Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, January 30


செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு
பகுதி-03

செங்கொடியார் இஸ்லாம்: பிறப்பும் இறப்பும் ஓர் எளிய அறிமுகம் எனும் தலைப்பில் இஸ்லாத்தை அறிமுகம் செய்யப்புகுந்தார். அதில் அடிப்படையிலேயே தவறுவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம். அதை மறுக்கப்புகுந்தவர் எவ்வாறெல்லாம் திருகுதாளாம்போடுகிறார் என்பதை பார்ப்போம்.

முதல் பேதமாய் நண்பர் குறிப்பது, சைத்தான் என்பவன் மனிதனின் எதிரி தானேயன்றி ஆண்டவனின் எதிரியல்ல என்பதை. அதற்கு ஆதாரமாக நண்பர் எடுத்துவைத்திருப்பது சைத்தான் உங்களுக்கு எதிரிஎன்று ஆண்டவன் மனிதனுக்கு கூறும் ஒரு குரான் வசனம். தன்னுடைய படைப்பாகிய மனிதனிடம், யார் தான் அறிவுறுத்தியபடி நடக்கவேண்டும் என விரும்புகிறானோ அத்தகைய மனிதனிடம், யாரை தன்னுடைய பிரதிநிதியாக படைத்திருக்கிறானோ அத்தகைய‌மனிதனிடம் ஆண்டவன் கூறுகிறான் சைத்தான் உனக்கு எதிரி என்று. என்றால் ஆண்டவனுக்கு சைத்தானுடனான உறவு என்ன? தன்னுடைய நண்பனை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? தன்னுடைய எதிரியை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? இந்த இடத்தில் எல்லாமே ஆண்டவனின் படைப்புகள் எனும் சமன்பாட்டைக் கொண்டுவரவேண்டாம். ஏனென்றால் மலக்குகளும், மனிதனும், மரக்கட்டையும் மூன்றுமே ஆண்டவனின் படைப்பு தான். ஆனால் கொண்டிருக்கும் உறவில் மூன்றின் மதிப்பும் வேறுவேறுதான். எனவே உனக்கு எதிரி என சைத்தானை மனிதனுக்கு ஆண்டவன் காட்டுகிறானென்றால் அதில் உட்கிடக்கையாக இருப்பது தனக்கு எதிரி என்பதுதான்.

அடேங்கப்பா! என்னே தத்துவம்! மனிதனுக்கு எதிரி என்றால் அதன் உள்ளர்த்தம் தனக்கு எதிரி என்பதுதானாம். இவர் இப்படி கூறுவார் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். அல்லாஹ் ஒரு இடத்தில் கூட தனக்கு சைத்தான் எதிரி என்று கூறவில்லை. மாறாக மனிதனுக்குத்தான் சைத்தான் எதிரி என்கிறான். இவன் மனிதனுக்கு எதிரியானதன் பின்னனி என்ன? அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை படைத்தபோது அவருக்கு பணிய கட்டளை பிறப்பிக்கிறான். இந்த கட்டளைக்கு சைத்தனைத்தவிர அனைவரும் அடிபணிகின்றனர். இவன் பெருமை கொண்டதன் காரணமாக இவன் அடிபணிய மறுக்கிறான். இதனால் அல்லாஹ்வின் சாபத்திற்கு உள்ளாகிறான். தான் இவ்வாறு உன்னுடைய சாபத்திற்கு உள்ளாகக்காரணமாயிருந்த ஆதமையும் அவரது சந்ததியையும் வழிகெடுக்க ஒரு வாய்ப்புக்கேட்கிறான்; வாய்ப்பளிக்கப்படுகிறது. இவர் கூறுவதுபோல் சைத்தான் அல்லாஹ்வின் எதிரியாயிருந்தால் ஏன் போய் தன் எதிரியிடம் வாய்ப்புக்கேட்டு பல்லிலிக்க வேண்டும்? அவனிடம் சவால் விடாமல் ஏன் அவகாசம் கேட்க வேண்டும்? எனது இழிவு நிலைக்கு காரணமான மனிதனைத்தான் அவன் இழிவுபடுத்த வேண்டும் என்று மனிதனின் எதிரியாகிறான். தன் நண்பனை எதிரி என்று அடையாளமிடமாட்டான். அல்லாஹ்வின் அடிமை சைத்தான் என்பதால் தன்னுடைய ஏனைய அடிமைகளுக்கு இவனை எதிரி என்று அடையாளமிடலாம். இவன் எதிரிதான். அல்லாஹ்வின் படைப்பினனகளிடையே வேறுபாடு உண்டு. ஆனால் அவனிடம் அனைத்தும் சமமே.

யாரை தன்னுடைய பிரதிநிதியாக படைத்திருக்கிறானோ அத்தகைய‌மனிதனிடம்.

மனிதனின் கடவுளின் பிரதிநிதியல்ல. தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்.

ஒருவனுக்கு எதிரி என யாரைக் கூறமுடியும்? யார் எதிராக செயல்படுகிறானோ அவனைத்தான் ஒருவனுக்கு எதிரி என்று கூறமுடியும். அந்த வகையில் சைத்தான் மனிதனுக்கு எதிராக செயல்படுகிறானா? இறைவனுக்கு எதிராக செயல்படுகிறானா? மனிதனுக்கு எதிராக செயல்படுகிறான் என்றால் மனிதனை துன்பப்படுத்த முயலவேண்டும், மனிதனுக்கு இன்னல்களை ஏற்படுத்த வேண்டும், மனிதனை நிர்மூலமாக்க வேண்டும். ஆனால் சைத்தான் இவைகளைச் செய்வதில்லை, மாறாக மனிதனுக்கு இன்பங்களைக் காட்டுவதன் மூலம், சொகுசுகளை காட்டுவதன் மூலம், இன்னும் பல்வேறு உத்திகள் மூலம் இறைவனின் நினைப்பை மனிதனிடமிருந்து நீக்க முயல்கிறான். ஆக சைத்தான் மனிதனிடம் செயல்படுகிறான் ஆனால் ஆண்டவனுக்கு எதிராக செயல்படுகிறான். மறுபக்கம் ஆண்டவனோ என் சொல்லைக் கேட்டால் உனக்கு மிட்டாய் தருவேன், சைத்தான் சொல்லைக் கேட்டல் பிரம்படி தருவேன் என்கிறான். என்றால் யாருக்கு யார் எதிரி?

சைத்தானின் தொழில் மனிதனை எதிர்ப்பது கிடையாது. அவனை வழிகெடுத்து நரகத்தில் கொண்டுபோய் சேர்ப்பதுதான் அவன் தொழில். அதற்காகத்தான் அவன் இன்பங்களையும், சொகுசுகளையும் தீமையையும், அசிங்கங்களையும் அழகாகக்காட்டி மனிதர்களை தன்வழிக்கு கொண்டுவருகிறான். எதிர்த்து சண்டையிடுபவனை விட இப்படி கூட இருந்து குழிப்பறிப்பவன் மோசமான எதிரியா இல்லையா? இதன் மூலம் பரிசுக்குப்பதிலாக தண்டணை வாங்கித்தருகிறான். ஒருவனை பிடிக்காதவன் அவனுக்கு கெட்ட விடயங்களை நல்லதாக காட்டி அவனை நாசமாக்கினால் அதைப்பார்க்கும் அவனது தந்தை அவ்விருவரையும் தண்டிப்பார். இதனால் கெடுத்தவன் தந்தைக்கு எதிரியாகிவிடமுடியுமா? இதுதான் இவரது சிந்தனத்திறனா? 5 ரூபாவை காட்டி  5 கோடியை கிடைக்காமல் செய்பவன் எமக்கு எதிரியா? அல்லது அந்த பரிசை வழங்குபவனுக்கு எதிரியா? ஒட்டுமொத்த உலகமும் ஒன்று சேர்ந்து அவனை வணங்குவதில்லை என்று முடிவெடுத்தாலும், அவனை வணங்குவதென்று முடிவெடுத்தாலும் அவனுக்கு ஒன்றும் கூடிவிடப்போவதுமில்லை; குறையப்போவதுமில்லை எனபதுதான் இஸ்லாதின் நிலை!

சைத்தான் மனிதனை ஆண்டவனின் திசையிலிருந்து திருப்புகிறான், அதாவது மனிதனிடம் தான் செயல்படுகிறான் என்றாலும் அது விளைவுதான், வினையல்ல. வினை என்பது சைத்தான் ஆண்டவனை எதிர்த்தது தான். ஆண்டவனின் சொல்லுக்கு கீழ்படிய மறுத்து எதிர்த்து நின்ற வினையின் விளைவு தான் மனிதனை திசைமாற்றும் சைத்தானின் முயற்சி

ஆண்டவனின் சொல்லுக்கு கீழ்படிய மறுத்தது அவனது பெருமை! இதுதான் வினை. அதன் விளைவுதான் மனிதன் மீது அவன் கொண்ட கோபம்!. இறைவனை எதிர்துவிட்டு (ஒரு வாதத்திற்கு) எதற்காக அவனிடம் போய் கெஞ்ச வேண்டும்? இதற்கு செங்கொடி பதிலளிப்பாரா?

மனிதனைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சைத்தான் ஆண்டவனை எதிர்க்கவில்லை. ஆண்டவனை எதிர்த்ததால்தான் மனிதனைக் கெடுக்கிறான். எனவே சைத்தானின் நோக்கம் ஆண்டவனை எதிர்த்தது தானேயன்றி, மனிதனைக் கெடுப்பதல்ல. எனவே சைத்தான் ஆண்டவனின் எதிரி என்பதே சரி, மனிதனின் எதிரி என்பது மாத்திரைக் குறைவுதான்.

அவன் பெருமையின் காரணமாகத்தான் இறைவனின் சாபத்திற்குள்ளாகிரான். இது எதிர்த்தல் என்பதல்ல. சைத்தானின் நோக்கம் என்னைவிட தாழ்ந்த ஒருவனை மதிக்கமாட்டேன் என்பதுதான். இறைவனை எதிர்ப்பதல்ல. ஆதலால், சைத்தான் மனிதனின் எதிரி என்பதுதான் மேலும் சரி என்று நிரூபனமாகிறது. ஆண்டவனின் எதிரி என்பது சிந்தனைக்குறைவுதான்.

இவர் கூறுவதில் லாஜிக் இல்லை என்று கூறியதற்கு அளிக்கும் விளக்கத்தை (?) பாருங்கள்:

தர்க்கரீதியான(!) ஒன்றையும் இதில் இணைத்திருக்கிறார். அதாவது சைத்தான் மனிதனின் மனதைத்தான் கெடுத்தானாம் மார்க்கத்தைக் கெடுக்கவில்லையாம். மார்க்கம் என்பதென்ன தனியொரு பொருளா? (இங்கு மார்க்கம் என்று அவரது சொல்லாகவே கையாண்டிருக்கிறேன். மதமா மார்க்கமா என்பதை பின்னர் விளக்குகிறேன்) மனிதர்க‌ளை நீக்கிவிட்டால் மார்க்கம் என்பதை எப்படி வரையறுப்பது? மனிதர்களின் மனதிலிருந்து பிரித்து தனித்த ஒன்றாக மார்க்கத்தை அடையாளப்படுத்த முடியாது. எனவே மார்க்கத்தைக் கெடுத்தான் என்பதும், மனதைக் கெடுத்தான் என்பதும் ஒன்றுதான் மாறுபட்டதல்ல. முன்னவர்களின் மன‌திலிருக்கும் மார்க்கத்தைக் கெடுத்து அதையே பின்னவர்களுக்கு அழகாகக் காட்டியதால்தான் அதையே அவர்களும் பின்பற்றும்படியாகிறது. இதில் தர்க்கவியல் குறை ஒன்றுமில்லை.

மார்க்கம் என்பது ஒரு வாழ்க்கை நெறி அதைப்பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் அது மாறாது. அது அப்படியேதான் இருக்கும். மனிதனின் மனத்தில் அதைப்பற்றிய அலட்சியத்தை ஏற்படுத்தினால் அதை விட்டும் விலகி தான்தோன்றித்தனமாக இருப்பான். மனமும் மார்க்கமும் வேறு. மனதைகெடுத்தால் மார்க்கம் பின்பற்றப்படாதே ஒழிய மார்க்கம் மாறாது.

அடுத்த தவறாக இஸ்லாத்தை ஆதாரபூர்வமாக இதுவரை யாரும் நிரூபித்ததுகிடையாது. இவரைப்போன்று உளரல்தான் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கு அவர்,

இஸ்லாத்தை இதுவரை யாரும் ஆதாரபூர்வமாக யாரும் விமர்சித்ததில்லை என்கிறார். குரானிலேயே இதற்குமேல் தர்க்கிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் எனும் பொருளுள்ள வசனங்கள் இருக்கின்றன. விமர்சனம் செய்து மீறிப்போகும்போது தாக்குதலில் இறங்குவதற்கு அண்மைக்காலம் வரை எடுத்துக்காட்டுகள் உண்டு.

குர்ஆனில் இதற்கு மேல் தர்கிக்கவேண்டாம் என்று யாருக்கு எப்போது கூறப்பட்டுள்ளது என்பதை பார்க்கவில்லையோ! மூடர்களோடு விவாதம் செய்ய வேண்டாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. பயந்துபோயல்ல! இன்னும்சொல்லப்போனால், குர்ஆன் மாற்றுக்கருதுடையவர்களிடம் தாராளமாக விவாதம் செய்ய அழைக்கிறது, அவர்களுடைய கூற்றுக்கு ஆதாரம் கேட்கிறது, அவர்களுக்கெதிராக சவால் விடுகிறது. விமர்சனம் செய்பவர்களை தாக்கக்கூடாது. எனினும் அறிவில்லாமல் சிலர் செய்கின்ரனர். இதனால் இது இஸ்லாம் அனுமதித்துள்ளது என்பதல்ல.

இங்கும் கூட கம்யூனிச அவதூறுகளை கூறியிருக்கிறீர்கள். கொலை, கொலை என்று அலறியவர்களே நாங்கள் காசுக்காகத்தான் அவயமிட்டோம் என ஒதுங்கிவிட்டார்கள், நீங்களோ இன்னும் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.. உங்களுக்கு கம்யூனிசம் குறித்த விமர்சனம் இருந்தால் தனித்தொடராக வெளியிடலாம், நான் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தெளிவுபடுத்த ஆயத்தமாக இருக்கிறேன்.

இஸ்லாம் அடக்குமுறைக்குட்படுத்துகிறது எனும் தோரணையில் எழுதியதால் கம்யூனிசம்தான் இதை செய்கிறது என்பதை எடுத்துக்காட்டவே கம்யூனிசத்தின் அராஜகங்களை எடுத்துக்காட்டப்பட்டது. இது தவறு என்றால் பதிலளித்திருக்கலாம். தனித்தொடர் அமைத்தால்தாம் பதில் என்பதன் பின்னனி என்ன? இப்போதைக்கு பதில் கிடையாது. யோசிக்க டைம் வேணும் என்பதற்காகவா? பரவாயில்லை. யோசித்து இதற்கும் இவரது பாணியில் பதில் என்று ஜல்லியடிக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம்.

அப்புறம் இஸ்லாத்தில் மாற்றம் செய்ய தேவையிருக்காது என கூறியிருக்கிறீர்கள். அதை உங்கள் நம்பிக்கை என நகர்ந்துவிடலாம். ஆனால் போகிறபோக்கில், \\தவறு எனில் மாற்றுவோம்// என்று கூறியிருக்கிறீர்களே. என்ன விசமம் இது. இஸ்லாத்தில் எந்த ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ யாருக்கு அதிகாரம் இருக்கிறது? பொருட்பிழையில்லாமல் சொற்பிழைகளையே பெரும்பேதமாய் பதிவெழுதி எனக்கு விளக்கம் கூறிவிட்டு, இஸ்லாத்தின் அடிமடியிலேயே கைவைத்துவிட்டீர்களே. பலே, பலே.

இஸ்லாம் மாத்திரமே சரியானது என்ர முன் முடிவினை தவிர்த்துவிட்டுவந்தால்தான் விவாதம் செய்ய வருவேன் என்று மேற்படியார் விரும்பினார். சரி, இதை ஒத்துக்கொண்டு இவரை அழைப்போம் என்பதற்குத்தான் அவ்வாறு எழுதப்பட்டது. இப்ப என்ன அடிமடியில் கை வைத்துவிட்டீர்கள் என்று கரடிவிடுகிறார். இஸ்லாத்தில் மாற்றம் செய்ய தேவையில்லை என்பதுதான் எமது நிலை. இஸ்லாத்தில் எதையும் யாரும் மாற்ற முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை. தவறு தவறு என்று கூப்பாடுபோடாமல் துணிவிருந்தால் எடுத்துக்காட்டுங்கள் மாற்றிக்கொள்கிறோம் என்று கூறியது அப்போதாவது இவர்கள் வருவார்களா என்பதுதான்.

அடுத்து, இஸ்லாத்தை விமர்சித்ததற்காக இன்னலுக்கு ஆளான சிலரை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் குறித்த குறிப்புகளை இணையத்தில் தேடித்தந்திருக்கிறீர்கள். இறுதியாக \\உண்மயை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கும் போது இவர் குறிப்பிட்ட தடங்கள் வருவது இயல்பே// என்று ஒப்புதல் தந்திருக்கிறீர்கள். ஆனால் நான் குறிப்பிட்டிருந்ததற்கும் நீங்கள் இயல்பு என்பதற்கும் இடையில் கொஞ்சம் வித்தியாசமிருக்கிறது. ஏனைய மதங்களைப் பொருத்தவரை மதத்திற்குள் இருந்து கொண்டே அந்த மதக்கொள்கைகளை விமர்சிக்க முடியும், விமர்சித்திருக்கிறார்கள். அதை அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் விளக்கமாக கருதியிருக்கிறார்களேய‌ன்றி புறக்கணித்ததில்லை. ஆனால் ஆப்ரஹாமிய மதங்களில் அது இயலாது. அதிலும் குறிப்பாக இஸ்லாத்தில் முடியவே முடியாது. ஒரு அரசு இருந்து மதக் கொள்கைகளுக்கு எதிரானவரை தடுப்பது தண்டிப்பது என்பது வேறு, மக்களே புறக்கணிப்பது என்பது வேறு. அதுவரை நெருங்கிய உறவினர்களாக நண்பர்களாக இருந்தாலும் இஸ்லாத்தை விமர்சித்துவிட்டால் அடுத்த கணமே அங்கு ஒரு விலக்கம் வந்து உட்கார்ந்து கொள்ளும். ஏனென்றால் இஸ்லாத்தில் கடமை தான் இருக்கிறதேயன்றி, விமர்சிக்கும் உரிமையில்லை. இதுதான் துன்புறுத்தல் வரை கொண்டு சேர்க்கிறது. தக்கலை கவிஞர் ரசூல், மைலாஞ்சி கவிதைத்தொகுப்பில் ஏன் பெண் நபி இல்லை என்று கேட்டு கவிதை வெளியிட்டதற்காக, கவிதையை நீக்கி மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள் மறுத்ததால் ஊர் விலக்கம் செய்யப்பட்டர். ஆண்டுகள் பல கடந்தும் அவரால் வீட்டுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில் தாகத்திற்கு மோர் வாங்கி குடிக்கமுடியாது. \\இவ்வாறு அறியாமையினால் ஓரிரு இடங்களில் நடப்பதை எடுத்து காட்டுவது சரியானது அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்// சரிதான், அப்படி எடுத்துக்கொள்லலாம். ஆனால், இதை இயல்பு என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா?

இவர் நாம் எழுதிய மறுப்புத்தொடரை ஒழுங்காகப்படிக்கவில்லை என்பது இதன்மூலம் புலனாகிறது. உண்மையை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கும் போது இவர் குறிப்பிட்ட தடங்கள் வருவதி இயல்பு என்று குறிப்பிட்டதை படித்தவர் முழுமையாக படிக்கவில்லை. இதை உண்மைக்குத்தான் ஒப்பிட்டோம். உளறல்களுக்கல்ல. இவர் சுட்டிக்காட்டியவர்கள் உளறியவர்கள்தான். அதை தவறு என்று நிரூபிப்பதற்குப்பதிலாக தாக்கியது மக்களது அறியாமை. இதை நாம் வேறு வேறு என்று தெளிவாக்கிய எமக்கே அதன் வித்தியாசத்தை விளக்கும் மேதாவித்தனத்தை என்னவென்பது!. இஸ்லாத்தை ஒருவர் விமர்சித்தால் அதை சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் எந்த நியாயவானுக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இவர்கள் உளறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. தக்கலை றசூலின் கேள்விக்கு தெளிவான பதில் உள்ளது. அதை இவருக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது தவறுதான். இஸ்லாம் தவறு என்பவனை எதற்காக இஸ்லாத்தினுல் வைத்திரூக வேண்டும்? எதற்காக தவறு என்பதில் இருக்க வேண்டும்? விலகிவிடுவதுதான் நேர்மை. இஸ்லாம் தனது கொள்கையை மறுப்பவனையோ விமர்சிப்பவனையோ எதிர்ப்பது கிடையாது. இதில் தாராளமாக விட்டுக்கொடுக்கிறது. விரும்பியவர் ஏற்கலாம்; விரும்பாதவர் செல்லலாம். இதை விமர்சிப்பதற்கு தாராளமாக அனுமதியுள்ளது. விமர்சனம் என்ற பெயரில் உளறல்களை வாந்தியெடுப்பதற்கல்ல! என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம்.

தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பானமை இவருக்கு கிடையவே கிடையாது என்பதை இவருடைய இந்த மறுப்பு எனும் சமாளிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

இவருடைய சப்பைக்கட்டு தொடரும்வரை சவுக்கடியும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

இதுதொடர்பான இடுகைகள்