மனிதன். ஆனால் மனிதனின் இந்த மேம்பாடுகளை எல்லாம் ஒரு அளிப்பான் கொண்டு அளித்து விடுவதைப்போல் குரங்காக மாறிவிட்டார்கள் என கதை சொல்கிறது குரான்.
மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று நம்புகிறார்கள்! எப்படி என்று கேட்டால் அது இயற்கை என்கிறார்கள்! இயற்கைக்கு ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்ற முடியும் என்று நம்புபவர்கள் அனைத்து ஆற்றலுள்ளவன் மனிதனை குரங்காக மாற்றினான் என்றால் ஆச்சரியப்படுகிறார்கள்! இவர்கள் ஒரு நிலையற்றவர்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இந்த தொடர் முழுக்க முழுக்க எமது நம்பிக்கைக்குள்ளிருந்து விமர்சிக்காமல் வேறொரு கோணத்தில்தான் விமர்சிக்கப்பட்டுள்ளது! அதைக்கூட உருப்படியாக செய்யவில்லை!. அல்லாஹ் இல்லை என்பவர்களுக்கு இது கதைதான்! அல்லாஹ் இருக்கிறான்! அவன் அனைத்துக்கும் ஆற்றலுள்ளவன் என்பவர்களுக்கு இது உண்மைச்சம்பவம்! அல்லாஹ் இல்லை என்று நிரூபித்துவிட்டால் இதை நாங்கள் ஒதுக்குவதற்கு தயார்! செங்கொடி தயாரா?

வளரும் இன்ஷா அல்லாஹ் 

     

Sunday, April 24

சிந்தனைக்கும் உண்டு கடிவாளம்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-28

குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா? எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

இந்த தொடரில் செங்கொடி 'ஜின்' மற்றும் தாப்பத் எனும் உயிரினத்தைப்பற்றியும் விமர்சித்திருக்கிறார். இது பற்றிய விமர்சனத்தை கிளப்பியதற்கு இவரது பலவீனமே காரணம் என நான் கருதுகிறேன். ஏன்? இவர் ஒரு வருட காலமாக மக்கள் முன்னிலையில் இஸ்லாத்தைப்பற்றி தப்பும் தவறுமாக விமர்சித்த்தது மட்டுமல்லாமல், இதற்கு பதில் சொல்லத்தயாரா என்று சவடாலும் விட்டுவந்தார். அப்போது சகோதரர் பி.ஜே அவர்களிடம் விவாதம் செய்ய கோரியதும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டு பின்னர் மாட்டிக்கொண்டால் மானம் போய்விடும் என்பதற்காக உப்புச்சப்பில்லாத வாதங்களை எடுத்து வைத்து நான் பி.ஜெவுடன் நேரடி விவாதம் செய்ய மாட்டேன் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.

இவரை இப்படியே சும்மா விட்டுவிடக்கூடாது என்பதற்காக இவரது உளறல்களை தோலுரித்து காட்ட நாம் முன்வந்தோம். இவரது வாதத்தில் உண்மையாளராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? ஆஹா! இதுவல்லவா வாய்ப்பு என்று சொல்லி குர்ஆனில் எவை எவை அறிவியல் முன்னறிவிப்பாகவும் வரலாற்று சான்றாகவும் குறிப்பிடுகிறோமோ அவையனைத்தையும் எடுத்துவைத்திருக்க வேண்டும். நாம் பதிலளிக்க முன்வரும் வரையில் அறிவியல் முன்னறிவிப்புகளையும் வரலாற்று உண்மைகளையும் விமர்சித்தவர் பதிலளிக்க ஆரம்பித்தவுடன் எமது நம்பிக்கைக்கோட்பாட்டுடன் தொடர்புடைய விமர்சனங்களை கிளப்ப ஆரம்பித்துவிட்டார். இவற்றை கிளப்பினால் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் ஓடி விடுவார்கள்; நாமும் தப்பி விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். ஆனாலும் நாம் இவற்றுக்கு பதில் சொல்லாமல் விடப்போவதில்லை. எமது நம்பிக்கை கூட எந்தவகையில் சரி என்பதை அல்லாஹ்வின் அருளால் நிரூபிக்கத்தான் போகிறோம்.

முதலாவதாக 'ஜின்' எனும் பகுத்தறிவு உள்ள உயிரினத்தைப்பற்றி விமர்சிக்கிறார்.ஆனால் அவரது விமர்சனத்தை விட அது பற்றிய அறிமுகமே அதிகளவில் உள்ளது. விமர்சிக்க பெரிதாக ஒன்ருமில்ல்லை. அதைப்பற்றி எழுதியாவது பக்கத்தை நிரப்பிக்கொள்ளலாம் என்று நினைத்தாரோ என்னவோ! இவர் என்ன கேட்கிறார் என்றால் ஜின் என்று ஒன்று இருப்பதாக கூறுகிறீர்கள். அப்படி உலகில் எங்கும் காணவில்லையே! அது இருப்பதற்கான எந்த தடையமுமில்லையே என்கிறார். அதைத்தான் நாமும் சொல்கிறோம். ஜின்கள் இருப்பதை ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியாது. ஏன்? அது எமது கண்ணுக்கு தெரியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை. கண்ணுக்குத்தெரியாது எனும் போது காணவில்லையே என்று கேட்பது எவ்வளவு புத்திசாலித்தனம் (?) என்று அனைவருக்கும் புரியும். அடுத்து அப்படியானால் நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்று கேட்கிறார்.

நாங்கள் ஏனைய மதத்தவர்களைப் போலல்ல குரான் சிந்திக்கச் சொல்லியிருக்கிறது எனும் முஸ்லீம்கள் எந்த அடிப்படையில் ஜின்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கூற முடியுமா?


சிங்கள் இருப்பதாக கூறுவதை நாம் நம்புகிறோம். ஏன்? ஏனென்றால் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததாக நாங்கள் நம்புகிறோம். அது இறைவனிடமிருந்துதான் வந்தது! முஹம்மது எனும் நபரால் தயாரித்திருக்கவே முடியாது எனும் அளவிற்கு பல சான்றுகளை கொண்டுள்ளது. (அந்த சான்றுகளில் சிலவற்றை செங்கொடி விமர்சனம் செய்து அவையனைத்தும் தப்பு என்று நிரூபித்துவிட்டோம். அதற்கு பதில் சொல்வார் என்று பார்த்தால் முன்பை விட அதிகமாகவே உளறிக்கொட்டியிருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.) அப்படிப்பட்ட திருக்குர்ஆன் சொல்கிறது சிங்கள் உள்ளது என்று. நாம் தட்காலலத்தில் சரிகாணும் அறிவியல் உண்மைகளும் இன்னும் சில விடயங்களும் சரியாக இருக்கும் போது இது எப்படி தவறாகும்? ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. திருக்குர்ஆனை நிரூபிக்க ஒன்ரல்ள்ள பல விடயங்கள் உள்ளன. அவை அனைத்தும் சரியாக உள்ள போது எமது சக்திக்கப்பாற்பட்ட விடயங்களைக்கூரும் போது அது எப்படி தவறாகும்?

அதுமட்டுமல்ல, இன்னுமொன்றை சிட்ன்தித்துப்பார்க்கும் போது இந்த நம்பிக்கை சரி எனத் தோண்றும். அது என்ன? ஷைத்தானும் ஜின்களின் இனத்தைச் சேர்ந்தவன் என்று இஸ்லாம் கூறுகிறது. அவனது வேலை என்ன? மக்கள் மத்தியில் தவறான, அசிங்கமான செயல்களை ஏவி மக்களை வழிகெடுப்பது. இன்று நாம் பார்க்கிறோம் சிகரட் பிடிப்பது, ஹெராயின், வைன் போன்ற போதைப்பொருள் பாவனை தவறு என்று மனிதனின் அறிவுக்குப்படுகிறது. அப்படித்தான் வைத்தியர்களும் சொல்கின்றனர். இதை அவனும் அறிந்து வைத்திருக்கிறான். ஆனாலும் அவன் அத செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று அவனது அறிவை மழுங்கடிக்கச் செய்கிறது, அவனை அதன் பக்கம் தூண்டுகிறது என்பது தெரிகிறதா? இல்லையா? இந்த செயலுக்கு காரணமாக இருப்பவன் ஷைத்தான் என்று அல்லாஹ் சொல்கிறான். அக்கவே ஷைத்தான் இருக்கிறான் என்றுதானே அர்த்தம். ஷைத்தான் இருக்கிறான் என்றால் அவனது இனமான ஜின் இனமும் இருக்கத்தானே வேண்டும். இதுதான் சிங்கள் தொடர்பான அவரது கேள்விக்கு பதில்.

இறைவன் இருப்பதாக முஸ்லிம்கள் சொல்கிறார்கள். இறைவனைக் காட்ட முடியுமா என்று கேட்பது போல்தான் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது.

அடுத்து தாப்பத் எனும் உயிரினத்த பற்றி கேட்கிறார். இது ஒரு மேட்டரே இல்லை! உலகம் அழிவதற்கான அடையாளமாக பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று. உலகம் அழியும்! அதற்கு முன் இன்னின்ன நடக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பட்டியலையே போட்டுள்ளார்கள். அதில் பல விடயங்கள் நடந்து வருகின்றன. இன்னும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்றன. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் இதையும் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அடையாளம் காட்டிய விடயங்கள் அப்படியே நுனியும் பிசகாமல் இன்று நடந்து கொண்டிருக்கும்போது இது நடக்காது என்று எப்படி சொல்வது? அனைத்தும் தவறாக இருந்தால் இதுவும் தவறாக இருக்கும். எல்லாம் சரியாக இருந்து சில விடயங்கள் இன்னும் நடக்கவில்லை என்பதால் அது நடக்காது என்பதா? இல்லை இனியும் நடக்கும் என்பதா? இதை அப்படியே சொன்னால் பிரச்சனை இல்லை. ஆனால் இவரது சொந்தக் கருத்தையும் இதோடு சொருகி விடுகிறார்.
தைப்பது குறித்த செங்கொடி சுட்டிக்காட்டும் வசனம் இதுதான்:


அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஒஅர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் பேசும். (27:82)


இந்த வசனத்தில் அந்த உயிரினம் பூமியிலிருந்து வெளிப்படும் என்றுதான் உள்ளது. ஆனால் இவரோ இந்த விலங்கு பூமியை பிளந்து கொண்டு வெளிவரும் என்கிறார்.
வெளிப்படுவது என்றால் பிளந்து கொண்டு வரும் என்பதுதான் அர்த்தமா? உள்ளதை உள்ளபடி விமர்சிக்காமல் இப்படி இல்லாத அர்த்தத்தை சேர்ப்பது கயமைத்தனம் இல்லையா?

காலமோ நேரமோ குறிப்பிடாமல் ஒன்று நடக்கும் எனக் கூறினால் அதை போய் என்று யாராலும் கூற முடியாது. கி.பி 2010 ல் நடக்கும் என்று குர்ஆனில் கூறப்பட்டிருந்தால் 2010 வந்து விட்டதே ஏன் தாப்பத்தைக் காணவில்லை என்று கேட்கலாம். காலம் குறிப்பிடாமல் இறுதிக்காலத்தில் நடக்கும் எனக் கூறினால் அதை இப்படி மறுப்பது அறிவுடைமை இல்லை.

பூமியிலிருந்து தாவரங்கள் தானே முளைக்கும்? புழு பூச்சிகள் பொந்துகளில் வாழும், ஆனால் பூமியிலிருந்து திடீரென ஒரு உயிரினம் வெளிப்பட முடியுமா? அப்படி வெளிப்படும் ஒரு உயிரினம் உடனே பேச முடியுமா? எந்தப்பகுதியில் என்ன மொழியில் பேசும்? பேச்சு என்றால் என்ன? ஒரு உயிரினம் சமூக வயப்பட்டிருப்பதன் அடையாளம். தன இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாருவதற்குரிய ஒரு வளர்ச்சி. ஆஅனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? அதுவும் மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?


பூமியை பொத்துக்கொண்டு வரும் என்று குர்ஆனில் இல்லை. இவரது சொதக்கருத்து. அப்படியே பொத்துக்கொண்டு வருவதாக இருந்தாலும் இது கடவுளுக்கு பெரிய விசயமே இல்லை. ஒண்ணுக்கும் உதவாத தண்ணீரிலிருந்து மனிதனைப்படைத்த கடவுளுக்கு இப்படி செய்வது சிரமமல்! இது தவறு என்பதாக இருந்தால் கடவுளே இல்லை என்று நிரூபித்துவிட்டு இவ்வாதத்தை வைக்க வேண்டும். மனிதனுக்கு உள்ளுள்ள ரகசியம் இதற்கு எப்படித்தெரியும் என்று கேட்கிறார். சாதாரணமாக இது யாருக்கு தெரியாததுதான். இறைவன் அறிவித்துக்கொடுத்தால் இது பெரிய விசயமே இல்லை!


அல்லாவுக்கு இவைகளெல்லாம் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான், ஆண்டவனின் மகிமை இது என்பவர்களுக்கு அறிவியல் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை.


இதற்கு நாம் இப்படித்தான் பதில் சொல்வோம் என்று தெரிந்துள்ள செங்கொடி இப்படி சொல்லிவிடக்கூடாது என்பதற்காக கூறுகிறார். ஆனால் இதற்கு இது பதிலா? அல்லாஹ்வுக்கு இயலும் என்றால் நான் அல்லாஹ்வே இல்லை என்று சொல்கிறேன் எப்படி இதை ஏற்றுக்கொள்வேன் என்றாவது கேட்க வேண்டும். அப்படிக்கேட்டால் அல்லாஹ் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அது இவரால் முடியாது என்பதன் கோபம்தான் இது!.  கடவுள் என்பவன் அனைத்துக்கும் ஆற்றலுள்ளவனாக இருக்க வேண்டும். அப்படியில்லாதவன் கடவுளே கிடையாது. அல்லாஹ்வுக்கு அனைத்தும் இயலும் என்பது எமது நிலை! இது தவறு அதாவது அல்லாஹ்வே இல்லை என்று நிரூபித்து விட்டு இந்த வாதங்களை வைக்க வேண்டும். அதுவரை இவற்றை மறுக்க முடியாது.


இன்று கண்டுபிடிக்கப்படும் அறிவியல் நுணுக்கங்கள் கூட குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுவிட்டது, என ஜல்லியடிப்பவர்கள் இந்த உயிரினங்கள் குறித்து என்ன கூறுவார்கள்?


இன்றைய அறிவியல் உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூரியுல்லவன் இன்றைய அறிவியல் உலகால் கண்டுபிடிக்க முடியாத விடயத்தை கூறினால் அதை தவறு என்று எப்படிக் கூறுவது? இதை அறிவியல் மூலம் பொய் என்று நிரூபிக்க இயலாது! ஏன்? அறிவியல் என்பது சோதனைக்குப்பின் வெளிவரும் தகவல். எதை சோதனைக்குட்படுத்த முடியாதோ அவற்றை தவறு என்பது ஆடத்தெரியாதவன் அரங்கம் கோணல் என்பது போல்தான். எப்படி உயிரின் ரகசியத்தை அறிய முடியாதோ அதை ஆய்வு செய்வது சாத்தியமில்லையோ அதுபோல்தான் இந்த விடயங்களும். ஆனால், அறிவுப்போர்வமாக சிந்திக்கும் போது இவை சாத்தியம் என்பதை உணரலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ் 


Thursday, April 21

தடயமுள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்- 27

தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

குர்ஆனில் அல்லாஹ் ஏதாவதொன்றை அத்தாட்சியாக அறிவித்தால் அவற்றுக்கொரு தடயம் இருக்கும். அது குறிப்பிட்ட காலத்தில் வெளியாகும். அப்படி வெளியாகாத அத்தாட்சிகளை கண்டுபிடித்து (?) செங்கொடி விவரித்திருக்கிறார். அதில் உள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

...உமது உணவும் பானமும் கெட்டுப்போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்.)... (2:259) 

இதில் அத்தாட்சியாக அல்லாஹ் அம்மனிதனைக்குறிப்பிடுகிறான். இதை தெரிந்து கொண்டே வேண்டுமென்றே இதில் எது என்று கேட்கிறார்.

இதில் அத்தாட்சி என்பது எது? கழுதையா? மனிதனா? எந்த விதத்தில் அது மீள் சாட்சியாகப் போகிறது?

இதில் உள்ள அத்தாட்சி என்ன? அதைப்பார்க்கும்போதே அறிந்து கொள்ளலாம். அதாவது ஒரு பொருளை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் தொழிநுட்பம் உள்ளது என்பதுதான் அந்த அத்தாட்சி! அதைத்தான் இந்த செயல் மூலம் அல்லாஹ் நிகழ்த்திக்காட்டுகிறான். மனிதனுக்கே இது முடியும் எனும்போது படைத்தவனுக்கு முடியாதா? என்பதை இதிலிருந்து அறியலாம். இதை அறியாத செங்கொடி அவன் இறந்து கிடந்தாலும், உறங்கிக்கிடந்தாலும் உடலளவில் குறைந்தபட்ச சிறு மாற்றம் கூட ஏற்படவில்லை. ஏனென்றால் நூறு ஆண்டுகள் கழித்து, சில மணிநேரம் உறங்கியதுதாகத்தான் ஆண்டவனுக்கு பேட்டியளிக்கிறார். என்று கேட்கிறார். செங்கொடி எதையெல்லாம் தவறு என்று கூற முட்படுகிறாரோ அவை அறிவியல் உண்மையாக உள்ளதை தெரிந்து கொள்ளலாம். தவளையும் தன் வாயால் கெடும் என்பது இதைத்தானோ?

நூஹுடைய சமுதாயம் தூதர்களைப் பொய்யர்கள் எனக் கூறிய போது அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்கு படிப்பினையாக ஆக்கினோம். (25:37)

இதில் நாம் "படிப்பினை" என்று தமிழாக்கம் செய்துள்ள இடத்தில் செங்கொடி "அத்தாட்சி" என்று தமிழாக்கம் செய்துள்ளார். இதுபோன்று சில தமிழ் ஆக்கங்களிலும் காணப்படுகிறது. ஆனாலும், இதற்கு சரியான அர்த்தம் "படிப்பினை" என்பதுதான். ஏன்? இதன் மூலத்தில் உள்ள ஆயத் எனும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. எந்த அர்த்தம் எங்கு பொருந்துமோ அதைத்தான் செய்ய வேண்டும். இந்த இடத்தில் இது அத்தாட்சி எனும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இதன் கருத்தே விளக்குகிறது. இங்கு அத்தாட்சி என்று பொருள் கொள்வதாக இருந்தால் இறந்தவர்களின் உடலோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்டதோ பாதுகாக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.  அவ்வாறுதான் பிர்அவ்ன் உடல் சம்பந்தப்பட்ட வசனத்தில் வருகிறது. இங்கு அப்படி எதுவும் இல்லை என்பதால் இவர்களிடம் உங்களுக்கு படிப்பினை உள்ளது என்பதுதான் சரியான அர்த்தமாகும். இதை விளங்கிக்கொள்ளாமல் சில கேள்விகளை கேட்கிறார். எனவே அவை அடிப்படையிலேயே தவறு என்பதால் இதற்கான பதிலை அடியோடு தவிர்க்கிறோம்.

அடுத்து, இவர் எந்த சம்பந்தமுமில்லாத ஒரு வசனத்தை இதோடு கட்ட முயல்கிறார். அதற்காக இவராகவே முன்வந்து அந்த வசனத்துக்கு ஒரு புதிய பொருளை, அதில் இல்லாத கருத்தையும் திணித்து விடுகிறார்.

இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது. (18:9) 

இந்த வசனத்தில் கிருபை (கருணை) என்று கூறப்படுவது அத்தாட்சி என்கிறார். இங்கு அருள் என்பது அத்தாட்சியா? கிடையவே கிடையாது. அருளுக்கும் அத்தாட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை! இங்கு அருள் எனக்கூறப்படுவது துல்கர்னைன் எழுப்பிய சுவர்தான். அது மறுமை நாள் நெருங்கும் போது உடையும் என்பதுதான் அதன் அர்த்தம். இவர் தனது கருத்தை நிலை நாட்ட எத்தகைய கயமைத்தனத்தையும் மேற்கொள்வார் என்பதற்கு இது ஒரு சான்று.

அந்த இடம் எங்கே என்று கேட்கிறார். அப்படி ஒரு இடம் உலகில் என்றும் சொல்கிறார். இன்று செய்மதியை வைத்து உலகில் எந்த மொல்லையிலுள்ளதையும் அறிந்து கொள்ளலாம் என்ற இறுமாப்பில் கூறுவதுதான் இது. இன்று எவ்வளவு செய்மதிகள் வந்தும் கூட காட்டுப்பகுதியினுள் உள்ள விடயங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தனக்கடத்தல் வீரப்பன் காட்டுக்குள்தான் இருந்தான். அவனை செய்மதிகள் மூலமாக கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லையே! இந்த வசனங்களில் கூறப்படுவதைப்பார்த்தால் அது நகர்ப்புறம் என்றோ கிராமப்புறம் என்றோ கருத இயலாது. ஒரு காட்டுப்பகுதியாகத்தான் இருக்க முடியும். இதுபோல் எத்தனையோ மர்ம இடங்கள் கண்டுபிடிக்கப்படாமல்தான் உள்ளன. தான் வாசிக்கும் வசனங்களை எல்லாம் எப்படியாவது கோர்த்து கதை கட்ட வேண்டும் என்பதற்க்காகத்தான் இப்படிப்பட்ட தில்லுமுல்லு வேலைகளை கையாள்கிறார்.

வாய்ப்புள்ள இடங்களை நீட்டி முழக்குவதும், அல்லாதவற்றை இருட்டடிப்பு செய்வதும் மதவாதிகளின் வழக்கம். இந்த வழக்கச் சகதிக்குள்தான் மதங்களின் வேதங்களின் புனிதங்கள் பிரபெடுக்கின்றன.

எங்களுக்கு எதையும் நீட்டி முழக்க வேண்டிய அவசியமோ, ஒழித்து வைக்கும் அவசியமோ கிடையாது. இவர் எவையெல்லாம் தவறு என்று வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறாரோ அவையனைத்தும் அறிவியல் உண்மைகளும், தவறே அற்ற வசனங்களுக்கும்தான் உள்ளன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

வளரும் இன்ஷா அல்லாஹ்   

Tuesday, April 19

செங்கொடியின் அரை குறை ஆய்வுகள்

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்- 26

குர்ஆனில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.
இதுவரை செங்கொடியின் அறிவியல் தொடர்பான அரை குறை ஆய்வுகளை பார்த்தோம். த்தொடரில் செங்கொடி சின்னப் பிழைகள் என்று விட்ட ஆய்வுக்குரைகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

முதல் முதலில் இவர் எடுத்து வைக்கும் அந்த சிறிய தவறு (?) ஏற்கெனவே கேட்ட கேள்விதான். அது எவ்வளவு அடி முட்டாள்த்தனமான கேள்வி என்பதை எமது மறுப்பிலும் சுட்டிக்காட்டியிருந்தோம். இங்கு மீண்டும் அதை தொட்டிருப்பதால் நாமும் அதை சுட்டிக்காட்டுகிறோம்.

மதவாதிகள் குரானின் அறிவியல் என்றோ, வேதத்தின் அற்புதங்கள் என்றோ பேசத்தலைப்பட்டால் மற்றெல்லாவற்றையும் விட முதலில் எடுத்துக்கொள்ளும் ஒன்று தேனீ. ஆனால் அதே வசனத்திளிருக்கும் இந்த வாக்கியத்தை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவார்கள். குரான் 16:69 ல் அல்லா தேனீக்கள் கனிகளிலிருந்து உணவருந்துவதாகக் கூறுகிறார். கனிகள் என்று பொதுவாக கூறப்பட்டாலும், அந்த இடத்தில் 'தமர்' என்றே அரபியில் குறிக்கப்பட்டிருக்கிறது. தமர் என்பது பழங்களைக் குறிக்கும் பொதுச் சொல்லல்ல. அது பேரீத்தம் பழத்தைக் குறிக்கும் தனிப்பட்ட சொல். ஆக குரான் தேனீக்கள் பேரீத்தம் பலத்தை உண்கின்றன எனும் அறிவியல்(!) உண்மையைப் போட்டுடைத்திருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் தேனீக்கள் பேரீத்தம் பலத்தையோ அல்லது வேறு பழங்களையோ உண்பதில்லை. பூக்களிலிருந்து சேகரிக்கும் தேனையே அவை உண்கின்றன என்பது அல்லவா உண்மை. எல்லாவற்றையும்விட மிகைத்த ஞானமுடைய அல்லா ஏன் இப்படிக் கூறிவிட்டார். அதுவும் எக்காலத்திற்கும் பொருந்தும் குர்ஆனில்.

தேனீக்கள் மலரிலுள்ள குளுக்கோசைத்தான் உண்கின்றன என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவை நன்கு பழுத்த பலன்களிலிருந்தும் தமக்குத்தேவையானத்தை உண்கின்றன. பலன்களில் மட்டுமல்ல, அவை சீநிக்கரைசளிலும் உண்ணும். அதில் குளுக்கோஸ் இருப்பதால்தான் இவ்வாறு செய்கின்றன.
அடுத்து பேரீச்சம் பழத்தில் இருந்து தேனீக்கள் சாப்பிடுவதாக குர்ஆன் கூறுவதாக செங்கொடி கூறுவதன் மூலம் இவரது அறியாமை பளிச்சென்று தெரிகிறது. இவர் கூறுவது போல் குர்ஆனில் கூறப்படவில்லை. அரபு மொழி பற்றி ஆய்வு செய்வதாக இருந்தால் அது பற்றிய அறிவு இருக்க வேண்டும். அந்த அறிவு கூட இல்லாமல் உளறிக்கொட்டியுள்ளார்.
அரபு மொழியில் தமர் என்றால் பேரீச்சம் பலம் என்றுதான் பொருள். ஆனால் குர்ஆனில் தமர் என்ற சொல் இடம்பெறவில்லை.  ஸமர் என்ற சொல்தான் உள்ளது. இதன் பொருள் கனி என்பதாகும். உதாரணமாக பல்லி பள்ளி என்ற இரண்டு சொற்களுக்கும் ஒருவன் ஒரே பொருளைக் கொண்டால் அவனை அறிவீனன் என்போம். அந்த லிஸ்டில் தான் இவரையும் சேர்க்க வேண்டும். 
இரண்டு புள்ளியுள்ள (ثمر) எனும் சொல்லுக்குத்தான் பேரீச்சம் பழம் என்று பொருள். மூன்று புள்ளியுள்ள(ثمر) ஸமர் எனும் சொல்லுக்க்கு கனி என்று பொருள். அந்த வசனத்தில் மூன்று புள்ளியுள்ள ஸ்மர் எனும் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வித்தியாசம் கூடத்தெரியவில்லை. எனக்கு அரபு தெரியும் என்றும், நான் குர்ஆனை அரபு மொழி ரீதியாகவும் ஆய்வு (?) செய்திருக்கிறேன் என்பதை காட்ட முயன்று இப்படி கேவலப்பட்டு நிற்கிரார்.

அடுத்து குர்ஆனில் 24:43ம் வசனத்தில் மழை பெய்யும் விதத்தினை கூறுகிறது. அதில் ஆலங்கட்டி மழை தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது. அதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து (?) ஒரு தவறை (?) கண்டுபிடித்திருக்கிறார்.

வசனம் 24:43 மழை பொழியும் விதம் குறித்து பேசுகிறது. அதன் முழு வசனம் இப்படி இருக்கிறது, “நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து அவற்றை ஒன்றாக இணையச் செய்து அதன் பின் அதை அடர்த்தியாக்குகிறான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்தில் மலைகளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான். அதைத் தான் நாடியவர் மீது விழும்படி செய்கிறான்……” என்று போகிறது. இது ஆலங்கட்டி மழை பற்றிய குரானின் புல்லரிக்கவைக்கும் விளக்கம். இந்த விளக்கம் தவறானது, பொருந்தாதது என்பது அவர்களுக்கும் தெரிந்துதான் இருக்கிறது. அதனால் தான் அடைப்புக்குறிக்குள் எழுதி சமன் செய்திருக்கிறார்கள். அடைப்புக்குறியுடன் சேர்த்து இப்படி அவன் வானத்தில் மலைக(ளைப்போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கிவைக்கிறான்என்று சமாளித்திருக்கிறார்கள். மழைவிழுவது மேகத்திலிருந்து என்பது தெரிகிறது, ஆனால் சில நேரங்களில் பனிக்கட்டி மழையும் பொழிகிறதே எப்படி? சரிதான் வானத்தில் பனிக்கட்டி மலை ஒன்று இருக்கிறது போலும் எனும் வறண்ட சிந்தனையின் விளைவுதான் இந்த வசனம்.

குரங்கு ஆப்பிழுத்த கதையை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதுபோல்தான் செங்கொடி எதை தவறு என்று குறிப்பிட்டு குர்ஆனை மறுக்கப்புகுந்தாரோ அது ஒரு அறிவியல் உண்மை என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதற்கு பதில் கூறுவதற்கு முன் அந்த குர்ஆன் வசனம் என்னவென்பதைப்பார்க்கலாம்:

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான்... (24:43)

இதில் உள்ள செங்கொடி தவறு என்று குறிப்பிடும் அறிவியல் உண்மையை அறிஞர் பி.ஜே அவர்கள் தனது தமிழாக்கத்தில் 419ம் குறிப்பாக தந்திருக்கிறார். அதையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.

419. வான் மழையின் இரகசியம்

இவ்வசனத்தில் (24:43) ''வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது'' என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது.

பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

இம்மேகங்கள் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை.

மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக் கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகிறது.

இந்த பனிக் கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றது. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம்.

இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்த பனிக் கட்டிகள், செங்குத்தாக அடுக்கப்பட்டு, மின் காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக் கட்டிகள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன.

இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத் தான் மேலே தந்திருக்கிறோம்.

இதில் கூறப்பட்டுள்ள மேகங்களை இழுத்தல், அவற்றை அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக் கட்டிகள் செங்குத்தாக நிறுத்தப்படுதல், மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல் போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இந்த வசனம் (24:43) அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம்.

குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

அடுத்த தவறாக செங்கொடி சுட்டிக்காட்டுவது நரகத்தில் வழங்கப்படும் உணவு தொடர்பானவை. குர்ஆனில் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறாக, வெவ்வேறு விதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இந்த முரண் என்று கேட்கிறார். அதை மொத்தமாகப்பார்த்தால் எந்த முரணும் கிடையாது. நரகத்தில் பல படித்தரங்களும், ஒவ்வொரு சாராருக்கும் ஒவ்வொரு விதமான உணவுகளும் தண்டனைகளும் வழங்கப்படும். அதை வெட்டி ஒட்டி பிழையாக பிதற்றுகிறார்.
அவர் சுட்டிக்காட்டும் வசனங்கள்:
இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? (37:62)

கொதிக்க வைக்கப்பட்ட பானமும் இதற்கு மேல் அவர்களுக்கு உண்டு (37:67)

சீழைத்தவிர வேறு உணவும் இல்லை. (69:36)

முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை. (88:6)

இவற்றைச் சுட்டிக்காட்டி முன்னுக்குப்பின் முரண் என வாதிடுகிறார்.

அடுத்திருக்கும் மூன்று வசனங்களும் நரகத்தாரின் உணவுகுறித்த குரானின் கூற்றுகள். அதாவது பூமியில் மனிதர்கள் வாழ்ந்தது போதும் என அல்லா நினைக்கும் ஒரு நாளில் பூமி அழிக்கப்பட்டு அதுவரை பூமியில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும், ஆதி மனிதன் தொடங்கி கடைசி காலம் வரை (கோடானுகோடி ஆண்டுகள் ஆனாலும்) வாழ்ந்த மக்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும்படி வாழ்ந்தவர்கள் சொர்க்கத்திற்கும், அப்படி வாழாதவர்கள் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். இதில் நரகத்திற்கு அனுப்பப்படும் மனிதர்களின் உணவு என்ன என்பதைத்தான் அந்த மூன்று வசனங்களும் தெரிவிக்கின்றன. இதில் பிரச்சனை என்னவென்றால் மூன்றும் வெவ்வேறு உணவுகளைக் கூறுகின்றன என்பதுதான். முதல் வசனத்தில் ஜக்கூம் என்ற மரமும் கொதிக்கும் நீரும் என அறிவிக்கப்படுகிறது. ஜக்கூம் என்பது ஒருவகையான கள்ளி வகை மரம் என பொருள் கூறுகிறார்கள். ஜக்கூம் என்ற மரமும் குடிப்பதற்கு கொதிக்கும் நீரும் முதல் வசனத்தின் படி நரகத்தாரின் உணவு. ஆனால் 69:36ன் படி சீழ் நீரைத்தவிர வேறு எந்த உணவுமில்லை என அடித்துக்கூறுகிறது. இதே தொனியில் 88:6 விஷச்செடிகள் மட்டும்தான் உணவு வேறில்லை என திட்டவட்டமாகக் கூறுகிறது. என்றால் எதுதான் நரகத்தின் உணவு? நரகம் என்று ஒன்றில்லை என்பவர்களுக்கு இது குறித்த தேவை ஒன்றுமிலை. ஆனால் இருக்கிறது என நம்புபவர்களுக்கு எது உணவு என தெரிந்திருப்பது அவசியமல்லவா?

சில மொழிபெயர்ப்புகளில் விஷச்செடி என்பதை முட்செடி என்பதாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதைக்கொண்டு கள்ளி என்பதும் முட்கள் நிறைந்தது தான், எனவே இரண்டு மூன்றாம் வசனங்களில் தனித்தனியாகவும், முதல் வசனத்தில் இரண்டையும் சேர்த்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று பொழிப்புரை தருகிறார்கள். ஆனால் சீழ், விஷச்செடி வசனங்களில் தனித்தனியே இதைத்தவிர வேறு உணவில்லை என தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. முட்செடி என்பதும் கள்ளி என்பதும் ஒன்றுதான் எனக் கொண்டாலும் முதல் வசனத்தில் ஜக்கூம் மரம் என்று வருகிறது மூன்றாம் வசனத்திலோ விஷச்செடி, என்றால் அல்லா செடிக்கும் மரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பதை ஒப்புக்கொள்வார்களா? இரண்டாம் வசனத்தில் சீழ் நீர் என்பது அருவருப்பான நீர் எனும் பொருளில் நீரின் தரத்தைக்குறிக்கிறது, அது குளிர்ந்திருக்குமா சூடாக இருக்குமா என்ற விபரமில்லை. முதல் வசனத்தில் கொதிக்கும் நீர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதேயன்றி சுகாதாரமான குடிநீரா இல்லையா என்ற விபரமில்லை. எனவே இரண்டையும் ஒன்றெனெக் கொள்வதற்கு இடமில்லை.

37:62,67ம் வசனங்களில் குறிப்பிடப்படும் உணவு மறுமையை நம்பாதவர்களுக்குரியது என்பதை அதற்கு முன்னுள்ள வசனங்களும் (37:51,52,53) 69:36ம் வசனம் அல்லாஹ்வை நம்பாமலும் ஏழைக்கு உணவளிக்காதவர்களுக்கும்(69:33,34) 88:6ம் வசனம் உறுதியாக தீமை செய்தவர்களுக்கும் என்று அந்த வசனங்களுக்கு முன், பின்னுள்ள வசனங்களைப்பார்த்தாலே புரிந்து கொள்ள இயலும். இதில் முரண் எதுவும் கிடையாது. ஆக, இவர் சின்னப்பிழைகள் என்பது ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது.செங்கொடியார் இதுவரையும் என்னென்ன தவறுகளை விட்டுள்ளார் என்பதயும் வாசகர்கள் பார்க்க வேண்டாமா? எனவே, இவரது கேலிக்கூத்தான சில விடயங்களை சுட்டிக்காட்டுகிறேன்.
இவரது மொத்த தொடர்களிலும் உள்ள முக்கிய தவறு என்னவெனில் முஹம்மது நபிதான் இந்த குர்ஆனை இயற்றினார் என்பது. இதுதான் அவரது நிலையாகவும் உள்ளது. ஆனால், இது எள் முனையளவு கூட சாத்தியமில்லை. ஏன்? முகம்மது நபிக்கு எழுதவோ அல்லது படிக்கவோ அல்லது கவிதை இயற்றவோ தெரியாது! அப்படியிருக்கையில் இவற்றை எவ்வாறு அவரால் இயற்றி இருக்க முடியும் என்பதை செங்கொடி விளக்க வேண்டும்.

முதல் தவறு :
நுழைவாயில் எனும் பகுதியில் செங்கொடி அரபு தேசியவாதம், அரபு மாக்ஸியம் என்பன இஸ்லாமியல் இறையியல் என்றார்.
இவை இஸ்லாமிய இறையியல் இல்லை! இவர் தவறாக கூறுகிறார் என்று எமது மறுப்பில் எழுத்யிருந்தோம். அதற்கு மறுப்பெழுதப்புகுந்தவர். அரபிகள் செய்தனர் என்று கூறினார். அரபிகள் செய்தால் எவ்வாறு இஸ்லாம் ஆகும்? என்று அவரது மறுப்பின் மறுப்பில் கேட்டுள்ளோம். எனவே, இவர் இஸ்லாம் இல்லாததை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்வைக்கிறார்.

இரண்டாவது தவறு:
இஸ்லாம்: பிறப்பும் இறப்பும் ஓர் எளிய அறிமுகம் எனும் தொடரில் சைத்தான் அல்லாஹ்வின் எதிரி என்றார். சைத்தான் மனிதனுக்குத்தான் எதிரி! அல்லாஹ்வுக்கு எதிரி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று எமது மறுப்பில் எழுதியிருந்தோம். இதை மறுக்கப்புகுந்தவர், மனிதர்களுக்கு எதிரி என்றால் அதன் உள் அர்த்தம் அல்லாஹ்வுக்கு எதிரி என்பதுதான் என்றார். அது தவறு என்பதை எமது இரண்டாவது மறுப்பில் தெளிவு படுத்தியுள்ளோம். எனவே, அறிமுகம் என்ற பெயரில் தவறு விட்டிருக்கிறார்.

மூன்றாவது தவறு:
குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள் எனும் தொடரில் "எழுதுகோல்" என்பதற்கு எழுதும் தாள் என அர்த்தம் செய்து உளறியிருந்தார். அந்தளவுக்கு இவரது ஆய்வுப்புலமையும் தமிழ் புலமையும் உள்ளது. தொல்காப்பியரும் தோற்றுவிட்டார்.

நான்காவது தவறு:
அதே தொடரில் முஹம்மது நபி மரனித்த இடம் இப்போது மிகப்பெரிய மசூதியாகப்பாதுகாப்படுகிறது என்று கதை விட்டார். அந்தளவுக்கு அவரது இஸ்லாம் பற்றிய வரலாற்று அறிவும் கொள்கை தெளிவும் உள்ளது.

ஐந்தாவது தவறு:
பூமி உருண்டை என யார் சொன்னது? அல்லாவா? மனிதனா? எனும் தொடரில் "பூமி உருண்டையாக இருந்தாலும் நேர்கோட்டில் பயணம் சய்தால் ஒரே திசையில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண முடியாது என்ரார். இது எந்தளவுக்கு அபத்தம் என்பதை எமது மறுப்பிலும் குறிப்பிட்டுள்ளோம். சாதாரணமான ஒரு உருண்டையான பொருளை எடுத்துக் கொண்டு அதில் நம் விரலை பயணம் செய்ய வைத்தால் பயணம் புறப்படுவது ஒரு திசையை நோக்கியதாக இருக்கும், ஆனால் 180 டிகிரிக்குப் பின் அதாவது சரி பாதிக்குப் பின் போன திசையில் இருந்து எதிர்த்திசையில் அந்த விரலின் பயணம் ஆரம்பமாகும்.  அதாவது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணித்த அந்த விரல் 180 டிகிரிக்குப் பின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கியதாக மாறுமா மாறாதா? எவ்வளவு விவரமாக உள்லார் என்பது தெரிகின்றதலாவா?

ஆறாவது தவறு:
பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள் எனும் தொடரில் செங்கொடியின் அரபுப்புலமையை எமக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார். அதை இதே தொடரில் மீண்டும் சுட்டியதற்கு இதிலேயே பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது தவறு:
சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு எனும் தொடரில் புத்தர் தந்தையின்றி பிறந்தவர் என்று துணிந்தே இட்டுக்கட்டினார். புத்தர் சுத்தோதனன் என்பவருக்கு பிறந்தவர்.

இவ்வளவுதான் தவறுகள் என்று நினைத்து விட வேண்டாம். இவரது உளறல்களில் உச்ச கட்ட உளறல்களைத்தான் இங்கு தொகுத்து எழுதியுள்ளேன். இவ்வளவும் போதும் இவரது வாதத்தின் சாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள...

வளரும் இன்ஷா அல்லாஹ்

  

Saturday, April 16

நிலவின் பிளவும் செங்கொடியின் புரள்வும்

செங்கொடியின் கற்பனை கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-25

நிலவை உடைத்து ஒட்டிய அல்லா எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

இவரது இக்கட்டுரையின் ஆரம்பமே டேஞ்சராக ஆரம்பிக்கிறது. எப்படி? நிலவில்  அரேபியன் பிளவு எனும் ஒரு இடம் உண்டு. அதை நிலவு பிளந்ததற்கான ஆதாரமாக நாம் குறிப்பிடுகிறோம். இதை எப்படியாவது மறைக்க வேண்டும் என்பதற்காக இது வரைகலை (கிராபிக்ஸ்) படம் என்று சங்கூதுகிறார்.   

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நிரூபிக்க ஏதாவது அற்புதம் ஒன்றை செய்து காட்டுமாறு கேட்கிறார்கள். அதிலொன்றுதான் இந்த நிலவை பிளக்கும் சம்பவம். இதை அல்லாஹ்வின் அனுமதியுடன் நபி (ஸல்) அவர்கள் பிளந்து காட்டுகிறார்கள். அப்படி பிளந்து காட்டியும் கூட முகம்மது சூனியம் மேஜிக் செய்கிறார் என்று அந்தர்பல்டி அடித்தனர் மக்கா இறைமறுப்பாளர்கள். இது தொடர்பாக குர்ஆனில் ஒரு வசனம் இறக்கப்பட்டது. அந்த வசனம் இதுதான்:

அந்த நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்துவிட்டது. அவர்கள் சான்றைக்கண்டால் "இது தொடர்ந்து நடக்கும் சூனியம்" எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர். பொய்யெனக் கருதி மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு காரியமும் பதிவாகிறது. (54:1-3)


பிற்காலத்தில் தோன்றும் செங்கொடி போன்றவர்கள் இதற்கென்ன ஆதாரம் என்று கேட்பார் என்பதை அறிந்த அல்லாஹ் "ஒவ்வொரு காரியமும் பதிவாகிறது" எனும் ஒற்றைச்சொல்லினுள் ஒரு விடயத்தை குறிப்பிடுகிறான். அதுதான் அந்த நிகழ்வுக்கான தடயம் பதிவாகியுள்ளது என்பது. நிலவை ஆய்வு செய்ய சென்ற போது எடுக்கப்பட்ட படங்களில் நிலவு இரண்டாகப் பிளந்து மீண்டும் சேர்ந்தது போன்ற ஒரு தடயம், ஒரு பிளவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதற்கு விஞ்ஞானிகள் "அரபியன் பிளவு" என்று பெயரும் இட்டனர். இதற்கு இவாறு பெயரிடுவதற்கான காரணமே அவர்கள் நிலவு பிளந்ததாக கூறும் சேதிதான். அதற்கு ஆதாரமாகத்தான் இந்த நிகழ்வும் நடந்துள்ளது. அந்த அரபியன் பிளவின் படத்தைத்தான் சென்க்டோய் போட்டுக்காட்டி இது கிராபிக்ஸ் எனும் ஒற்றை வரியில் ஒதுக்கித்தள்ளிவிட்டார். ("பொய்யெனக் கருதி மனோ இச்சையைப் பின்பற்றுகின்றனர்" எனும் வசனம் செங்கோடியோடு எப்படி பொருந்திப்போகிறது என்பதை கவனிக்க!) நிலவு பிளந்து ஒட்டியதற்கான ஆதாரம் இதுதான்.

இதற்கு வரலாற்று ரீதியான சான்று இருக்கிறதா என கேட்கிறார். இது நடந்ததற்கான வரலாற்று ஆதாரம் அந்த செய்திதான். இதை கவனமாக தவிர்ப்பதற்கே இந்த ஹதீஸ் தவிர்ந்த ஏனைய ஆதாரம் உள்ளதா? என்கிறார். விஞ்ஞான ஆதாரமே இருக்கிறது! இப்படி கற்பது இவரது பலவீனத்தையே காட்டுகிறது. அடுத்து, இப்படி பிழைக்குமா? பிளந்தது ஒட்டுமா? இது பிளந்தால் பூமியில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிராதா? என்று வரிசையாக அடுக்கிஸ் செல்கிறார். இவையனைத்துக்கும் ஒட்டு மொத்த பதில் நிலவில் காணப்படும் அந்த "அரபியன் பிளவுதான்". நடுநிலையாளர்களுக்கு இந்த ஒரு விசயமே போதும். இதில் நிலவு பிளந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா எனும் கேள்வியைத்தவிர வேறு எந்த கேள்வியும் இல்லை! அவை அனாவசியமானவை. எந்த சரக்குமில்லாதவை.

குர்ஆனில் அநேக இடங்களில் மனிதர்கள் குரானை சிந்தித்துப்பார்க்க வேண்டாமா? என்று கூவுகிறது. இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை சந்திரனை உடைத்ததை எப்படி சிந்திக்கிறீர்கள்? எப்படி புரிந்து கொள்கிறார்கள்? ஒரு கதை கூறப்படுவதுண்டு, வானில் கடவுள் தெரிகிறார் என்று ஒருவன் கூற மற்றவர்கள் தெரியவில்லையே எனக்கேட்க, வாழ்நாளில் பொய்யே கூராதவர்களுக்கு மட்டும்தான் கடவுள் காட்சி தருவார் என்று அவன் கூறவும், மற்ற எல்லோரும் ஆமாம் தெரிகிறார் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கலாம். அப்படித்தான் அந்த ஹதீஸ்களைக் கூறியவர்கள் உடைந்ததைக் கண்டார்களோ. எது எப்படியோ! முகம்மது தன சொந்தக் கற்பனைகளை மேய்ப்படுத்திக்கொள்ளத்தான் அல்லாவையும் வேதத்தையும் பயன்படுத்திக்கொண்டார் என்பதைத்தான் இது மெய்ப்பிக்கிறது.


கதை ரொம்ப சூப்பரா இருக்கு! இவருக்கு கதை படிப்பதில் ரொம்ப ஆர்வம் போல... ஆனா இவருக்கு ஒரு கதையை எங்கு எதோடு பிக்ஸ் பண்ணுவது என்பதுதான் தெரியவில்லை! இந்த கதை நிலவு பிளந்த சம்பவத்தோடு ஒட்டவில்லை என்பதுதான் நிதர்சனம்.

வளரும் இன்ஷா அல்லாஹ் 

Thursday, April 14

பொய்யெல்லாம் உண்மையாகுமா?

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-24

ஆதி மனிதன் மொழி அறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன? எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

மேற்குறிப்பிட்ட தொடரில் தனது வாதங்களுக்கு ஆதாரமாக முழுக்க முழுக்க பரிணாமவியல் கோட்பாட்டை மையமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. உலகில் மனிதன் தோன்றிய வரலாறு என்ன என்பதை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்த டார்வின் உலகில் உயிரினங்கள் அனைத்தும் இயற்கைத்தேர்வின் அடிப்படையில் (Natural Selection) கூர்ப்புக்குள்ளாகி கடைசியாக குரங்கு எனும் விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது பரிணாமவியலின் சாராம்சம். எனினும், தற்கால நவீன அறிவியல் வளர்ச்சியின் உதவி மூலம் இந்த கொள்கை ஏற்க முடியாத நிலைக்கு மாறிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு கொள்கையை வைத்துத்தான் தனது கருத்தை நிலை நாட்ட முற்படுகிறார்.

"ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்கு கூறுவீராக!" என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது..... (2:23) இந்த வசனத்திற்கெதிராக செங்கொடி எழுப்பும் கேள்விகள்:

இங்கு கடவுளாகிய அல்லா நடத்தும் உரையாடலைப் புரிந்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு ஆதி மனிதனாகிய ஆதம் பதிலளிக்கிறார். அவரின் பதிலை அல்லாவின் உதவியாளர்கள் கேட்டுப் புரிந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின் படி உலகின் முதல் மனிதன் ஆதம். இவ்வுலகில் அவர் பல்கிப்பெருகி அவரின் வழித்தோன்றல்களே இன்று உலகிலிருக்கும் அனைவரும். அந்த முதல் மனிதனாகிய ஆதமுக்கு பேசும் இத்திறன் இருந்திருக்கிறது. அதுவும் பொருட்களை பிரித்தறிந்து தனிப்பட்ட பெயர்களில் அழைக்கும் அளவுக்கு பேச்சு வழமைடிந்திருக்கிறது. ஆனால் இது சரியா? வரலாறு இதை ஒப்புகிறதா? இல்லை.

வரலாற்றில் முதன் முதலில் பேசியவர்கள் எனும் பெருமையை பெற்றிருப்பவர்கள் நியாண்டர்தால் மனிதர்கள். இன்றைய குரோ மாக்னன் இனத்திற்கு முந்திய இனம் நியாண்டர்தால் இனம். தோராயமாக இன்றைக்கு மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்து அழிந்த மனித இனம். இவர்கள் தான் வரலாற்றில் முதன் முதலில் பேசிய இனம் என்பதை இரண்டு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். முதலாவது, இஸ்ரேலில் கெபாரா எனும் இடத்திலுள்ள கார்மேல் மலைக் குகையில் யோயல் ராக் எனும் மானுடவியலாலரால் அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்டையோட்டில், தற்போதைய மனிதனுக்கு தொண்டையில் நாக்கின் சதையோடு இணைந்திருக்கும் ஹயாய்ட் எனும் சிற்றலும்பும் காணப்பட்டது. தற்போதைய ஹயாய்ட் எலும்புக்கும் அதற்கும் உள்ள ஒற்றுமைகளை வைத்து, நியாண்டர்தால் மனிதர்கள் பேசியிருக்க வேண்டும் என்கின்றனர். இரண்டாவது, பிரான்சில் லாஹினா எனும் இடத்தில் நியாண்டர்தால் மனிதர்கள் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகள் கிடைத்தன, அதில் மயிரடர்ந்த மிகப்பெரிய மாமதம் (உருவில் பெரிய யானை) போன்ற விலங்குகளின் எலும்புகளும் இருந்தன. இதுபோன்ற பெரிய விலங்குகளை திட்டமிட்டு வசிக்கும் இடத்திற்கு அருகில் விரட்டிவந்து வேட்டையாடியிருக்க வேண்டுமென்றால் எண்ணிக்கையில் அதிகமான மனிதர்கள் கூடியே செய்திருக்க முடியும். எனவே அந்த இனம் ஒருவகையில் பேசியிருக்க வேண்டும் என யூகிக்கிறார்கள். அவர்களும் கூட நம்மைப் போல் மொழி பேசியிருக்க முடியாது. ஆ, ஊ, ஈ போன்ற வல்லோளிகளையே இனம் பிரித்து மாற்றியோ சேர்த்தோ ஒருவிதமான ஒலிகளை எழுப்பி தமக்குள்ள எண்ணப் பரிமாற்றங்களை நடத்தியிருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் கூறிவிட்டு பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்குபிந்தான் மனிதன் பேசினான் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் குர்ஆனோ முதல் மனிதனே பேசிவிட்டார் எனக்கூருகிறதே! எப்படி சாத்தியம்? பதில் சொல்ல முடியுமா? என்று கேட்கிறார். அந்த வசனத்தை மட்டும் வைத்து கேட்பதாக இருந்தால் இவ்வாறு கேட்க முடியும். ஆனால், அதற்கு முன்னிருந்த வசனங்களை பார்த்தால் இந்த கேள்வி எழுவதற்கு வாய்ப்பில்லை. ஏன்? அதற்கு முன்னுள்ள வசனத்தில் ஆதம் (அலை) அவர்களுக்கு இறைவன் கற்றுக்கொடுத்தான் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை கற்றுக்கொடுத்த பின் பயிற்சி அளித்த பின் இது போல் நடப்பது சாத்தியம்! எனவே, அறிவுபூர்வமாக கேட்பதாக நினைத்துக்கொண்டு அறிவற்ற கேள்வியையே எழுப்பியுள்ளார். இதற்கு எதிராக அவர் வைக்கும் அந்த வரலாற்று (?) சான்றில் கூட எந்த சரக்கும் இல்லை. நியாண்டதால் மனிதர்கள் பேசியுள்ளனர் என்பதை நிரூபிக்க இரண்டு ஆதாரங்கள் கொண்டு உறுதிப்படுத்தியிருப்பதாக கூறிவிட்டு "இருக்க வேண்டும்" "யூகிக்கிறார்கள்" என்று குறிப்பிடுகிறார். யூகத்திற்கு இவரது அகராதியில் உறுதி என்பது அர்த்தமோ என்னவோ எமக்குத்தெரியவில்லை. யூகத்தைக்கொண்டு எதையும் சாதிக்க முடியாது. ஆனால் யூகிக்கும் விதம் கூட சிந்தித்துப்பார்க்கும் போது தவறாகப்படுகிறது. முதலாவது சான்றாக (?) செங்கொடி குறிப்பது யோயல் ராக் என்பவரால் அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்டையோட்டில் தற்போது மனிதனுக்கு உள்ள ஹயாய்ட் எனும் சிற்றேலும்பு காணப்பட்டது என்பதை குறிப்பிடுகிறார். இந்த சிற்றேலும்பு நியாண்டதால் மனிதனுக்கு முன்னுள்ள மனிதனுக்கு இல்லையா? அப்படி இல்லை என்று நிரூபித்து விட்டு இந்த வாதத்தை எழுப்ப வேண்டும். இவர்களுக்கு பேசும் திறன் உள்ளது என்றால் மற்றவர்களுக்கு இல்லை என்பதா? அவர்களுக்கு பேசும் திறன் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என்பதையும் சேர்த்து சேர்த்து பதிலளிக்க  வேண்டும். 
இரண்டாவது சான்றாக குறிப்பதில் இவர்கள் பேசினார்கள் என்பதற்கு ஏதாவது ஒரு சான்றுள்ளதா? அதையும் யூகிக்கிரார்களே தவிர உறுதிப்படுத்தவில்லை. அப்படி பேசியிருக்க வேண்டுமென்றால் கூட அது ஆ, ஊ, ஈ போன்ற ஒலிகளைத்தான் எழுப்பியிருக்க  வேண்டும் என்று வேறு  எக்ஸ்ட்ரா பிட்டிங் போடுகிறார். இப்படி ஒலி எழுப்புவதுதான் அவர்கள் பேச்சு என்பதற்கு என்ன அகழ்வாராய்ச்சி சான்று உள்ளது? ஏன்? கருத்துள்ள சொர்களைப்பேசி மிருகத்தை வேட்டையாட முடியாதா? டார்வினிஸ்டுகள் தங்கள் கொள்கையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக நடத்தும் அறிவியல் சித்து விளையாட்டுக்கள் இவை. அதை எப்படியோ செங்கொடி பொருக்கி எடுத்து இங்கு வந்து அதை குர்ஆனை மறுக்கும் ஆயுதமாக தன்னைக்காக்கும் கேடயமாகப்பயன்படுத்துகிறார்.

தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்கு கட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியை தோண்டியது. "அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரனின் உடலை மறைத்திருப்பனே!" எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான். (5:31)



உலகின் முதல் மரணம் அல்லது முதல் கொலையின் பிறகு மனிதன் ஈமச்சடங்கைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் இதை மறுக்கிறார்கள்.
ஈமச்சடங்கு என்பது இறந்த மனிதர்கள் மீண்டும் வருவார்கள் அல்லது உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது, ஆன்மா திரும்பி வரும் போது உடல் பத்திரமாக இருக்க வேண்டும் எனும் நினைப்பில் உடலை பாதுகாக்கும் வழிமுறையில் வந்த சடங்குமுறை. இந்த முறையை மனித இனம் தோன்றி வெகு காலத்திற்கு பிந்திய மனிதர்களே கைக் கொண்டிருந்தனர். சீனாவில் சௌகௌடியன் பகுதியில் ஆய்வை மேற்கொண்டிருந்த டேவிட்சன் பிளேக் அவரைத்தொடர்ந்து ஃபிரான்ஸ் வெய்டன் ரேய்ஷ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் அப்பகுதில் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த (பீகிங் மனிதர்கள் என்று பெயரிடப்பட்ட) மனிதர்கள் குறித்து உலகிற்கு தெரிவித்தனர். இவர்கள் மனித மாமிசத்தை உண்டவர்கள் என்பதையும் தம் ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதாவது இவர்கள் இறந்த மனிதனுக்கு ஈமச்சடங்கு செய்யவில்லை மாறாக தின்றிருக்கிறார்கள்.
ஈமச்சடங்கு செய்வதையும் முதலில் நியாண்டர்தால் மனிதர்களே செய்திருக்கின்றனர். இஸ்ரேலின் டாபுன், ரஷ்யாவின் டெஷிக்டாஷ் போன்ற பகுதிகளில் நியாண்டர்தால்கள் ஈமச்சடங்கு செய்ததற்க்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆக வரலாற்றில் முதலில் ஈமச்சடங்கு செய்தவர்களும் நியாண்டர்தால்களே.

ஈமச்சடங்கை முதன் முதல் செய்தவர்கள் நியாண்டதால் வர்க்கத்தினர் என்கிறார். அதற்கு முன் வாழ்ந்த பீகிங் மனிதர்கள் ஈமச்சடங்கு செய்யவில்லை! ஏன்? அவர்கள் மனித மாமிசத்தை தின்றனர் என்கிறார். அப்படியானால், பீகிங்க் மனிதர்களுக்கு முன் வாழ்ந்தவர்களும் மனித மாமிசம் சாப்பிட்டார்களா? பீகிங்க் மனிதர்கள் என்பது சீனா, ஜப்பான் போன்ற இடத்தில் வாழ்ந்தவர்களை குறிக்கும். அது அவர்களது வழக்கம். ஏன்? இன்று கூட அப்பேற்பட்ட இடங்களில் சிலர் நரமாமிசம் உண்பவர்கள் என்று தகவல் வருகிறது. இதனால் அவர்கள் மாமிசம் உண்டிருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் பரினாமவியலின் படி பீகிங்க் என்றொரு வர்க்கம் கிடையாது. ஒவ்வொரு பிரதேசத்திலும்வெவ்வேறு விதமான வடிவில் மனிதர்களின் உருவ அமைப்பு அமைந்திருக்கும். அப்படிப்பட்ட வித்தியாசங்கள்தான் பீகிங்க், ஜாவா, பலாங்கொடை மனிதர்கள் போன்றவை. இவை எக்காலத்திலும் மாறாது. அன்ரைய பீகிங்க் மனிதனின் மண்டையோட்டு வடிவில்தான் இன்றைய ஜப்பானியர்களும், அன்றைய பலாங்கொடை மனிதர்களின் மண்டையோட்டு வடிவில்தான் இன்ரைய இலங்கையர்களும் இருப்பர். இந்த பேதம் கூட செங்கொடி அறியவில்லையா? அல்லது வேண்டுமென்ண்ரு மறைத்தாரா? ஒன்றோடொன்று அறவே சம்பந்தமில்லாதவைகளை தொடர்புபடுத்தி புனையப்பட்ட கற்பனைக்கற்கால விடயங்கள்தான் இவை! இதில் இவர் குறிப்பிட்டுக்காட்டும் எந்த ஒரு வசனமும் தவறாகாது!.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு குரான் வசனங்களும் அதன் உள்ளீட்டில் அறிவியலோடு முரண்படுகின்றன. ஆதிமுதல் மனிதனிலிருந்து மனிதர்களுக்கு மொழியறிவு இருந்தது என்பதும், ஆதில் முதல் மனிதர்களிலிருந்தே ஈமச்சடங்கு நடைமுறையிலிருந்தது என்பதும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் பொய் என்று தெரியவருகிறது.

இவர் முரண்படுவதாக காட்டும் அந்த விடயங்கள் அறிவியல் என்பதை நிரூபித்து விட்டு இப்படி எழுதினால் நாம் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வோம்! அது வரை இது ஒரு பழைய அறிவியல் குப்பை என்றுதான் சொல்வோம். அறிவியலின் அடிப்படையில் பரிணாமவியல்தான் சரி என்றாகிவிடால் இவர் குறிப்பிடும் இந்த விடயங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆதம் (அலை) அவர்களின் வரலாறே தவறாகிவிடும். எனவே, அதற்கு முயற்சிக்காமல் சில்லறை விடயத்திற்கு மறுக்க முயற்சித்தமை இவர்களது அறியாமையையும் பலவீனத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

Sunday, April 10

சிக்கிக்கொண்டது யார்: அல்லாஹ்வா? செங்கொடியா?

செங்கொடியின் கர்ப்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-23

கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

குர்ஆனில் சில வசனங்கள் உள்ளன. அவை காலம் சம்பந்தமாக பேசுகின்றன. அவைக்கெதிராக செங்கொடி அமைத்த தொடரே இது. அவரது வாதங்களையும் அதற்கான நமது பதிலையும் பார்க்க முன் அந்த வசனங்கள் எவை எவை என்பதை அறிந்து கொள்வோம்.

(முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது. (22 :47 )

வானத்திலிருந்து பூமி வரை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் வருடங்கள் அளவுடையது. (32:5)

வானவர்களும், ஜிப்ரீலும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர். (70:4)

இந்த வசனங்களிற்கான விளக்கத்தை செங்கொடி விளங்கிய விதமே தவறாக உள்ளது. இது காலத்தை சுட்டும் வசனங்கள் அல்ல! மாறாக வேகத்தை குறிக்கும் வசனங்கள் என்று முஸ்லிம்கள் கூறுவதாக குறிப்பிடுகிறார். அப்படி நாம் சொல்வது இல்லை!

ஆனால் இவைகள் காலம் காட்டும் வசனங்களல்ல வேகத்தை சுட்டும் வசனங்கள் என்கிறார்கள் மதவாதிகள்.

அப்படியானால், நாம் என்ன சொல்கிறோம்? நாம் சொல்வது இது காலத்தை குறிக்கும் வசனங்கள்தான். ஆனாலும் காலம் என்பது ஒவ்வொருவரின் பயண வேகத்தை பொருத்தும் மாறுபடும் என்பதே! ஒட்டுமொத்த கேள்விகளும் புரிதலில் ஏற்பட்ட கோளாறுதான்.

ஆனால் இப்போது அந்த வசனத்தின் பொருளை நேரடியாக எடுத்துக்கொண்டால் ஒரு சிக்கல் வருகிறது. 22:47, 32:5 வசனங்களில் ஒரு நாளுக்கு இணையாக ஆயிரம் ஆண்டுகளைக் குறிப்பிடும் குரான் 70:4 ம் வசனத்தில் ஒரு நாளுக்கு இணையாக ஐம்பதாயிரம் ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. இதில் 22:47 ம் வசனமும் 70:4 ம் வசனமும் ஒரே கேள்விக்கு பதிலாக கூறப்படும் வசனங்கள், அதாவது யுகமுடிவு நாட்கள் எப்போது வரும்  எனும் கேள்விக்கு பதிலாக கூறப்படும் வசனங்கள். எனவே இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காகத்தான் இரண்டு வசனங்களும் வேறு வேறு விஷயத்தை கூறுவதாக பிரித்துப் பொருள் கொண்டு சமாளித்திருக்கிறார்கள். 22:47 ம் வசனத்தில் அல்லாவின் கட்டளை பூமிக்கு வந்து சேரும் வேகத்தை குறிப்பதாகவும் அதாவது யுகம் முடியட்டும் என்று அல்லா கட்டளையிட்டுவிட்டால் அது மனிதர்களின் வேகத்தை விட 365000 மடங்கு அதிக வேகத்தில் பூமியை வந்தடையும் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும்; 70:4 ம் வசனத்தில் வானவர்கள் (அல்லாவின் உதவியாளர்கள்) பூமிக்கு  
வந்து செல்லும் வேகத்தை குறிப்பதாகவும் அதாவது பல்வேறு வேலைகளுக்காக பூமிக்கு வந்து செல்லும் வானவர்கள் மனிதர்களின் வேகத்தை விட 18250000 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கிறார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும் அவ்வசனங்களுக்கு வியாக்கியானங்கள் அளிக்கிறார்கள்.

மறுப்பதாக இருந்தால் தெளிவாக மறுக்க வேண்டும். இவர்கள் இப்படி சமாளிக்கிறார்கள் இது பொருத்தமல்ல! தவறாக சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டும். முரண்பாடு என்றால் என்ன முரண்பாடு? அதற்கு அளிக்கும் விளக்கம் சரியா? தவறா? தவறு என்றால் எப்படி? என்பதை அழகாக நிரூபிக்க வேண்டும். தமது கேள்விகளை வாதமாக தெளிவாக எடுத்து வைக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல் இப்படி முரண்பாடுள்ளது இதற்கு இப்படி சமாளிக்கிறார்கள், இப்படி வியாக்கியானம் கொடுக்கிறார்கள் என்பதோடு முடித்து விடுகிறார். வாதங்களையும் ஒழுங்காக எடுத்து வைப்பதாக தெரியவில்லை. 70:4 ம் வசனம் வானவர்களின் பயண வேகத்தை குறிக்கிறதா இல்லையா? 22:47 ம் வசனம் அல்லாஹ்வின் கட்டளைகள் இறங்கும் வேகத்தை குறிக்கிறதா? இல்லையா? இரண்டும் வேறு வேறாக இருக்கும் போது எப்படி முரண்பாடு வரும்? இவற்றுக்கு சரியான பதில் கூற வேண்டும்; சொதப்பக்கூடாது! அப்போதுதான் யார் சரியாக சொல்கிறார், யார் குழப்பியடிக்கிறார் என்பதை மக்கள் அறிந்து கொள்வர். அடுத்து அற்புதமான (?) எமது மதக்கொள்கையோடு பலமாக மோதக்கூடிய (?) விடயத்தை கேட்கிறார்.

மதவாதிகளின் வியாக்கியானங்களின் படியே அவற்றை வேகங்களாக பொருள் கொண்டாலும் அந்த வேகங்களின் மனிதர்களின் வேகம் ஒப்பிட்டு மடங்குகளாக கூறப்படுகிறது. அன்றைய மனிதர்கள் பயணிக்கும் வேகம் என்றால் ஒட்டக வேகம் அல்லது குதிரை வேகம். இந்த வேகங்கலோடு ஒப்பிட்டு ஆயிரம் ஆண்டு, ஐம்பதாயிரம் ஆண்டு என்று குரான் கூரியிருக்குமானால் இன்று மனிதர்களின் வேகம் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அதிகரித்து விட்டது. இன்றைய மனிதனின் விரைவுப்படி ஆயிரம் ஆண்டு, ஐம்பதாயிரம் ஆண்டு என்பதை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மட்டுமல்லாது மனிதனின் வேகம் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும், அப்படி அதிகரித்துச் செல்லச் செல்ல இந்த குரான் வசனங்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் மதக்கொள்கையோடு மிகப் பலமாக மோதக்கூடிய ஒரு விசயமல்லவா? எப்படிச் செய்வார்கள்? இஸ்லாமியர்கள் விளக்கம் கூறுவார்களா? 

அடேங்கப்பா! பலமாகத்தான் மோதுகிறது! எமது மதக்கோட்பாடோடு அல்ல! அறிவுக்கும் விளங்கும் திறனுக்கும் எதிராக இந்த கேள்வி பலமாகத்தான் மோதுகிறது. அந்த வசனங்களில் மலக்குகளின் வேகத்தோடும், அல்லாஹ்வின் கட்டளைகள் பயணிக்கும் வேகத்தோடும் மனிதர்களின் வேகம் ஒப்பிட்டு கூறப்பட்டிருக்கிறதா? அல்லது மலக்குகளின் பயண வேகமும், அல்லாஹ்வின் கட்டளை பயணிக்கும் வேகமும் எமது கணிக்கும் நாட்களுக்கும் ஒப்பிட்டு கூறப்படுகிறதா? அந்த வசனங்கள் எதிலுமே நீங்கள் பயணிக்கும் வேகம் என்றோ உங்கள் வேகம் என்றோ கூறப்படவில்லை. மாறாக "நீங்கள் கணக்கிடும்"  வருடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்கள்  1400 வருடங்களுக்கு முன்பும் சரி, இப்போதும் சரி, இனி வரும் காலங்களிலும் சரி ஒன்றாகத்தான் கணிக்கபடுகிறது. இவராக ஏதாவது ஒன்றை கற்பனை செய்து கொண்டு அது குர்ஆனில் கூறப்படுவதாக எண்ணிக்கொண்டு கேள்வி கேட்டுவிட்டு குர்ஆன்  தவறாக சொல்லியிருக்கிறது. என்று ஜல்லி அடித்துவிட்டு சென்று விடுவார். செங்கொடியின் கற்பனைக்கோட்டயிலுள்ள     விரிசல்கல்தான் அவரது கேள்விகளுக்கு காரணம் எனும் நமது தலைப்பு இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது. வல்லரசாக இருந்த ரஷ்யாவை சோம்பேறிகளின் நாடாக்கி அவ்வல்லரசை உடைத்து சின்னாபின்னமாக்கிய கம்யூனிசத்தை ஆதரிக்கிரோமே இந்த நிலை உலகம் பூராவும் என்ன, இந்தியாவில் வந்தால் கூட இந்தியா உறுப்படாது போய்விடுமே எனும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் உலக நடைமுறையுடனும் யதார்த்தத்துடனும் மிகப்பலமாக மோதக்கூடிய கம்யூனிசம் இவருக்கு சரியாகப்படுகிறது; இஸ்லாம் தவறாகப்படுகிறது.

ஒளியின் வேகத்தை ஒட்டி ஒரு பொருள் பயணம் செய்யும்போது அதன் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது சார்பியல் கோட்பாட்டின் ஒரு பகுதி. இதைப் பயன்படுத்தித் தான் அந்த வசனங்களுக்கு வேகம் எனும் பொருளைக் கொண்டுவருகிறார்கள். அதாவது, அதிவிரைவாகச் செல்லும் போது வாழ்நாள் அதிகரிப்பதால்தான் ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமானதாக ஆகமுடிகிறது என்பது அவர்கள் முடிபு. ஆனால் இதிலும் சிக்கல் இருக்கிறது. ஒளியின் வேகத்தை ஒட்டி விரைகையில் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது ஒரு பகுதிதான். மற்றொரு பகுதி உருவம் சுருங்கும் என்பது. எடுத்துக்காட்டாக ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது அதன் வாழ்நாள் இரண்டு மடங்காகும் என்றால் அதன் நீளம் அரை மீட்டராகும்.

இதன்படி, இந்த விரைவில் உயிரினங்கள் பயணிக்க முடியாது அல்லது பயணித்தால் உயிருடனிருக்க முடியாது என்றாகிறது. ஏனென்றால் அளவு குறைந்தாக வேண்டும். இந்த சமன்பாட்டைக் கொண்டுதான் ஒருவிதத்தில் கணக்கிட்டு ஒளியின் வேகத்தை விட அதிக வேகம் பிரபஞ்சத்தில் இருக்கமுடியாது என்கிறார்கள். ஆனால் அல்லாவின் உதவியாளர்களான வானவர்களால் எப்படி ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டு உயிருடன் இருக்கமுடிகிறது எனும் கேள்வி இங்கு தவ்ர்க்கவியலாமல் எழுகிறது.

ஒளியின் வேகத்தை ஒட்டி ஒரு பொருள் பயணம் செய்தால் அதன் வாழ்நாள் அதிகரிக்கும் என்றும், அதன் நீளம் குறையும் என்றும் சிறப்பு சார்பியல் கோட்பாடு குறிப்பிடுவதாக சொல்கிறார். இதற்கு இவர் தகுந்த சான்றைக்காட்ட வேண்டும். ஒரு பொருளின் பயண வேகத்திற்கேற்ப அதன் காலம் சுருங்கும் அதாவது ஏனையவர்களின் நேரக்கணிப்பை விட அப்பொருளின் பயண வேகத்திற்கேற்ப ஒப்பீட்டளவில் குறைவு என்றும் ஒரு பொருள் வேகமாக பயணித்தால் அதை அவதானிப்பவருக்கு அப்பொருள் சிரியதாகுவதாக தென்படும் என்பதுதான் சிறப்பு சார்பியல் கோட்பாடு. இது இல்லையென்றால் அதை நிரூபிக்க வேண்டும். இவரின் விளக்கத்தின் படி உயிருள்ள பொருள் என்ன உயிரற்ற ரொக்கட், ஸ்பேஸ் ஷட்டல்கள் கூட பயணிக்க முடியாது. ஏன்? அளவு குறைந்தால் ஒரு கட்டத்தில் ஒன்றுமில்லாமல் சீரோவாக போய்விடும். நீளம் குறையக்குறைய பல சிக்கல்களும் ஏற்படும். எனவே இந்த கேள்வி அடிப்படையற்றது.

ஒளியை மிகைத்த வேகம் என்பது பிரபஞ்சத்தில் இல்லை. ஆனால் வானவர்கள் சர்வ சாதாரணமாக ஒளியை விட மிகைத்த வேகத்தில் பயனித்துக்கொண்டிருக்கிரார்களே எப்படி?

வானவர்கள் ஒளியை மிகைத்த வேகத்தில் பயணிக்கிறார்கள் என்று மொட்டையாக சொல்லக்கூடாது! அது எப்படி என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி இதை நிரூபித்து விட்டு கேள்வியைக்கேட்க வேண்டும். நம்பர் கூடுதலாக இருந்தால் ஒளியின் வேகத்தை மிகைத்தது என்பதாகாது.

வளரும் இன்ஷா அல்லாஹ்