Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, May 6

குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை

செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு பகுதி-06


ஒரு மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு மறுப்புத்தொடர்.... இதில் சின்ன வித்தியாசம். அது என்ன? நாம் யாரை விமர்சனம் செய்வதாக இருந்தாலும் அதை நாம் விமர்சனம் செய்பவருக்கு அறிவிப்பதுதான் முதல் வேலை. நியாயமான செயல்! இதை நான் தவறாது கடைபிடித்துவருகிறேன். ஆனால் செங்கொடி, இத்தொடரை எனது கவனத்திற்கு கொண்டுவர மறந்துவிட்டார். வேறொரு சகோதரர் சுட்டிக்காட்டித்தான் இதை அறிந்துகொண்டேன். சரி, இனி தலைப்புக்குள் நுழையலாம்.

முதன்முதலாகவே செங்கொடி ஒரு விடயத்தை ஒப்புக்கொண்டார். அதாவது, ஓரிடத்தில் முஹம்மது நபி மரணித்து 15 ஆண்டுகளில் குர்ஆன் தொகுக்கப்பட்டு விட்டதென்றும் பிறிதோர் இடத்தில் 25 ஆண்டுகளுக்குப்பிந்தான் குர்ஆன் தொகுக்கப்பட்டது என்றும் முரண்பட்டு பேசியதை சுட்டிக்காட்டினோம். அதை செங்கொடி ஏற்றுக்கொண்டு தனது கவனக்குறைவால் ஏற்பட்டது என்றும் கூறி ஒப்புக்கொண்டார். அதை நாம் பாராட்டுகிறோம். ஆனாலும் ஏனையவற்றை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்று  புரியவில்லை! (அதை இதே தொடரில் விளக்கியுள்ளேன்)

பிரச்சனை என்று வந்துவிட்டால் ஒப்பிட்டுப்பார்க்க முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது என நான் குறிப்பிட்டிருந்ததை என்னுடைய அறியாமை என நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து நண்பருக்கு அறியாமை ஏதும் இல்லை என்பதில் அவர் உறுதியுடன் இருப்பாராயின், முகம்மது முன்னின்று தொகுத்த குரான் எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கட்டும்.

இவர் சிந்தித்துதான் எழுதுகிறாரா? இக்கேள்விக்கு நாம் ஏற்கனவே தெளிவாக  பதிலளித்துவிட்டோம். அதைப்பார்த்தும் பார்க்காதவர் போல் மீண்டும் கேள்வியை கேட்கிறார். அந்த பதிலை ஒட்டுமொத்தமாக எமது நம்பிக்கை என்று ஒதுக்கித்தள்ளியும் விடுகிறார். எது தவறு என்பதைக்கூட விளக்கவில்லை! தவறு என்று நிரூபிக்க முடியுமாக இருந்தால் பதிலளித்திருக்க முடியும். நச் என்று எழுதிய பின்னர் எப்படி பதிலளிப்பது? நாம் தப்பிக்க வேண்டும் என்பதற்காக மழுப்பிய மழுப்பல்தான் இது!  முதலில் இந்த கேள்வியே எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை சிந்திக்க மறுத்துவிட்டார். அதை எமது முதல் மறுப்பில் சுட்டிக்காட்டத்தேவையில்லை என்று நினைத்தோம். ஆனால் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளார். முஹம்மது நபி முன்னின்று தொகுத்த குர்ஆன் என்று கூறுவதே மிகப்பெரும் அபத்தம்! ஏன்? முஹம்மது நபிக்கு எழுதவோ, எழுதியதை படிக்கவோ தெரியாது! பின்னர் அவரே முன்னின்று தொகுத்ததாக எப்படி கூறுவது? இதைக்கூடவா சிந்திக்க தவறுவது? முஹம்மது நபி குர்ஆன் என்று கூறியவை எல்லோர் மனதிலும் நன்றாக பதிந்திருந்தது! அதை வேறு ஓர் வடிவமாக, எழுத்துவடிவமாக மாற்றும் வேலைதான் எழுத்து வடிவில் எழுதப்பட்டது! இதை செங்கொடிக்கு புரிய வைக்க ஓர் எளிய உதாரணத்தையும் எடுத்துக்காட்டியிருந்தோம். ஆனால், எங்களுக்கு உதாரணம் தேவையில்லை நாங்கள் சாதாரணமாகவே புரிந்து கொள்வோம் என்றுவிட்டு இவர் ஓர் உதாரணத்தை கூருகிறார்.

ஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார். அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது. நூலாக வெளிவந்தபின் கவனமாக கையெழுத்துப் பிரதி எரித்து அழிக்கப்படுகிறது. ஆனால் எழுத்தாளருக்கு மிக நெருங்கியவர் ஒருவர் அவர் எழுதியது பதினோரு கதைகள், அவர் உயிருடன் இருக்கும் வரையில் பதினோரு கதைகளும் படிக்கப்பட்டு வந்தன என்கிறார். மற்றொருவரோ அவரின் கதைகளை படித்த ஒருவர்தான் தொகுத்தார் எனவே பத்து கதைகள் தான் என்கிறார். இந்த இரண்டில் எது சரியானது என்பதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா? வேறு ஆதாரங்கள் வேண்டாமா?

உதாரணம் கூறுவதென்றால் பொருத்தமாக இருக்க வேணும்! நாம் எதை தவறு என்கிறோமோ அதையே உதாரணமாக எடுத்துக்காட்டுகிறார். இதை பிரிதொரு இடத்திலும் விளக்கியுள்ளார். இதில் அவர் சொல்ல வருவது ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்ததாக முஸ்லிமில் ஒரு ஹதீஸ் வருகிறது. அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பதால் அந்த ஹதீஸ் பலவீனம்!ஏற்கமுடியாதது! நாம் ஏற்காத ஒன்றை எமக்கெதிராக காட்டுவது முறையல்ல என்று குறிப்பிட்டோம். அதற்கெதிராக கொதித்தெழுந்தவர்,

ஆனால் நண்பரோ இது ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் எனவே இதற்கு பதில் கூறுவது தேவையற்றது என்று கடந்து செல்கிறார். முஸ்லீமில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஹதீஸை ஆதாரமற்றது என யார் தீர்ப்பளித்தது? எந்த அடிப்படையில் இது ஆதாரமற்ற ஹதீஸ்? 

முஸ்லிமில் இடம்பெற்றுவிட்டால் அது சரியானதுதான் என்று இவருக்கு யார் சொன்னது? ஒருவர் பலவீனம் என்று தீர்ப்பளித்தவைதான்  பலவீனம் என்று எந்த விதியில் உள்ளது? இவை இவருக்கு யார் சொன்னது? ஒரு ஹதீஸ் சரியானதா? அல்லது தவறானதா? என்பதை அறிய இரண்டு அளவுகோளகள் உள்ளன. ஒன்று அந்த ஹதீஸின் கருத்து குர்ஆனுக்கு நேரடியாக மோதுவதாக இருந்தால் அது பலவீனம். இரண்டாவது அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் குறை இருந்தால் அதுவும் பலவீனம். செங்கொடி முஸ்லிமில் வருவதாக காட்டும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பதால் ஏற்றுக்கொள்ளக்கூடாது! அது ஆதாரமற்றது! இதுபற்றி அடுத்த தொடரில் விளக்குவேன் என்று குறிப்பிட்டது இதைத்தான். ஆனால் செங்கொடியோ இந்த ஹதீஸைப்பற்றித்தான் விளக்குவேன் என்று புரிந்துகொண்டார் போலும்! அதுதான், விளக்குவேன் என்று சொல்லியும் விளக்கவில்லையே என்று கேட்கிறார். இந்த ஹதீஸ் தொடர்பான விளக்கம் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? எனும் நூலில் அழகாக, விரிவாக விளக்கப்பட்டுள்ளது! இதுமட்டுமல்லாமல், எவை எவையெல்லாம் குர்ஆனுக்கு முரண்படுகிறதோ அவற்றின் ஒரு பகுதியும் அந்த நூலில் இடம்பெற்றுள்ளது அதன் லிங்கை கொடுத்த்திருந்தும் அவர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் இத்தொடரில் மீண்டும் குறிப்பிட்டுள்ளேன். பார்த்துக்கொள்ளவும்!

புஹாரியிலும், முஸ்லீமிலும் இடம்பெற்றிருக்கும் ஆதாரமற்ற ஹதீஸ்களின் பட்டியலை தந்தால் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். பிரச்சனை எழுந்தவுடன் அதாரமற்றது என போகிறபோக்கில் சொல்லிச் செல்வது நேர்மையானவர்களின் செயல் அல்ல. 

மேற்குறிப்பிட்ட நூலில் ஒரு பகுதி ஹதீஸ்கள் உள்ளன. பார்த்துக்கொள்ளவும்! பிரச்சினை எழுந்ததும் சரியானதைக்கூட தவறு என்று ஒதுக்கிவிட்டூச்சென்றால் எங்கள் மக்களே எங்களை கொன்றுவிடுவர்! நாம் இதை எப்போதோ கூறி வருகிறோம்! முஸ்லிம்களுடன் குறிப்பாக தமிழக முஸ்லிம்களுடன் தொடர்பில்லாமல் வந்துவிட்டு இங்கு எமக்கு நேர்மை பற்றி க்ளாஸ் எடுக்கிரார்.

செங்கொடி இதில் மற்றுமோர் அறியாமையையும் கட்டவிழ்த்துவிடுகிறார். அல்லாஹ் குர்ஆனில் நாமே இதைப்பாதுகாப்போம் என்று கூறினாலும் மனித முயற்சியினால்தான் இது பாதுகாக்கப்பட்டது எனும் தோரணையில் சிலவற்றை குறிப்பிடுகீரார். இவர் அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் என்னவென்றே தெரியாமல் உளறுகிறார். அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் அல்லாஹ்வே நேரில் வந்து அதை ஏதாவது செய்து பாதுகாப்பான் என்று நினைத்துக்கொண்டு கேட்கிறார். அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் எப்படி பாதுகாப்பான் என்று சொல்லியுமிருக்கிறான். இந்த குர்ஆன் கல்வியாளர்களின் உள்ளத்தில் பாதுகப்படும் என்று இறைவன் கூறுகிறான். இதுதான் அந்த பாதுகாப்பு ஏற்பாடு! அவன் கூறியபடி மக்களின் உள்ளத்தில் எந்த தவறுமின்றி பாதுகாக்கப்பட்டது! ஆனால் எழுத்தில் பாதுகாக்கப்பட்டது மனித சிந்தனைதான்! அதனால்தான் சில எழுத்துப்பிழகளும் காணப்பட்டன. அதைக்கூட மனன சக்தியால் திருத்திவிட்டனர்! இப்போது இறைவன் எப்படிப்பாதுகாத்தான் என்று புரிகிறதா? அல்லாஹ் செல்வத்தை வழங்குவான் என்றால் அவனே நேரடியாக வந்துதருவான் என்று புரிந்துகொள்வார் போலும்.

அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் இருக்கும்போது உஸ்மான் மீண்டும் தொகுக்க வேண்டிய அவசியமென்ன? பல இடங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமென்றால் அபுபக்கர் தொகுத்த குரானையே படிகள் எடுத்து அனுப்பியிருக்க முடியும் எனும் நிலையில் உஸ்மான் மீண்டும் தொகுக்க முற்பட்டது ஏன்? வெறுமனே அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல் எனும் காரணத்தை முகம்மது ஏற்பாடு செய்து தொகுத்த குரானும் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு பொருத்திப் பார்த்தால் போதுமானதாக இல்லை.

இதற்கு எமது முதல் மறுப்பிலேயே பதிலளித்துவிட்டோம்! மீண்டும் மீண்டும் பழைய பல்லவிய பாடிக்கொண்டிருக்கிறார்! அதற்கு நாம் தயாரில்லை! அதை மீண்டும் ஒருதடவை நன்றாக வாசித்துப்பார்த்தால் மூளையுள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அடுத்து ஒரு விடயத்தை குறிப்பிடுகிறார். இவரது ஐந்தாவது தொடரில் ஒரு குர்ஆன் வசனம் முகம்மது நபிக்கு பிறகு வந்ததாகத்தான் இருக்கும் என்று கண்டுபிடித்து (?) கூறினார்! அது எவ்வளவு பெரிய கிறுக்குத்தனம் என்பதை எமது மறுப்பில் எழுதியும் கூட முக்கியமானதை தவிர்த்துவிட்டு அடுத்த ஸ்டெப்புக்கு பாய்ந்து ஓடிவிட்டார்! ஏனென்றால் அதற்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு உளறிக்கொட்டியிருந்தார்! இவர் சரியான ஆளாக இருந்திருந்தால் அதற்குத்தான் முன்னுரிமை கொடுத்திருக்க் வேண்டும். அதை விட்டுவிட்டு எழுதுகோல் காகிதம் மை குறித்து நண்பரின் மறுப்பைப் பார்த்தால், நான் கேட்டது ஒரு கோணத்திலும் அவர் மறுத்திருப்பது வேறொரு கோணத்திலும் இருக்கிறது. நாம் கேட்பது வேறு இவர் சொல்வது வேறு என்று பல்டி அடிக்கிரார்! சரி, இதன்பிறகாவது வாய்திறந்தாரா என்றால் அதை முகர்ந்து கூட பார்க்கவில்லை! அந்தளவுக்கு உளறிய விடயம் அது! அது என்ன? குர்ஆனில் அவர் குறிப்பிட்ட அந்த வசனத்த்ல் எழுதுகோல் என்று வருவதற்கு எழுதும் தாள் என்று அர்த்தம் செய்து தனது அதிமேதாவித்தனத்தை காட்டியிருந்தார்! அதற்கு பதிலளிப்பார் என்றுபார்த்தால் அதை விட்டுவிட்டு அதை கண்டே கொள்லாம அது எழுதுகோல் எனும் அர்த்தத்திற்கு தாவி மை விடயத்திற்கு பல்டி அடிக்கிரார்! சரி, அதிலாவது ஒழுங்காக இருக்கிறாரா என்று பார்த்தால் அதிலும் அதே உளறல்தான்.

முகம்மது காலத்தில் மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான். ஆம், முகம்மதின் கடைசி காலகட்டத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் மையைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு. மேற்படி வசனமோ மக்கீ வசனம் அதாவது மக்காவில் இறங்கிய வசனம். வெளிப்படையாக கேட்டால், நடப்பில் மட்டைகளில் எழுதிக்கொண்டிருந்தபோது கனவு வசனங்கள் மையை பயன்படுத்தி எழுதச் சொல்வது எப்படி?

ஆஹா! இந்தளவுக்கு இவருக்கு ஞானம் இருக்கிறது என்பதை என்ணி மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது! முஹம்மது நபியின் காலத்தில் மை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார் அது தவறு மை பயன்படுத்தியிருக்கிறார் என்றதும் அது மதீனாவில் பயன்படுத்தினார் என்று சமாளிக்கிறார். நபியவர்கள் வாழ்ந்த மதீனா வாழ்க்கையும் மக்கா வாழ்க்கையும் என்ன கற்கால்த்துக்கும் கம்பியூட்டர் காலத்துக்கும் இடையிலிருந்த வேறுபாடா? முகம்மது நபி மதீனாவில் கடிதம் எழுதும் தேவை இருந்ததால் மையைப்பயன்படுத்தினார். அதனால் மக்கவில் வாழ்ந்த போது மை பயன்பாட்டில் இல்லையென்றாகிவ்டுமா? தோல்களில் குர்ஆனை எழுதியதாக வருகிரது! தோல்களில் மை இல்லாமல் வேறு எதைப்பயன்படுத்தி எழுத முடியும்? அறிவுடந்தான் எழுதுகிராரா? மக்கீ மதனீ என்று வாதாட ஆரம்பிக்கிரார் அந்த அத்தியாயம் மக்கீ என்றிருப்பதால் அந்த வசனமும் மக்கீ என்றாகிவிடாது! மக்கீ மதனீ என்பது பல அத்தியாயங்களில் ஆதாரமில்லாமலும் தவறான அளவுகோளின் படியும் எழுதப்பட்டது! மக்கிக்கு என்ன ஆதாரம் மதனிக்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர் இப்போது இது மக்கீ மதனீ என்று வாதிட்கிறார்! இவரை அல்லாஹ் எந்த நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிட்டான்  என்று பாருங்கள்.

இவர் முரண்பட்டு பேசியவைகளையும் ஒரு கேள்வியாக கேட்டிருந்தோம். அதற்கு அளிக்கும் சமாளிப்புப்பதிகளை பார்த்தால் தலை சுற்றும் அளவிற்கு உள்ளது.

இதுதான் மெய்யான குரான் என பல விதங்களில் உலவத்தொடங்கியது எப்போது? இதில் அபூபக்கர் காலத்திலா, உஸ்மானின் காலத்திலா என்று நுணுகிப் பார்க்கும் அளவுக்கு இதில் பொருள் வேறுபாடு ஒன்றுமில்லை. மனனம் செய்தவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதால் முதல்முறையும், வேறுபாடுகள் வந்துவிட்டன என்பதால் இரண்டாம் முறையும் தொகுக்கப்பட்டது என்றால்; முதல் முறை தொகுக்கப்பட்டபோதே முகம்மது ஏற்பாட்டில் தொகுக்கப்பட்ட குரான் இருந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே முகம்மதுவின் மரணத்திற்கு பின் என பொதுவாக எழுதுவது போதுமானது.

முகம்மது நபி மரனித்ததன் பின் பல விதங்களில் குர்ஆன் நடமாடத்துவங்கியது என்பது முரண்! பச்சைப்பொய்! என்று எழுதியிருந்ததற்கு சமாளிக்கிரார்! ஆனால் இது சரியா? பொதுவாக கூறுவது பொருத்தமானது என்பதால் எழுதினாரா? நிச்சய்மாக இல்லை! 

முகம்மதின் மரணத்திற்குப்பின் அவரவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்ததற்கு ஏற்றார்ப்போல் இது தான் மெய்யான குரான் என்று பலவடிவங்களில் குரான் உலவத்தொடங்கியது. இதனால் ஆட்சிப்பொறுப்பேற்றிருந்த அபூபக்கர் தனக்கு அடுத்த நிலையிலிருந்த உமரின் ஆலோசனையுடன் குரானை தொகுக்கும் ஏற்பாடு தொடங்கப்பட்டது.  என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்! எனவே இவர் பொதுவானது என்று கதையளப்பது இவர் எனக்கு அளிக்கும் மறுப்பல்ல! இவர் இவருக்கே அளிக்கும் மறுப்பு! அதாவது முரண்!

அடுத்து இன்னொரு முரண்பாட்டையும் சுட்டிக்காட்டியிருந்தோம்! அதையும்  சமாளித்திருக்கிறார்!

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று பெரிய மசூதியாக பாதுகாக்கப்படுகிறது. இதுவும் நுணுகிப் பார்க்கும் அளவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லாதது. முதலிலிருந்தே மசூதியாக்கப்பட்டாலும், பிறகு விரிவாக்கத்தில் உள்வாங்கப்பட்டாலும் இது இஸ்லாத்திற்கு தேவையில்லாதது என்று விலக்கப்படவில்லையே. 

விலக்கப்படாவிட்டால் அது முகம்மது அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் மசூதியாகப் பாதுகாக்கப்படுகிரது என்பது சரியாகிவிடுமா? பிற்காலத்தில் உள்வாங்கப்படடது எப்படி அவரது பாதுகக்கப்பட்ட மசூதியாக முடியும்? வரலாறு தெரியாமல் உளறியுள்ளர் என்பதுதான் உண்மை! அதை  ஒத்துக்கொண்டால் கேவலம் என்றுதான் இப்படியெல்லாம் சமாளிக்கிறார்! இவர் தவறைதிருத்திக்கொள்பவரா? இதனால்தான் முன்னராகவே ஓரே ஒரு தவறி நான் திருத்திவிட்டதாக பிதற்றுகிறார்!
இதை நுணுகிப்பார்க்க தேவையில்லை என்பது ஏன் தெரியுமா? நுணுகிப்பார்த்தால் அந்தளவுக்கு குப்பை உள்ளது! வார்த்தைக்கு வார்த்தை பிடித்தால் மாட்டிக்கொன்டுவிடுவோம் என்று எண்ணியவர் இதயெல்லாமா  பார்ப்பது என்று கெஞ்சுகிறார்!

சரி, இதையெல்லாம் எதற்காக கூறினார் தெரியுமா? அதையும் அவரே சொல்கிறார்,

முகம்மது அடக்கம் செய்த இடம் பாதுகாக்கப்படுகிறது, அவர் அணிந்திருந்த செருப்பு பாதுகாக்கப்படுகிறது, அவர் பயன்படுத்திய வாளுறை பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அவர் முன்னின்று தொகுத்த குரான் மட்டும் எரிக்கப்பட்டுவிட்டது. அந்த குரானை விடவா செருப்பும் மற்றவையும் முக்கியமாய் ஆகிவிட்டது? அல்லது செருப்பும் வாளுறையும் குரானைவிட இஸ்லாத்திற்கு நெருக்கமானதா?

இதற்கு எமது முதல் மறுப்பிலேயே அதன் ஆரம்பத்திலேயே பதில் உள்ளது! முஹம்மது நபி முன்னின்று தொகுத்ததுதான் அபூபக்கர் காலத்திலும் உஸ்மான் காலத்திலும் தொகுக்கப்பட்டது! இதில் எந்த கூடுதல் குறைவோ  இருக்கவில்லை! இதை திருப்பித்திருப்பிக்கேட்டு எனக்கு புரியும் திறன் குறைவு என்று தெளிவு படுத்துகிரார்.

இப்போது வசன எண்களும் வரிசையும் அவசியமானதல்ல எனக்கூறும் நண்பர் தான் வரிசை சரியாக இருக்காது என்பதால் முகம்மதின் முயற்சியிலான குரான் அழிக்கப்பட்டதையும் சரிகாண்கிறார்.

நான் குறிப்பிட்ட வரிசை எது? இவர் குறிப்பிடும் வரிசை எது என்று புரியும் திறன் கூட இல்லை! வசன எண்கள்தான் இல்லை! வசன வரிசை சரியாக இருந்தது! அத்தியாய வரிசைதான் மாறுபட்டது! அதுவும் முகம்மது நபி காலத்திலிருந்து அபூபக்கர் காலத்தில் எழுதப்பட்த்ததில் அத்தியாய வரிசை இல்லை! ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறாக இருந்தது! இதை உதாரணத்துடன் தெளிவு படுத்தியும் புரியுமளவிற்கு சக்தியில்லாமல் இருக்கிறார்.

கடைசியாக தவறுகள் நிறைந்துள்ள கம்யூனிசத்தில் என்றொரு உருவத்தையும் காட்டுகிறார். கம்யூனிசத்தில் தவறுகள் நிறைந்திருக்கிறது என்பது நண்பரின் நம்பிக்கை என்றால் அதில் குறுக்கிடுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் அவரின் நம்பிக்கை சரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. மாறாக அது சரியானது என அவர் நினைத்தால், கம்யூனிசத்தின் தவறுகள் குறித்து ஒரு தனிப்பதிவு எழுதட்டும், பதிலளிக்க நாம் தயார்.

இந்த தொடரில் இவர் அடிக்கும் கூத்துகளே சொல்லி மாளாது! இதில் கம்யூனிசத்தைப்பற்றி தொடர் ஆரம்பித்தால் நிலமை இதை விட மோசமாகும்! இவருக்கு திராணியிருந்தால் நேரடி விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்! நாம் விடுக்கும் அழைப்பு இன்னும் காத்துக்க்ண்டுதான் இருக்கிறது! இவர் விட்டாலும் நாம் விடப்போவது இல்லை! இவருடைய உளரலுக்கு ஒரு முடிவு கட்டியாகவே வேண்டும்! நேரடி விவாதத்தில்தான் அது சாத்தியம்!

இந்த தொடரை பார்த்தால் மண்டையே காய்ந்துவிடும் போல் உள்ளது! அந்தளவிற்கு முன்னுக்குப்பின் முரண்,உளரல்,கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை! இவருடைய கருத்துக்கு இவரே முரண்பட்டு பேசுவது.... அப்பப்பபா! இவர் ஆரம்பத்தில்  இரண்டு முக்கியமான கேள்வி என்று கேட்டார்! அவையிரண்டுக்கும் பதிலளிக்கப்பட்டுவிட்டது!. அதில் இரண்டாவது கேள்விக்கு நாம் அளித்த பதிலுக்கு வாயே திறக்கவில்லை! ஏனையவற்றிற்கு அதும் எவற்ரையெல்லாம் மழுப்ப முடியுமோ அவற்றுக்கு மட்டும் மழுப்பியுள்ளார். இன்னும் அவர் கேட்ட கேள்விகல் பலவற்றிற்கு அளிக்கப்பட்ட பதிலுக்கு வாய் திறக்கவில்லை! எனவே இதில் பலவற்றை அவர் ஒப்புக்கொண்டார் என்பதே யதார்த்தம்! எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்.

இவரது சப்பைக்கட்டுகள் தொடரும் சவுக்கடியும் தொடரும் இன்ஷா அல்லாஹ்

1 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் இதனை இனியும் என்னால் இயக்க முடியாதுள்ளது. எனவே, www.mohamedihsas.blogspot.com எனும் புதிய இணையதளத்தை துவக்கியுள்ளாஎன். அதில் இதன் தொடர்ச்சியான கட்டுரைகளும் ஆய்வுகளும் இடம்பெறும். இன்ஷா அல்லாஹ்!

இப்படிக்கு,
அ.முஹம்மது இஹ்ஸாஸ்

Post a Comment