செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு
பகுதி-02
செங்கொடியின் இரண்டாவது மறுப்புத்தொடரினை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்
இதில் இஸ்லாமியர்கள் மத அடிப்படயில் ஒருங்கிணைவது இந்துப்பாசிசத்திற்கு எப்படி உதவுகிறது என்பதற்கு அற்புதமாக (?) விளக்கமளிக்கிறார்.
இந்தியாவைப் பொருத்தவரை பார்ப்பனீயம் என்பது ஒரு குலமோ, ஒரு மதமோ அல்ல, அது ஒரு அடக்குமுறைச் சட்டத்தொகுப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு அது நடப்பிலிருக்கிறது. அதை எதிர்த்துத்தோன்றிய கொள்கைகளும், கோட்பாடுககளும் பார்ப்பனீயத்தால் உள்வாங்கப்பட்டு தின்று செரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடக்குமுறைகளுக்கு பாதிக்கப்பட்ட மக்களை ஈர்க்கும் விதத்தில் இருப்பது தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியதற்கான காரணி. எனவே பார்ப்பனீயம் யாரை தனக்குக் கீழாக அடக்கிவைக்க விரும்புகிறதோ அவர்களே இந்தியாவில் இஸ்லாத்தின் ஆதாரம். எனவே பார்ப்பனீயம் யாரை அடக்கிவைக்க நினைக்கிறதோ அவர்களுக்கும்; அவர்களை எது ஈர்க்கிறதோ அவற்றுக்கும் இடையே ஒரு தடையை ஏற்படுத்துவது அவசியமாகிறது. இந்த அவசியத்திற்கான உத்தியாகவே இந்து எனும் மதவடிவம் பார்ப்பனியத்திற்கு பயன்படுகிறது. இந்து எனும் மத வடிவத்திற்குள் அனைவரையும் கட்டிப்போட்டால் தான் பார்ப்பனியத்தைப் பாதுகாக்க முடியும். இந்த வகைப்பாட்டில்தான் பௌத்தம் மதலான மதங்களை எதிரியாக சித்தரித்து வந்திருக்கிறது. எதிரி இல்லாவிட்டால் மேடுபள்ளமான அடக்குமுறைச் சட்டத்தொகுப்பில் ஒற்றுமை சாத்தியமில்லை. எனவே பெரும்பகுதி மக்களை அடக்குமுறைக் கொட்டடிக்குள் தக்கவைப்பதற்கு காலகாலமாக அதற்கு எதிரிகள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த எதிரித்ததத்துவத்தின் தற்போதைய பாத்திரம்தான் இஸ்லாம். இஸ்லாமியர்கள் மத ரீதியில் ஒன்றிணைய ஒன்றிணைய அதைக் காட்டி ஒடுக்கப்பட்டவர்களை பார்ப்பனியம் இந்து மதமாய் ஒன்றிணைக்கும். அப்படி ஒன்றிணைப்பதற்கு இஸ்லாமியர்கள் சமூகப் பரப்பைக் கடந்து மதரீதியில் ஒன்றிணைந்திருப்பது அவசியம். பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்த வேண்டுமென்றால் இந்து மதம் ஒடுக்கி வைத்திருக்கும் மக்கள் இந்து எனும் கூண்டை உடைக்க வேண்டும். அதற்கு இன்னொரு கூண்டு உதவ முடியாது. எல்லாக் கூண்டுக்குள் இருப்பவர்களும் சமூகத்தளத்தில் இணைந்து போராடாதவரை பார்ப்பனீயத்தை ஒழிக்க முடியாது. பார்ப்பனியம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் விரோதி என்பதால், இஸ்லாமியர்கள் மதரீதியில் ஒன்றிணைவது அவர்களுக்கே எதிரான ஒன்றாய் அமைந்திருக்கிறது.
இவர் என்ன கூறுகிறார்? ஒடுக்கப்பட்டவர்களை கவர்வதுதான் இஸ்லாம்; பார்ப்பனீயம் அடக்கிவைக்க விரும்புபவர்களுக்கும் அவர்களை ஈர்ப்பவர்களுக்கும் இடையில் தடையை ஏற்படுத்தவே இந்து எனும் மத வடிவம் பார்ப்பனீயத்திற்கு உதவுகிறது.
இவ்வாறு கூறியவர் பின்னர் எவ்வாறு உளருகிறார் என்பதைப்பாருங்கள்: எதிரி இல்லாவிட்டால் அடக்குமுறைச்சட்டத்தொகுப்பில் ஒற்றுமை இராது. எனவே அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்கு எதிரிகள் அவசியம்; இப்போதைய எதிரிதான் இஸ்லாம். இஸ்லாமியர்கள் மத ரீதியில் ஒன்றிணைந்தால் அதைக்காட்டி பார்ப்பனியம் இந்து மதமாய் ஒண்றினைக்கும்.
இவர் கூறுவதில் ஏதாவது ஒன்று சரியாக இருக்கிறதா? எதிரி இருந்தால் அழிக்குமே தவிர ஆக்காது! இஸ்லாமியர்கள் ஒண்றினைந்தால் அதைக்காட்டி இந்துக்களும் ஒண்றினந்த்துவிடுவார்களாம். இன்று இஸ்லாமியர்கள் ஒண்றினைந்திருக்கின்றனர் அதனால் இந்துக்கள் ஒண்றிணைந்துவிட்டனரா? இப்படி கூறியவர்தான் பின்னர் பார்ப்பனீயத்தை ஒழிக்க இந்து எனும் கூட்டை உடைக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இவர் கூறுவதில் லாஜிக்கும் இல்லை. உண்மையும் இல்லை.
பார்ப்பனியம் அனைத்து உழைக்கும் மக்களுக்கு விரோதி என்பதால் இஸ்லாமியர்கள் மத ரீதியில் ஒண்றினைவது கூடாது என்கிறார். பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்கு எதிரியாகவிருப்பவர்கள் ஒன்று கூடினால்தான் முடியும் இதனால் இஸ்லாமியர்கள் ஒன்று கூடுவது அவசியம்!. இவர் இப்படி பல்டி அடிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவர் சுய நினைவுடந்தான் எழுதினாரா? ஏன் இப்படி முரண்பட வேண்டும்? உளறளின் உறைவிடமான கமியூனிசத்தில் இருப்பதால் என்னவோ இப்படி பேசுகிறார்!
எந்த மதமும் உழைக்கும் மக்கள் குறித்து கவலைப்பட்டதில்லை, இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கில்லை.
இஸ்லாம் உழைக்கும் மக்கள் பற்றி கவலைப்பட்டதில்லை எனபது தவறு!(இவர் அதைப்பற்றி எடுத்து வைக்கும் போது விளக்கப்படும்)
கேள்விபதில் நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள் என்றால், ஒரு விதத்தில் அது ஹீரோயிச மனப்பான்மை, தான் சார்ந்த மதம் மேலோங்கி நிற்கும் நிகழ்ச்சிகளை விரும்புவது இயல்பு. இதை மதத்தை அறிவதில் முஸ்லீம்கள் காட்டும் ஆர்வம் என புரிந்துகொள்ள முடியாது கூடாது.
கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் மக்கள் ஹீரோயிஸ மனப்பான்மையை காட்டுவதற்காகவா கலந்துகொள்கிறார்கள்? இஸ்லாத்தில் தமக்கேற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதற்காக கலந்துகொள்கிறார்கள். கலந்துகொண்டு கேள்வியையும் கேட்கிறார்கள். இவர் கூறுவது போல் மக்களுக்கு இக்காலத்தில் மதத்தை அறிவதற்கு நேரம் இல்லை என்றால் புதுப்புது கேள்விகள் எழாது! மக்கள் மார்க்கத்தைப்படிப்பதால்தான் புதுப்புது கேள்விகள் எழுகிறது.
இவர் கூறுவதற்கு சான்றாக எடுத்துக்காட்டும் எடுத்துக்காட்டைப்பாருங்கள்:
தவ்ஹீத் ஜமாத்தில் பிரபலமல்லாத யாரோ ஒருவருக்கு, அவரின் நிகழ்ச்சிக்கு மக்கள் விரும்பிச் செல்ல மாட்டார்கள். ஆக அது மதத்தை அறியும் ஆவலல்ல. தவ்ஹீத் ஜமாத் அல்லது அதன் நிகழ்ச்சிகள் பிரபலமடைந்திருப்பதைக் கொண்டு அது மக்கள் மதத்தை அறிய விரும்புகிறார்கள் என்பதாகவும் கொள்ள முடியாது.
விமர்சனம் செய்வதற்கு முன்னால் முஸ்லிம்களைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். இவர் கூறுவதில் துளி கூட உண்மையில்லை.
இவர் நுழைவாயில் பகுதியில் விளம்பர நிகழ்ச்சிகளின் போது வரும் மத நிகழ்ச்சிகள் கூட மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டிருந்தார். அது தவறு என்றும் அவ்வாறு வருவதுமில்லை என்று கூறினேன். மேலும் ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொண்டாலும் அவ்வாறு பார்த்தவுடன் ஈர்க்கும் என்றால் இஸ்லாத்தின் அது இஸ்லாத்தின் உண்மைக்கு சான்று என்றும் குறிப்பிட்டிருந்தோம். இதை மறுக்கப்புகுந்த செங்கொடியார் எவ்வாறு சப்பைக்கட்டு கட்டுகிறார் என்பதைப்பாருங்கள்
தொலைக்காட்சி நிகழ்சிகளின் இடையே வரும் விளம்பர நேரங்களில் அலைவரிசைகளை மற்றி மாற்றி தாவிச் செல்கையில் ஒரு மத நிகழ்ச்சி வந்தால் அதியும் ஒரு விளம்பரம்போல் தாவிச்செல்ல ஒரு இந்துவுக்கு மனச் சங்கடம் எதுவும் இருக்காது, ஆனால் ஒரு முஸ்லீம் அப்படி தாவிச் செல்ல சங்கடமடைகிறான், அதைக் கவனிக்கிறான். இஸ்லாமிய பிரச்சார உலகம் கைக்கொண்டிருக்கும் அறிவியல் தர்க்க உத்திகள் இதை மேலும் வலுப்படுத்துகின்றன. அவ்வளவுதான். இந்த வேறுபாட்டை முஸ்லீம்களின் அறிதல் ஆர்வம் என்பதைவிட மரபாக முஸ்லீம்களுக்கு இருக்கும் தாக்கம் என்பது தான் பொருத்தமாக இருக்கும். இந்த அடிப்படையைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். இதைத்தான் நண்பர் இஸ்லாத்தின் உண்மைக்குச் சான்று, இஸ்லாம் மட்டுமே கேட்டவுடன் ஈர்க்கும் என்றெல்லாம் புளகமடைகிறார். மதமே எல்லாமும் என இருப்பவர்களிடம் இதுபோன்ற மிகைகள் தவிர்க்கவியலாதவை.
விளம்பர நிகழ்ச்சிகளின் போது இஸ்லாமிய நிகழ்ச்சிகள் வருவதில்லை என்பதற்கு எந்த பதிலும் கூறவில்லை.(இதை ஒரு வாத்ததிற்கு ஒப்புக்கொள்வோம்) அன்னிகழ்ச்சிகளைப்பார்ப்பது மரபாக முஸ்லிம்களிடம் இருக்கும் தாக்கம் என்கிறார். ஆனால் நுழைவாயில் பகுதியில் இவ்வாறு கூறவில்லை அது தெரியாமல் வந்துவிட்டாலும் கூட ஈர்க்கிறது என்று குறிப்பிடுகிறார். இஸ்லாம் மட்டும் கேட்டவுடன் ஈர்க்குமென்று நாமகவா சொன்னோம். இவர் இவ்வாறு குறிப்பிட்டதால்தான் இப்படி நடக்கிறது என்றால் இஸ்லாத்தின் உண்மைக்கு சான்று என்று குறிப்பிட்டோம்.
உலக அளவில் முதலாளித்துவம் மக்களை வதைக்கிறது என்பதை உணர்ந்து போராட்டங்கள் பற்பல நாடுகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் முஸ்லீம் எனும் அடிப்படையில் நின்று முதலாளித்துவத்தை எதிர்க்க முடியுமா? வாழ்க்கைப் போராட்டம் என்பது இடஒதுக்கீடு கோசங்களோடு முடிந்துவிடுபவையல்ல. மக்களைக் கொல்லும் முதலாளித்துவத்தை எதிர்க்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் மதக்கொள்கைகளை பரிசீலனைக்கு உள்ளாக்குவது அவசியம். ஏழையையும் பணக்காரனையும் நானே அப்படிப் படைத்தேன் எனக்கூவி அந்த ஏற்றத்தாழ்வை தக்கை வைக்கும் ஒரு கொள்கையை நம்பிக்கொண்டு அதற்கெதிராய் எப்படிப் போராட முடியும்?
முதலில் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும்; ஒரு விடயம் தவறு என்றால்தான் அதை எதிர்க்க முடியும்! முதலாளித்துவத்தை இஸ்லாம் தவறு என்று கூறவில்லை. ஒரு சில வித்தியாசத்துடன் இஸ்லாம் முதலாளித்துவத்தை அங்கீகரிக்கிறது. அதே வேளை முதலாளித்துவம் என்ற பெயரில் நடக்கும் அட்டூழியத்தையும் கண்டிக்கிறது.(இவர் இஸ்லாமிய பொருளாதாரத்தைப்பற்றி பேசும் போது அதற்கு விளக்கமளிக்கப்படும். இந்த இடத்தில் குறிப்பிடுவது திசைதிருப்பும் செயற்பாடகத்தான் இருக்கும்)
//இதன் மூலம் அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் என்பவை இஸ்லாமிய இறையியலாக சித்தரித்து காட்ட முற்படுகிறார். அரபு தேசியவாதம் என்பதும் அரபு மார்க்ஸியம் என்பதும் இஸ்லாமிய இறையியல் கிடையவே கிடையாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்// அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் போன்றவை இஸ்லாமிய இறையியலாக நான் சித்தரிக்கிறேனா? பொதுவாக முஸ்லீம்கள் இஸ்லாத்தை விமர்சித்தால் அதை எதிர்த்துச் சொல்லப்படும் முதல் வாக்கியமாக இஸ்லாத்தைப்பற்றிய சரியான அறிதல் இல்லாமல் கூறுகிறார் என்பதுதான் இருக்கும். ஆனால் நாம் என்ன சொல்கிறோம்? எதை விமர்சிக்கிறோம் என்பதை அறிவதற்கு குறைந்தபட்ச முயற்சிகளைக்கூட எடுக்க மாட்டார்கள். அரபு மார்க்சியம் என்றால் என்ன? அரபுலக மண்ணில் ஆன்மீகத்திற்கு இஸ்லாமும் சமூகத்திற்கு மார்க்ஸியமும் என்று இரணடையும் இணைத்து, கடவுட் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் மார்க்ஸிய தத்துவங்களை இஸ்லாத்துடன் இணைத்து உருவானது தான் அரபு மார்க்ஸியம். ஆனால் இவரோ அரபு மார்க்ஸியத்தை இஸ்லாமிய இறையியலாக நான் சித்தரித்துக்காட்டுவதாக கரடி விடுகிறார். அப்படி இணைத்தது பயன்படாது கடவுட்கொள்கையை கடாசிவிட்டு மார்க்ஸியமே இறைய தேவை என்றுதான் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
இவர் இஸ்லாமிய இறையியலாக அரபு தேசியவாதம்,அரபு மார்க்ஸியம் போன்றவற்றை குறிப்பிட்டார். அதை தவறு என்று கூறியதற்கு அவர் அளிக்கும் சமாளிப்பு பதில்தான் இது. அதாவது அரபுலக மண்ணில் ஆன்மீகத்திற்கு இஸ்லாமும் சமூகத்திற்கு மார்க்ஸியமும் என்று இரண்டயும் இணைத்து உருவானதுதான் அரபு மார்க்சியமாம். எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும் அரபிகள் இவ்வாறு செய்துவிட்டால் அது இஸ்லாமிய இறையியலாக ஆகிவிடுமா என்பதுதான் கேள்வி. ஒன்று இஸ்லாத்திற்கு உட்பட்டது என்றால் அது குர்ஆனிலோ ஹதீஸிலோ இருக்க வேண்டும். அரபிகள் செய்ததால் அது இஸ்லாமிய இறையியலாக ஆகாது!. அரபு தேசியவாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல்.... இதுதான் அவர் எழுதியது. அரபு மார்க்ஸியம், தேசியவாதம் என்பன இஸ்லாமிய இறையியல் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்.
இறுதியாக ,
நுழைவாயில் பகுதியை ஒரு வேண்டுகோளுடன் முடித்திருந்தேன், முன்முடிவுகளைத் தவிர்த்து விட்டு வாருங்கள் என்று. ஆனால் இவர் அதை தூக்கிக் கொண்டு வந்ததோடில்லாமல் அதையே கவசமாகவும் காட்டுகிறார்.
வேண்டுகோள் வைப்பதாயின் உறுப்படியாக இருக்க வேண்டும் இஸ்லாம் சரியானது என்று நம்பாமல் அதைப்பற்றி எழுத வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது என்பது அறிவுடமையா? சந்தேகத்தில் இருந்தால் அது சரி என்று எந்தவகையில் ஒருவர் வாதிட முன் வருவார்!...?
இவற்றைப்பார்க்கும்போது மறுப்பு எனும் பெயரில் இதுபோன்று சமாளிப்பைத்தான் பதிலாக தருவார் போலுள்ளது.
1 comments:
இந்தக் கட்டுரைக்கான மறுப்பு செங்கொடி தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் காணலாம்.
http://senkodi.wordpress.com/2011/09/26/senkodi-islam-9/
Post a Comment