Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, March 24

செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு 

பகுதி- 05

குரானின் சவாலுக்கு பதில் என்ற பெயரில் செங்கொடி உளறியதற்கு நாம் அளித்த பதிலை மறுக்க முடியாமல் ஏதோ எழுதி மானத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எனது பதிலுக்கு பதில் போட்டிருக்கிறார். அதில் இவர் கையாண்ட தில்லாலங்கடி வேலையை மீண்டும் தோலுரித்துக்காட்ட வேண்டிய கடப்பாடு உள்ளது.

அடைப்புக்குறிக்கு ஒரு தத்துவத்தை கூறினார். அடைப்புக்குறிக்குள் விளக்கம் போடாவிடின் குர்ஆனில் முரண்பாடுகளும் தவறுகளும் நிறைய கிடைக்கும் என்றார். அதற்கு ஒரு வசனத்தையும் எடுத்துக்காட்டினார். அதை நாம் மறுத்து எழுதியிருந்தோம். அதற்கு பதிலளிக்கப்புகுந்தவர், அடைப்புக்குறி இலகுவாக விளங்குவதற்காக போடப்படவில்லை. ஏனென்றால், அதில் அதிகமான அடைப்புக்குறிகள் போடப்பட்டுள்ளன! ஏனைய எந்த நூல்களையோ,  பத்திரிகைகளையோ மொழிபெயர்க்கும் போது அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை என்கிறார். இந்த அடைப்புக்குறி ஒரு மேட்டரே இல்லை.  அடைப்புக்குறி குர்ஆனின் மொழிபெயர்ப்புகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இதற்கு குர்ஆனின் தவறுதான் காரணம் என்பது தவறு. இதற்கு முழு முதற்காரணம் மொழிபெயர்ப்பாலர்கல்தான். எந்தவொரு மொழியாக இருந்தாலும் அதனை வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் போது அந்த மொழியின் நடைக்கேற்பவே மற்றம் செய்ய வேண்டும். இதை பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் கவனிக்கத்தவரியுள்ளனர். ஆனால், இந்த குறைகளை அறிஞர் பி.ஜே மொழிபெயர்த்த தமிழாக்கத்தில் காண இயலாது. அது எவ்வளவுக்கு அடைப்புக்குறிகளை தவிர்க்க இயலுமோ அவ்வளவுக்கு தவிர்க்கப்பட்டு எளிய மொழி நடைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அடுத்து இன்னொரு விளக்கத்தையும் கூறுகிறார்கள். அதுவும் தவறு என்கிறார்.  அந்த விளக்கம் என்ன? ஏனைய விடயங்களை மொழிபெயர்ப்பது போல் குர்ஆனை மொழி பெயர்ப்பது கிடையாது. அதை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதால் அதிகம் அடைப்புக்குறிகள் இடப்படுகின்றது. இதுவும் தவறு என்கிறார். இந்த விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதால் அடைப்புக்குறி அதிகம் இடம்பெறுகிறது என்பது தவறு! ஆனாலும் இதற்கு இவர் அளிக்கும் மறுப்பையும் எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. எந்தவொன்றையும் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்க இயலாது. அப்படி செய்தால் குழப்பம் வரும்; இலக்கணம் விடாது! எனவே, குர்ஆன் கருத்தைத்தான் மொழிபெயர்த்துள்ளனர் என்கிறார். வேண்டுமென்றால் நாம் இப்போது சவால் விடுகிறோம். குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தைதான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது! இதை நாங்கள் நிரூபிக்கத்தயார்! செங்கொடி தயாரா? வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால் இலக்கணம் விடாதாம். சொல்லுக்கு சொல் மொழிபெயர்த்தால் இலக்கணம் அங்கீகரிக்கும்! மாறாக அந்த மொழியின் நடைக்கேற்பவே வேறு மொழியில் பெயர்த்தால்தான் இலக்கணம் சிக்கலை ஏற்படுத்தும்! இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு இடையில் குரான் வாக்கியங்கள் தமிழுக்கியைந்த கோர்வையுடன் இருப்பதால், குரான் அப்படி சொல்லுக்குச்சொல் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இருக்க முடியாது. மட்டுமல்லாது, பல்வேறு தமிழ் குரான் மொழிபெயர்ப்புகள் ஒரேமாதிரியான வாக்கிய அமைப்பைக் கொண்டதாகவும் இல்லை என்கிறார். அரபு மொழிக்கும் தமிழுக்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன! அதன் இலக்கனத்திலிருந்து, மொழி நடையிலிருந்து, சொல்லுருவாக்கம் உட்பட வேற்றுமைகள் உள்ளன என்பதை செங்கொடி மறந்துவிட்டார். குர்ஆன் மொழிபெயர்ப்புகளிடையே வார்த்தை அமைப்புகளில் வித்தியாசம் இருப்பதால் குர்ஆன் தவறாகிவிடுமா? ஒரு சொல்லுக்கு பல ஒத்த கருத்துச்சொர்கள் இருக்கும். அதை மாற்றி மாற்றி யூஸ் பண்ணால் அது முரண்பாடா?

ஏற்கனவே எடுத்துக்காட்டிய அதே வசனத்தை இத்தொடரிலும் எடுத்துக்காட்டி அதன் முரண்பாட்டை (?) விளக்குகிறார்.

கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட வசனத்தையே (குரான் 2 :178 ) எடுத்துக்கொள்வோம். "சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை" என்பதன் பொருள் என்ன? சுதந்திரமான ஒருவன் கொல்லப்பட்டால் அதற்கு பகரமாக சுதந்திரமான ஒருவனும், அடிமை ஒருவன் கொல்லப்பட்டால் அதற்குப் பகரமாக அடிமை ஒருவனும் என்று நேரடியாகவும், அடிமை ஒருவனை சுதந்திரமான ஒருவன் கொலை செய்தால் அதற்குப்பகரமாக கொலை செய்த சுதந்திரமானவனின் அடிமை ஒருவன் என்று மறைமுகமாகவும் பொருள் வருகிறது. இப்படி எதிர்மறையான வகையில் யாரும் பொருள் கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் "சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை" என்று "கொலை செய்த" என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டு பயன்படுத்துகின்றனர். ஜான் ட்ரஸ்ட் வெளியீட்டிலும் இதே வசனத்தில் இதே அடைப்புக்குறி சில சொற்கள் தள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மொழியியல் சிக்கல்களுக்காக மட்டுமே அடைப்புக்குறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஏற்கத்தக்கதன்று.

எந்த ஒரு வசனத்தை விமர்சிப்பதாக இருந்தாலும் அந்த வசனத்தை முழுசாக போட்டு விளக்க வேண்டும். இதை எனது மறுப்பில் கூட "முழுசா போட்டு விளக்கியிருந்தால் புட்டு வெளியாகியிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தேன். அதை கவனத்தில் கொள்ளாது மீண்டும் அதே கயமைத்தனத்தை இங்கும் நிலை நாட்டியுள்ளார். இவர் சுட்டிக்காட்டிய வசனம் பழிவாங்குவது தொடர்புடையது. இதை அவரும் ஒத்துக்கொள்கிறார். பழிக்குப்பழி என்பது கொலை செய்தவனை கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் பழி தீர்ப்பதை குறிக்கும். இந்த அடிப்படையை விளங்கிக்கொண்டவர்கள் அடைப்புக்குறி இல்லாமல் வாசித்தால் கூட சுதந்திரமானவனுக்கு சுதந்திரமானவன் என்றால் கொலை செய்தவனைத்தான் குறிக்கும் என்று புரிந்து கொள்வர். ஏன்? பழி வாங்குதல் என்றால் யாரை கொலை செய்தானோ அவனைப் பழிவாங்குவது என்றுதான் அர்த்தம்! அதுதான் நியதியும் கூட! இதை புரியும் திறனற்ற செங்கொடி போன்றவர்களுக்காக "கொலை செய்த" என்று அடைப்புக்குள் போட்டிருக்கும். எனக்கு அடைப்பு இல்லாமல் விளங்கும் என்று கூறிவிட்டு அடிப்படை அறிவு கூட இல்லாமல் விமர்சிக்க கிளம்பியுள்ளார். இந்த வசனத்தில் எந்த தவறும் இல்லை!

நான் இங்கு அடைப்புக்குறி என்றுதான் பயன்படுத்தியுள்ளேன்.(செங்கொடியும் அவ்வாறுதான்) ஆனால், அடைப்புக்குறியில் குறிப்பிடும் விளக்கம் என்றுதான் குறிப்பிட வேண்டும். அடைப்புக்குறி என்றால் அதன் விளக்கம் தான் என்று புரிந்து கொள்ளும் செங்கொடி இதற்கு மட்டும் இப்படி அடம்பிடிப்பது வீம்புக்காக என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து நேரடி முரண்பாட்டை இரண்டு வசனங்களை குறிப்பிட்டு முதல் வசனத்தில் முதலில் வானம் பின்னர் பூமி என்றும் அடுத்த வசனத்தில் முதலில் பூமி பின்னர் வானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முரண்பாடில்லையா? என்று துள்ளிக்குதித்தார். இதற்கு நாம் பதிலளித்திருந்தோம். அதற்கு இவர் கூறும் விளக்கம் இதோ:

அடுத்து முரண்பாடான வசனத்திற்கு வருவோம். கட்டுரையில், ஒரு வசனத்தில் முதலில் வானம் பின்னர் பூமி என்றும், வேறொரு வசனத்தில் முதலில் பூமி பின்னர் வானம் என்றும் இருக்கிறது, இது முரண்பாடில்லையா? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நண்பர், \\பூமியைப்படைத்தான்; பின்னர் வானத்தைப்படைத்தான்; பின்னர் அதை விரித்தான். இதில் எந்த முரண்பாடுமில்லை// என்று எழுதியுள்ளார். குறிப்பிட்ட கட்டுரைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை கவனித்துப்பார்த்தால் இதே கருத்தை வேறொரு நண்பர் ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்பதை அறியலாம். ஆனால் அவர் வானத்தை இரண்டு முறையாகவும் பூமியை ஒரு முறையாகவும் குறிப்பிட்டார். நண்பர் இஹ்சாஸ் பூமியை இரண்டு முறையாகவும் வானத்தை ஒரு முறையாகவும் குறிப்பிடுகிறார். இவைகளெல்லாம் அந்த முரண்பாட்டை நீர்த்துப்போக வைப்பதற்காக சொல்லப்படும் விளக்கங்கலேயன்றி வேறில்லை.

விளக்கம் தவறு என்றால் தவறு என்பதை நிரூபிக்க வேண்டும்! அதை விடுத்து, இதுபோல்தான் இன்னொருவரும் கமண்டில் கூறினார். அதில் வானம் இரண்டு தடவையும் பூமி ஒரு தடவையும் என்று குறிப்பிட்டார். நான் பூமி இரண்டு தடவையும் வானம் ஒரு தடவையும் என்று கூறி முரண்பாட்டை நீர்த்துப்போக வைப்பதாக அசடு வழிகிறார். குறிப்பிட்ட கமண்டில் சொன்ன விளக்கத்துக்கு பதில் அளித்தது போன்று நமது விளக்கத்துக்கும் பதில் அளித்து விட்டு இப்படி சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், எமது விளக்கத்துக்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை! தவறு என்று நிரூபிக்கவில்லை. இவரது இயலாமையை பதிலாக அவிழ்த்து விடுகிறார். அத்தோடு நிறுத்தாமல் இன்னொரு முரண்பாடு அதாவது பூமி படைக்கப்பட்ட நாட்களின் என்னிக்கையிடையே வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டு சரிகட்டிவிடுகிறார். இதே வாதத்தை இவர் வேறு ஒரு தொடரில் முன்வைத்துள்ளார். அதற்கு பதில் வெளியிடப்படும் போது பார்த்துக்கொள்ளலாம்.! இந்த இடத்தில் இது திசை திருப்பும் கருவியாக தனது இயலாமையை மூடி மறைக்கும் கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்.

குர்ஆனில் ஒரு வசனத்திற்கு மாற்றீடாக ஒரு குறளை குறிப்பிட்டு மதவாதிகளே! பதில் சொல்லுங்கள்!! என்று முழங்கினார். அதற்கு பதில் சொல்லப்பட்டிருந்தும் எவ்வாறெல்லாம் திருகுதாளம் போடுகிறார் என்பதை வாசிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளலாம். அதற்கான நமது மறுப்பை பார்க்கும் முன் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும். அதாவது, ஒரு குறளை குறிப்பிட்டு இதை குர்ஆன் வசனமொன்றிற்கு மாற்றீடாக பயன்படுத்துவீர்களா என்று கேட்பவர் எந்த வசனத்திற்கு மாற்றீடாக பயன்படுத்த வேண்டும். அந்த வசனம் இக்குறளை விட எந்தவகையில் கீழானது என்று குறிப்பிடவே இல்லை.!

 அவரது சப்பைக்கட்டை பாருங்கள்:

நோய் என்னதென்று தெரிந்து, அந்த நோய் வந்ததற்கான காரணத்தை அறிந்து, அதை என்ன முறைமையில் போக்குவது என்பதை அறிந்துகொண்டு, செய்வதற்கு வயப்பட்டதை செய்ய வேண்டும். என்பது அந்தக்குறளின் பொருள். இதை வெறுமனே நோய் வந்தால் மருத்துவம் பாருங்கள் என்பதாக குறுக்கி விட முடியாது. குறள் கூறும் மருத்துவத்திற்கான இந்த இலக்கணம் இன்றுவரை பொருத்தமானதாக இருக்கிறது, எதிர்காலத்திலும் இது பொருத்தமானதாகவே இருக்கும்.

குறள் கூறும் மருத்துவத்திற்கான இலக்கணம் இன்று வரை பொருத்தமாவதாக குறிப்பிடுகிறார். இதனால் அந்த குறள் குர்ஆன் வசனத்திற்கு மாற்றீடாக குறிப்பிட்டு விட முடியுமா? வள்ளுவர் இதை கூறும் முன்போ கூறும் கால கட்டத்திலோ மருத்துவத்திற்கு வேறு இலக்கணமா இருந்தது? இதுவெல்லாம் சாதாரண விடயம்! பசித்தால் சாப்பிடு! தூக்கம் வந்தால் தூங்கு! மழை பெய்தால் குடை பிடி! என்று ஏதாவது ஓரிடத்தில் இருந்து அதை எவனாவது பார்த்தீர்களா! இதெல்லாம் எங்கள் வேதத்தில் உள்ளது! இது இக்காலத்திற்கும் பொருந்துகிறது! எனவே இது இறைவேதம் என்று கூறினால் எப்படியோ அப்படி உள்ளது இந்த வாதம்!

இதைக்கூருவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். அலிப், லாம், மீம் என்று பொருளற்ற அசைச்  சொற்களை எல்லாம்  குர்ஆனில் வசனமாக இடம்பெற்றிருக்கிறது என்பதை நண்பர் மறந்துவிட்டாரா? பொருளற்ற அசைச்சொர்களை வசனமாக கூறமுடிந்த கடவுளுக்கு பொருளுடன் கூடிய ஒரு கருத்தைக் கூறுவது எந்த விதத்தில் தேவையின்றிப் போகமுடியும்? நண்பர் நம்பும் கடவுளே கொசுவையோ அதற்கும் அட்பமானதையோ உதாரணம் கூற தயங்கமாட்டேன் என்று கூறியிருக்கும் போது மருத்துவம் குறித்த ஒன்றை கூறுவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். இதுதான் என்ன வகை ஒப்பீடோ?

அலிப், லாம், மீம் போன்ற பொருளற்ற வசனங்கள் இருப்பது ஒரு உயர்ந்த இலக்கிய நயத்திற்காக என்பதை சிந்திக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம். ஏன் வள்ளுவர் கூட உயிரளபடையை பயன்படுத்தியிருக்கிறார் ஓசை நயத்திற்காக! அதை தனியே எடுத்தால் ஒரு பொருளும் இராது! ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டுமெனில் அதற்கான தேவை இருக்க வேண்டும்! பிரித்தறிவிக்க வந்த வேதத்தில் நோய் வந்தால் மருத்துவம் செய்! என்று எதற்காக குறிப்பிட வேண்டும்? என்ன அவ்வளவுக்கு மருந்து செய்ய தெரியாமலா இருந்தார்கள்? கொசுவை உதாரணமாக குறிப்பிட அல்லாஹ் வெட்கப்பட மாட்டான் என்று எதற்காக குறிப்பிடுகிறான். அது பொருத்தமா? இல்லையா? என்பதை வாதமாக எடுத்து வைக்க வேண்டும்! போகிற போக்கில் தடவி விட்டு செல்லக்கூடாது! பதில் தெரியாவிட்டால் இப்படியெல்லாம் அலட்டுவது இவர்களின் வாடிக்கை போலும்!

இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும் வகையில் குறிப்பிட்ட அக்குறளுக்கு அறிவியல் முன்னறிவிப்பு கொடுக்கிறார்!

இந்தக்குறளில் நோய் குறித்த முன்னறிவிப்பு இல்லையா? நோய் நாடி அதன்முதல் நாடி தணிக்கும் முறைனாடி அதைச்  செய்வது என்று மட்டும் கூறியிருந்தால் அதில் முன்னறிவிப்பு ஒன்றுமில்லை. ஆனால், அதில் வாய்ப்பச் செயல் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நோயைத் தணிக்கும் முறையை அப்படியே செய்துவிடாமல் அதில் வாய்ப்பானதை செய்ய வேண்டும் என்பதன் மூலம் ஒவ்வாமை என்னும் நோய் குறித்த முன்னறிவிப்பு அங்கு வருகிறது. நோய்க்கான மருந்தேயானாலும் அந்த மருந்தை உட்கொள்ளும் உடல் அந்த மருந்தை ஏற்றுக்கொள்கிறதா என்பதையும் கண்டறிந்து அதன் பின்னரே மருத்துவம் செய்ய வேண்டும் எனும் விவரணத்தை பெறலாம். அந்த வகையில் அது, ஒவ்வாமை எனும் நோய் குறித்த முன்னறிவிப்பாக இருக்கிறது.

என்னே விவரணம்! முன்னறிவிப்பு என்றால் குறிப்பிடும் அக்காலத்தில் இல்லாத ஒன்று எதிர் காலத்தில் வரும் என்பதை குறிக்க பயன்படும். ஒவ்வாமை என்பது என்ன பத்து அல்லது இருபதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பா? அக்காலத்தில் மட்டுமல்ல! எக்காலத்திலும் உள்ளதுதான்! இன்னும் சொல்லப்போனால் இதில் ஒவ்வாமை பற்றி இருக்கிறது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை! ஒவ்வாமை என்றால் நம் உடலுக்குத்தேவையான, நாம் சாப்பிடும் சாப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத ஒரு நிலை! இது அரிதானது! குறளில் உள்ளது வாய்ப்பச் செயல்! வாய்ப்பச் செயல் என்றால், அந் நோய்க்கேற்ற வகையில் என்பது அர்த்தம்! மருந்து செய்யும் போது அவரது உடலுக்கும் நோயின் தன்மைக்கும் ஏற்ப மருந்து அளிப்பதுதான் மரபு! மரபைத்தான் சொல்லியிருக்கிறார்! இதில் ஒவ்வாமையும் கிடையாது! முன்னறிவிப்பும் கிடையாது! நல்ல வேலை, இது எயிட்சிலிருந்து காத்துக்கொள்ள காண்டம் யூஸ் பண்ண சொல்லியிருக்கிறார் என்று சொல்லாமல் விட்டாரே!

குறளையும் குரானையும் இலக்கிய நயத்தில் எப்படி ஒப்பிட்டுப்பார்த்தார் என்பதை நண்பர் குறிப்பிடவே இல்லை. வெறுமெனே அட்ரஸ் இல்லாமல் போய்விடும் என்கிறார். எப்படி என்பதையும் விவரிப்பார் என எதிர்பார்க்கிறேன். இலக்கிய நயம் மட்டுமல்ல இலக்கணக் கட்டும் கொண்டது குரல். அதன் யாப்பை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கும் 1330 குறட்பாக்களில் எந்த ஒரு குரலும் தளை தட்டாது. அதன் எல்லாக் குறளும் முச்சீர் ஈறாக எழுசீர் விருத்தமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் குர்ஆனில் இருக்கும் இலக்கிய, இலக்கண நயங்களில் ஒன்றிரண்டை நண்பர் எடுத்துவிட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

எமது மறுப்பைக்கூட முழுசாகப்படிக்கவில்லை! இவருக்கு குர்ஆனின் உயர்ந்த இலக்கிய நடை மட்டுமல்ல குர்ஆன் என்றாலே என்னவென்று தெரியாது என்பதை அவருடைய கட்டுரையிலிருந்து சுட்டிக்காட்டி மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்பதற்காக சில விடயங்களை குறிப்பிட்டிருந்தேன்! அதை வாசித்தும் வாசிக்காதது போல் கேட்கிறார். எனவே அதை மீண்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

இதைப்போல் என்பதற்கு எந்த வரையறையும் கூறாததால் அதன் உள்ளடக்கம், பொருள், ஓசை நயம், வடிவமைப்பு என்பவற்றை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றை கொண்டுவருமாறுதான் கூறுகிறது. ஏனெனில் குர்ஆன் என்பதே இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த தொகுப்புதான். எனவே, இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றை இயற்ற வேண்டும் அல்லது கொண்டுவர வேண்டும்!.

பொதுவாக ஒரு உயர்ந்த இலக்கியப்படைப்பை இயற்ற வேண்டுமெனில் நிறைய பொய்களையும், மிகையான உவமை, உருவகம் போன்றவையும் பயன்படுத்துவர்! ஆனால் குர்ஆன் இவை அனைத்தும் இன்றி உண்மையை மட்டும் கொண்டே அமைந்துள்ளது. மேலும் ஒரு படைப்பானது எந்தளவுக்கு உயர்ந்த தரத்தை கொண்டுள்ளதோ அந்தளவுக்கு பாமர மக்களை விட்டும் தூரமாகும்! ஆயினும் குர்ஆன் அப்படிப்பட்டதல்ல! கவிஞர்களுக்கு  விளங்கியது போல் பாமர மக்களுக்கும் விளங்கியது! (ஆனால் திருக்குறள் அப்படிப்பட்டதல்ல! அது தமிழ் மொழியில் இருந்தாலும் அதை அதே மொழியில் மொழியாக்கம் செய்தே பாமரர்களுக்கு கூற வேண்டும். இல்லையெனில் விளங்காது.) இவைதவிர இன்னுமுள்ளன. இவ்வளவும் போதும்.

இதற்கு மேலதிகமாக இத்தொடரில் யாப்புகளைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார்! எனவே, அது சம்பந்தமாகவும் சில விடயங்களை குறிப்பிடலாம். தமிழை பொறுத்தவரை கவிதை, பாடல் போன்றவற்றை இயற்றுவதற்கு சில யாப்பு விதிமுறைகளை அமைத்திருப்பார். அது குறிப்பிட்ட செய்யுளின் இலக்கிய தரத்தை கூட்டுபவனவாகவும் இருக்கும். இந்த வகையில் தமிழில் இவர் குறிப்பிடும் யாப்பு உட்பட பல உள்ளன! இதல்லாமல் புதுக்கவிதையைப்போன்று இயற்றினால் இலக்கிய நயம் அவ்வளவாக இராது. ஆனால், குர்ஆனில் இது போன்ற எந்த யாப்பையும் காண இயலாது! சில அத்தியாயங்கள் அதிக வசனங்களை கொண்டதாகவும் இன்னும் சில குறைந்த வசனங்களை கொண்டதாகவும் இன்னும் பலவாறான வடிவில் இருந்தும் அதம் ஓசை நயம் மிகுந்த ஆச்சரியத்திற்குரியது! இதுபோல் எந்த ஒரு யாப்பை பயன்படுத்தாமலும் அதுவும் ஓசை, இலக்கிய நயங்களோடு ஒரு புத்தகம் இருக்குமெனில் காட்டலாம்! இவ்வளவும் போதும் என்று நினைக்கிறேன். இனிமேலும் சொதப்பாமல் பதில் சொல்லவும். வேண்டுமென்றால் இலக்கியத்தரத்தில் எது உயர்ந்தது என்பதை மட்டும் கருப்பொருளாக  வைத்து வைத்து விவாதிக்கத்தயாரா? வேறு எதையும்  குறிப்பிடத்தேவையில்லை. எழுத்து விவாதத்தில் இவர் அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை! நேரடியாக அழைக்கிறேன்.

ஒரு உயர்ந்த இலக்கியப் படைப்பாக இருக்க வேண்டுமென்றால் மிகையான உவமைகளும், உருவகங்களும், பொய்களும், புனைவுகளும் இருக்க வேண்டும் என்கிறார். ஆம் உலக இலக்கியங்களில் இவை இடம்பெற்றிருக்கின்றன. அதே நேரம் குரானிலும் இவை இடம்பெற்றிருக்கின்றன. உவமைகள் இருக்கின்றன, உருவகங்கள் மிகைப்படுத்தல்கள் இருக்கின்றன. பொய்கள் இருக்கின்றன. நாங்கள் நம்புகிறோம் அதனால் அத்தனையும் சரி, நாங்கள் நம்பாததால் அத்தனையும் பழுது என்பது சரியான ஒப்பீடல்லவே.

குர்ஆனில் பொய்யான உவமைகள், மிகைப்படுத்தல்கள் இருக்கிறது என்கிறார்! இதை இவர் நிரூபிக்க வேண்டும். நாங்கள் நம்புகிறோம் அதனால் சரி என்று நான் இதுவரை விவாதிக்கவில்லை! முடிந்தளவுக்கு அறிவுபூர்வமாகத்தான் நமது வாதங்களை எடுத்து வைக்கிறோம். பதில் சொல்ல திராணியிலாமல் சமாளிக்கக்கூட முடியாமல் ஏதாவது ஒன்றைக்கூறி எமது வாதத்தை நிலை நாட்ட முற்படுவோம் என்ற குருட்டுச்சிந்தனையில் உதித்த முத்துக்கள்தான் இவை. எங்கள் நம்பிக்கை சரியாக உள்ளது என்பதால் வாதிக்கிறோம். தவறு என்பவர்கள்தான் இது எங்கள் நம்பிக்கை என்று ஒதுங்கிவிடுவர்! நாம் அவ்வாறு சொல்லவுமில்லை! செய்யவுமில்லை!

உயர்ந்த தரமுள்ள படைப்புகள் பாமர மக்களை விட்டு விலகும், ஆனால் குரான் அப்படியல்லாமல் உயர்ந்த தரமாகவும், பாமர மக்களுக்கு அணுக்கமாகவும் இருக்கிறது என்கிறார் நண்பர். ஒருவருக்கு ஒன்று எளிமையாய் இருப்பதும் கடினமாய் இருப்பதும் அதில் அவர் காட்டும் ஈடுபாட்டிலேயே இருக்கிறது. குறளில் எளிமையனவையும் இருக்கின்றன. கடினமானவையும் இருக்கின்றன. இது எல்லா இலக்கியங்களுக்கும் பொதுவானதுதான். குரானும் இதற்கு விதி விலக்கில்லை.

ஒன்றின் மீதுள்ள ஈடுபாட்டினால் விளங்குவது என்பதற்கும் சாதாரணமாக விளங்குவதற்குமிடையில் வித்தியாசம் இருக்கிறது. குர்ஆனை விளங்குவதற்கு எந்த ஈடுபாடும் தேவையில்லை! குர்ஆன் மூலம் கவரப்பட்டவர்கள் அதில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்ததில்லை! கவரப்பட்ட பின்புதான் அதில் ஈடுபாடு காட்டினர்! இந்த வித்தியாசம் கூட சென்கொடிக்கு விளங்கவில்லை. குறளில் எளிமையானது இருந்தால் எடுத்துக்காட்டுங்கள் திருக்குறள் தெரியாத நன்கு தமிழை மட்டும் தெரிந்திருக்கும் ஒருவரிடம் போய் கேட்போம். அவர் அதன் கருத்தை சொல்கிறாரா இல்லையா என்று பார்ப்போம்!

அரபு தெரிந்த ஆனால் குரான் தெரியாத குரான் குறித்து அறிமுகமில்லாத ஒருவரிடம் குரானை வாசித்துக்காட்டி பொருள் கூறச்சொன்னால் அது அவருக்கு கடினமாகத்தான் இருக்கும். ஏன் அரபு தெரிந்த முஸ்லீம்களுக்கு கூட விரிவுரைகள் இல்லாமல் குரானை விளங்கிக் கொள்வது கடினம் தான்.

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் இருந்த நபித்தோழர்கள்  என்னவோ  இதை பின்பற்றுவதற்காக வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல் பேசுகிறார். குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் குர்ஆன் என்னவென்று தெரியாதவர்கள்தான் அதன் போதனையை கேட்டு இஸ்லாத்தை தழுவினர். இவருடைய வாதத்தில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை. இக்காலத்தில் கூட அதுதான் நிலை! வேண்டுமென்றால் பரீட்சித்துப்பார்க்கலாம். ஒரு காலத்தில் விரிவுரை அவசியம் என்ற கருத்து நிலவியது. இப்போதும் உள்ளது! இது தேவையில்லை என்றுதான் நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். தமிழர்களுக்கே தேவையில்லை எனும் போது அரபிகளுக்கு தேவையா?

அவ்வளவு ஏன்? முகம்மது குரானை கூறிக்கொண்டிருக்கும் கால கட்டங்களில் கூட மக்களுக்கு புரியாத இடங்களில் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். முகம்மதுவும் விளக்கியிருக்கிறார். அது ஹதீஸ்களாக பதிவு செய்யப்பட்டும் இருக்கிறது. மட்டுமல்லாது முஸ்லீம்கள் எல்லோருக்கும் குரானும் அதன் கருத்தும் பரவலாக்கம் செய்யப்பட்டிருப்பது போல், தமிழர்கள் அனைவருக்கும், குறளும் அதன் கருத்தும் பரவலாக்கம் செய்யப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவைகளையெல்லாம் தெரிந்து கொண்டே பாமரர்களுக்கு புரியும்படி இருக்கும் இலக்கியம் குரான் என்பது பரிசீலனைய்ற உயர்வுனவிற்சியாக மட்டுமே இருக்க முடியும்.

இவர் கொஞ்சம் கூட சிந்தனையற்றவராகத்தான்  இத்தொடர் முழுவதையும் எழுதியிருக்கிறார். முகம்மது நபியிடம் விளக்கம் கேட்டவர்கள் அர்த்தம் புரியாமல் கேட்டார்களா? அர்த்தம் புரிந்ததால்தான் இதுக்கு என்ன விளக்கம் என்று கேட்டார்கள். ஒரு பொருளின் விளக்கத்தை கேட்பதற்கும் அதன் அர்த்தத்தை கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு! அரபு தெரியாத முஸ்லிம்களுக்கு அதன் கருத்துடன்தான் பரவ விட வேண்டும். அரபு தெரிந்த முஸ்லிம்களுக்கு இது தேவையில்லை! ஆனால் திருக்குறள் தமிழில் இருந்தாலும் அதற்கு தமிழிலேயே விளக்கம் கூற வேண்டும். வேற்றுமை புரிகிறதா? இவர் பரிசீலிக்கும் லட்சணம் இதுதான்! இதற்குள் எமக்கு பரிசீலனை அற்றவர்கள் என்ற பட்டம் கொடுக்கிறார்!

இவர் குறிப்பிடும் முரண்பாடோ, குறளோ எந்த வகையிலும் குர்ஆனுக்கு பொருந்தாது என்பதை இரண்டாவது தடவையும் நிரூபித்துள்ளோம். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! நீண்ட நாள் இடைவெளியில் யோசித்து எழுதியும் பலனில்லை. குர்ஆனின் சவாலுக்கு பதில் எனும் தொடரில் இவர் மதவாதிகளே! முஸ்லிம்களே! பதில் சொல்லுங்கள்! சிந்தியுங்கள்! என்று முழங்கியவர்  இதில் சுருதி இறங்கி அடக்கி வாசிப்பதை இரண்டையும் ஒப்பிடும் போது புரிந்து கொள்ளலாம்.

இனியாவது முயற்சிப்பாரா? ஆவலுடன்....!

இவரது சப்பைக்கட்டு தொடரும் வரை சவுக்கடியும் இடி போல் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: குர்ஆன் விடுக்கும் சவாலை விரைவில் ஏற்றுக்கொள்ளுமாறு அதற்கு பதிலளிக்குமாறு அவரது தளத்தில் நம் சகோதரர்கள் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்துங்கள்.




Wednesday, March 23

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே 

தொடர்-17


பிர்அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

இதுவரையும் திருக்குர்ஆனில்  என்னென்ன அறிவியல் சான்றுகள் இருப்பதாக முஸ்லிம்கள் குறிப்பிடுகின்றனரோ  அவற்றில் சிலவற்றை மட்டும் மறுப்பு என்ற பேரில் செய்த திருகுதாளங்களை சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த தொடரில் பிர்அவ்ன் சம்பந்தமாக எடுத்து வைக்கும் வாதங்களையும் அதற்கான நமது விளக்கத்தையும் பார்ப்போம்.

மூஸா நபியின் காலத்தில் பிர்அவ்ன் எனும் கொடுங்கோலன் இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி பல்வேறு அட்டூழியங்களையும் புரிந்து வந்ததாகவும் மூஸா நபி அவர்கள் பிர்அவ்னிடமிருந்து மக்களை மீட்டெடுத்ததாகவும் இறுதியில் பிர்அவ்னும் அவனது படையினரும் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் குர்ஆன் குறிப்பிடுகிறது. இதற்கான அத்தாட்சியாக பிர்அவ்னின் உடலை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகிறான். தற்காலத்தில் ஒரு மம்மி கண்டெடுக்கப்பட்டு பல்வேறு சோதனைகளின் பின் இது இரண்டாம் ராம்செஸ் என்பவனின் உடல் என்றும் அவனைத்தான் குர்ஆன் பிர்அவ்ன் என்றும் குறிப்பிடுவதாக மாரிஸ் புகைல் என்பவர் குறிப்பிடுகிறார். அவற்றுக்கு எதிராக  செங்கொடி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு முன் இது பற்றிய சரியான நிலைப்பாடு என்னவென்பதை விளக்க வேண்டும்.

இரண்டாம் ராம்செசின் உடல்தான் பிர்அவ்ன் என்று அல்லாஹ்வோ அல்லது முஹம்மத் நபி (ஸல்) அவர்களோ உறுதிப்படுத்தவில்லை. அவ்வாறு உருதிப்படுத்தியிருந்தால்தான் இது பிர்அவ்னின் உடல் இல்லை. எனவே குர்ஆன் தவறாக கூறியிருக்கிறது என்று கூற முடியும். இரண்டாம் ராம்செசின் உடல் குர்ஆன் குறிப்பிடும் பிர்அவனுடையது இல்லை என்றால் கூட குர்ஆன் தவறு என்று குறிப்பிட இயலாது. குர்ஆன் உறுதிப்படுத்திய எந்த விடயமும் தவறல்ல என்பதை கடந்த தொடர்களில் நிரூபித்துள்ளோம். இரண்டாம் ராம்செஸ் பிர்அவ்ன் இல்லை ஆயினும் இனிமேல் கண்டுபிடிக்கப்படும் என்றால் கூட அது குர்ஆனுக்கு மாற்ரமாகவோ அதை பொய்ப்பிக்கும் விதமாகவோ அமையாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாம் ராம்செஸ்தான் குர்ஆன் குறிப்பிடும் பிர்அவ்ன் என்பதற்கு அதை ஆராய்ந்த மாரிஸ் புகைல் என்பவர் சாட்சியம் அளிக்கிறார். அதில் ஒன்றாக இவரது உடலில் உப்பு படிந்திருப்பதை ஆதாரமாக காட்டுகிறார். இதை மறுக்கும் செங்கொடி
மாரிஸ் புகைல் என்றொரு பிரெஞ்சு மருத்துவர், சவூதி அரசரின் தனி மருத்துவராக பணியாற்றியவர். குரானின் அறிவியல் பார்வை என்ற நூலை எழுதியவர். இவர் எகிப்து அரசின் அனுமதியுடன் மேர்நெப்தாவின் மம்மியை ஆராய்ந்தார். ஆராய்ந்து இது நீரில் மூழ்கி இறந்ததற்கான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தார். அதற்கு அவர் கொடுத்த ஆதாரம் அந்த மம்மியின் உடலில் உப்புத்தன்மை இருந்தது என்பதுதான். ஆனால் உடலை மம்மியாக பதப்படுத்த நேட்ரான் எனும் உப்புத்தான் அந்தக்கால மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

என்று சொல்கிறார். மம்மியை பதப்படுத்த நேர்ரோன் எனும் உப்பு பயன்படுத்தியதாக கூறுகிறார். ஆனால் குறிப்பிட்ட அந்த மம்மியின் உடலிலும் நேர்றான் உப்புத்தான் படிந்திருந்ததா? என்பதை சேர்த்துக்கூறியிருந்தால் அனைவருக்கும் புரிந்திருக்கும். பொதுவாக மம்மியின் உடல்கள் கல்லறைகளிளிருந்துதான் கண்டெடுக்கப்படும். ஆனால் இது, பள்ளத்தாகில்லிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே இது கடலில் வீசப்பட்ட மம்மியாகத்தான் இருக்க முடியும். மேலும் என்னதான் செயற்கையாக பாதுகாத்து வைத்திருந்தாலும் இயற்கையாக பாதுகாத்து வைக்கும் செயற்பாட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த மம்மி அதிகம் சிதையாமல் இருந்தது கூட ஒரு சான்றாக எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமன்றி கடலில் ஒரு சடலம் இருந்தால் அது மீன்களுக்கு இரையாகி அட்ரஸ் இல்லாமல் போயிருக்கும். ஆனால் இதுவோ நீண்ட காலமாக கடலுக்குள் இருந்தும் அப்படி எந்த சிதைவும் ஏற்படவில்லை.

அடுத்து இரண்டாம் ராம்செஸ் என்பவர் 90 ஆண்டுகாலம் வாழ்ந்ததாகவும், மூட்டு வழியால் இறந்ததாகவும் குறிப்பிடுகிறார். மம்மிக்களின் வரலாற்றில் பலரும் பலவாறு கூறுவார். இதற்கு உதாரணமாக இரண்டாம் ராம்செஸ் பல் வலியின் காரணமாக இறந்ததாகவும் ஒரு இடத்தில் குறிப்பிடுகின்றனர். எது உறுதியானது என்பதை கூற முடியாது. ஏனெனில் இதனை கூறுவதென்றால் அக்காலத்தில் இருந்து கிடைக்கும் ஆதாரத்தின் அடிப்படையில்தான் கூற வேண்டும். இவை வரலாற்றிற்கு முற்பட்டவை. இவற்றை ஒரு ஊகமாகத்தான் கூற முடியும்! உறுதிப்படுத்த முடியாது.

அடுத்து, ஆரம்பத்திலேயே அந்த சடலத்தை வெளிப்படுத்தியிருந்தால் மனிதர்களால் அதை பாதுகாத்து வைக்க முடியாமல் போயிருக்கும் என்பதால் மனிதர்கள் அந்த தொழில்நுட்பம் தெரிந்ததும் இறைவன் வெளிப்படுத்தியிருக்கிறான் என்பது மோசடியானது. ஏனென்றால் செத்த உடல்களை மம்மிகளாக பதப்படுத்தி வைப்பதை மனிதர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே செய்துவருகின்றனர். அவர்கள் பதப்படுத்திய உடலும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

செத்த உடல்களை பாதுகாத்து வைத்திருக்கும் தொழில்நுட்பத்தை அக்கால மக்கள் அறிந்துவைத்திருந்தனர் என்பது உண்மைதான். ஆனால் அவனை கடலில் மூழ்கி இறந்ததும் அவனது ஒட்டுமொத்த படையினர் மட்டுமன்றி அந்த சாம்ராஜ்ஜியமே அழிந்துவிட்டது! பின்னர், யார் அவனுடைய உடலை பாதுகாத்து வைத்திருப்பது?. மேலும் கடலினுல்லிருந்து வெளிப்பட்டிருந்தால் சில நாட்களிலேயே அழுகிப்போயிருக்கும்.

இதில் நகைக்கக்கூடிய செய்தி என்னவென்றால், இவரின் வெற்றித்தூண் எனும் கல்வெட்டில் கிமு 1207ம் ஆண்டில் கானான் மீது படையெடுத்து அதை வென்றதாக பொறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மேர்நெப்தாவின் ஆட்சியில் அவரால் துன்புறுத்தப்பட்டு மூசாவால் தன்னை பின்பற்றியவர்களுடன் செங்கடலை பிளந்து மறுகரையில் குடியிருப்பு உருவாக்கப்பட்டதோ அதுதான் கானான் பிரதேசம் எனப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கடலில் மூழ்கி இறந்துபோன மன்னன், தான் உயிருடன் இருக்கும்போது அந்தப்பகுதியை போரிட்டு வென்றதாக கல்வெட்டு நட்டிருக்கிறான்.

மூஸா நபி கானான் பிரதேசத்துக்குத்தான் குடியேறினார் என்று குர்ஆன் சொல்லவில்லை! அப்படி சென்றிருந்தாலும் இதில் நகைப்புக்கு ஒன்றுமில்லை. மன்னன் இறந்துவிட்டான். அவனது சேனைகளும் ஒழிந்துவிட்டனர். அவனுடைய நாடே அவனிடம் இல்லையெனும் போது அவன் வென்ற நாட்டில் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்?

இவற்றின் மூலம், கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் ராம்செசின் மம்மி பிர்அவ்னுடையதாக இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறு உள்ளது. அப்படி இல்லையென்றால் கூட இதை வைத்துக்கொண்டு குர்ஆனை மறுக்க இயலாது.

வளரும் இன்ஷா அல்லாஹ்    

Saturday, March 12


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர்-16

கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

கருவரை குறித்த எமது விளக்கத்தை ஆரம்பிக்கும் முன் ஒரு விடயத்தை தெளிவு படுத்தியாக வேண்டும். குர்ஆனை பொறுத்தவரை அதன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழமான பல கருத்துக்களை கொண்டவை. அதிலுள்ள சில அத்தாட்சிகளை காலம்தான் நன்றாக விளக்கும். அக்காலத்திலுள்ளவர்களால்தான் நன்றாக புரிந்துகொள்ள முடியும். இதனால் சில விஞ்ஞான தகவல்களை அறியாத காலத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்பில் சில குறைபாடுகள் காணப்படும். நவீன காலத்தில் அதை இனங்கண்டு சரியான அர்த்தத்தை கொடுக்க இயலும். இதனால்தான் மொழிபெயர்ப்புகளிடையே மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் மூலத்தில் எந்த மாற்றமோ கருத்த திரிக்கும் மாற்றமோ இருக்காது. அப்படி பழைய மொழிபெயர்ப்புகள் இன்னும் திருத்தப்படாமல் வெளிவந்து கொண்டிருப்பதால் அதை தூக்கிப்பிடித்துக்கொண்டு வாதத்தை நிலை நாட்டுவது கயமைத்தனம். இந்த வேலையைத்தான் செங்கொடியும் கையாண்டு வருகிறார். எந்த இடங்களிலெல்லாம் புதிதாக வெளிவந்த மொழிபெயர்ப்புகளாய் பயன்படுத்த இயலுமோ அங்கு எல்லாம் பயன்படுத்திவிட்டு, பல இடங்களில் பழைய மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தி பார்த்தீர்களா? குர்ஆனில் எப்படி இருக்கிறது என்று இதனால்தான் இப்போது இப்படி மாற்றிவிட்டார்கள் என்று நைஸாக நழுவிச்செல்கிறார்.

முதன்முதலாக 'அலக்' எனும் சொல்லின் பொருளுக்கான மறுப்பை (?) ஆரம்பிக்கிறார்.

முதலில் அலக் எனும் வார்த்தையை எடுத்துக்கொள்வோம். அநேக மொழிபெயர்ப்புகளில் இந்த அலக் எனும் அரபு வார்த்தை மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் கருவுற்ற சினைமுட்டை என்று மொழிபெயர்த்திருக்கிறார். பல்நாட்டு அறிஞர்களும் சரிபார்க்கும் வாய்ப்பை பெற்றதாக நண்பர்கள் கருதும் யூசுப் அலி என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் உறைந்த இரத்தக்கட்டி (clot of congealed blood) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக் என்பவர் இந்தச்சொல்லுக்கு அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் விளக்கங்கள் சொல்கிறார். ஆக அலக் எனும் இந்த அரபுச்சொல்லுக்கு எதுதான் சரியான பொருள்? பொதுவாக பழைய மொழிபெயர்ப்புகளில் இரத்தக்கட்டி என்றுதான் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கர்ப்பப்பையில் கருவானது இரத்தக்கட்டியாக இருக்கிறதா? எனும் அறிவியல் ரீதியான கேள்வி எழுந்ததும் அதன் பொருள் அட்டைப்பூச்சி, தொங்கும் பொருள் என்றெல்லாம் பயணப்பட்டு நவீன அறிவியலை உள்வாங்கிக்கொண்டு தற்போது கருவுற்ற சினைமுட்டையாக ஆகியிருக்கிறது. இது தான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்ட அறிவியலின் லட்சணம்.

இதற்கு சகோதரர் பி.ஜே அவர்கள் மொழிபெயர்ப்பில் தெளிவான விளக்கம் உள்ளது. அதையே இதற்கு பதிலாக முன்வைக்கிறேன்.

இவ்வசனங்களின் மூலத்தில் 'அலக்' எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இச் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. இரத்தக்கட்டி, தொங்கிக்கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டது என்றெல்லாம் பொருள் உண்டு. இந்த இடத்தில் இரத்தக்கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில் இரத்தக்கட்டி என்று ஒரு நிலை இல்லை. தொங்கிக்கொண்டிருக்கும் நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் மனிதனின் மூலத்தை கூறும் போது அது ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும். தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.
மனிதன் உருவாவதற்கு ஆணின் உயிரனு, பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவுற்ற சினை முட்டையாக ஆக வேண்டும். இதுதான் மனிதப்படைப்பின் முதல் நிலை. ஆணின் உயிரணு மட்டுமோ, பெண்ணின் சினை முட்டை மட்டுமோ மனிதனின் முதல் நிலை அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொள்வதால் உருவாகும் பொருளிலிருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான்.
இதனால் தான் சுருக்கமாக கருவுற்ற சினை முட்டை என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம். இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இதன் நேரடிப்பொருள். இதன் கருத்துதான் கருவுற்ற சினை முட்டை. (பார்க்க: பி.ஜே தமிழாக்கம் 365ஆவது குறிப்பு. பக்கம்:1320 ஏழாவது பதிப்பு)

அவன் செலுத்தப்படும் விந்த்தின் சிறு துளியாக இருக்கவில்லையா? பின்னர் கருவுற்ற சினை முட்டையானான். பின்னர் (இறைவன்) படைத்துச் சீராக்கினான். அவனிலிருந்து ஆண் பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்.(75:37-39)

இதில் அறிவியலோடு ஒப்பிடும் படிநிலைகள் என்று எதுவுமில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான் எனும் வசனமும், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாகச் செய்தோம் எனும் வசனமும் ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகிறது. அது என்னவென்றால், கரு உருவாகி ஆரம்பக்கட்ட வளர்ச்சிகள் அடைந்தபின்பு குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் தான் அந்தக்கரு ஆணா? பெண்ணா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது தான். ஆனால் அறிவியல் இதை திட்டமாக மறுக்கிறது. உடலுறவு முடிந்து ஆணின் உயிரனுவானது பெண்ணின் சினை முட்டையை எந்தக்கணத்தில் துளைத்து நுழைகிறதோ அந்தக்கணத்திலேயே கருவானது ஆணா? பெண்ணா? என்பது தீர்மானமாகிவிடுகிறது. அதுமட்டுமன்றி அனைத்து விசயங்களும் தோலின் நிறம், அங்கங்களின் அமைப்பு, உயரமா? குள்ளமா? என்பன போன்ற அனைத்து செய்திகளும் டிஎன்ஏ ஏணிகள் மூலம் கருவுக்கு கடத்தப்பட்டு இதன் அடிப்படையிலேயே கருவின் வளர்ச்சி நடைபெறுகிறது.

இது மேற்கண்ட வசனத்திற்கெதிராக எழுப்பிய செங்கொடியின் கேள்வி. அதாவது ஆண், பெண் என்ற பால் நிர்ணயம் ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு சினைமுட்டையை அடைந்ததும் தீர்மானிக்கிறது. ஆனால் குர்ஆனோ கரு வளர்ச்சியடைந்த பின்தான் இலிங்க நிர்ணயம் நடைபெறுவதாக குறிப்பிடுகிறது என்கிறார். குர்ஆன் அப்படி குறிப்பிடவில்லை. இவர் எடுத்த மொழிபெயர்ப்பில்தான் அவ்வாறுள்ளது. 'அவனிலிருந்து' என்று மொழிபெயர்க்கப்பட வேண்டிய இடத்தில் 'அதிலிருந்து' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அங்கு மின்ஹு என்பது அவனிலிருந்து என்பதைத்தான் குறிக்கும். எனவே குர்ஆன் சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளது.

குரானின் கருவளர்ச்சி நிலைகளோடு அறிவியலை ஒப்பிட்டால் அதுவும் ஒப்பிடக்கூடிய அளவில் இல்லை. அதிலும் முதலில் தசைப்பிண்டம் என்றும் பின்னர் மாமிசம் என்றும் இரண்டு வகையாக குறிப்பிடுவதும் பொருத்தமாக இல்லை. அறிவியல் கருவளர்ச்சியை பின்வருமாறு வகைப்படுத்துகிறது. இரண்டாவது மாதத்தில் ஆண் பெண் இன உறுப்புகள், மூன்றாவது மாதம் ஜீரண உறுப்புகள் எலும்புகள், நான்காவது மாதம் தோல் சுமாரான வடிவம் கண்கள் விரல்கள், ஐந்தாம் மாதம் தலைமுடி நகம் பல்முளைகள் முதுகெலும்பு சீராதல், ஆறாவது மாதம் கண்களில் பார்வை நாவில் ருசி, ஏழாவது மாதம் மூளை சீரடைதல் நரம்புகள் என்று தொடர்ச்சியான வளர்ச்சியில் எட்டு ஒன்பதாவது மாதங்களில் எல்லா உறுப்புகளுமே சீரான இயக்கத்திற்கு வந்து இறுதியில் வெளியேறுகிறது

இதிலும் வழக்கம் போல இவரது திருவிளையாடலை காட்டியிருக்கிறார். குர்ஆன் குறிப்பிடும் கருவளர்ச்சி நிலை அறிவியலோடு ஒத்துவரவில்லை என்றால் அதற்குப்பதிலாக அறிவியல் என்ன கூறுகிறது என்று குறிப்பிடாமல் அதாவது  சினை முட்டை கருவுற்றதிலிருந்து என்ன நடக்கிறது என்று குறிப்பிடாமல் அதைத்தாண்டி இரண்டு மாத்தத்தின் பின்னர் உள்ள நிலையை குறிப்பிட்டுள்ளார்.  அதை குறிப்பிட்டால் மாட்டிக்கொள்வோம் என்று மழுப்பியிருக்கிறார்.

அடுத்து 32:9ம் வசனத்தை சுட்டிக்காட்டி இதில் அல்லாஹ் முதலில் செவியையும், பார்வைகளையும் ஏற்படுத்தினான் என்று ஒரு வரிசையை குறிப்பிட்டுள்ளான். இதை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் இது சரியாகத்தான் உள்ளது குர்ஆன் இறைவேதம்தான் என்று வாதிடுகின்றனர். ஆனால் அதன் பின்னர் இதயங்கள் என்று வருகிறது இதை தவிர்த்துவிட்டார்கள் மேலும் குர்ஆன் இதயங்கள் என்று கூறுகிறது என்ன இரண்டு இதயமா உள்ளன? என்று கேட்கிறார்.

பின்னர் அவனைச்சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்கு செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். (32:9)
இந்த இடத்தில் உள்ளங்கள் என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் ஜான் ட்ரஸ்டினர் இதயங்கள் என்று தமிழாக்கம் செய்துள்ளனர். அது தவறு! அதை வைத்துக்கொண்டு வாதாடுகிறார். உள்ளங்கள் என்பதே பொறுத்தமானதும் சரியானதுமாகும்.

அடுத்து குரான் 13:8 வசனத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கிறது என்று ஒரு வரி வருகிறது. அதாவது மனிதனுக்கு கர்ப்ப காலம் பத்து மாதங்கள் என்றால் ஏனைய விலங்குகளுக்கும் இதே காலஅளவு இருப்பதில்லை வெவ்வேறு கால அளவுகளில் அவை பிரசவிக்கின்றன. இதைதான் அந்த வரியில் முகம்மது குறிப்பிடுகிறார். ஆனால் இன்று அந்த வரிகளுக்கு புதிய பொருளை கற்பிக்கிறார்கள். எப்படி என்றால் மனித உடல் அன்னியப் பொருட்களை உடலுக்குள் அனுமதிப்பதில்லை. கண்களில் ஒரு தூசு விழுந்துவிட்டால் கண்கள் ஒரு உருத்துதலை ஏற்படுத்தி கண்ணீரை சுரந்து அதை வெளியேற்றுவதற்கு முயற்சிக்கிறது. மூச்சுக் குழாயில் ஒரு துரும்பு சென்றுவிட்டால் தும்மலின் மூலம் அதை வெளியேற்ற முயற்சிக்கிறது. ஆனால் ஒரு அன்னியப்பொருளான கருவை பத்து மாதங்களாய் உடலுக்குள் தங்க அனுமதித்து அதன் பின்பே வெளியேற்ற முயற்சிக்கிறது. இன்றைய அறிவியலான இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது என்கிறார்கள். இது முழு உண்மையல்ல. எப்படியென்றால் நமது உடல் எல்லா அன்னியப் பொருட்களையும் எதிர்ப்பதில்லை. உடலுக்கு தீங்கு விளைவிப்பதை மட்டும் தான் எதிர்க்கின்றன. நாம் உண்ணும் உணவு உடலுக்கு அன்னியப் பொருள் தான் ஆனால் அதிலுருந்து தான் தனக்கு தேவையான சக்தியை உடல் பெற்றுக்கொள்கிறது. காற்று உடலுக்கு அன்னியப் பொருள்தான் ஆனால் அதிலிருந்து தான் தனக்கு தேவையான ஆக்ஸிஜனை உடல் பெற்றுக்கொள்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டால் வெளியிலிருந்து அன்னியப்பொருட்களான மருந்துகள் உட்செலுத்தப்படுகின்றன, உடல் அவற்றை ஏற்றுக்கொள்கிறது. செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுகின்றன அவைகளையும் உடல் சில நிபந்தனைகளுக்குட்பட்டு ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வாமை என்றொரு நோய் உண்டு, உடலுக்கு தீங்கு செய்யாத பொருட்களைக் கூட தீங்கு செய்பவை என்று தவறாக கருதிக்கொண்டு உடல் எதிர்ப்பதற்குத்தான் ஒவ்வாமை என்று பெயர். ஆக உடல் தீங்கு செய்யும் அன்னியப் பொருட்களை மட்டுமே எதிர்க்கிறது. அந்த வகையில் கரு ஒரு அன்னியப் பொருளும் அல்ல. ஒரே மனித இனத்தின் எதிர்பாலின் உயிரணுவை தன்னுடைய அண்டத்துடன் இணைத்துக்கொள்வதை அன்னியப் பொருள் என்று எப்படி வகைப்படுத்த முடியும்?

இது அவரின் அடுத்த கேள்வி. அன்னிய பொருட்களை உடல் உறுப்புகள் வெளியேற்றுகிறது என்றால் உணவு, ஒட்சிசன், மருந்துகள் போன்றவை அன்னிய பொருட்கள் இல்லையா? அதை ஏன் வெளியேற்றவில்லை. ஒரே மனித இனத்தின் உயிரனுவை தன்னுடைய அண்டத்துடன் இணைத்துக்கொள்வதை எப்படி அன்னியப்பொருள் என்று கூற முடியும் என்கிறார். உணவு, சுவாசம் இன்னும் இவர் குறிப்பிடும் அவ்வன்னியப்பொருள்கள் உடலுக்குத்தேவையானவை. ஒரு ஆணின் உயிரணுவினால் அதற்கு என்ன பயன் இருக்கிறது? அது தேவையானது என்றால் பயன்படுத்தியிருக்க வேண்டுமே! ஏன் பாதுகாத்து ஒரு குறிப்பிட்ட நாட்களின் பின் கட்டாயமாக வெளியேற்றுகிறது? உணவின் போசனைக்கூறுகளை எடுத்து கழிவை வெளியேற்றுவது போன்றா கருவை வெளியேற்றுகிறது? தனக்கு கிடைக்கும் போசனைகளை அதற்கும் சேர்த்து ஷேர் செய்து கொள்கிறது! இது எப்படி சாத்தியம்? கருவை சுமந்து ஒரு பயனும் பெறாமல் அதுவும் குறிப்பிட்ட நாள் வரை தனது கருவரைக்குள் பாதுகாத்து வைத்திருந்து ஏன் வெளியேற்றுகிறது? இதற்கு இன்றைய அறிவியலும் பதில் சொல்லவில்லை! இதை அன்னியப்பொருள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது? உணவுப்பொருட்களுடன் இதை எவ்வகையிலும் கம்பேர் பண்ண முடியாது!

அடுத்து குரான் 39:6 வசனத்தில் சொல்லப்படும் மூன்று இருள்கள் என்பது எதை குறித்து முகம்மது சொன்னார் என்பது தெரியவில்லை (தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்) ஆனால் அந்த மூன்று இருள் என்பது தாயின் அடிவயிறு, கர்ப்பப்பையின் சுவர், குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் என்று அறிவியல் விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால் முகம்மது அந்த மூன்று இருள்கள் என்பதை இப்படி அறிவியல் பூர்வமாக கூறவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். எப்படி என்றால் இதை அறிவியல் விளக்கமறிந்து கூறியவர் இதே வசனத்தில் அவன் உங்களுக்காக கால்நடைகளிலிருந்து எட்டு ஜோடி ஜோடியாக படைத்தான் எனும் பொருளற்ற வசனத்தை சொல்லியிருக்க முடியாது. கால்நடைகளில் எட்டு ஜோடிகள் தான் இருக்கின்றனவா? ஆக ஒரே வசனத்தின் மேல் வரி அர்த்தமற்றதாகவும், கீழ் வரி அறிவியல் பூர்வமாகவும் ஒருவர் கூறியிருக்க முடியாதல்லவா?

39:6ம் வசனம் மூன்று இருள் எனக்கூறுவது எது என்று எனக்குப் புரியவில்லை! அதை முஸ்லிம்கள் தாயின் அடிவயிறு, கர்ப்பப்பையின் சுவர், குழந்தையை சுற்றியிருக்கும் சவ்வுப்படலம் என்று கூறுகின்றனர் என்று முடித்திருந்தால் பரவாயில்லை. ஆனால் இதயும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக முகம்மது நபி அதை அறிவியல் பூர்வமாக கூறவில்லை என்கிறார். உண்மைதான். முகம்மது நபி அப்படி கூறவுமில்லை; அவரால் அப்படி கூறவும் முடியாது! ஏன்? குர்ஆனை அவர் இயற்றவில்லை. இறைவனிடமிருந்துதான் வந்தது. உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு ஜோடியைப்படைத்தான் என்பது பொருளற்ற வசனம் என்கிறார். வசனம் விளங்காவிடின் அது பொருளற்றதாக ஆகி விடுமா?
அந்த வசனத்தை முழுமையாகப்படித்தால் அதன் அர்த்தம் புரிந்துவிடும். மனிதனைப்படைக்க ஒரு ஜோடிதான் இறைவன் படைத்தான். அதுபோல்தான் கால் நடைகளும் என்று கூறுகிறான். பின்னர் ஏன் எட்டு என்று குறிப்பிட வேண்டும்? ஏனென்றால் கால் நடைகள் பல இருந்தாலும் நாம் உண்ணவும் பலியிடவும் பயன்படுத்துவது எட்டுவகைதான். இதைத்தான் அங்கு குறிப்பிடப்படுகிறது. இதை சிந்திக்கும் எவரும் அறிந்து கொள்வர் செங்கொடி போன்றவர்களுக்காக அடைப்பினுள் (பலியிடுவதற்காக) என்று குறிப்பிட்டிருக்கும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்