செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு
பகுதி- 05
குரானின் சவாலுக்கு பதில் என்ற பெயரில் செங்கொடி உளறியதற்கு நாம் அளித்த பதிலை மறுக்க முடியாமல் ஏதோ எழுதி மானத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எனது பதிலுக்கு பதில் போட்டிருக்கிறார். அதில் இவர் கையாண்ட தில்லாலங்கடி வேலையை மீண்டும் தோலுரித்துக்காட்ட வேண்டிய கடப்பாடு உள்ளது.
அடைப்புக்குறிக்கு ஒரு தத்துவத்தை கூறினார். அடைப்புக்குறிக்குள் விளக்கம் போடாவிடின் குர்ஆனில் முரண்பாடுகளும் தவறுகளும் நிறைய கிடைக்கும் என்றார். அதற்கு ஒரு வசனத்தையும் எடுத்துக்காட்டினார். அதை நாம் மறுத்து எழுதியிருந்தோம். அதற்கு பதிலளிக்கப்புகுந்தவர், அடைப்புக்குறி இலகுவாக விளங்குவதற்காக போடப்படவில்லை. ஏனென்றால், அதில் அதிகமான அடைப்புக்குறிகள் போடப்பட்டுள்ளன! ஏனைய எந்த நூல்களையோ, பத்திரிகைகளையோ மொழிபெயர்க்கும் போது அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை என்கிறார். இந்த அடைப்புக்குறி ஒரு மேட்டரே இல்லை. அடைப்புக்குறி குர்ஆனின் மொழிபெயர்ப்புகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இதற்கு குர்ஆனின் தவறுதான் காரணம் என்பது தவறு. இதற்கு முழு முதற்காரணம் மொழிபெயர்ப்பாலர்கல்தான். எந்தவொரு மொழியாக இருந்தாலும் அதனை வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் போது அந்த மொழியின் நடைக்கேற்பவே மற்றம் செய்ய வேண்டும். இதை பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் கவனிக்கத்தவரியுள்ளனர். ஆனால், இந்த குறைகளை அறிஞர் பி.ஜே மொழிபெயர்த்த தமிழாக்கத்தில் காண இயலாது. அது எவ்வளவுக்கு அடைப்புக்குறிகளை தவிர்க்க இயலுமோ அவ்வளவுக்கு தவிர்க்கப்பட்டு எளிய மொழி நடைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அடுத்து இன்னொரு விளக்கத்தையும் கூறுகிறார்கள். அதுவும் தவறு என்கிறார். அந்த விளக்கம் என்ன? ஏனைய விடயங்களை மொழிபெயர்ப்பது போல் குர்ஆனை மொழி பெயர்ப்பது கிடையாது. அதை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதால் அதிகம் அடைப்புக்குறிகள் இடப்படுகின்றது. இதுவும் தவறு என்கிறார். இந்த விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதால் அடைப்புக்குறி அதிகம் இடம்பெறுகிறது என்பது தவறு! ஆனாலும் இதற்கு இவர் அளிக்கும் மறுப்பையும் எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. எந்தவொன்றையும் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்க இயலாது. அப்படி செய்தால் குழப்பம் வரும்; இலக்கணம் விடாது! எனவே, குர்ஆன் கருத்தைத்தான் மொழிபெயர்த்துள்ளனர் என்கிறார். வேண்டுமென்றால் நாம் இப்போது சவால் விடுகிறோம். குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தைதான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது! இதை நாங்கள் நிரூபிக்கத்தயார்! செங்கொடி தயாரா? வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால் இலக்கணம் விடாதாம். சொல்லுக்கு சொல் மொழிபெயர்த்தால் இலக்கணம் அங்கீகரிக்கும்! மாறாக அந்த மொழியின் நடைக்கேற்பவே வேறு மொழியில் பெயர்த்தால்தான் இலக்கணம் சிக்கலை ஏற்படுத்தும்! இதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு இடையில் குரான் வாக்கியங்கள் தமிழுக்கியைந்த கோர்வையுடன் இருப்பதால், குரான் அப்படி சொல்லுக்குச்சொல் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இருக்க முடியாது. மட்டுமல்லாது, பல்வேறு தமிழ் குரான் மொழிபெயர்ப்புகள் ஒரேமாதிரியான வாக்கிய அமைப்பைக் கொண்டதாகவும் இல்லை என்கிறார். அரபு மொழிக்கும் தமிழுக்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன! அதன் இலக்கனத்திலிருந்து, மொழி நடையிலிருந்து, சொல்லுருவாக்கம் உட்பட வேற்றுமைகள் உள்ளன என்பதை செங்கொடி மறந்துவிட்டார். குர்ஆன் மொழிபெயர்ப்புகளிடையே வார்த்தை அமைப்புகளில் வித்தியாசம் இருப்பதால் குர்ஆன் தவறாகிவிடுமா? ஒரு சொல்லுக்கு பல ஒத்த கருத்துச்சொர்கள் இருக்கும். அதை மாற்றி மாற்றி யூஸ் பண்ணால் அது முரண்பாடா?
ஏற்கனவே எடுத்துக்காட்டிய அதே வசனத்தை இத்தொடரிலும் எடுத்துக்காட்டி அதன் முரண்பாட்டை (?) விளக்குகிறார்.
கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட வசனத்தையே (குரான் 2 :178 ) எடுத்துக்கொள்வோம். "சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை" என்பதன் பொருள் என்ன? சுதந்திரமான ஒருவன் கொல்லப்பட்டால் அதற்கு பகரமாக சுதந்திரமான ஒருவனும், அடிமை ஒருவன் கொல்லப்பட்டால் அதற்குப் பகரமாக அடிமை ஒருவனும் என்று நேரடியாகவும், அடிமை ஒருவனை சுதந்திரமான ஒருவன் கொலை செய்தால் அதற்குப்பகரமாக கொலை செய்த சுதந்திரமானவனின் அடிமை ஒருவன் என்று மறைமுகமாகவும் பொருள் வருகிறது. இப்படி எதிர்மறையான வகையில் யாரும் பொருள் கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் "சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை" என்று "கொலை செய்த" என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டு பயன்படுத்துகின்றனர். ஜான் ட்ரஸ்ட் வெளியீட்டிலும் இதே வசனத்தில் இதே அடைப்புக்குறி சில சொற்கள் தள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மொழியியல் சிக்கல்களுக்காக மட்டுமே அடைப்புக்குறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஏற்கத்தக்கதன்று.
எந்த ஒரு வசனத்தை விமர்சிப்பதாக இருந்தாலும் அந்த வசனத்தை முழுசாக போட்டு விளக்க வேண்டும். இதை எனது மறுப்பில் கூட "முழுசா போட்டு விளக்கியிருந்தால் புட்டு வெளியாகியிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தேன். அதை கவனத்தில் கொள்ளாது மீண்டும் அதே கயமைத்தனத்தை இங்கும் நிலை நாட்டியுள்ளார். இவர் சுட்டிக்காட்டிய வசனம் பழிவாங்குவது தொடர்புடையது. இதை அவரும் ஒத்துக்கொள்கிறார். பழிக்குப்பழி என்பது கொலை செய்தவனை கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் பழி தீர்ப்பதை குறிக்கும். இந்த அடிப்படையை விளங்கிக்கொண்டவர்கள் அடைப்புக்குறி இல்லாமல் வாசித்தால் கூட சுதந்திரமானவனுக்கு சுதந்திரமானவன் என்றால் கொலை செய்தவனைத்தான் குறிக்கும் என்று புரிந்து கொள்வர். ஏன்? பழி வாங்குதல் என்றால் யாரை கொலை செய்தானோ அவனைப் பழிவாங்குவது என்றுதான் அர்த்தம்! அதுதான் நியதியும் கூட! இதை புரியும் திறனற்ற செங்கொடி போன்றவர்களுக்காக "கொலை செய்த" என்று அடைப்புக்குள் போட்டிருக்கும். எனக்கு அடைப்பு இல்லாமல் விளங்கும் என்று கூறிவிட்டு அடிப்படை அறிவு கூட இல்லாமல் விமர்சிக்க கிளம்பியுள்ளார். இந்த வசனத்தில் எந்த தவறும் இல்லை!
நான் இங்கு அடைப்புக்குறி என்றுதான் பயன்படுத்தியுள்ளேன்.(செங்கொடியும் அவ்வாறுதான்) ஆனால், அடைப்புக்குறியில் குறிப்பிடும் விளக்கம் என்றுதான் குறிப்பிட வேண்டும். அடைப்புக்குறி என்றால் அதன் விளக்கம் தான் என்று புரிந்து கொள்ளும் செங்கொடி இதற்கு மட்டும் இப்படி அடம்பிடிப்பது வீம்புக்காக என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து நேரடி முரண்பாட்டை இரண்டு வசனங்களை குறிப்பிட்டு முதல் வசனத்தில் முதலில் வானம் பின்னர் பூமி என்றும் அடுத்த வசனத்தில் முதலில் பூமி பின்னர் வானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முரண்பாடில்லையா? என்று துள்ளிக்குதித்தார். இதற்கு நாம் பதிலளித்திருந்தோம். அதற்கு இவர் கூறும் விளக்கம் இதோ:
அடுத்து முரண்பாடான வசனத்திற்கு வருவோம். கட்டுரையில், ஒரு வசனத்தில் முதலில் வானம் பின்னர் பூமி என்றும், வேறொரு வசனத்தில் முதலில் பூமி பின்னர் வானம் என்றும் இருக்கிறது, இது முரண்பாடில்லையா? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நண்பர், \\பூமியைப்படைத்தான்; பின்னர் வானத்தைப்படைத்தான்; பின்னர் அதை விரித்தான். இதில் எந்த முரண்பாடுமில்லை// என்று எழுதியுள்ளார். குறிப்பிட்ட கட்டுரைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை கவனித்துப்பார்த்தால் இதே கருத்தை வேறொரு நண்பர் ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்பதை அறியலாம். ஆனால் அவர் வானத்தை இரண்டு முறையாகவும் பூமியை ஒரு முறையாகவும் குறிப்பிட்டார். நண்பர் இஹ்சாஸ் பூமியை இரண்டு முறையாகவும் வானத்தை ஒரு முறையாகவும் குறிப்பிடுகிறார். இவைகளெல்லாம் அந்த முரண்பாட்டை நீர்த்துப்போக வைப்பதற்காக சொல்லப்படும் விளக்கங்கலேயன்றி வேறில்லை.
விளக்கம் தவறு என்றால் தவறு என்பதை நிரூபிக்க வேண்டும்! அதை விடுத்து, இதுபோல்தான் இன்னொருவரும் கமண்டில் கூறினார். அதில் வானம் இரண்டு தடவையும் பூமி ஒரு தடவையும் என்று குறிப்பிட்டார். நான் பூமி இரண்டு தடவையும் வானம் ஒரு தடவையும் என்று கூறி முரண்பாட்டை நீர்த்துப்போக வைப்பதாக அசடு வழிகிறார். குறிப்பிட்ட கமண்டில் சொன்ன விளக்கத்துக்கு பதில் அளித்தது போன்று நமது விளக்கத்துக்கும் பதில் அளித்து விட்டு இப்படி சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், எமது விளக்கத்துக்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை! தவறு என்று நிரூபிக்கவில்லை. இவரது இயலாமையை பதிலாக அவிழ்த்து விடுகிறார். அத்தோடு நிறுத்தாமல் இன்னொரு முரண்பாடு அதாவது பூமி படைக்கப்பட்ட நாட்களின் என்னிக்கையிடையே வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டு சரிகட்டிவிடுகிறார். இதே வாதத்தை இவர் வேறு ஒரு தொடரில் முன்வைத்துள்ளார். அதற்கு பதில் வெளியிடப்படும் போது பார்த்துக்கொள்ளலாம்.! இந்த இடத்தில் இது திசை திருப்பும் கருவியாக தனது இயலாமையை மூடி மறைக்கும் கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்.
குர்ஆனில் ஒரு வசனத்திற்கு மாற்றீடாக ஒரு குறளை குறிப்பிட்டு மதவாதிகளே! பதில் சொல்லுங்கள்!! என்று முழங்கினார். அதற்கு பதில் சொல்லப்பட்டிருந்தும் எவ்வாறெல்லாம் திருகுதாளம் போடுகிறார் என்பதை வாசிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளலாம். அதற்கான நமது மறுப்பை பார்க்கும் முன் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும். அதாவது, ஒரு குறளை குறிப்பிட்டு இதை குர்ஆன் வசனமொன்றிற்கு மாற்றீடாக பயன்படுத்துவீர்களா என்று கேட்பவர் எந்த வசனத்திற்கு மாற்றீடாக பயன்படுத்த வேண்டும். அந்த வசனம் இக்குறளை விட எந்தவகையில் கீழானது என்று குறிப்பிடவே இல்லை.!
அவரது சப்பைக்கட்டை பாருங்கள்:
நோய் என்னதென்று தெரிந்து, அந்த நோய் வந்ததற்கான காரணத்தை அறிந்து, அதை என்ன முறைமையில் போக்குவது என்பதை அறிந்துகொண்டு, செய்வதற்கு வயப்பட்டதை செய்ய வேண்டும். என்பது அந்தக்குறளின் பொருள். இதை வெறுமனே நோய் வந்தால் மருத்துவம் பாருங்கள் என்பதாக குறுக்கி விட முடியாது. குறள் கூறும் மருத்துவத்திற்கான இந்த இலக்கணம் இன்றுவரை பொருத்தமானதாக இருக்கிறது, எதிர்காலத்திலும் இது பொருத்தமானதாகவே இருக்கும்.
குறள் கூறும் மருத்துவத்திற்கான இலக்கணம் இன்று வரை பொருத்தமாவதாக குறிப்பிடுகிறார். இதனால் அந்த குறள் குர்ஆன் வசனத்திற்கு மாற்றீடாக குறிப்பிட்டு விட முடியுமா? வள்ளுவர் இதை கூறும் முன்போ கூறும் கால கட்டத்திலோ மருத்துவத்திற்கு வேறு இலக்கணமா இருந்தது? இதுவெல்லாம் சாதாரண விடயம்! பசித்தால் சாப்பிடு! தூக்கம் வந்தால் தூங்கு! மழை பெய்தால் குடை பிடி! என்று ஏதாவது ஓரிடத்தில் இருந்து அதை எவனாவது பார்த்தீர்களா! இதெல்லாம் எங்கள் வேதத்தில் உள்ளது! இது இக்காலத்திற்கும் பொருந்துகிறது! எனவே இது இறைவேதம் என்று கூறினால் எப்படியோ அப்படி உள்ளது இந்த வாதம்!
இதைக்கூருவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். அலிப், லாம், மீம் என்று பொருளற்ற அசைச் சொற்களை எல்லாம் குர்ஆனில் வசனமாக இடம்பெற்றிருக்கிறது என்பதை நண்பர் மறந்துவிட்டாரா? பொருளற்ற அசைச்சொர்களை வசனமாக கூறமுடிந்த கடவுளுக்கு பொருளுடன் கூடிய ஒரு கருத்தைக் கூறுவது எந்த விதத்தில் தேவையின்றிப் போகமுடியும்? நண்பர் நம்பும் கடவுளே கொசுவையோ அதற்கும் அட்பமானதையோ உதாரணம் கூற தயங்கமாட்டேன் என்று கூறியிருக்கும் போது மருத்துவம் குறித்த ஒன்றை கூறுவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். இதுதான் என்ன வகை ஒப்பீடோ?
அலிப், லாம், மீம் போன்ற பொருளற்ற வசனங்கள் இருப்பது ஒரு உயர்ந்த இலக்கிய நயத்திற்காக என்பதை சிந்திக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம். ஏன் வள்ளுவர் கூட உயிரளபடையை பயன்படுத்தியிருக்கிறார் ஓசை நயத்திற்காக! அதை தனியே எடுத்தால் ஒரு பொருளும் இராது! ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டுமெனில் அதற்கான தேவை இருக்க வேண்டும்! பிரித்தறிவிக்க வந்த வேதத்தில் நோய் வந்தால் மருத்துவம் செய்! என்று எதற்காக குறிப்பிட வேண்டும்? என்ன அவ்வளவுக்கு மருந்து செய்ய தெரியாமலா இருந்தார்கள்? கொசுவை உதாரணமாக குறிப்பிட அல்லாஹ் வெட்கப்பட மாட்டான் என்று எதற்காக குறிப்பிடுகிறான். அது பொருத்தமா? இல்லையா? என்பதை வாதமாக எடுத்து வைக்க வேண்டும்! போகிற போக்கில் தடவி விட்டு செல்லக்கூடாது! பதில் தெரியாவிட்டால் இப்படியெல்லாம் அலட்டுவது இவர்களின் வாடிக்கை போலும்!
இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும் வகையில் குறிப்பிட்ட அக்குறளுக்கு அறிவியல் முன்னறிவிப்பு கொடுக்கிறார்!
இந்தக்குறளில் நோய் குறித்த முன்னறிவிப்பு இல்லையா? நோய் நாடி அதன்முதல் நாடி தணிக்கும் முறைனாடி அதைச் செய்வது என்று மட்டும் கூறியிருந்தால் அதில் முன்னறிவிப்பு ஒன்றுமில்லை. ஆனால், அதில் வாய்ப்பச் செயல் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நோயைத் தணிக்கும் முறையை அப்படியே செய்துவிடாமல் அதில் வாய்ப்பானதை செய்ய வேண்டும் என்பதன் மூலம் ஒவ்வாமை என்னும் நோய் குறித்த முன்னறிவிப்பு அங்கு வருகிறது. நோய்க்கான மருந்தேயானாலும் அந்த மருந்தை உட்கொள்ளும் உடல் அந்த மருந்தை ஏற்றுக்கொள்கிறதா என்பதையும் கண்டறிந்து அதன் பின்னரே மருத்துவம் செய்ய வேண்டும் எனும் விவரணத்தை பெறலாம். அந்த வகையில் அது, ஒவ்வாமை எனும் நோய் குறித்த முன்னறிவிப்பாக இருக்கிறது.
என்னே விவரணம்! முன்னறிவிப்பு என்றால் குறிப்பிடும் அக்காலத்தில் இல்லாத ஒன்று எதிர் காலத்தில் வரும் என்பதை குறிக்க பயன்படும். ஒவ்வாமை என்பது என்ன பத்து அல்லது இருபதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பா? அக்காலத்தில் மட்டுமல்ல! எக்காலத்திலும் உள்ளதுதான்! இன்னும் சொல்லப்போனால் இதில் ஒவ்வாமை பற்றி இருக்கிறது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை! ஒவ்வாமை என்றால் நம் உடலுக்குத்தேவையான, நாம் சாப்பிடும் சாப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத ஒரு நிலை! இது அரிதானது! குறளில் உள்ளது வாய்ப்பச் செயல்! வாய்ப்பச் செயல் என்றால், அந் நோய்க்கேற்ற வகையில் என்பது அர்த்தம்! மருந்து செய்யும் போது அவரது உடலுக்கும் நோயின் தன்மைக்கும் ஏற்ப மருந்து அளிப்பதுதான் மரபு! மரபைத்தான் சொல்லியிருக்கிறார்! இதில் ஒவ்வாமையும் கிடையாது! முன்னறிவிப்பும் கிடையாது! நல்ல வேலை, இது எயிட்சிலிருந்து காத்துக்கொள்ள காண்டம் யூஸ் பண்ண சொல்லியிருக்கிறார் என்று சொல்லாமல் விட்டாரே!
குறளையும் குரானையும் இலக்கிய நயத்தில் எப்படி ஒப்பிட்டுப்பார்த்தார் என்பதை நண்பர் குறிப்பிடவே இல்லை. வெறுமெனே அட்ரஸ் இல்லாமல் போய்விடும் என்கிறார். எப்படி என்பதையும் விவரிப்பார் என எதிர்பார்க்கிறேன். இலக்கிய நயம் மட்டுமல்ல இலக்கணக் கட்டும் கொண்டது குரல். அதன் யாப்பை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கும் 1330 குறட்பாக்களில் எந்த ஒரு குரலும் தளை தட்டாது. அதன் எல்லாக் குறளும் முச்சீர் ஈறாக எழுசீர் விருத்தமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் குர்ஆனில் இருக்கும் இலக்கிய, இலக்கண நயங்களில் ஒன்றிரண்டை நண்பர் எடுத்துவிட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.
எமது மறுப்பைக்கூட முழுசாகப்படிக்கவில்லை! இவருக்கு குர்ஆனின் உயர்ந்த இலக்கிய நடை மட்டுமல்ல குர்ஆன் என்றாலே என்னவென்று தெரியாது என்பதை அவருடைய கட்டுரையிலிருந்து சுட்டிக்காட்டி மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்பதற்காக சில விடயங்களை குறிப்பிட்டிருந்தேன்! அதை வாசித்தும் வாசிக்காதது போல் கேட்கிறார். எனவே அதை மீண்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
இதைப்போல் என்பதற்கு எந்த வரையறையும் கூறாததால் அதன் உள்ளடக்கம், பொருள், ஓசை நயம், வடிவமைப்பு என்பவற்றை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றை கொண்டுவருமாறுதான் கூறுகிறது. ஏனெனில் குர்ஆன் என்பதே இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த தொகுப்புதான். எனவே, இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றை இயற்ற வேண்டும் அல்லது கொண்டுவர வேண்டும்!.
பொதுவாக ஒரு உயர்ந்த இலக்கியப்படைப்பை இயற்ற வேண்டுமெனில் நிறைய பொய்களையும், மிகையான உவமை, உருவகம் போன்றவையும் பயன்படுத்துவர்! ஆனால் குர்ஆன் இவை அனைத்தும் இன்றி உண்மையை மட்டும் கொண்டே அமைந்துள்ளது. மேலும் ஒரு படைப்பானது எந்தளவுக்கு உயர்ந்த தரத்தை கொண்டுள்ளதோ அந்தளவுக்கு பாமர மக்களை விட்டும் தூரமாகும்! ஆயினும் குர்ஆன் அப்படிப்பட்டதல்ல! கவிஞர்களுக்கு விளங்கியது போல் பாமர மக்களுக்கும் விளங்கியது! (ஆனால் திருக்குறள் அப்படிப்பட்டதல்ல! அது தமிழ் மொழியில் இருந்தாலும் அதை அதே மொழியில் மொழியாக்கம் செய்தே பாமரர்களுக்கு கூற வேண்டும். இல்லையெனில் விளங்காது.) இவைதவிர இன்னுமுள்ளன. இவ்வளவும் போதும்.
இதற்கு மேலதிகமாக இத்தொடரில் யாப்புகளைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார்! எனவே, அது சம்பந்தமாகவும் சில விடயங்களை குறிப்பிடலாம். தமிழை பொறுத்தவரை கவிதை, பாடல் போன்றவற்றை இயற்றுவதற்கு சில யாப்பு விதிமுறைகளை அமைத்திருப்பார். அது குறிப்பிட்ட செய்யுளின் இலக்கிய தரத்தை கூட்டுபவனவாகவும் இருக்கும். இந்த வகையில் தமிழில் இவர் குறிப்பிடும் யாப்பு உட்பட பல உள்ளன! இதல்லாமல் புதுக்கவிதையைப்போன்று இயற்றினால் இலக்கிய நயம் அவ்வளவாக இராது. ஆனால், குர்ஆனில் இது போன்ற எந்த யாப்பையும் காண இயலாது! சில அத்தியாயங்கள் அதிக வசனங்களை கொண்டதாகவும் இன்னும் சில குறைந்த வசனங்களை கொண்டதாகவும் இன்னும் பலவாறான வடிவில் இருந்தும் அதம் ஓசை நயம் மிகுந்த ஆச்சரியத்திற்குரியது! இதுபோல் எந்த ஒரு யாப்பை பயன்படுத்தாமலும் அதுவும் ஓசை, இலக்கிய நயங்களோடு ஒரு புத்தகம் இருக்குமெனில் காட்டலாம்! இவ்வளவும் போதும் என்று நினைக்கிறேன். இனிமேலும் சொதப்பாமல் பதில் சொல்லவும். வேண்டுமென்றால் இலக்கியத்தரத்தில் எது உயர்ந்தது என்பதை மட்டும் கருப்பொருளாக வைத்து வைத்து விவாதிக்கத்தயாரா? வேறு எதையும் குறிப்பிடத்தேவையில்லை. எழுத்து விவாதத்தில் இவர் அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை! நேரடியாக அழைக்கிறேன்.
ஒரு உயர்ந்த இலக்கியப் படைப்பாக இருக்க வேண்டுமென்றால் மிகையான உவமைகளும், உருவகங்களும், பொய்களும், புனைவுகளும் இருக்க வேண்டும் என்கிறார். ஆம் உலக இலக்கியங்களில் இவை இடம்பெற்றிருக்கின்றன. அதே நேரம் குரானிலும் இவை இடம்பெற்றிருக்கின்றன. உவமைகள் இருக்கின்றன, உருவகங்கள் மிகைப்படுத்தல்கள் இருக்கின்றன. பொய்கள் இருக்கின்றன. நாங்கள் நம்புகிறோம் அதனால் அத்தனையும் சரி, நாங்கள் நம்பாததால் அத்தனையும் பழுது என்பது சரியான ஒப்பீடல்லவே.
குர்ஆனில் பொய்யான உவமைகள், மிகைப்படுத்தல்கள் இருக்கிறது என்கிறார்! இதை இவர் நிரூபிக்க வேண்டும். நாங்கள் நம்புகிறோம் அதனால் சரி என்று நான் இதுவரை விவாதிக்கவில்லை! முடிந்தளவுக்கு அறிவுபூர்வமாகத்தான் நமது வாதங்களை எடுத்து வைக்கிறோம். பதில் சொல்ல திராணியிலாமல் சமாளிக்கக்கூட முடியாமல் ஏதாவது ஒன்றைக்கூறி எமது வாதத்தை நிலை நாட்ட முற்படுவோம் என்ற குருட்டுச்சிந்தனையில் உதித்த முத்துக்கள்தான் இவை. எங்கள் நம்பிக்கை சரியாக உள்ளது என்பதால் வாதிக்கிறோம். தவறு என்பவர்கள்தான் இது எங்கள் நம்பிக்கை என்று ஒதுங்கிவிடுவர்! நாம் அவ்வாறு சொல்லவுமில்லை! செய்யவுமில்லை!
உயர்ந்த தரமுள்ள படைப்புகள் பாமர மக்களை விட்டு விலகும், ஆனால் குரான் அப்படியல்லாமல் உயர்ந்த தரமாகவும், பாமர மக்களுக்கு அணுக்கமாகவும் இருக்கிறது என்கிறார் நண்பர். ஒருவருக்கு ஒன்று எளிமையாய் இருப்பதும் கடினமாய் இருப்பதும் அதில் அவர் காட்டும் ஈடுபாட்டிலேயே இருக்கிறது. குறளில் எளிமையனவையும் இருக்கின்றன. கடினமானவையும் இருக்கின்றன. இது எல்லா இலக்கியங்களுக்கும் பொதுவானதுதான். குரானும் இதற்கு விதி விலக்கில்லை.
ஒன்றின் மீதுள்ள ஈடுபாட்டினால் விளங்குவது என்பதற்கும் சாதாரணமாக விளங்குவதற்குமிடையில் வித்தியாசம் இருக்கிறது. குர்ஆனை விளங்குவதற்கு எந்த ஈடுபாடும் தேவையில்லை! குர்ஆன் மூலம் கவரப்பட்டவர்கள் அதில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்ததில்லை! கவரப்பட்ட பின்புதான் அதில் ஈடுபாடு காட்டினர்! இந்த வித்தியாசம் கூட சென்கொடிக்கு விளங்கவில்லை. குறளில் எளிமையானது இருந்தால் எடுத்துக்காட்டுங்கள் திருக்குறள் தெரியாத நன்கு தமிழை மட்டும் தெரிந்திருக்கும் ஒருவரிடம் போய் கேட்போம். அவர் அதன் கருத்தை சொல்கிறாரா இல்லையா என்று பார்ப்போம்!
அரபு தெரிந்த ஆனால் குரான் தெரியாத குரான் குறித்து அறிமுகமில்லாத ஒருவரிடம் குரானை வாசித்துக்காட்டி பொருள் கூறச்சொன்னால் அது அவருக்கு கடினமாகத்தான் இருக்கும். ஏன் அரபு தெரிந்த முஸ்லீம்களுக்கு கூட விரிவுரைகள் இல்லாமல் குரானை விளங்கிக் கொள்வது கடினம் தான்.
குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் இருந்த நபித்தோழர்கள் என்னவோ இதை பின்பற்றுவதற்காக வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல் பேசுகிறார். குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் குர்ஆன் என்னவென்று தெரியாதவர்கள்தான் அதன் போதனையை கேட்டு இஸ்லாத்தை தழுவினர். இவருடைய வாதத்தில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை. இக்காலத்தில் கூட அதுதான் நிலை! வேண்டுமென்றால் பரீட்சித்துப்பார்க்கலாம். ஒரு காலத்தில் விரிவுரை அவசியம் என்ற கருத்து நிலவியது. இப்போதும் உள்ளது! இது தேவையில்லை என்றுதான் நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். தமிழர்களுக்கே தேவையில்லை எனும் போது அரபிகளுக்கு தேவையா?
அவ்வளவு ஏன்? முகம்மது குரானை கூறிக்கொண்டிருக்கும் கால கட்டங்களில் கூட மக்களுக்கு புரியாத இடங்களில் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். முகம்மதுவும் விளக்கியிருக்கிறார். அது ஹதீஸ்களாக பதிவு செய்யப்பட்டும் இருக்கிறது. மட்டுமல்லாது முஸ்லீம்கள் எல்லோருக்கும் குரானும் அதன் கருத்தும் பரவலாக்கம் செய்யப்பட்டிருப்பது போல், தமிழர்கள் அனைவருக்கும், குறளும் அதன் கருத்தும் பரவலாக்கம் செய்யப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவைகளையெல்லாம் தெரிந்து கொண்டே பாமரர்களுக்கு புரியும்படி இருக்கும் இலக்கியம் குரான் என்பது பரிசீலனைய்ற உயர்வுனவிற்சியாக மட்டுமே இருக்க முடியும்.
இவர் கொஞ்சம் கூட சிந்தனையற்றவராகத்தான் இத்தொடர் முழுவதையும் எழுதியிருக்கிறார். முகம்மது நபியிடம் விளக்கம் கேட்டவர்கள் அர்த்தம் புரியாமல் கேட்டார்களா? அர்த்தம் புரிந்ததால்தான் இதுக்கு என்ன விளக்கம் என்று கேட்டார்கள். ஒரு பொருளின் விளக்கத்தை கேட்பதற்கும் அதன் அர்த்தத்தை கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு! அரபு தெரியாத முஸ்லிம்களுக்கு அதன் கருத்துடன்தான் பரவ விட வேண்டும். அரபு தெரிந்த முஸ்லிம்களுக்கு இது தேவையில்லை! ஆனால் திருக்குறள் தமிழில் இருந்தாலும் அதற்கு தமிழிலேயே விளக்கம் கூற வேண்டும். வேற்றுமை புரிகிறதா? இவர் பரிசீலிக்கும் லட்சணம் இதுதான்! இதற்குள் எமக்கு பரிசீலனை அற்றவர்கள் என்ற பட்டம் கொடுக்கிறார்!
இவர் குறிப்பிடும் முரண்பாடோ, குறளோ எந்த வகையிலும் குர்ஆனுக்கு பொருந்தாது என்பதை இரண்டாவது தடவையும் நிரூபித்துள்ளோம். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! நீண்ட நாள் இடைவெளியில் யோசித்து எழுதியும் பலனில்லை. குர்ஆனின் சவாலுக்கு பதில் எனும் தொடரில் இவர் மதவாதிகளே! முஸ்லிம்களே! பதில் சொல்லுங்கள்! சிந்தியுங்கள்! என்று முழங்கியவர் இதில் சுருதி இறங்கி அடக்கி வாசிப்பதை இரண்டையும் ஒப்பிடும் போது புரிந்து கொள்ளலாம்.
இனியாவது முயற்சிப்பாரா? ஆவலுடன்....!
இவரது சப்பைக்கட்டு தொடரும் வரை சவுக்கடியும் இடி போல் தொடரும் இன்ஷா அல்லாஹ்.
குறிப்பு: குர்ஆன் விடுக்கும் சவாலை விரைவில் ஏற்றுக்கொள்ளுமாறு அதற்கு பதிலளிக்குமாறு அவரது தளத்தில் நம் சகோதரர்கள் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்துங்கள்.
4 comments:
மொழிபெயயர்பு சித்து வேலைகள்
கலிமா
La ilaha ilallah
லா இலாஹா இல்லல்லாஹு
இதன் பொருளாக கூறப்படுவது என்ன?
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை
===============
நாம் இந்த மொழிபெயர்ப்பு சரியா என்று ஆய்வு செய்வோம்.
.லா=Lā =“no”=இல்லை
இலாஹா=Ilāh إله = “God”.”=இறைவன்
இல்=Illā =except”=தவிர
அல்லாஹ்=Allāh = the “God”.=அந்த இறைவன்
======================
1.]
ஆங்கிலத்தில் சரியாக மொழி பெயர்த்தால் இப்படி வருகிறது.
Threre is no god but the god
தமிழில்
அந்த இறைவனை தவிர வேறு இறைவன் இல்லை.
=====================================
2.]இல்லை இறைவனுக்குப் பதிலாக அல்லா/இலாஹ் பயன் படுத்தலாம்.
ஆங்கிலத்தில்
Threre is no Ilāh but Allāh
தமிழில்
அல்லாவை தவிர வேறு இலாஹ் இல்லை.
==========================
3]ஆனால் மதவாத மொழிபெயர்ப்பாளர்கள் செய்தது என்ன?
ஆங்கிலத்தில்
Threre is no god but Allāh
தமிழில்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை
=================
இலாஹ்,அல்லாஹ் அரபியில் கடவுளை குறிப்பன.ஆங்கிலத்தில் இலாஹிற்கு பதில்ச்ச்க என்றும் அல்லாவை அப்படியே பயபடுத்துவது ஏன்?
தமிழில் வணக்கத்துக்குறிய்ச என்று இல்லாத வார்த்தை ,இலாஹிற்கு பதிலாக வேறெருவனுமில்லை என்ற்ம் கூறுவதும் ஏன்?
===================
மிகவும் எளிதான காரணம்
அல்லாஹ் என்ற வார்த்தையை உயர்வாகவும் இலாஹ் என்ற வார்த்தையை தாழ்வாகவும் காட்டும் நோக்க்மே.
அடைப்புக்குறி எதற்கு பயன் படுத்தப் படுகிறது?
மதவாதிகள் தாங்கள் விரும்பும் கருத்தை விளக்கமாக அளிக்க
எடுத்துக்காட்டு.
_______________
2. 259 அல்லது, சிதைந்து அழிந்துபோன ஒரு சிற்றூரைக் கடந்து சென்ற(உஜைர் என்ப)வரைப் பற்றி (நபியே!) உமக்குத் தெரியுமா? அவர், “இவ்வூர் அழிந்து போய்க் கிடக்கின்றதே! இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) நின்றார். அல்லாஹ் அவரை நூறாண்டுகள்வரை இறந்து கிடக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்பெற்றெழச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரிடம் வினவினான். அதற்கவர், “ஒரு நாளோ ஒரு நாளின் சிறு பகுதியோ” என்று விடையளித்தார். “இல்லை; நீர் நூறாண்டுகள் உயிரற்றுக் கிடந்தீர். இதோ பாரும் உம்முடைய உணவையும் குடிப்பையும். அவை எவ்வித மாறுதலையும் அடையவில்லை. ஆனால், உம்முடைய கழுதையின் நிலை என்னவென்று கவனித்தீரா? மனிதர்களுக்கு ஒரு சான்றாகக் காட்டும் பொருட்டு (உம்மை இவ்வாறு இறப்புநிலையில் வைத்து மீண்டும் எழச்செய்தோம்). (உமது கழுதையின்) எலும்புகளை உற்றுப் பார்த்துக் கொண்டிரும். அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் எவ்வாறு சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி அல்லாஹ் அதனை உயிர் பெற்றெழச் செய்தான். அவருக்கு(அல்லாஹ்வின் ஆற்றல் கண்கூடாக)த் தெளிவான போது, “திண்ணமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆதிக்கப் பேராற்றலுடையவன் என்பதை நான் நேரடியாகக் கண்டறிந்து கொண்டேன்” என்றார்.
_____________
யார் இறந்து நூறாண்டுகளுக்கு பிறகு உயிர்த்த மனிதர்? என்று பல குரான்களில் இவ்வசனத்தை பார்த்தேன். இந்த தளத்தில் இருந்த குரானில் உஜைர் என்று வழக்கம் போல் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட பட்டு இருந்தது.
http://sites.google.com/site/tamilquraan2/chapter002ver201-286
பி ஜே அவர்களின் மொழி பெயர்ப்பிலும் பெயர் குறிப்பிடபடவில்லை.
சரி கேள்விக்கு வருகிறேன்.
1.குரானில் குறிப்பிடப்படும் பல விஷயங்கள் யார் எங்கே ,எப்போது என்று அறுதியிட்டு கூறவே முடியாது போல இதையும் இவர் யார் என்று தெரியாது என்று விட்டு விடலமா? இல்லை உஜைர் என்று எப்ப்டி சொல்கிறார்கள் என்று கூற முடியுமா?
2.முந்திய வசனமும்(257),பிந்திய வசனமும்(260) திரு இப்ராஹிமை குறிக்கின்றது.இடயில் உள்ள வசனம் யாரைகுறிக்க முடியும்?.
3.இதே மாதிரி குரான் 17.1 ல் இறைவனின் அடியார் என்பது முகமது என்று எப்படி கூற முடியும்?
17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
4.முகமதுவின் பெயர் குரானில் 4 இடங்களில் மட்டுமே வருகிறது..மற்ற இடங்களில் எல்லாம் அடைப்புக் குறியினூடே வ்ருகிறது.ஆகவே அவையெல்லாம முகமதுக்காகவே சொல்லப்பட்டது என்று உறுதியாக கூற முடியுமா?
____________________
இப்போது மொழி மாற்ரம் செய்வது எளிது.அதே மொழி (ஏ)மாற்று
வேலைகளையும் மிக எளிதாக கண்டறிய முடியும்.
மேற்கூறிய திருக்குறள் மொழி பெயர்ப்பில் எங்காவது அடைப்புக் குறி வந்துள்ளதா?
வேறு எந்த புத்தகத்திலும் இல்லாத அளவிற்கு அடைப்புக் குறி இடுவதின் காரணம் என்ன?
ஃபைனல் டெஸ்டமன்டிலேயே ஒரு ஏடுத்துக்காட்டு தருகிறேன்
[13:30] We have sent you (O Rashad)* to this community, just as we did for other communities in the past. You shall recite to them what we reveal to you, for they have disbelieved in the Most Gracious. Say, “He is my Lord. There is no god except He. I put my trust in Him alone; to Him is my ultimate destiny.”
*13:30 If we add the gematrical value of “Rashad” (505), plus the value of “Khalifa” (725), plus the sura number (13), plus the verse number (30), we get 505+725+13+30 = 1273 = 19×67. God thus specifies the name of His messenger (see Appendix 2 for the details).
ஃபைனல் டெஸ்டமன்ட் வேண்டுபவர்கள் இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.scribd.com/doc/14305280/Quran-The-Final-Testament
____________________
13:30. (நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்: “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது” என்று நீர் கூறுவீராக!
_________________
திரு ரஷாத் கலிஃபா தன் பெயரை அடைப்புக் குறிக்குள் போட்டு விட்டார் .பிற மொழி பெயர்ப்புகள் அது முகமது என்றே விளக்கம் அளிக்கப் படுகின்றன.
நாம் சொல்ல வருவது என்னவென்றால் குரானில் யாரென்று தெளிவாக குறிப்பிடதாத பல வசனங்கள் உண்டு.அது மத வாதிகளால் பல விதமாக உபயோகிக்கப் படுகிறது.
____________
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் சார்வாகன் அவர்களே!
உங்கள் முதலாவது கம்ன்டிற்கான எமது பதில்:
முதலாவது அல்லாஹ் என்பதன் விளக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் என்றால் அகில உலகையும் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவனை மட்டும் குறிக்கும் அரபுச்சொல்.
இந்த சொல் நபிகள் நாயகத்தின் காலத்திற்கு முன்பிருந்தே அரபிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் வணங்கும் வேறு எந்த தெய்வத்தையும் அல்லாஹ் என்று குறிப்பிடவில்லை. அல்லாஹ் என்பது கடவுளின் குரிப்புப்பெயர். அதற்கு வேறு மொழியில் பயன்படுத்தும் இறைவன், தெய்வம் என்பது கருத்தல்ல! ஆங்கிலத்தில் கோட் என்பது அல்லாஹ் என்பதற்கு சமமானது இல்லை! அதனால்தான் அல்லாஹ் எனும் இடத்தில் அல்லாஹ் என்று பயன்படுத்துகின்றனர். தமிழிலும் அவாருதான். இதில் எந்த குழப்பமும் கிடையாது.
--------------------------------------
உங்கள் இரண்டாவது காமன்டிட்கு பதில்:
2.அந்த வசனத்தில் குறிப்பிடப்படும் நபர் உஜைர் என்று அந்த தமிழாக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் எந்த அடிப்படையில் குறிப்பிட்டனர் என்று தெரியவில்லை. அநேகமாக ஏது தப்சீர்களில் இருப்பதைத்தான் போட்டிருக்க வேண்டும். அது ஹதீஸின் அடிப்படையில் அமைந்திருந்தால் தவறல்ல. இல்லையெனில் அது தவறுதான்.
2.258ஆம் வசனத்தில் குறிப்பிடப்படும் நபரை அதை வாசித்துப்பார்த்த்தாலே அறிந்து கொள்ள முடியும். அவன் இப்ராஹீம் நபியின் காலத்தில் வாழ்ந்த மான்ன. அவன் இப்ராஹீம் நபிக்கேதிராக செயற்பட்டவன்.
3.17.1ஆம் வசனத்தில் குறிப்பிடுவது முஹம்மது நபியைத்தான் என்பதை அந்த வசனமே சுட்டிக்காட்டுகிறது. அதில் மிஹ்ராஜ் சம்பவம் குறிப்பிடப்படுகிறது.மிஹ்ராஜ் முஹம்மது நபியுடன் தொடர்பு பட்டது. எனவே அது முஹம்மது நபியைத்தான் குறிக்கும்.
4.முஹம்மது நபியை குறிக்கும் வசனங்கள் எது என்பதை அதை வாசிக்கும் போதே அறிந்து கொள்ளலாம். அந்த இடங்களில் முஹம்மதே என்றும் அல்லது நபியே என்றும் குறிப்பிடப்படும்.
---------------------------------------------
மூன்றாவது காமன்டிற்கு பதில்:
ரஷாது கலீபாவுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் குறிப்பிட்டது அவனைக்குரிக்க்கவுமில்லை.! இவனையெல்லாம் இஸ்லாத்தோடு தொடர்பு படுத்த வேண்டாம்.
Post a Comment