Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, November 30

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர்-02

செங்கொடியார் தனது தொடரின் முதலாவது பகுதியாக "இஸ்லாம். பிறப்பும் இறப்பும்: ஓர் எளிய அறிமுகம்" எனும் தலைப்பின் கீழ் இஸ்லாத்தை பற்றி ஒரு சில அறிமுகக்குறிப்பை தந்திருக்கிறார்.அதிலிருந்தே எமது மறுப்பை ஆரம்பிப்போம்.

"இஸ்லாம் பிறப்பும் இறப்பும் ஓர் எளிய அறிமுகம்" எனும் செங்கொடியின் தொடரை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்

செங்கொடியார் இஸ்லாத்தைப்பற்றிய ஒரு அறிமுகத்தை அளித்துவிட்டு பின்வருமாறு கூறுகிறார்:-

மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது.

அதாவது சைத்தான் என்பவன் அல்லாஹ்வின் எதிரி என்றும் அவனால் இஸ்லாமிய மார்க்கம் சிதைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.ஆனால் இது சரியான விளக்கமா என்றால் இல்லை! ஏனெனில் சைத்தான் மனிதர்களுக்கு எதிரி என்றே குர்ஆனில் காணக்கிடைக்கிறது.

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்கு பகிரங்க எதிரி.(2:168)
(மேலும் பார்க்க:12:35,35:6,etc)

ஆக,அறிமுகம் என்ற பெயரில் இல்லாததை இருப்பதாக கூறியிருக்கிறார்.மேலும்,மார்க்கத்தை சைத்தான் சிதைத்ததன் மூலம் மக்கள் மனம்போன போக்கில் சென்றார்களாம். இதிலும் உண்மையில்லை. சைத்தான் மார்க்கத்தை சிதைத்தான் என்பதற்கோ, அது சிதைவுக்குள்ளானதால் மக்கள் வழிதவறினர் என்பதற்கோ எந்த சான்றும் குர்ஆனில் இல்லை. சைத்தான் மக்களின் மனதில் ஊசலாட்டத்தினை ஏற்படுத்தி அவர்களை வழிதவறச்செய்தானே அன்றி சைத்தானே மார்க்கத்தை சிதைக்கும் வேலையில் ஈடுபடவில்லை. இதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் இதில் எந்த லாஜிக்கும் இல்லை! ஏனெனில் சைத்தான் மார்க்கத்தை சிதைப்பதால் மக்கள் எவ்வாறு மனம்போன போக்கில் செல்வார்கள்? அவர்களின் மனம் சிதைக்கப்பட்டு இருந்தாலேயன்றி இது சாத்தியமில்லை.

அடுத்து மின்வருமாறு கூறுகிறார்:-

மேலே கூறப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் ஒரு முஸ்லீமுக்கு கட்டாய அவசியமாகும். இதனால் தான் முஸ்லீம்கள் ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை விட அதிகமான பற்றும் பிடிப்பும் நம்பிக்கையையும் தங்கள் மதத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களுக்குள் ஆழமாக வேரோடியிருப்பதால் தான் இஸ்லாம் கூறும் ஒரு செய்திக்கு மாறாக ஒன்றை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபணமாக விளக்கினாலும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் மனதில் சரியாக இருக்குமோ என்று சிறிய ஐயம் வந்தாலும் செத்த பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியதிருக்கும். மறுபரிசீலனை என்ற வார்த்தையே இஸ்லாத்தின் அகராதியில் கிடையாது.


இஸ்லாமிய நம்பிக்கையில் பிடிப்புள்ளதனால் இஸ்லாத்திற்கு மாறாக ஒரு செய்தியை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபித்தாலும் ஏற்க மறுத்துவிடுகின்றனராம். இதுவரைக்கும் இஸ்லாம் தவறாக சொல்லியிருக்கிறது என்று யார் ஆதாரபூர்வமாக விளக்கியுளார் என்று தெரியவில்லை! அதை குறிப்பிட்டால் இன்னும் தங்கள் வாதங்களை எடுத்து வைப்பதற்கு வசதியாயிருக்குமே!. (செங்கொடியைப் போன்று) இஸ்லாம் தவறு என்று பேசித்திரிவது,விவாதத்திற்கு அழைத்தால் பின்வாங்குவது,பின்னர் அறியாத மக்களிடம் சென்று கண்டதையும் கூறி குழப்புவதற்கு பெயர்தான் நிரூபித்தலோ?. இஸ்லாத்தில் எதை மாற்ற வேண்டியுள்ளதோ அதை கொண்டுவாருங்கள்! அது சரியா தவறா என்று வாதிட்ட பின் தவறு எனில் மாற்றுவோம். (மார்க்ஸியம் போன்று) மனிதன் கூறியிருந்தால் மாற்ற வேண்டிய தேவை அவசியமிருக்கும். ஆனால் இது இறைவனிடமிருந்து வந்தது!(இது தொடர்பாக செங்கொடி எழுப்பிய சந்தேகங்கலுக்கு ஒவ்வொன்றாக பதிலளிக்கப்படும்) இதை மாற்ற வேண்டிய தேவை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். போகிற போக்கில் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியிருக்கும் என்று கூருகிறார். இதிலும் தவறுவிட்டிருக்கிறார். நரகம் என்பது நெருப்பு! அதில் தான் ஏக இறைவனை மறுப்போர் கருகுவார்கள் என்று இஸ்லாம் கூருகிறது.(இஸ்லாத்தையும் இந்து மத புராணத்தையும் ஒன்று என்று நினைத்துவிட்டார்போலும்.)

கம்யூனிச சித்தாந்தத்தின் தவறுகளை உணர்ந்து ஒருவன் அதில் இருந்து விலகி அதை விமர்சனம் செய்தால் கம்யூனிஸ்டுகள் என்ன செய்வார்கள் என்ற வரலாற்றை மறந்து விட்டார் போலும். எங்கே கம்யூனிஸ்டுகள் பலமற்று இருக்கிறார்களோ அங்குதான் யாராவது கம்யூனிசத்தை விமர்சிக்க முடியும். அதிகாரம் கையில் இருந்தால் கம்யூனிசத்துக்கு எதிராக வாய் திறக்க முடியாது என்ற உண்மையை செங்கொடி மறந்து விட்டார். கம்யூனிசத்தின் கோரப்பிடியில் ரஷ்யா கட்டுண்டு இருந்த போது ஸ்டாலினும் இன்ன பிற கம்யூனிச கொடியவர்களும் எதிர் கருத்து கொண்டவர்களை என்ன செய்தனர்? அவர்கள் செய்த படுகொலைகள் எத்தனை? சீனாவில் தியானன் மென் சதுக்கம் உள்ளிட்ட கம்யூனிசத்தின் தவறை இடித்துரைத்த குற்றத்துக்காக கொன்று குவிக்கப்பட்ட மானவர்களின் ரத்த சரித்திரம் தெரியாதா? அந்தக் கம்யூனிஸ்டில் இருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்று வேஷம் போடுவார்கள். ஆனால் அந்த வேறுபட்ட கம்யூனிஸ்டுகளும் தங்களின் கருத்தை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டு என்ற பெயரில் வேட்டையாடுவது இன்றும் தொடரத்தான் செய்கிறது. இந்த அடக்கு முறை மூலமாகத் தான் கம்யூனிசம் தனக்கு எதிரான விமர்சனத்தை தடுக்கிறது. ஆனால் ஒருவன் தானாக சுய உணர்வுடன் கடவுளுக்கு பயப்பட்டு நடந்து கொள்வது இதை விட மோசமானதா?
கடவுள் நரகில் போடுவார் என்பது தாமாக விரும்பி ஏற்றுக் கொண்ட நம்பிக்கை. ஆனால் கம்யூனிசம் கட்டாயப்படுத்தி சிந்தனைக்குப் பூட்டு போடுகிறது. இரண்டில் எது சிறந்தது?



இனி அவருடைய அடுத்த வாதத்தை பார்ப்போம்:-

ஆனால், எந்த நம்பிக்கைகள் அவர்களின் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த நம்பிக்கைகள் முரண்பாடுகளின் தொடக்கமாகவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. காரணம் எந்த முஸ்லீமும் அந்த நம்பிக்கைகளை உரசிப்பார்த்ததில்லை. அந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. எல்லாவற்றையும் சிந்திப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது என்பவர்கள் கூட தங்கள் சிந்தனையை உள்வசமாய் இஸ்லாத்தை நோக்கி திருப்புவதில்லை. திருப்பினால் அவன் முஸ்லீமல்ல என இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்படுவது மட்டுமல்ல, ஊர்விலக்கம், சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் என்பவை தொடங்கி கொலை மிரட்டல் வரை எதிர்கொள்ள நேரிடும். சிலர் கொலை செய்யப்பட்டதும் உண்டு. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இவர்களெல்லாம் இஸ்லாம் பற்றிய தங்களின் மாற்றுக்கருத்துகளால் கடுந்துன்பங்களுக்கு ஆளானவர்களில் சிலர். இவர்கலெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகியவர்கலல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டே அதன் கொள்கைகளைப்பற்றிய தங்கள் ஐயங்களை வெளியிட்டவர்கள். தமிழகத்தில் தக்கலையில் கவிஞர் ரசூல் கடந்த சில ஆண்டுகளாக ஊர் விலக்கம் செய்யப்பட்டு சொந்தக்காரரின் மரணத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள்.
இவர் கூறும் ஊர் விலக்கம்,சமூக புறக்கணிப்பு, பொருளாதார தனிமைப்படுத்தல், கொலை மிரட்டல் என்பன இஸ்லாத்தை பற்றி சிந்திப்பவர்களுக்கு ஏற்படுவது என்பது சரியே! அதில் ஒரு சிறிய மாற்றம். அதாவது சரியான முறையில் சிந்திப்பவர்களுக்கு உண்மையை போதிப்பவர்களுக்கு இது கட்டாயம் ஏற்படும். இது நபிமார்களுக்கும் பொருந்தும்!.
அடுத்ததாக சிலருடைய பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இஸ்லாம் இருப்பது போல் குற்றம் சாட்டுகிறார். நவீன கம்யூனிஸ்டு ஆனாலும் உளுத்துப் போன கம்யூனிஸ்டு ஆனாலும் அந்தக் கொள்கையை ஏற்றவர்களைத் தான் கம்யூனிஸ்டுகள் என்று ஒப்புக் கொள்வார்கள். கம்யூனிசத்தை எதிர்க்கும் ஒருவனை கம்யூனிஸ்டுகள் தங்கள் இயக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். கம்யுனிசத்தை விடுங்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும் அதை நம்பியவர்கள் தான் அதில் அங்கம் வகிக்க முடியும். அதை நம்பாதவர்கள மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும் ங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று தான் அறிவிக்கும். கேடுகெட்ட கம்யூனிஸ்டுகளுக்கு உள்ள உரிமை இஸ்லாத்துக்கு மட்டும் இருக்கக் கூடாதாம்.
இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்காதவனை இஸ்லாமிய வட்டத்தில் இருந்து ஒதுக்கிவைப்பது தவறு என்றால் காம்ரேட் கூட்டம் எடுத்த ஆயிரக்கணக்கான ஒழுங்கு நடவடிக்கைக்கு என்ன பெயர்?
சரி, இனி இவர் பட்டியற்படுத்திக்காட்டிய நபர்களைப்பற்றி கவனிப்போம்.(இங்கு இவர்களை பற்றிய குறிப்பு மிக சுருக்கமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை கவனத்திற் கொள்க!. விளக்கம் தேவைப்படுவோர் நெட்டில் தேடிப்பார்த்து அறிந்து கொள்க! மேலும், இவர்குறிப்பிட்ட நபர்களில் மஹ்தி அமில் மற்றும் தக்கலை றசூல் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இவர்கள் பற்றிய விபரம் யாரிடமாவது இருந்தால் தந்துதவுமாறு கேட்டுகொள்கிறேன்.போதிய ஆதாரங்களுடன் ibnuabdullah94@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பவும்.)
இவர் குறிப்பிடும் ஆமினா வதூத்(AMINA WADUD), இர்ஷாத் மஞ்சி(IRSHAD MANJI),ஹிர்ஸி அலி(AYAAN HIRSI ALI),நவ்வல் சதாவி(NAWAL EL SAADAWI) என்போர் பெண்கள். குறிப்பாக ஃபெமினிஸ்டுகள்.ஏனைய இருவரும் அதாவது தாரிக் அலி(TARIQ ALI) மற்றும் சாதிக் ஜலால் அல் அஸ்ம்(SADIQ JALAL AL-AZM) என்போர் ஆண்கள். இதில் ஹிர்ஸ் அலி மற்றும் தாரிக் அலி என்போர்  பிறப்பில் முஸ்லிம்களாயினும் தமது இறை மறுப்பை பகிரங்கமாக வெளிக்காட்டிய நாத்திகர்கள் என்பதால் இவர்கள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.(அதில் இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்ற செங்கொடியின் செட்டிபிகேட் வேறு). ஆமினா வதூதை பொறுத்தவரையில் இவர் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை பற்றி சந்தேகம் தெரிவித்ததாக தெரியவில்லை. இருப்பினும் இவர் சர்ச்சைக்குள்ளான விடயம் என்னவெனில், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களால் தொழப்படும் ஒரு தொழுகையில்(ஜும்மா) சுமார் 100க்கு மேற்பட்ட ஆண்,பெண் ஆகிய இருபாலாருக்கும் தலைமை தாங்கி(இமாமத்) தொழுவித்திள்ளார். (இஸ்லாத்தை பொருத்தவரையில் பெண்கள் பெண்களுக்கே இமாமத் செய்ய முடியும்.) இதுதான் அவர் சர்ச்சைக்குள்ளான விடயம். இது தொடர்பாக அவருடன் விவாதங்கள் பல நடந்துள்ளன. எனினும் தனது கொள்கையை மாற்றியதாக தெரியவில்லை.
அடுத்து, இர்ஷாத் மஞ்சியைப்பற்றி பார்ப்போம். இவள் தன்னைதானே முஸ்லிம் என்று கூறிக்கொள்பவள். ஆனால், இஸ்லாம் கூறும் பர்தா போன்றவற்றை பேணாதவள்.இதற்கு காரணமாக இவள் கடவுளை நம்புவாளாம் ஆனால் பயப்படமாட்டாளாம்.இதனால்தான் இவள் ஒரு தன்னினச்சேர்க்கையில் நாட்டம் கொண்டவள் போலும்(லெஸ்பியன்). மேலும் அதை நியாயப்படுத்துபவள்(இக்கேடு கெட்டவளுக்கு மரியாதை என்பது அவசியமில்லை.) ஆனால் இவள் தனது கூற்றின் மூலம் அடக்குமுறைக்கு உள்ளாகவில்லை. மாறாக இவள் நடாத்தி வரும் ப்ரொஜெக்ட் இஜ்திஹாத் (PROJECT IJTIHAD) மூலம் முஸ்லிம்களுகு  நல்ல பல காரியங்களை செய்திருக்கிறாள்.இதனால் முஸ்லிம்களிடம் குறிப்பாக மலேசிய மற்றும் இந்தொனேசிய முஸ்லிம்களின் அபிமானதிற்குரியவள்.
அடுத்து நவ்வல் சதாவி என்பவர் இஸ்லாத்தை பற்றிய ஒரு மாற்றுக்கருத்தை கூறியவர். மேலும் ஒரு அரசியல்வாதி.இதனால் அரசியல் அடக்குமுறைக்குளாகி சிறையிலிடப்பட்டார்.இவர் பல துன்பங்களாய் அனுபவித்து இருக்கிறார்(பெரும்பாலும் அரசியல் காரணமே). அடுத்து தாரிக் ஜலால் அல் அஸ்ம் என்பவர் இஸ்லாத்தை பற்றி பல விமர்சன நூல்களை எழுதியிருக்கிறார்.இதனால் இவர் சிறையிலிடப்பட்டுமிருக்கிறார்.இவர் ஒரு சல்மான் ருஷ்டி வகையறா(சல்மான் ருஷ்டியை ஆதரித்து நூலும் எழுதியிருக்கிறார்).ஆக இவர் சுட்டிக்காட்டியவர்களில் இருவர் மட்டுமே ஓரளவு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களின் நூல்களுக்கு மறுப்பளிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆயினும் இவர்களுக்கு அமேரிக்கா போன்ற நாடுகளின் உதவிகளும் அடைக்கலமும் கிடைத்துள்ளன.(பொதுவாக இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனையுள்ளவர்களை அமெரிக்க போன்ற நாடுகள் ஆதரிப்பது வழக்கம்)இவர்கள் பல்வறு அவார்டுகளையும் பெற்றுள்ளனர்.(செங்கொடியார் சல்மான் ருஷ்டி,தஸ்லிமா நஸ் ரீன் போன்றோரை மறந்து விட்டார் போலும்!)
பொதுவாக உண்மயை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கும் போது இவர் குறிப்பிட்ட தடங்கள் வருவது இயல்பே. இது போன்றவை தவ்ஹீத்வாதிகளின் வாழ்க்கையில் இடம்பெற்றுள்ளன.ஆயினும் தாம் கூறுவது உண்மையாக இருந்ததால் இறுதி வெற்றி தவ்ஹீதுக்கே கிடைத்தது. ஆனால் இவர்களின் வாதங்களில் உண்மைத்தன்மை இல்லாமையே மக்கள் மத்தியில் இவர்களது கொள்கை நிலைநாட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது!.இஸ்லாத்தைப்பற்றி தகுந்த சான்றுகளுடன் விமர்சனம் செய்தவர்கள் இதுவரை எவருமில்லை!. ஆகவே இவர் குறிப்பிட்டவைகள் இஸ்லாத்தைப்பற்றிய மாற்றுக்கருத்துக்களை ஏற்ருக்கொள்வதில்லை என்று பொருள்படாது. இவ்வாறு அறியாமையினால் ஓரிரு இடங்களில் நடப்பதை எடுத்து காட்டுவது சரியானது அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
                                                                                                       வளரும் இன்ஷா அல்லாஹ்

Friday, November 12

செங்கொடியின் கற்பனை கோட்டையின் விரிசல்கள் வழியே


தொடர்-01

செங்கொடி தனது விமர்சனத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் நுழைவாயில் எனும் தலைப்பினூடாக மத நம்பிக்கை பற்றியும்  அதன் வீரியத்தைப்பற்றியும் குறிப்பிட்டுவிட்டு, தான் இஸ்லாமிய கருத்துக்களை மறுப்பதற்கான அதாவது இத் தொடரை எழுதுவதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

செங்கொடியின் நுழைவாயில் எனும் தொடரை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்


இதன் பின்னர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

மதப்பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்கள் தேடிப்போய் கேட்பது குறைவு.மத விளக்க நூல்களை படிப்பது குறைவு.ஆனால் திரைப்பட நிகழ்ச்சியின் அல்லது விளையாட்டின் விளம்பர இடைவேளையில் தெரியாமல் இது போன்ற நிகழ்ச்சிகள் பார்வைக்கு வந்துவிட்டால் கூட இதன் தாக்கம் மக்களின் மனதில் இருக்கை போட்டு அமர்ந்துவிடுகிறது.

மேற்கண்ட பாராவில் இவர் குறிப்பிட்டுள்ள விஷயம் இவரது விசாலமான(?) அறிவை எடுத்துக் காட்டுகிறது.
இஸ்லாத்தைப் ற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் எழுதப் புகும் ஒருவருக்கு அது குறித்த தெளிவான அறிவு இருக்க வேண்டும். முஸ்லிம்கள் இஸ்லாம் மார்க்கத்தை அறிந்து கொள்வதில் காட்டும் ஆர்வம் கூட இவரது கண்களுக்குத் தெரியவில்லை. புரட்சிகர மார்க்ஸியம் ரைகள் நிகழ்த்தும் கூட்டங்களில் பத்துப் பதினைந்து பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு உபதேசம் செய்யும் நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு இப்படித்தான் முஸ்லிம்களும் இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு எழுதிய அபத்தமே இது.
முஸ்லிம்கள் இஸ்லாத்தில் அதிக ஆர்வம் காட்டி முஸ்லிம் என்று தம்மை இனம் காட்டிக் கொள்கிறார்கள் என்றும் மேற்படியார் தான் இதைத் தொடர்ந்து எழுதியுள்ளார். முரண்பாடுகளின் மொத்த உருவமான புரட்சிகர மார்க்ஸியத்தின் பாதிப்பினால் தனக்குத் தானே முரண்படுகிறார்
மேலும் விளம்பர இடைவேளையில் பார்க்கும் நிகழ்ச்சி இருக்கை போட்டு அமர்ந்து விடுகிறது என்று அவர் கூறுவதிலும் அவர் அறியாமையின் மொத்த உருவமாக இருப்பதை அறியாலாம்.
ஈடுபாடு இல்லாமல், தற்செயலாக காதில் விழும் இஸ்லாமியக் கருத்துக்கள் மக்கள் மனதில் இருக்கை போட்டு அமர்ந்து கொள்கிறது என்றால் அது தான் இஸ்லாத்தின் உண்மைக்கு சான்று. அவ்வவு ஆர்வம் காட்டாதவர்களின் காதுகளில் விழுந்தவுடன் ஈர்க்கும் அளவுக்கு இஸ்லாம் மட்டுமே உள்ளது.

மேற்படி இவரின் கூற்று முஸ்லிம்களுக்கு குறிப்பாக தவ்ஹீத்வாதிகளுக்கு அறவே பொருந்தாது! மதப் பிரச்சாரக் கூட்டமாயினும் சரி, மத விளக்க நூல்காளாயினும் சரி மக்கள் அதிகளவு ஈடுபாடு செலுத்துகின்றனர்.அது மட்டுமல்ல! நேரடி கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக கேள்விகேட்க செல்வதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு இன்னுமொன்றையும் குறிப்பிடவேண்டியுள்ளது. திரைப்படமோ அல்லது விளையாட்டு விளம்பர இடைவேளையின் போதோ இஸ்லாமிய நிகழ்ச்சிகள் பார்வைக்கு வருவதில்லை!(அவ்வாறு வந்தால் குறிப்பிடவும்) ஏனைய மத நிகழ்ச்சிகள் அதுவும் அத்தொலைக்காட்சி நிறுவனத்தினர் நடத்தினால்(அதுவும் விஷேட தினங்களில்) மாத்திரமே வெளிவரும். விளாம்பர இடைவேளைகளில் அதிகமாக அனுசரனையாளர்களின் விளம்பரமே இடம்பெறுகிறது என்பதையும்  அறிந்து கொள்ள வேண்டும்! ஆக இவ்வாறான இவரது கூற்று ஏனைய மதத்தினருக்கு பொருந்தினாலும் முஸ்லிம்களுக்கு பொருந்தவே செய்யாது!.

அடுத்ததாக,

அரசு, பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும் போது அவர்களின் மத அடையாளமே முன்னிறுத்தப்படுகிறது. இதனாலும்,அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது.இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்து பாசிசங்களுக்கும் தேவையாகும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்து பாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன் செல்ல வேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பைகேள்விக்குள்ளாக்குவது முன் நிபந்தனையாகிறது.

பொதுவாக பாதிக்கப்பட்டால் பொதுவாக அடையாளப்படுத்துவதும், முஸ்லிம் என்ற காரனத்துகாக பாதிக்கப்பட்டால் அதை அடையாளப்படுத்துவதும் அறிவுடையோரின் செயல் தான்.மின்சாரம் இல்லா விட்டால் அதற்காக முஸ்லிம் அடையாத்துடன் முஸ்லிம்கள் போராடியதில்லை. வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்டால் முஸ்லிம் என்ற காரத்துக்காகவே அந்த பாதிப்பு இருப்பதால் அதை அடையாளப்படுத்தாமால் வேறு எதை அடையாளப்படுத்துவது? அறிவோடு தான் இவர் எழுதுகிறாரா?
இந்தச் சாதராண அறிவு கூட இல்லாதவர் விமர்சனம் செய்வதற்கு தகுதி அற்றவராகிறார்.

அரசியல் விழிப்புணர்வுகள் இந்து பாசிசத்திற்கு தேவையகவும் உதவியாகவும் இருப்பதாக கூறுகிறார்.இது எவ்வாறூ உதவியாக இருக்கிறது என்பதை சற்று விளாக்கினால் நன்றாக இருக்குமே!. அது மட்டுமல்லாமல், போகிறபோக்கில் சமூக போராட்டங்களில் ஈடுபட முஸ்லிம்கள் அவர்களது மத நம்பிக்கையையும்,மத பிடிப்பயும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார். இதில் துளியளவு கூட உண்மயில்லை.இதற்கு எடுத்துகாட்டாக ஜூலை 4 மா நாட்டை குறிப்பிடலாம்.இதன் தாக்கம் பிரதமர் வரைக்கும் சென்றதை அறிந்திருபார். இதை முஸ்லிம்கள் மத நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்காமலேயே சாதித்து காட்டியுள்ளனர். எதிர்வரும் ஜனவரி 4 மாநாடும் இன்ஷா அல்லாஹ் அவ்வாறு  அமையும் என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற சமூக போராட்டங்களை மத நம்பிக்கைக்கு எதிராகவும் தடையாகவும் இருந்தால்தான் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இதை இஸ்லாம் தாரளாமாக அனுமதிக்கும் போது எதற்காக கேள்விக்குள்ளாக்க வேண்டும்?

இறுதியாக மற்றொரு விடயத்தையும் குறிப்பிடுகிறார்:-

அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்கள் எல்லாம் இன்றைய நிதி மூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள்.புரட்சிகர மார்க்ஸியமே இன்றைய சமூக தேவையாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கும் இத்தொடர் பயன்படுமென நம்புகிறேன்.

மார்க்ஸியத்தை விட இவரது புரட்சிகர மார்க்ஸியம் எந்த அளவுக்குமுணை மழுங்கியுள்ளது என்பதை அவர் இந்த தலைப்புக்குள் நுழையும் போது தோலுரித்துக் காட்டப்படும்.

மேலும்,இதன் மூலம் அரபு தேசிய வாதம், அரபு மார்க்ஸியம் என்பவை இஸ்லாமிய இறையியலாக சித்தரித்து காட்ட முற்படுகிறார். அரபு தேசியவாதம் என்பதும் அரபு மார்க்ஸியம் என்பதும் இஸ்லாமிய இறையியல் கிடையவே கிடையாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இவரது புரட்சிகர(?) மார்க்ஸியமே இன்றைய சமூக தேவை என்பதை எவ்வாறு உணர்த்தப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
                                                                                                                                                வளரும் இன்ஷா அல்லாஹ்

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே


காலத்துக்கு காலம் அனைவராலும் விமர்சனத்திற்குள்ளாகும் ஒரே ஒரு மார்க்கம் இஸ்லாம் தான்.இருப்பினும் அவை அனைத்தையும் எதிர்த்து இஸ்லாம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

அண்மைக்காலமாக் செங்கொடி என்பவர் தனது வலைத்தளத்தில் "இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே" எனும் தொடரை எழுதிவருகிறார்.அதில் குர்ஆன் கூறும் கருத்துக்கள் தவறாகவும்,அறிவியலுக்கு முரணாகவும் காணப்படுகிறது. என்றும் கூறுகிறார். அவரது அத் தொடரை வாசிக்கும் போது அரைகுறை அறிவியலுடனும்,குர் ஆன் வசனங்களை தவறாக விளாங்கிக்கொண்டதுமே காரணமாக இருக்கிறது.எனவே,அவரது கருத்துக்களுக்கு மறுப்பளிக்க வேண்டிய நிலை எமக்கிருக்கிறது.ஆதலால்,அவரது வாதங்களுக்கு மறுப்பாக இத்தொடர் வெளியிடப்படுகிறது.

தொடர்வதற்கு முன்........

எமது மறுப்பை ஆரம்பிக்க முன் செங்கொடியை பற்றி சில தகவல்களை கூற வேண்டியுள்ளது.இவர் "இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே" எனும் தொடரை எழுதி வருவது சகோதரர் பி.ஜே அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் செங்கொடியை நேரடி விவாதத்திற்கு அழைத்தார். முதலில் மறுத்த செங்கொடி பின்னர் ஒருவாராக ஒப்புக்கொண்டார். தான் தற்போது வெளி நாட்டில் இருப்பதாகவும் ஊர் திரும்பியவுடன் விவாதத்தை வைத்துக்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

ஆனால் தற்போது நேரடி விவாதத்திற்கு வரமாட்டேன் என்று பழைய நிலைக்கு தாவிவிட்டார்.பார்க்க
இதன் மூலம் அவர் நேரடி விவாதத்திற்கு செல்வார் என்றா எதிர்பார்ப்பு வீணாகிட்டது என்பதை ஒரு தகவலுக்காக பதிவு செய்து கொள்கிறேன்.

அடுத்த தொடர் முதல் இவரது கருத்துக்கள் ஆய்விற்கு எடுத்துகொள்ளப்படும். இன்ஷா அல்லாஹ்!.