Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, December 30

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே

தொடர்-05

செங்கொடியின் நான்காம் மற்றும் ஐந்தாம் தொடர்கள் இரண்டும் ஒரே மேட்டராகவுள்ளாதால் அவ்விரண்டினதும் மறுப்பை ஒரே பாரவையில் பார்ப்போம்.

செங்கொடி இத்தொடரில் குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றிலிருந்து முக்கியமாக இரண்டு கேள்விகளை கேட்டுள்ளார். அதற்குரிய பதிலை பார்த்த பின் ஏனைய கேள்விகளை பார்ப்போம்.

முகம்மது எதன் அடிப்படையில் சமூகத்தை திரட்டினாரோ, உலகம் உள்ளவரை எந்த இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று கூறினாரோ அந்த இறைவனால் முகம்மதுவுக்கு வழங்கப்பட்டு அவரின் மேற்பார்வையில் தொகுக்கப்பட்ட குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது. இது ஏன்?
ஐயம் என்று வந்துவிட்டால் ஒப்பிட்டு பார்ப்பதற்கு முகம்மது தொகுத்த குரான் இன்று இல்லை, உஸ்மான் காலத்தில் தொகுத்தது தான் இருக்கிறது. வரிசை மாறியிருக்கும் என்பது தானே அதை அழித்ததற்கு கூறும் காரணம், வரிசை மாறினால் என்ன வசனம் அதே வசனம் தானே அழிக்கும் தேவை ஏன் எழுந்தது? வரிசையை வசன எண்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டிய அவசியமில்லை எப்படியும் இருக்கலாம். இன்று இருக்கும் குரான்களில் கூட வசன எண்களில் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் வசனத்தை ஒப்பிடுவதற்கு திடனான ஆதாரம் ஒன்றுமில்லை.

முக்கியமான விஷயத்தை செங்கொடி விளங்கவில்லை. பிரச்சனை என்று வந்து விட்டால் ஒப்பிட்டு பார்க்க நபிகள் நாயகம் காலத்தில் இருந்த குர்ஆன் இப்போது இல்லை என்ற வாதம் அவரது அறியாமையால் ஏற்படுகிறது.
உஸ்மான் (ரலி) காலத்தில் எது குர்ஆனாக இருந்ததோ அது தான் நபிகள் நாயகம் காலத்திலும் குர்ஆனாக இருந்தது. அதில் எந்த ஒரு வசனமும் விடுபடவில்லை. அதிகரிக்கப்படவில்லை. இதை அவர் அறியவில்லை.அல்லது அறிந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை.
மேலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள வசனங்களின் வரிசை அமைப்பு நபிகள் நாயகம் காலத்தில் உள்ள்து போலவே உஸ்மான் காலத்தில் பிரதி எடுக்கப்பட்டதிலும் இருந்தது. இதையும் அவர் அறியவில்லை.
இதை புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணம் கூறலாம். ஒருவர் பத்து சிறு கதைகளை எழுதுகிறார். அவை தனித்தனியாக இருந்தன, பின்னர் வந்தவர்கள் அந்தக் கதைகளை அனைத்தையும் ஒரே நூலாக வெளியிடுறார்கள். அப்போது அவர்கள் எந்த கதையை முதலில் வைப்பது எதை இரண்டாவதாக வைப்பது என்று தாங்களெ முடிவு செய்து அந்த தொகுப்பை வெளியிடுகின்றனர். இவர்கள் வெளியிட்டதில் எதுவும் கூடியும் இருக்காது. உறைந்தும் இருக்காது. கதாசிரியர் எதை முதலில் வைக்க வேண்டும் என்று சொல்லாததால் இது கதாசிரியரின் எண்ணத்துக்கு எதிரானது அல்ல. இது பாதுக்காப்புக்கும் எதிரானது அல்ல.
அது போல் தான் தனித்தனியாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் நபிகள் நாயகம் அவர்கள் தொகுக்கச் செய்தனர். ஒவ்வொரு அத்தியாயத்தையும் மனனம் செய்வித்தனர்.
இதில் அபூபக்கர் செய்தது என்ன? குர்ஆனை எழுதி வைத்திருந்த பலர் இருந்தனர். அவர்களில் சிலர் சில வசனங்களை அல்லது அத்தியாயங்களை எழுதாமல் விட்டிருந்தனர். குர்ஆன் வசன்ம் அருளப்படும் போது அவர்கள் ஊறில் இல்லாமல் போவது போன்ற காரனங்களால் இது ஏற்பட்டது. அப்படி எழுதிய அனைவரின் பிரதிகளையும் ஒப்பிட்டு யார் யாருக்கு எது விடுபட்டதோ அதை மற்றவர்களின் பிரதியை துணையாகக் கொண்டும் மனனத்தை அடிப்படியாகக் கொண்டும் ஒரு பிரதியாக் ஆக்கப்பட்டது, இதனால் குர்ஆனில் எதுவும் அதிகமாகவில்லைல். குறையவும் இல்லை.
இவர்கள் நபிகள் நாயகம் காலத்தில் எது குர்ஆனாக இருந்ததோ அதை பாதுக்காக்கும் வேலையைத் தான் செய்தனர்.
ஆனால் இவர்கள் அத்தனை அத்தியாயங்களையும் தனித்தனியாக் திரட்டினார்கள். தனித்தனியாக இருந்த பிரதியைத் தான் உஸ்மான் வரிசைப்படுத்தினார். இதை விளங்காது போல் திசை திருப்பியுள்ளார்.

வசனங்களை மாற்றவோ புதிதாக சேர்க்கவோ கிடையாது. அபூபக்கர் (ரலி) தொகுத்ததும் உஸ்மான் (ரலி) தொகுத்ததும் ஒன்று தான் என்பதால் முஹம்மது நபியவர்கள் எழுதச் சொன்ன குர்ஆனுக்கும் உஸ்மான் (ரலி) தொகுத்த குர்ஆனுக்கும் எந்த வேற்றுமையும் கிடையாது.

ஏனைய பிரதிகளை எரித்தது ஏன்? ஏனென்றால் பொதுவாக எந்த ஒன்றும் ஒரு ஒழுங்குமுறையில் இருந்தால்தான் நன்றாக இருக்கும். இல்லையேல் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். முஹம்மது நபி அவர்கள் குர்ஆன் வசனங்களின் வரிசையையும் அது எந்த அத்தியாயத்தில் வர வேண்டுமென்பதைத்தான் கூறினார்கள். குர்ஆனில் இது முதலாவது அத்தியாயம் இது இரண்டாவது அத்தியாயம் என்று அத்தியாயங்களின் வரிசயை கூறவில்லை. இதனால் குர்ஆனை எழுதிவைத்திருந்த நபித்தோழர்களின் ஏடுகளிடையே அத்தியாயங்களின் வரிசை வித்தியாசம் காணப்பட்டது. உஸ்மான், அக்காலத்தில் ஆட்சியாளராக இருந்ததால் அவர் எந்த அடிப்படையில் குர்ஆன அத்தியாயங்களை வரிசைப்படுத்தினாரோ அதயே ஒட்டுமொத்த சமுதாயமும் ஏற்றுக்கொண்டும் தாம் வைத்திருந்த்த பழைய பிரதியினை எரித்துவிட சம்மதித்தார்கள்.
ஒருவர் தனக்கு கிடைத்த பத்து அத்தியாயங்களை குர்ஆன் என்று குறுவார் இன்னொருவர் வேறு சில அத்தியாயங்களம் மட்டும் குர் ஆன் எனக் கூறுவார். இது போன்ற நிலை வரக்கூடாது என்றால் கஷ்டப்பட்டு அனைத்து அத்தியாயங்களையும் நபிகள் நயக்ம் காலத்தில் இருந்தது போல் திரட்டிய பின் அறைகுறையாக எழுதி வைத்திருப்பதை அழிப்பது அவசியமானதே. அழிக்கப்பட்டததில் என்ன இருந்ததோ அவை அனைத்தும் உஸ்மான் பிரத்தியிலும் இருந்தன, அவர்கள் எழுதாமல் விட்ட விஷயங்கலூம் மேலதிகாமக் இருந்தன. எரித்ததனால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதே தவிர பங்கம் ஏற்படவில்லை
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டு விட்டார்.
இது அவரின் முதலாவது கேள்விக்கான பதில்! இனி இரண்டாவது கேள்வியை எடுத்துக்கொள்வோம்.

அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் அவரின் ஆட்சிக்காலத்திற்கு பிறகு உமரிடம் வருகிறது. உமரின் ஆட்சிக்காலத்திற்குப்பின் அது உஸ்மானின் பொறுப்பில் வந்திருக்கவேண்டும். ஏனென்றால் அது வெறும் நூலல்ல, வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஆவணம். உமருக்குப்பின் அந்த ஆவணம் உஸ்மானின் பொறுப்பில் வராமல் உமரின் மகளான ஹப்ஸாவின் பொறுப்பில் போகிறது. இது ஏன்? இதனால் தான் உஸ்மானால் குரான் மீண்டும் தொகுக்கப்பட்டதா? இதன் காரணமாகத்தான் உஸ்மான் தான் தொகுத்ததை தவிர மற்றவற்றை எரித்து விட உத்தரவிட்டாரா?

இப்படி கேட்டதும் இதற்கு யரோ பதிலளித்திருக்கிறார். அதன் பின் அடுத்த தொடரில் அதற்கும் சியர்த்து பதிலளிக்கிறார். அதயும் பார்ப்போம்

அபூபக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட குரான் உமரின் காலத்திற்குப்பின் உஸ்மானிடம் வரவில்லை என்றால் அதற்க்கு, அபூபக்கர் தனக்குப்பின் உமரைத்தேர்ந்தெடுத்ததுபோல் உமர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனவே தான் அந்த குரான் உஸ்மானிடம் கொடுக்கப்படவில்லை என்று எண்ணுகிறார்கள். உமர் தனக்குப்பின் ஆட்சிசெலுத்த யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பது மெய்தான். அவர் ஒரு குழுவை அமைத்து யாரை நியமிப்பது என்பதை அந்தக்குழு முடிவு செய்யும் என விட்டுவிட்டார், அந்தக்குழுவில் தன் மகனை உறுப்பினராக்குவதற்கும் கூட மறுத்துவிட்டார். ஆனால் குரானை அந்தக்குழுவிடம் ஒப்படைத்து அடுத்துவருபவரிடம் ஒப்படைக்குமாறு பணித்திருக்க முடியும் அவ்வாறன்றி தன் மகளிடம் கொடுக்கும் அவசியமென்ன? இதை அவர் தன்னிடம் வைத்திருந்த குரானை தன் மகளிடம் கொடுத்தார் என புரிந்துகொள்ளமுடியாது. ஏனென்றால் அன்றிருந்த நிலையில் அரசியல் முதல் சமூகம் வரையான அனைத்திற்கும் வழிகாட்டியான குரான் அதுமட்டும்தான் மற்றப்படி மனப்பாடமாய் தெரிந்து வைத்திருந்தவர்கள்தான். அவர்களும் தொடர்ச்சியான போர்களினால் குறைந்துபோய் சிலரே எஞ்சியிருந்த நிலையில், ஒரே ஆவணமான குரானை முகம்மதின் மனைவி என்றாலும்கூட தன்மகளிடம் கொடுக்கும் தேவை என்ன? என்பதுதான் கேள்வி.

உமருக்குப்பின் உஸ்மானிடம் அந்த ஆவணம் செல்லாமல் உமரின் மகள் ஹப்ஸாவிடம் சென்றதற்கு காரணம் உமர் (ரலி) அவர்கள் அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்கவில்லை. அதை ஒரு குழுவிடம் நியமித்துவிட்டு நீங்கள உங்களுக்குள் கலந்தாலோசித்து ஒரு ஆட்சியாளரை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டார். இந்த குழுவின் பணி ஆட்சியாளர்களை தெர்ந்தெடுப்பதுதான். அரச ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருந்து அடுத்த ஆட்சியாளருக்கு கொடுப்பதில்லை. இவர்களிடம் இருப்பதை தனது மகளும் நபியவர்களின் மனைவியுமாண ஹப்ஸா (ரலி) யிடம் இருப்பது உகந்தது என்று உமர் (ரலி) நினைத்திருக்கக்கூடும். உமரின் காலத்தில், தொகுக்கப்பட்ட குர்ஆன் அரசுடமையாகத்தான் இருக்கிறது. இதை தனது மகளிடம் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை! குர்ஆனை மகளிடம் கொடுத்ததற்கு மகளிடம் கொடுத்தது என்று அர்த்தம் இல்லாமல் வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

அப்போ உமர் (ரலி) உஸ்மானிடம் குர்ஆன் போகவே கூடாது என்பதற்காக தனது மகளிடம் அதை கொடுத்தார் என்றா வைத்துக்கொள்வது? அப்படியென்றால் ஏன் உஸ்மானையும் ஆட்சியாளரை நியமிக்கும் முழுவில் சேர்த்தார்?. அதுமட்டுமல்ல, ஹப்ஸாவிடம் இருந்த குர்ஆனை உஸ்மான் பெற்றுக்கொண்டுதான் தொகுக்க ஆரம்பித்தார். இது அவர் மட்டும் தனியே இருந்து தொகுக்கவில்லை! அவர் ஒரு குழுவை நியமித்துத்தான் தொகுத்தார். அபூபக்கர் (ரலி) குர்ஆனை தொகுக்கும் குழுவுக்கு நியமித்த அதே ஸைத் இப்னு தாபித் (ரலி) யைத்தான் உஸ்மான் (ரலி) யும் தனது குழுவுக்கு தலைவராக ஆக்கினார். இப்படியிருக்கும்போது உஸ்மான் தொகுத்த குர்ஆனுக்கும் முஹம்மது நபி காலத்தில் எழுதிவைக்கப்பட்டிருந்த குர்ஆனுக்கும் இடையில் எந்த சந்தேகத்தயும் ஏற்படுத்த முடியாது. இவரது கேள்வி மூலம் உஸ்மான் (ரலி) யைத்தான் சந்தேகத்திற்குரியவராக மாற்றுகிறார். குர்ஆனை அல்ல!.

உஸ்மான் கேட்டவுடன் ஹப்ஸா அதை உடனே கொடுத்து விட்டார்கள் மறுக்கவில்லை. இதில் இருந்து அடுத்த ஆட்சியாளரிடம் கொடுப்பதற்காகவே அது ஹப்சாவிடம் கொடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
இனி, செங்கொடி குர்ஆனில் மனிதர்களின் கையாடல் உள்ளது என்பதற்கு எடுத்து வைக்கும் சான்றை பார்ப்போம்.
குரான் வசனம் 31:27பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாக இருந்து, கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள் எழுதிமுடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்
என்கிறது. இதே பொருளில் இன்னொரு வசனமும் 18:109 இருக்கிறது. இந்த வசனங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்வதென்ன? எழுதுவதற்கு தாள் பயன்படுகிறது அது மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது அதில் திரவமான மை கொண்டு எழுதப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால் முகம்மதின் காலத்தில் எழுதுவதற்கு தாளும் மையும் பயன்படுத்தப்படவில்லை. முகம்மது குரானை எழுதிவைப்பதற்கு அமைத்த குழு பேரீத்த மரப்பட்டைகளிலும், தோல்களிலும் தான் எழுதியதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் அதே காலத்தில் வந்த வசனமோ மரங்களை எழுதுகோல்களாகவும் கடல்களை மையாகவும் பயன்படுத்தச்சொல்கிறது. இது முகம்மது சொன்ன வசனமா? இல்லை அவர் காலத்திற்குப்பின்னர் வந்தவர்களால் சேர்க்கப்பட்ட வசனமா? இந்த ஐயத்தை எப்படிபோக்கிக்கொள்வது
இவ்வளவு நாளும் செங்கொடிக்கு இஸ்லாம் தான் சரியாகப் புரியவில்லை என்றால் இப்போது தமிழும் தெரியவில்லை. எழுதுகோலுக்கு தாள் என்று அர்த்தம் சொல்லும் முதல் தமிழ் மேதை (?) மேற்படியார்தான். எழுதுகோல் என்பது பேனாவைத் தான் குறிக்கும். 31:27ம் வசனத்தில் இடம்பெற்றுள்ள அக்லாம்(கலம் என்பதன் பன்மை சொல்) எனும் சொல் பேனாவைத்தான் குறிக்கும். இது போதாமல் தாள் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது (?) இது குர்ஆனிலுமுள்ளது என்று இவருடைய உளறலுக்கு குர்ஆனையும் துணைக்கழைக்கிறார். இந்த உளறலை அடிப்படையாக்கொண்டு கேள்வி எழுப்பியதால் கேள்வி தவறாகி விடுகிறது. ஆனாலும் முஹம்மது நபியின் காலத்தில் எழுதுவதற்கு மை பயன்படுத்தப்படவில்லை என்பது தவறு. முஹம்மது நபியின் காலத்தில் தாள்தான் இருக்கவில்லை. மை இருந்தது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏனைய நாட்டு மன்னர்களுக்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளார்கள். அதில் மை பயன்படுத்தப்பட்டுள்ளது! மை இல்லாமல் எவ்வாறு எழுத முடியும்? திருவள்ளுவர் எழுதுவதற்கு பயனபடுத்திய எழுத்தாணி எனப்படும் எழுதுகோலை பயன்படுத்தினார் என்று நினைத்துவிட்டார் போலும்.(இதற்கு மை தேவையில்லை)

அடுத்து,

முஸ்லீம்கள் தங்கள் வேதமான குரானுக்கு அடுத்தபடியாக மதிப்பது ஹதீஸ் நூல்களைத்தான். ஹதீஸ் என்பது முகம்மதுவின் வாழ்வில் அவர் செய்ததும் சொல்லியதுமான தொகுப்பு. இந்த ஹதீஸ் நூல்களில் முதலிரண்டு இடங்களில் இருப்பது ஸஹீஹுல் புகாரி என்பதும், ஹீஹ் முஸ்லீம் என்பதும். இதில் ஸஹீஹ் முஸ்லீமில் 3421ஆவது ஹதீஸ்
ஆயிஷா அவர்கள் கூறியதாவது: பத்துமுறை பால் கொடுத்துவிட்டால் திருமணம் நிச்சயமற்றதாகிவிடும் என்று குரானில் இருந்தது பின்னர் இது ரத்து செய்யப்பட்டு ஐந்து தடவையாக குறைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் மரிக்கும் காலத்திற்கு முன்புவரையிலும் இந்த வசனம் குரானில் இருந்தது மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்ததுஎன்று இருக்கிறது. அதாவது கணவன் மனைவிக்கிடையான உறவில் மனைவியிடமிருந்து கணவன் குறிப்பிட்ட முறைகளுக்கும் அதிகமாக பாலருந்திவிட்டால் மனைவியானவள் கணவனின் தாயைப்போன்றவளாகிவிடுவாள் எனும் பொருள்படும்வசனம் முகம்மது இறக்கும் வரையிலும் குரானில் இடம் பெற்றிருந்தது என்று முகம்மதின் மனைவியரில் ஒருவரான ஆயிஷா கூறுவதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ். இது இட்டுக்கட்டிய ஹதீஸ் என்றோ, பொய்யானது என்றோ ஏற்றுக்கொள்ளப்படாதது என்றோ கூறிவிட முடியாது. ஏனென்றால் இது இடம்பெற்றிருப்பது ஹீஹ் முஸ்லீமில். (ஹதீஸில் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டாதது என்று இரண்டு வகை உண்டு. இவை பற்றி பின்னர் பார்க்கலாம்) முகம்மதுவுக்கு மிகவும் விருப்பமான மனைவியாகிய ஆயிஷா அவர்களால் சுட்டப்படும் இந்த வசனம் தற்போதைய குரானில் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது என்று கூறவேண்டிய கடமை முஸ்லீம்களுக்கு இருக்கிறது. இல்லை தற்போதைய குரானில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கவில்லை. அது எப்போது காணாமல் போனது? எப்படி இல்லாமல் போனது? நீக்கியது யார்? எந்த அடிப்படையில் நீக்கப்பட்டது? எல்லாம் அறிந்த அல்லாவால் அருளப்பட்டு கடைசி மனிதன் வரை நிலைத்திருக்கக்கூடிய குரானின் வசனங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கு இருந்தது?
இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம்பெற்றிருந்தாலும் கூட இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஏற்றுக்கொள்ளப்படாத ஹதீஸ்.(இது தொடர்பான மேலதிக விபரங்களை அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்). ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலிருந்து கேள்வியை எடுத்துவைக்க வேண்டும். இஸ்லாம் குறித்து கேள்வி கேட்பது என்றால் இஸ்லாத்தில் அடிப்படையில் எவை ஒப்புக் கொள்ளப்பட்டதோ அதில் இருந்து கேட்க வேண்டும். இவர் ஏற்றுக்கொள்ளப்படாத ஹதீஸை வைத்து கேள்வி கேட்டதால் அக்கேள்விக்கு பதிலளிப்பதில் எந்த அர்த்தமுமில்லை.
இதுபோக இவருடைய இவ்விரு தொடரிலும் உளறல்களும் அறியாமையும், முரண்பாடுகளும் ஆங்காங்கே காணப்படுகிறது. அவை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முகம்மதின் மரணத்திற்குப்பின் அவரவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்ததற்கு ஏற்றார்ப்போல் இது தான் மெய்யான குரான் என்று பலவடிவங்களில் குரான் உலவத்தொடங்கியது.

முஹம்து நபி ஸல் அவர்களின் மரணத்திற்குப்பின் இவர்கூறிய நிலை ஏற்படவில்லை. இது உஸ்மானின் காலத்தில் தான் ஏற்பட்டது. இதனால்தான் அவர் குர்ஆனை தொகுக்கும் பணியில் இறங்கினார்.


செங்கொடி ஒரு இடத்தில் முஹம்மது நபியின் மரணத்தின் பின் கால் நூற்றாண்டு கழித்து(25 வருடங்கள் பின்) உஸ்மான் ரலி குர்ஆன் தொகுத்தார் என்று.மற்ற இடத்தில் 15 வருடங்கள் எங்கிறார்.(இதுதான் சரி). 15வருடம் என்பது கால் நூற்றாண்டு என்பதும் ஒன்றுக்கொன்று முரண்.

அடுத்ததாக,
அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாக பாதுகாக்கப்படுகிறது.

முஹம்மது நபியின் அடக்கத்தலம் இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது என்கிறார்.நபி (ஸல்) அவர்கள் மரணித்ததும் அவருடைய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இவ்வீடு நபியவர்கள் கட்டிய பள்ளிவாசலுக்கு அருகில் உள்ளது. நபித்தோழர்களின் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி என்றழைக்கப்படும் இப்பள்ளிவாசல் விஸ்தரிக்கப்பட்டது. இதன்போது கூட நபியவர்கள் அடக்கப்பட்ட இடத்தை தவிர்த்துதான் காணப்பட்டது. பிற்காலத்தில் வந்த அரசர்கள் பள்ளிவாசலை இன்னும் விஸ்தரிக்கும் போது நபியவர்களின் அடக்கத்தலத்தையும் உள்வாங்கிக்கொண்டனர்.(இக்காலத்தில் ஒரு நபித்தோழர்கூட உயிரோடு இல்லை) இதனால்தான் இன்று அப்பள்ளிவாசலினுள் நபியவர்களின் அடக்கத்லம் காணப்படுகிறது. மாறாக நபியவர்கள் அடக்கத்தலத்தை பள்ளிவாசலாக மாற்றவில்லை. இவ்வாறு செய்வது இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட விடயம். இப்பள்ளிவாசல் மதிக்கப்படுவதற்கு காரணம் இது நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல் என்பதுதான். அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது அல்ல. அவர்கள் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அந்தப் பள்ளிவாசலுக்கு இதே மதிப்பு இருக்கும்
இதுபோக, இன்றுள்ள குர்ஆன் பிரதிகளுக்கிடயில் வசன எண்களில் வித்தியாசமிருக்கிறது என்றும் குறிப்ப்பிடுகிறார். இதுவும் இவரது உளறல்தான்.
வசன எண்கள் அவசியமானது அல்ல. அது பிற்காலத்தில் போடப்பட்டது. இது குறித்த விஷயத்தையும் அவர் விளங்கிக் கொள்ளவில்லை.

குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக் கையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அலீ (ரலி) அவர்கள் 6218 என்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 என்கிறார்கள்.
ஹுமைத் என்பார் 6212 என்கிறார்கள்.
அதா என்பார் 6177 என்கிறார்கள்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் 6204 என்றும் குறிப்பிடுகிறார்.
மக்கள் பொதுவாக 6666 வசனங்கள் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்கள்.
இப்போது உலகம் முழுவதும் அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளில் 6236 வசனங்கள் உள்ளன.
வசனங்கள் எத்தனை என்று அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கூறவில்லை. மேலும், உஸ்மான் (ரலி) அவர்களுடைய மூலப் பிரதியிலும் குர்ஆனுடைய மொத்த வசனங்கள் குறித்து எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் குறிப்பிடப்படவில்லை.
உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் ஒவ்வொரு வசனம் முடிவுறும் போது அதன் இறுதியில் வசனத்தின் எண் குறிப்பிடப்படவில்லை. எந்தவொரு வசனத்தின் முடிவும் மூலப் பிரதியில் அடையாளமிடப்படவில்லை.
எனவே தான் வசனங்களை எண்ணும் போது ஒவ்வொருவரும் பல விதமான எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். எண்ணிக்கை எத்தனை என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் எந்த எண்ணிக்கையைக் கூறினாலும் குர்ஆனில் எதுவும் அதிகரிப்பதோ, குறைவதோ இல்லை.
ஒருவர் இரண்டு வசனங்களை ஒரு வசனமாகக் கருதுவார்; இன் னொருவர் ஒரு வசனத்தை இரண்டு வசனங்களாகக் கருதுவார்; எங்கே வசனத்தை முடிப்பது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.
ஆனாலும் இப்போது ஆதாரங்களை எடுத்துக் காட்டுவற்கும், விவாதங்கள் புரிவதற்கும், சொற் பொழிவுகள் நிகழ்த்துவதற்கும், குறிப்பிட்ட ஒரு வசனத்தைத் தேடி எடுப்பதற்கும் இந்த வசன எண்கள் உதவியாக இருக்கின்றன. 



குர்ஆனில் தவறிருக்கிறது என்று வாதிட வந்தவர் அவருடைய தொடரிலே பல தறுகளை விட்டுவிட்டு அத்தவறிலிருந்து கேள்வி எழுப்புவது வேடிக்கையாக உள்ளது. தவறுகள் நிறைந்துள்ள கமியூனிசத்தில் மூழ்கிக்கிடப்பதால் என்னோவோ இவாறு உளறுகிறார். இவருடைய நிலையை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று கூட புரியவில்லை...!
வளரும் இன்ஷா அல்லாஹ்