Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, February 12

செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு

பகுதி-04

விதி பற்றிய முரண்பட்ட தன்மையச் சுட்டிக்காட்டி செங்கொடி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நமது பதிலைத் தெளிவாகக் குறிப்பிட்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார். விதியில் முரண்பாடு உள்ளதை நாம் மறுக்கப் போவதில்லை. அதை விளங்கிக் கொள்ளும் அளவிற்கு எமக்கு அறிவு இல்லை என்பது தான் எமது பதில். ஆயினும் இதன் மூலம் மனித குலத்திற்கு மாபெரும் நன்மை உள்ளது. அது என்ன என்பதை நாம் ஏற்கெனவே தெளிவாக்கியுள்ளோம். அதை மறுக்கப் புகுந்தவர் விதி ஒரு சுமை தாங்கி என்பது மேம்போக்கானது! ஆனால் தமக்கேற்பட்ட தவறைத் திருத்திக்கொள்ள விதியை மறுக்க வேண்டும். இதை முஸ்லிம்கள் நம்பிக்கையளவில் தான் கொண்டுள்ளனர் என்கிறார். ஒரு இழப்பிலிருந்து பாடம் பெறுவதற்கு முன் அதன் தாக்கத்திலிருந்து விடுபடுவது அவசியம். அதை நிறைவேற்றும் விதிக்கொள்கை மேம்போக்கானது என்பது சமாளிப்புத் தான். ஒருவன் பாடம் பெறுவதற்கு விதியை மறுக்க வேண்டியதில்லை. அதை நம்பிக் கொண்டு படிப்பினையைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு இழப்பிலிருந்து பாடம் பெறுவது கூட விதியாக இருக்கலாம்.

நமது மறுப்பில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:
விதி உள்ளதெனில் நான் நல்லவனாக, கெட்டவனாக நடப்பதற்கு நான் எவ்வாறு பொறுப்பேற்பது என்ற கேள்வியும் விதி இல்லையெனில் நான் என்ன செய்வேன் என்று தெரியாதவன் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழும்

இதற்கு செங்கொடி இப்படி பதிலளிக்கிறார்:

கடவுளை நம்புபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை இது. கடவுளின் இருப்பையே அசைத்துப் பார்க்கிற இந்தக் கேள்விக்கு விடை கூற முடியாது என்பதாலேயே முகம்மது இது பற்றி தர்க்கிக்காதீர்கள் என அறிவுறுத்தியிருக்கிறார். அங்கும் இல்லாத, இங்கும் இல்லாத இரட்டை நிலையை மேற்கொண்டிருக்கிறார். இஸ்லாத்தை நம்புகிறவர்களுக்கு விதிக் கொள்கை போதுமானது. ஆனால் அதை எதிர்த்து விமர்சனம் செய்பவர்களுக்கும் அந்த நம்பிக்கையையே பதிலாக கூறுவீர்களென்றால், அது எல்லாருக்கும் பொதுவான மனிதனின் தோல்வியாக இருக்காது. மதத்தை கடவுளை நம்புகிறவர்களின் தோல்வியாக இருக்கும். முரண்பாடான இருவேறு நிலையை புரிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு இல்லை என்றெல்லாம் நீட்டிமுழக்க முடியாது.

கடவுளை நம்பாதவர்களிடம் கடவுள் நம்பிக்க அடிப்படையில் பதில் சொல்லக் கூடாது என்ற இவரது வாதத்தில் இவர் உண்மையாளராக இருந்தால் இவர் கடவுள் இருக்கிறாரா என்பது குறித்த விவாதத்தில் இறங்கி கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். அதன் பின்னர் அவர் மற்ற நம்பிக்கைகள் பற்றி கேள்வி கேட்க வேண்டும். இஸ்லாம் குறித்து இவர் கேட்கும் கேள்விகளுக்கு இஸ்லாமிய நம்பிக்கை அடிப்படியில் தான் பதில் கூற வேண்டும்.
இப்படி நாம் பதில் சொல்லும் போதெல்லாம் கடவுளையே நான் நம்பவில்லையே என்ற பதிலைச் சொல்லி தப்பித்துக் கொள்ளக் கூடாது என்றால் முதலில் கடவுள் இருக்கிறாரா என்பதை பகுத்தறிவு பூர்வமாக விவாதிப்பது அவசியமாகிறது. கடவுள இல்லை என்று வாதிடுவது பகுத்தறிவற்றவர்களின் கருத்து என்றூ நாங்கள் நம்புவதால் இவரது இந்த வாதத்தை நிராகரிக்கீறோம்.

இவரது அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடு எனும் தொடரின் இறுதியில் எம்மைப்பார்த்து "உங்கள் நம்பிக்கைக்குள்ளிருந்து பதிலளியுங்கள்" என்றார். நாமும் எமது நம்பிக்கை வழியில் பதிலளித்தால் ஏன் உங்கள் நம்பிக்கையை பதிலாகக் கூறுகின்றீர்கள் என்கிறார்! முரண்பாட்டை விளக்க இப்படி முரண்பட வேண்டுமா? கடவுளின் இருப்பை உண்மைப்படுத்த பல சான்றுகள் உள்ளன. எதை விளங்க முடியாதோ சொன்னாலும் புரியாதோ அதை காட்டி ஒட்டுமொத்த இஸ்லாத்தையே கடவுள் நம்பிக்கையயே தவறு என்பதுதான் பகுத்தறிவா?

விதியை நம்பினால் மனிதன் சிந்திப்பதை மறுக்க வேண்டுமா? விதியில் உள்ளபடிதான் மனிதன் சிந்திப்பதும் கூட நடக்கும் என்று கொள்ள முடியாதா? இன்னுமொன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். விதியை நம்மால் அறிந்து கொள்ள இயலாத அதே சந்தர்ப்பத்தில் விதியை இறைவன் மற்ற மாட்டான் என்று கருதக் கூடாது. அவன் நினைக்கும் போது விதியை மாற்றுவான்.

(அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது. (13:39)

இதனால் கூட நடக்கவிருப்பதற்கு விதியை நினைத்து சோம்பேறியாகக் கூடாது என்று இஸ்லாம் விதித்திருக்கக் கூடும்.

விதி பற்றிய கேள்விகளை புதிதாக இவர்கள் தான் கண்டுபிடித்து கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது நபிமார்களின் காலத்திலும் இருந்து வந்தது தான். ஆனாலும் நியாய சிந்தனையுள்ள எந்த பகுத்தறிவுவாதியும் கடவுளை மறுக்க ஆயுதமாக தூக்க மாட்டான். இஸ்லாத்தை தவறு என்று நிரூபிக்க இந்த வாதத்தைத் தவிர வேறு எதையும் உறுப்படியாக வைக்கவும் மாட்டார்கள்.

மீண்டும் சொல்கிறோம், விதியில் உள்ள முரண்பாட்டை அறிய எம்மால் முடியாது! அது மறுமையில் தான் அறிய முடியும். ஆனால் விதியை நம்புவதால் எமக்கு நன்மை இருக்கிறது! இவர்கள் இக்கேள்வியை எத்தனை தடவை கேட்டாலும் இது தான் பதில்!. ஏனைய எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் விடமாட்டோம்.! இன்ஷா அல்லாஹ்.

அடுத்து, பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன் இறைவன் எங்கிருந்தான் என்று கேட்டார். அதற்கு பதிலாக பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு முதல் என்ன நிலை என்பதை எந்த அறிவியலாலும் அறிய முடியாது; அது நமக்குத் தேவையுமில்லை; அவ்வாறு கேட்பதும் அறிவிலித்தனம் என்று குறிப்பிட்டிருந்தோம். இதை மறுக்கப்புகுந்தவர், அறிவியலில் இன்றைய நிலையில் சொல்ல முடியாது; இனி கண்டுபிடித்து சொல்வோம்! என்கிறார்.
அறிவியலில் கூட ஓர் எல்லை உண்டு! அந்த எல்லைக்கு மீறி எந்தவொன்றையும் கண்டுபிடிக்க முடியாது என்பது தான் அறிவியலாளர்களின் கருத்து. அந்த அடிப்படையில் பிரபஞ்சத்திற்கு முந்திய நிலை பற்றியும்  அறிய முடியாது! ஏனெனில், பெருவெடிப்பின் வினோதத்தன்மை எமது அனைத்து அறிவியல் விதிகளுக்கும் அப்பாற்பட்ட விடயம் என்பதை அறிவியலுலகம் கூறுகிறது. இவர் கண்டுபிடிப்போம் என்பது இவருடைய கற்பனைக் கோட்டை தான்! அறிவியலாளர்களுடையதல்ல! இதனால் இவருடைய இந்த இரண்டு கேள்வியும் அடிபட்டு அடிப்படையற்றுப் போகிறது.

பெருவெடிப்பு கொள்கையை சோதிப்பதற்காக நடாத்திய கொலைடர் சோதனை வெற்றியடைந்து பெருவெடிப்பு சாத்தியம் என்பதை அறிந்துள்ளனர்!. இதை தகவலுக்காக குறிப்பிடுகிறேன்!

இந்த கேள்விகள் முஸ்லிம்களின் நம்பிக்கைக்கப்பாற்பட்டு கேட்பது என்று இதையொட்டித்தான் குறிப்பிட்டோம். அதை விளக்க மிகுந்த சிரத்தை எடுத்துள்ளார் செங்கொடியார். இஸ்லாம் இல்லாததை இஸ்லாமல்ல என்று சொன்னால் மட்டும் விட்டு விடப்போகிறாரா? நான் கூறியதை எப்படியும் நியாயப்படுத்தி ஆவேன் என்று சுற்றி வளைத்து மூக்கைத்தொட்டு விட மாட்டார்? அதைத்தான் நாமும் பார்த்தோமே!

அல்லாஹ் அவனது வல்லமைகளை எந்த இடத்தில் குறிப்பிட வேண்டுமோ அந்த இடத்தில் தான் குறிப்பிடுகிறான். பொதுவாக ஒரு விடயத்த்தின் முக்கியத்துவம் கருதி அதை பல தடவை குறிப்பிடுவது ஒன்றும் தவறல்லவே!

இவரின் சப்பைக்கட்டுகள் தொடரும் வரை நம் சவுக்கடியும் தொடரும் இன்ஷா அல்லாஹ்


இது தொடர்பான இடுகைகள்



5 comments:

வால்பையன் said...

//இவரின் சப்பைக்கட்டுகள் தொடரும் வரை நம் சவுக்கடியும் தொடரும் இன்ஷா அல்லாஹ்//

நிஜமா சொல்லுங்க, யார் சப்பைகட்டு கட்டுறதுன்னு உங்களுக்கு தெரியாதா!?

கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல முடியல, முதல் வரியிலேயே ஒத்துகிட்டாச்சு உங்களுக்கு அறிவு இல்லைன்னு, சவுக்கடி உங்களுக்கு நீங்களே அடிச்சிகீறது கூடவா உங்களுக்கு புரியல!

A.Mohamed Ihsas said...

சகோதரர் வால் பையன்,

முழுசா வாசித்டுப்பாருங்க சவுக்கடி யாருக்கென்று தெரியும்! இந்த மறுப்புக்கு மட்டும்தான் சொல்ல வருவீங்க என்னு தெரியும்! ஏன்னா இத விட்டா வேற ஒன்னுக்கும் உறுப்படியா பதில் சொல்ல முடியாது!. இதுக்கு முதல்லயும் இனியும் எழுதும் மறுப்பிலும் சவுக்கடி யாருக்கென்று அறிவுள்ளவங்களுக்கு புரியும். ரொம்ப வாலாட்டாதீங்க சுழுக்கிக்கபோகுது.....!

வால்பையன் said...

//அறிவுள்ளவங்களுக்கு புரியும். //


:-)


உங்கள் பதிவோட முதல் பாராவை பாருங்க, தேவையான அறிவு உங்களுக்கு இல்லைன்னு நீங்களே ஒத்துகிட்டிங்க, இப்ப அறிவு உள்ளவர்களூக்கு புரியும்னு சொல்றிங்க!?

எனக்கு சுழுக்குறது இருக்கட்டும், உங்களுக்கு வழுக்காம பார்த்துக்கோங்க!

A.Mohamed Ihsas said...

சகோதரர் வானம்,

எதையும் ஒழுங்க புரிய்ம்ட்டீங்க போல இருக்கே!

விதியின் முரண்பாட்டை புரியும் அறிவு யருக்கும் (உங்களுக்கும்) இல்லை என்றும், இதன் நிலையை எடுத்துக்கூறினால் அறிவுடையவர்களுக்கு புரியும் என்றும் கூறியதை கூடவா புரிய முடியவில்லை?
இவ்வளவுதானா உங்கள் விளங்கும் திறன்!?

வால்பையன் said...

//விதியின் முரண்பாட்டை புரியும் அறிவு யருக்கும் (உங்களுக்கும்) இல்லை //


இது இப்படி தான் இருக்கும் என்பது தாங்க விதி, மொதல்ல அதை புரிஞ்சிகோங்க!

//இவ்வளவுதானா உங்கள் விளங்கும் திறன்!? //

எதையும் அப்படியே நம்புறவங்களுக்கு விளங்கும் திறன் என்ற விசயமே தேவையில்ல தான்!, நான் அப்படியில்ல ஸாரி!

கேள்விகள் கேட்கும் பகுத்தறிவுவாதி நான்!

Post a Comment