Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, February 13

கடமை மறந்த பெற்றோர் 
A.Mohamed Ihsas

இஸ்லாம் ஓர் அழகிய வாழ்க்கைத்திட்டம். அது ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை தேவையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியது. அதை முழுமையாக பின்பற்றும் போது இவ்வுலகிழும் மறுமையிலும் ஈடேற்றம் பெற முடியும். இஸ்லாத்தில் ஒவ்வொறுவரது கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதை ஒவ்வொருவரும் சரிவர நிறைவேற்றியே ஆக வேண்டும். இல்லையேல் மறுமையில் குற்றவாளியாக நேரிடும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 3733
                                                                        
ஒரு ஆட்சித்தலைவன் அவனது பொறுப்பு குறித்தும், ஒரு குடும்பத்தலைவன் அவனது பொறுப்பு குறித்தும் இதுபோல் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவார்கள். தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மறுமை நாளின் கேள்விக்கு பயந்து ஒருவர் சரியாக நிறைவேற்றினால் அது அவருக்கு வெற்றியளிக்கும். இல்லையேல், கைசேதம்தான்.

தாயின் கடமை

இந்தவகையில் ஒரு தாய் தமது பிள்ளைகள் குறித்து  மறுமை நாளில் விசாரிக்கப்படுவாள். ஏனெனில் ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பதில் தந்தையின் பங்களிப்பை பார்க்கிலும் தாயின் பங்களிப்பே அதிகம் உள்ளது. பெரும்பாலும் தந்தை என்பவர் பொருளாதார தேவைகள் கருதி உழைக்க சென்றுவிடுவார். இதனால் வீட்டில் தாயின் அரவணைப்பிலேயே பிள்ளைகள் வளர வேண்டியிருக்கின்றன. இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விடயத்தில் பெண்களை முன்னுரிமைப்படுத்துகிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண், தன் கணவனின் இல்லத்திற்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 3733

ஒருவன் நல்லவனாகவோ கெட்டவனாகவோ வளர்த்தெடுப்பதில் தாயின் பங்கே அதிகம் என்பது இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். ஆனால், இன்று அவர்கள் தமது கடமையை சரி வர நிறைவேற்றுகின்றனரா என்று கேட்டால் அது கேள்விக்குறியாகவே இருக்கும்!

நஞ்சாகும் பிஞ்சு நெஞ்சங்கள்

தற்காலத்தில் பெண்களை ஆட்டிப்படைக்கும் ஒன்றாக சீரியல் (நாடகம்) திகழ்ந்துகொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான தாய்மார்கள் அடிமையாகிவிட்டனர் என்பது வேதனைக்குரிய விடயம். வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் மாத்திரமின்றி வேலை செய்யும் நேரத்தில் கூட அதைப்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதன் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருப்பதை ஏனோ அவர்கள் சிந்திக்க மறந்து விட்டனர்.

ஆம்! இவர்கள் மட்டும் இதைப்பார்ப்பது கிடையாது. தனது சிறு பிள்ளைகள் கூட சேர்ந்து பார்க்கிறது. இதனால் அதில் கூறப்படும் நச்சுக்கருத்துகள் பிஞ்சு நெஞ்சத்தில் நஞ்சாய்ப்படிந்து விடுகிறது. இறுதியில் அதன் படியே செயற்படத்துவங்கும் போது தலையில் கைவைக்கின்றனர். இன்று எமது சமுதாயத்தில் நடக்கும் கேடுகெட்ட செயல்கள் அனைத்தும் இதன் பின் விளைவுதான் என்பதை ஒவ்வொறு தாயும் உணர வேண்டும்! இதை விட்டும் விலக வேண்டும்! இல்லாவிடில் எமது மறுமை வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும்.

மிரட்டும் பிள்ளைகள்; மிரளும் பெற்றோர்கள்

வீட்டில் தாய் கணவனுக்குத்தெரியாமல் ஒரு தவறு செய்கிறாள்; இதை பிள்ளை பார்த்துவிடுகின்றது. இதை தந்தையிடம் சொல்லக்கூடாது என்று பிள்ளைக்கு கூறுகிறாள். அதற்காக பிள்ளைக்கு அது கேட்கும் அனைத்தையும் வாங்கிக்கொடுத்து வாயடைக்கிறாள். பிரிதொரு காலத்தில் அக்குழந்தை தவறை செய்து விடும்போது தடுக்க முற்பட்டாலோ அல்லது தண்டிக்க முற்பட்டாலோ அக்குழந்தை நீ செய்த தவறை சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறது; இவளும் மிரண்டு விடுகிறாள். இறுதியில் அவன் ஒரு மாபாதகச்செயலை செய்தால் கூட வாய் திரக்க முடியாத நிலையில் ஊமையாகிறாள். இதற்குக்காரணம் அவள்தான் என்பதை சிந்திக்க மறந்து விடுகிறாள். கணவனிடம் தவறை மறைத்தாலும் படைத்த இறைவனிடம் மறைக்க முடியாது என்பதை அவள் உணர்ந்திருந்தால் இப்படியொரு நிலை ஏற்படாது.

அஞ்சத்தகுதியானவன் அல்லாஹ்வே!

சிறுவயது முதலே தன் குழந்தைக்கு அல்லாஹ்வைப்பற்றியும் அவனது வல்லமை, கருணை, தண்டனை பற்றி சொல்வதோடு என்னிலையிலும் அவன் எம்மை கண்காணித்துக்கொண்டிருக்கிறான். அவ்னுக்குத்தெரியாமல் எந்தவொன்றையும் எம்மால் செய்ய முடியாது என்பதை உணவோடு ஊட்டி ஊட்டி வளர்த்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுவான். அவன் யாரும் இல்லாவிட்டாலும் கூட தவறை செய்ய பயப்படுவான். கடமையான தொழுகைகளையும் நிறைவேற்றுவான்.
ஆனால் இன்று தனக்கும், தந்தைக்கும் ஏனைய அதிகாரமுள்ள்வர்களைப்பற்றிக்கூறி அவனை பயப்பட வைக்கின்றனர். இதனால் அவனும் இவர்களுக்கு பயந்து ஒழுங்காக நடக்கிறான். ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டியதும் பெற்றோரிடமுள்ள பயம் விலகிவிடுகிறது. தான் நினைத்ததைச்செய்து வருகிறான் அவனை தண்டிக்கக்கூட முடியாத அளவுக்கு நிலமை கைமீறிப்போய் விடுகிறது. நீ எங்களை மிரட்டி விடலாம், அடக்கி விடலாம். ஆனால் அல்லாஹ்வை உன்னால் எதுவும் செய்ய முடியாது. அவன் உன்னை தண்டிப்பதை உன்னால் தடுக்கவும் முடியாது; அதிலிருந்து தப்பிக்கவும் இயலாது. என்று கூறி வளர்த்தால் இந் நிலை ஏற்பட்டிருக்குமா? அஞ்சத்தகுந்தவன் அல்லாஹவே என்பதை நாம் அவனுக்கு சரியான முறையில் போதித்த்ருந்தால் இவ்வாறான நிலை ஏற்படாது.

சமூகத்தில் நடந்துவரும் பல தீமைகளுக்கும், சீரழிவுகளுக்கு பெற்றோரின் குறிப்பாக தாயின் வளர்ப்புமுறை சரினதாக, இஸ்லாத்துக்கு ஏற்றதாக இல்லமையே என்பதை உணர்ந்து எமது பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துபவர்களாகவும், அவர்களை ஒழுங்கான முறையில் வளர்த்து எமது கடமைகளை நிறைவேற்றுபவர்களாகவும் வாழ்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!


0 comments:

Post a Comment